நன்றி : தீராநதி நவம்பர் 2008.
அன்புள்ள அ.மார்க்ஸ் அவர்களே வணக்கம்.
தங்களுக்கு நீண்ட நாட்களாக எழுத நினைத்த கடிதத்தை இப்பொழுது காலதாமதமாக எழுதுவதற்கு முதலில் மன்னிக்கவும்.
ஷோபா சக்தி போன்றவர்களுடனான தங்களது உறவு அரசியல் ரீதியிலானது என்பதை விடவும் அதிகமும் தனிப்பட்ட ரீதியானது என்பதை நான் அறிந்தே இருக்கிறேன்.
அது எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. பரஸ்பரம் அதற்கான பொருளாதார இலக்கியத் தேவைகள் உங்களுக்குள் இருக்கலாம். அதுவும் எனக்கு ஒரு பொருட்டில்லை.
தமிழகத்தில் நீங்கள் ஷோபா சக்தி போன்றவர்களை ஜனநாயகக் காவலர்களாகவும் மனித உரிமைப் போராளிகளாகவும் கட்டமைப்பதைத்தான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
கட்டுடைக்கத்தான் தங்களுக்குத் தெரியும் என்பதற்கு மாறாக உங்களுக்குக் கட்டமைக்கவும் தெரியும் என்பதைத் தாங்கள் இதன் வழி நிரூபித்திருக்கிறீர்கள்.
நேரடியாகவே விடயத்திற்கு வருகிறேன்.
நீங்கள் இந்தியாவில் மனித உரிமைகளுக்கும் ஜனநாயகத்திற்காகவும் வன்முறைக்கு எதிராகவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறீர்கள் என்பதனையும் நான் அறிந்தே இருக்கிறேன்.
பாரிஸில் நெடுங்குருதி ஏற்பாட்டாளர்கள் தொடர்பான வன்முறை நிகழ்வு குறித்துத் தாங்கள் இப்போது அறிந்தே இருப்பீர்கள்.
காந்தியாரின் அகிம்சை குறித்தும் சே குவேராவின் வன்முறை குறித்தெல்லாம் நீங்கள் தற்போது பேசி வருகிறீர்கள்.
கருத்து முரண்பாடுகளைத் தீர்த்துக் கொள்வதற்கும், அரசியல் முரண்பாடுகளைத் தீர்த்துக் கொள்வதற்கும் துப்பாக்கியும் வன்முறையும் வழியல்ல என்பதை நீங்கள் வழியுறுத்தி வருவதாகவும் நான் கருதுகிறேன்.
நெடுங்குருதி நிகழ்வுக்கு முன்னால் நடைபெற்ற வன்முறை நிகழ்வை ஒட்டி அதில் பேசவிருந்த பல பேச்சாளர்கள் அதிலிருந்து விலகிவிட்டார்கள்.
சோதிலிங்கம் போன்றவர்கள் விலகிக் கொண்டதற்கான காரணத்தையும் தெரிவித்திருக்கிறார்.
பாரிஸிலிருந்தும் கூட மு.நித்தியானந்தன் அக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
வன்முறை எதிர்ப்பின் தார்மீகத் தன்மைகளை அவர்கள் தமது நடவடிக்கையின் மூலம் காத்திருக்கிறார்கள்.
வன்முறைக்கு எதிராகவும் மனித உரிமைக்காகவும் இந்தியாவில் பேசி வருகிற நீங்கள், எந்தத் தார்மீக அடிப்படையில் நெடுங்குருதி நிகழ்வுக்கு முன்னான ஏற்பாட்டாளரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டீர்கள் எனச் சொல்வீர்களா?
இந்தியாவில் நடந்தால்தான் இது வன்முறை பாரிஸில் ஈழத்தமிழர்கள் மத்தியில் நடந்தால் வன்முறை இல்லை என நீங்கள் கருதுகிறீர்களா?
நீங்கள் சுகனது புத்தகத்திற்கு முன்னுரை கொடுங்கள்.
ஷோபா சக்தி பற்றி பிம்பங்களைக் கட்டமையுங்கள். அது உங்கள் சொந்தப் பிரச்சினை.
உங்களுக்கு இவர்கள் இருவரும் வழிபாடு நடத்தட்டும். அதுவும் உங்கள் சொந்தப் பிரச்சினை.
நெடுங்குருதிப் பிரச்சினை அப்படியானது இல்லை.
கருத்து மாறுபாடுகளை கொலைகளினாலும் துப்பாக்கி வன்முறைகளாலும் தீர்த்துக் கொள்வது தொடர்பான பிரச்சினை இது.
ஈழத்தமிழர்களுக்குள் உயிர்வாழ்தல் தொடர்பான பிரச்சினை இது.
கொலை அரசியலுக்கு நீங்கள் ஆதரவு தெரிவித்திருக்கிறீர்கள்.
அதற்கு எதிராகப் பேசுவதாகத் தமிழகத்தில் தாங்கள் முகம் வைத்திருக்கிறீர்கள்.
பெரும்பாலுமான அரசியலறிந்த ஈழத்தமிழர்கள் வன்முறைக்கு எதிராக இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்த வேளையில் நீங்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு நேபாளப் புரட்சி பற்றியும் ஜனநாயகம் பற்றியும் பேசியிருக்கிறீர்கள்.
உங்களது சொல்லும் செயலும் முரண்பாடாக இருக்கிறது.
உங்களிடம் எனது நேரடியான கேள்வி இதுதான்.
மனித உரிமை பற்றியும் ஜனநாயகம் பற்றியும் பேசி வருகிற நீங்கள் என்ன அடிப்படையில் அந்த நிகழ்வில் கலந்து கொண்டீர்கள்?
மார்க்சியத்தின் பெயரால் நடந்த அநீதிகளையெல்லாம் பட்டியல் போடுகிற நீங்கள் எந்தத் தார்மீக அறத்தின் அடிப்படையில் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டீர்கள்?
அறநேர்மையுடன் கேட்கிறேன்.
பதில் சொல்லுங்கள்.
இதற்கு ழாக் தெரிதா உங்களுக்குத் தேவைப்பட மாட்டார் என நினைக்கிறேன்.
அன்புடன்
அசோக்
பாரீஸ்
பிரான்ஸ்.
//பாரிஸிலிருந்தும் கூட மு.நித்தியானந்தன் அக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
வன்முறை எதிர்ப்பின் தார்மீகத் தன்மைகளை அவர்கள் தமது நடவடிக்கையின் மூலம் காத்திருக்கிறார்கள்.//அசோக்.
அசோக் இப்படி எழுதுவது உங்களுக்கே கண்றாவியாக தெரியவில்லையா? உதவி விரிவுரையாளர் நித்தியானந்தம் சேருக்கு ஏன் இவ்வளவு ஐஸ் வைக்கவேண்டிய தேவை என்ன? இதுவும் ஒருவகை சந்தர்ப்பவாதம் இல்லையா? தேசம் இணையத் தளத்திற்கு எதிராக கையெழுத்து நித்தியானந்தம் சேர் ஏன் போட்டது தெரியுமா? பிரான்சில் நெடுங்குருதி அமைப்பாளர் துப்பாக்கியால் தன் கடை ஊழியரை சுட்ட சம்பவம் நடக்கவில்லையென்றும் நெடுங்குருதி கூட்டம் சம்பந்தமாய் எழுதியது பொய் என்றும் கூறித்தானே நித்தியானந்தம் சேர் கையெழுத்து வைத்தாரே. எப்பிடி நீங்கள் “வன்முறை எதிர்ப்பின் தார்மீகத் தன்மைகளை அவர்கள் தமது நடவடிக்கையின் மூலம் காத்திருக்கிறார்கள்” என்று புழுடா விடமுடியும்? மாக்சைவிட நித்தியானந்தம் சேர் வடிகட்டிய சந்தர்ப்பவாதி. தயவு செய்து இப்படியான சந்தர்ப்பவாதிகளுக்கு ஐஸ் வைத்து உங்கள் மீது இருக்கும் நல்ல அபிப்பிராயத்தை கெடுத்துக் கொள்ளவேண்டாம்.
அய்ரோப்பாவின் இலக்கிய அன்பர்களை நினைத்தால் சிரிப்பாயிருக்கிறது.
அசோக் அ.மாரக்சிடம் சில கேள்விகளை? – ஒர கேள்வியை எழுப்பியுள்ளார்?
உடனேயே தேசம் நெற்றைப்பற்றி பின்னூட்டம் எழுதியாயிற்று.
இனி யாராவது ரேடியோ உடைப்பைப் பற்றி பின்னூட்டம் எழுதவேண்டியதுதான் பாக்கி.
அய்யன்மீர்
திரும்பவும் திருமப்வும் இவைகள் மட்டுமதானா வேறு உரையாடல்களுக்கு வழி இல்லையா?
இணையப்பங்கங்களும் மனித உழைப்பும் இன்ன பலவும் வீணடிக்கப்படுகின்றன.
ஏன் அனைத்திலும் கொண்டுவந்து தேசம் நெற்றயும் ரேயோ உடைப்பையும் எப்போதும் கலக்கறீர்கள் என்பது புரியவில்லை?
கொத்துரொட்டி மாதிரி இருக்கிறது இந்த இணையங்களின் பின்னூட்டங்கள். எப்வும் எல்லாத்தையும் கலந்து கட்டி க்குழைக்கறீர்கள்.
தனித்தனியாகப் பிரித்துப்பாரத்து உரையாடல்களை விவாதங்களைச் செய்ய முடியாதபோது கருத்து நிலை சிந்தனை நிலை வளர்ச்சி இல்லை என்று பொருள்.
எனது கவலையை இங்கே தெரிவிக்கவே இதை எழுதினேன்.
மற்றப்படி இந்த பின்னூட்டமிட்டவரை எனக்கு தெரியாது.
அவரது கருத்துப்பற்றி எனக்கு மதிப்பிருக்கிறது.
இணையவசதி பெரிதாக இல்லாத நிலையிலும் தேசம்நெட்டிற்கு நான் மே 30 அன்று எழுதிய பின்னூட்டம் வெளியிடப்படவில்லை. ஆயினும் ஆகஸ்ட் 9 ஆம் திகதி தேசம்நெட் அதனை வெளியிட்டது. கிழக்கு எவ்வகையில் பழிவாங்கப்படுகின்றது என்பதை உணர்ந்துகொள்ள முடியாத நிலையில் பழைய இயக்கக்காரர்கள் இருப்பது வேதனையளிப்பது. தமது புகள், பெயர் மற்றும் அதிகார வெறி ஆகியவற்றிற்காக செய்கிறார்களோ எனவே எண்ணத் தோன்றுகின்றது. மே 30 அன்று நான் கூறியவற்றில் இன்றுவரைக்கும் எவ்விதமான மாற்றமும் இல்லை. மிகவும் பயத்துடன் வாழ்கின்றனர் அம்பாறையின் கிராமப் பகுதியைச் சேர்ந்தவர்கள். கிழக்கு ஜனநாயம் என்பது எவ்வாறு பேரினவாத விருப்புக்களுக்கு இடையில் வரையறுக்கப்பட்டுள்ளது என்பதை இவர்கள் அறியாமல் இருப்பது எனக்கு வியப்பளிக்கிறது. 80 களில் நிர்மலாவுடன் நெருங்கி பழகியிருக்கிறேன். அவர் அன்றில் இருந்து இன்றுவரை மாறவேயில்லை. இடம் தான் மாறியிருக்கிறார்.
சோபாசக்தி, சுகன் போன்றவர்கள் இளையவர்களுக்கு அதர்ஷமாக இருந்தார்கள். எனது மகன் சோபாசக்தியின் கதைகளை விரும்பிப் படிப்பார். ஆனாலும் இன்று அவர்கள் எடுத்திருக்கும் நிலைப்பாடும் நடைமுறை வாழ்வில் செய்யும் திருகுதாளங்களும் (ஒழுக்கரீதியான செயற்பாடுகளை முன்வைத்தல்ல.) இளையோருக்கு அவநம்பிகையை ஏற்படுத்துகின்றது. அ.மார்க்ஸ் ஐ விரும்பியவர்கள் இன்று அவர் மறைமுகமாக மக்கள் விரோத நிலைக்கு ஆதரவளிக்கிறார் என்பதும் கிழக்கு மக்கள் ஒடுக்கும் சமூகத்திற்கு அடிமைப்பட்டு வாழ்வேண்டும் என்ற கருத்துடன் மறைமுகமாக உடன்படுவது வேதனையளிக்கிறது. அ. மார்க்ஸ் இன் வழ்க்கைக் காலத்தில் இது ஒரு மாறா வடு. அ. மார்க்ஸ் ஐ பிற்காலத்தில் பேசும் போது கிழக்கு மக்களின் உணர்வுகள் அவரை நிச்சயமாக தூற்றத்தான் போகின்றார்கள்.
தேசத்தில் பிரசுரிக்கப்பட்ட பின்னூட்டத்தை கீழே இணைக்கிறேன்.
தேசத்திற்கும் வாசகர்களுக்கும்,
நான் சில மாதங்களுக்கு முன்னர் அளித்த பின்னூட்டத்தை தேசம் தணிக்கை செய்து விட்டது. ஆயினும் இன்றைக்கு அதன் நகர்வுகள் தொடர்வது போல் தெரிகிறது. ராஜேஸ் பாலா விடயம் மட்டும் சில மாற்றங்களுக்கு உளாகியிருக்கிறது.
எஸ்.எல்.டி.எப் க்கு மக்கள் மேல் அக்கறை உள்ளது என யார் சொன்னது? தேசம் இதனை நீங்கள் வாசகர்கள் பார்வைக்கு விடுங்கள். அவர்கள் தீர்மானிக்கட்டும்.
நான் சொன்ன இவ்விடயத்திற்கும் ‘நெடுங்குருதி’ யின் பின்னணுக்கும் உள்ள தொடர்பை ஆராய்ந்து பாருங்கள் புரியும்.
——————————————————————————————————————————————————
நான் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்தவன். தற்போது ஜா-எலவில் வசிக்கிறேன். சில வாரங்களுக்கு எனது நண்பனின் தமக்கையாரும் தாயாரும் அவசரமாகக் கொழும்பு வருவதாகவும் அவர்களுக்கு உதவி செய்யும்படியும் எனது நண்பன் எனக்குத் தொலைபேசியில் தெரிவித்ததை அடுத்து நான் அவர்கள் தங்குவதற்காக வத்தளையில் இடம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தேன். நண்பனின் குடும்பன் எனக்கு ஏற்கனவே பழக்கமானது என்ற அடிப்படையில் அவர்களுடன் சகஜமாகவே உரையாடினேன். ஆயினும், அவர்கள் என்னுடன் உரையாடலைத் தவிர்த்து வந்தனர். அதன் பின்பு எனது நண்பன் கொழும்பு வந்தடைந்தான். அதன் பின்பு நான் அவ்வளவாக அவர்களுடன் தொடர்பு கொள்ளவில்லை.
நண்பனை அடிக்கடி சந்தித்து தேவையான உதவிகளைச் செய்து வந்தேன். நண்பனும் என்னுடன் பழைய மாதிரி இல்லை என்ற உணர்வு எனக்குள் இருந்தது. ஆயினும், மிகவும் வறுமையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்குப் பல பிரச்சனைகள் இருக்கலாம் என நினைத்து நான் அது பற்றி அலட்டிக் கொள்ளவில்லை.
சில நாட்களின் பின்பு எனது தாயார் என்னுடன் தொடர்பு கொள்ளும் போது எனது நண்பனின் சகோதரிக்கு நடந்த சம்பவத்தைப் பற்றிச் சொன்னார். என்னால் நம்ப முடியவில்லை. எல்லோரும் பயத்தில் வாழ்வதாகச் சொன்னார். நண்பனிடம் கேட்கவும் முடியவில்லை. சில நாட்களின் பின்பு நண்பனின் சகோதரியை ப______ உள்ள உறவினர்களின் வீடொன்றில் தங்க வைத்து விட்டு எனது நண்பனும் தாயாரும் திரும்பவும் கொழும்பு வந்தார்கள்.
நண்பன் ஊர் திரும்புவதற்கு முதல் நாள் வாய் திறந்தான். உனக்கு முன்னரே தெரிந்திருக்கும் என நினைத்து உனக்கு எதுவும் சொல்லவில்லை எனக் கூறினான். நடந்த சம்பவத்தை விபரித்த போது எல்லாவற்றையும் இழந்த உணர்வுதான் ஏற்பட்டது. எமக்கென வாழ்வு இல்லை என நினைக்கத் தோன்றுகின்றது.
நண்பனின் தமக்கையாரும் அவரது நண்பியும் நண்பனின் வீட்டில் கதைத்துக் கொண்டிருந்த போது இவர்களின் வீட்டிற்கு வந்த சிலர் அவர்கள் இருவரையும் அழைத்துச் சென்றிருக்கின்றனர். அதில் ஒருவர் ஏற்கனவே புலிகள் இயக்கத்தில் இருந்து விலகி பின்னர் பிள்ளையான் குழுவுடன் சேர்ந்து இயங்குபவர் எனத் தெரிந்திருந்தது. வீட்டில் உள்ள அனைவரையும் அச்சுறுத்திவிட்டு கூட்டிச் சென்றிருக்கிறார்கள். எவரிடமும் சொல்லக் கூடாது எனக் கூறிய கூட்டிச் சென்றிருக்கிறார்கள்.
அதிகாலை திரும்ப வீட்டில் கொண்டு வந்து விட்டிருக்கிறார்கள். இரு பெண்களையும் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள். எவரிடமும் சொல்லவில்லை. நண்பி அடுத்தநாள் மதியம் வீடு சென்றிருக்கிறார். அவர் இன்று வரைக்கும் தனது தாய் தகப்பனிடன் கூட இத்தகவலைச் சொல்லவில்லை. நண்பனின் சகோதரி இரவில் கனவில் கதறி அழுகின்றார் எனக்கூறியும் சித்தப் பிரமை பிடித்தது போல இருக்கிறார் எனக் கூறியும் தமக்கையாரின் கல்யாணத்திற்குச் சேர்த்து வைத்திருந்த பணத்தைச் செலவு செய்து கொழும்பில் அவரைக் காட்டியிருக்கிறார்கள்.
இதைப் போல பல சம்பவங்கள் நடக்கிறது எனக் கூறினார் நண்பன். இது எல்லோருக்கும் தெரிந்துமிருக்கிறது. ஆனால், யாரும் வாய் திறந்து இதனைக் கதைப்பதில்லை. அன்றிரவே எனது அம்மாவிடம் கதைக்கும் போது அவர் சொன்னார் த்ங்கைமாரை வெளியில் அனுப்புவதில்லை எனவும் எல்லாவற்றிற்கும் தானே வெளியில் சென்று வருவதாகவும். தங்கைமார் தையலுக்குச் செல்வதுண்டு. அவர்களின் பணமும் எமக்கான செலவுகளுக்கான வருவாய் தான். அந்த தையல் கடையும் தற்போது பூட்டப்பட்டிருக்கிறது.
நண்பனும் தாயரும் ஊர் திரும்பும் அன்று நான் அவர்களை வழி அனுப்பச் சென்றிருந்தேன். ஒரு கட்டத்தில் நண்பனின் தாயார் விக்கிவிக்கி அழத்தொடங்கி விட்டார். அழுகையினூடே புலிகளைத் திட்டினார். என்ன இருந்தாலும் புலிகள் அப்பிரதேசத்தை விட்டுச் சென்றிருக்கக் கூடாது எனக் கூறினார். சில நாட்கள் பொறுத்துப் பார்த்துவிட்டு தாங்கள் மகளுடன் மலையகப் பகுத்திக்குச் செல்லவிருப்பதாகக் கூறினார். மகளின் விவகாரம் தமிழ்க்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்குச் சொல்லப்பட்டதெனக் கூறினார். ஆயினும் எக்காரணம் கொண்டும் தங்களது எவ்வித தகவலும் எவ்வித ஊடகங்களிலும் வந்துவிடக்கூடாது என்பதில் அவர் உறுதியாகவிருந்தார். அப்படி வருவது தாங்கள் மானமிழப்ப்தற்குச் சமம் எனவும் அதற்குப் பின் உயிரோடு இருப்பதில் எவ்வித பிரச்சனையும் இல்லை எனவும் கருதுகின்றார்.
யாழ்ப்பாண மக்களுக்கு ஏதாவது நடந்துவிட்டால் ஊடகங்களுக்கும் மற்றையவர்களுக்கும் இருக்கும் அக்கறை எமக்கு நடக்கும் போது யாருக்கும் இருப்பதில்லை. இப்படி நடக்கும் பல சம்பவங்கள் (தயவு செய்து ஒரு சில அல்ல.) அந்தப்பிரதேசத்தை தாண்டியே செல்வதில்லை. சில விடயங்கள் குடும்ப மௌறுப்பினர்களைத் தாண்டி வெளியே செல்வதில்லை. புலிகளுக்கு யாழ்ப்பாண வன்னி மக்கள் மீது இருக்கும் அக்கறை எம்மீது கிடையாது. எங்கள் கண்முன்னால் வளர்ந்த எவ்வளவு போராளிகள் புலிகளுக்காக இறந்திருக்கிறார்கள். ஆயினும் இறுதியில் புலிகள் கிழக்கை விட்டு முழுமையாகச் சென்றது அவர்கள் கிழக்கு மக்களுக்குச் செய்த முழுத்துரோகம். என அவர் கூறுகின்றார்.
—————————————————————————-
வழக்கமான கற்பு என்ற கருத்துப்படி சிந்திக்கும் பலர் இப்படியான கதைகளை வெளியில் சொல்லமாட்டார்கள். இதைப் போல பல சம்பவங்கள் அங்கே நடந்துகொண்டிருகின்றன. அவை வெளியில் தெரிய வருவதில்லை. வளியில் தெரிய வராமல் இருப்பது மிகவும் நல்லது என்பதே எனதும் கருத்து. மரபு சார்ந்து சிந்திக்கப் பழகிய மக்களுக்கு இவை பெரிய அவமானம். இது தெரிய வருவதால் இதைச் செய்தவர்களுக்கு தண்டனை கிடைத்தாலும் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் அந்த மன வடுவுடன் ஊரின் கேலிப்பேச்சுக்கு மத்தியில் வாழ்வதென்பது அவர்களால் முடியாத காரியம்.
பாலியல் ரீதியான ஒடுக்குமுறைக்குள்ளாகும் சமூகமாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கும் கிழக்கு சமூகம் எவ்வகையில் விடுதலை பெற்றாலும் மன அளவில் விடுதலை பெற இன்னும் குறைந்தது 20 வருடங்களுக்கு மேல் தேவை என்கிறார் அப்பிரதேசத்தில் பணி புரியும் உளநலத்துறை சார்ந்த வைத்தியர் ஒருவர். கிராமங்கள் தோறும் பெண்கள் மத்தியில் பரவியிருக்கும் இப்பயம் அவர்கள் ஆரோக்கியமான பாலியல் வளர்ச்சியை பாதிக்கும் எனக்கூறுகிறார் அவர்.
இறுதியில் பேரினவாத அரசாங்கம் வென்றுவிட்டது. தமிழ் மக்களை எவ்வாறான நிலையில் வைக்க வேண்டும் என ஆண்டாண்டு காலம் விரும்பினார்களோ அதைக் கிழக்கில் சாதித்து விட்டார்கள். புலிகள் தமது பிரதேசங்களை விட்டுச் சென்றது அவர்கள் தமக்குச் செய்த துரோகம் என அவர்கள் நினைக்கிறார்கள். புலிகள் கிழக்கை முழுமையாகக் கைவிட்டது புலிகள் தமக்குச் செய்த மோசமான துரோகம் மட்டுமல்ல கிழக்கு மண்ணுக்காகப் போராடி மடிந்த ஆயிரக்கணக்கான மாவீரர்களுக்கும் செய்த துரோகமாகவே அவர்கள் பார்க்கின்றார்கள்.
——————————————————————————-
ராஜேஸ் பாலா மற்றும் சிலர் அண்மையில் இங்கைக்கு வந்து சென்றிருந்தார்கள். இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் விசேட ஏற்பாட்டின் பேரிலேயே அவர்கள் கிழக்கிற்கு வந்திருந்தார்கள். ஆகவே ராஜேஸ் பாலா, இவ்விடத்தில் எழுதும் கட்டுரையை நாம் அவர் மகிந்த ராஜபக்ச சார்பாக எழுதிய கட்டுரையாகவே பார்க்க வேண்டியுள்ளது. மகிந்த ராஜபக்ச கிழக்கை மீட்டு கிழக்கு மக்களுக்குச் சுதந்திரம் வழங்கினார் என திரும்பத் திரும்ப நிரூபிப்பது ராஜேஸ் பாலாவின் கடமையாகும். இவ்விடத்தில் ராஜேஸ் பால தனது கடமையைச் செவ்வனே நிறைவேற்றியுள்ளதாகக் கருதி, அவருக்கு “கடமை வீரி” என்ற பட்டத்தை நாம் வழங்க வேண்டியுள்ளது. ராஜேஸ் பாலா வைப் பற்றித் தெரியாமல் றஞ்சி அவர் மேல் சந்தேகம் வருவது போல் உள்ளது எனக் கூறுவதைப் பார்க்கச் சிரிப்புத்தான் வருகிறது இவ்வளவு பிரச்சனையிலும்..
ஊடகங்களுக்கு அரச தலைவர் நேரடியான தொலைபேசி அழைப்புக்கள் எடுத்து உரையாடுகின்றார். அதன் ஆசிரியர்கள் பயக்கலக்கத்தில் தங்களது வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சிங்கள ஊடகங்களின் பாடுதான் பயங்கரத் திண்டாட்டம். அவர்கள் எதையும் மக்களுக்குச் சொல்லத் தயங்குகின்றார்கள். இணையத்தளங்களை முடக்குவது குறித்து பாதுகாப்பு அமைச்சு பரிசீலித்து வருவதாகத் தெரிகின்றது. ராஜேஸ் பாலா, எங்களது ‘விடுதலையை’ நாங்கள் கொண்டாடுகின்றோம். உங்களது கேவலம் எமக்குத் தேவையில்லை.
ஆனந்தசhகரிக்கு இது பற்றி என்ன தெரியக்கூடும். இது பற்றித் தெரியும் எனக்கூறினால், அவரது அலுவலகம் மீண்டுமொரு முறை பரிசோதிக்கப்படும். சில வேளை அகற்றவும் படலாம். ராஜேஸ் பாலா விற்கு நிலைமை விளங்கவில்லை. அவ்வளவு தான்.
நாவலன் சொன்னது இங்கே முக்கியம் போல் தெரிகின்றது. புதிய நகர்வுகள் நடப்பது போல் தெரிகிறது. அது நிச்சயமாக பேரினவாதத்திற்குச் சார்பான விதத்திலேயே நடப்பது போல தோன்ற்கின்றது. (வேறு விதமாக நகரவே முடியாது என்பது வேறு விடயம்.)
ராஜேஸ் பாலா போன்றோரின் வருகையுடன் இணைந்த அளவிலேயே நிர்மலா போன்றோரின் நகர்வுகளும் உள்ளன. எனக்குக் கிடைத்த தகவல்களின் படி நிர்மலா ஏற்கனவே உதர்மட்டங்களுடன் நடத்திய பேச்சுக்களின் பிரகாரம் அவர்கள் மீண்டும் இலங்கையில் தமது பிரவேசத்தை நிகழ்த்த இருப்பதாக அறிகின்றேன். அதன் வழியே தான் லண்டன் தல்த் முன்னணியின் உருவாக்கமும் அதன் செயற்பாடுகள்மாகும். இவ்விடத்தில் இவர்கள் தமக்குச் சேர்த்துக் கொண்ட நபர்கள் பிரான்சைத் தளமாகக் கொண்டியங்கும் தலித் மேம்பாட்டு முன்னணியினர். இவ்வகையிலேயே சோபாசக்தி, சுகன் போன்றோர் மற்றும் தேவதாசன் போன்றோரின் அண்மைக்கால நடவடிக்கைகள் அமைந்துள்ளன. புதிய கூட்டணி ஒன்று உருவாகிவிட்டது. அது கையில் எடுத்துக் கொண்ட ஆயுதம் தலித்தியம் மற்றும் கிழக்குவாதம் என்பனவே.
இந்தப் புதிய கூட்டணியுடன் ராகவன், நிர்மலா, தேவதாசன், சோபாசக்தி, சுகன் போன்றோர் முக்கியமானவர்கள். இவர்களுடன் இன்னும் பலரும் இருக்கலாம். இவ்வகையிலேயே சோபாசக்தியைப் பற்றிய விம்பங்கள் இலங்கையில் ஆங்கிலப் பத்திரிகைகளூடாக நிர்மலாவால் அரங்கேற்றப்படுகின்றன. சுகன், குழந்தைப் போராளி ஆட்சிக்கு வந்துவிட்டார் இனி எல்லாம் சுகமே எனக் கனவு காண்கின்றார். (குழந்தைப் போராளியைத் தெரிந்தெடுத்ததற்கு நன்றி வேறு. தூ. யார் தெரிந்தெடுத்தது அவரை. அவரே தன்னைத் தெரிந்தெடுத்துக் கொண்டார்.) மேலும், தேவதாசன் தல்த் முன்னணியை இலங்கையில் பதிவு செய்ய இருப்பதும் இதனோடு இணைந்த ஒரு நடவடிக்கையே.
ஆக, மகிந்த மற்றும் பிள்ளையானுடன் சேர்ந்து நிர்மலா அணியும் க்ளத்தில் இறங்கவுள்ளது. இங்கே தொழிற்படுவது வெறும் அதிகார மோகமும் பழிவாங்கும் உணர்ச்சியுமே. 80 களில் இடதுசாரியப் பார்வையுடனும் தாழ்த்தப்பட்டவர்களுடன் சாரப்பட பல இயக்கங்கள் இருந்தும் ஏன் நிர்மலா புலியைத் தெரிவு செய்தாரோ? அதற்குச் சற்றும் குறைவில்லாத வகையில் இன்றைக்கு தனது நடவடிக்கையை மேற்கொள்கின்றார்.
லண்டனில் இயங்கும் சில முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இதற்கு உடந்தை போல் தெரிகின்றது. அதிகார ஆசை பிடித்த இப்புதிய கூட்டு அடுத்ததாக என்ன செய்யப் போகின்றது என கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ‘கற்பிழந்த பெண்கள்’ பெரும் ஆவலாயிருக்கிறார்கள். வாருங்கள் உங்கள் பொன்னான பாதங்களைப் பதியுங்கள். எமது மண்ணை விடிவு பெறச்செய்யுங்கள்.
கலகக்காரன் சோபாசக்தியின் கலக்குரல் முடிவுக்கு வந்துவிட்டதாக நான் கூறியது இவ்வடிப்படையிலேயே. ராகவன், நிர்மலா போன்றோர் எப்போது ஒடுக்கப்படுபவர்கள் சார்ந்து முடிவெடுத்து நடக்க முடியாதவர்கள். ஆயினும் அவர்கள் சோபா, சுகன் போன்றோரை கூட்டுச் சேர்த்ததன் மூலம் தமது மேற்குடி நகர்வுக்கு ‘விளிம்பு’ சாயம் பூச முயல்கின்றார்கள். உண்மையில் நகர்வுகளும் செயற்பாடுகளும் பேரினவாதம் சார்ந்ததாக மட்டுமே இருக்கப் போகின்றது. மேட்டுக்குடி சார்ந்ததாகவே இருக்கப் போகின்றது.
கிழக்கு மக்களுக்கு இனி எப்போதும் விடிவில்லை.
இவர்களின் நகர்வுகள் சம்பந்தமான அத்தனை விடயங்களும் இனித் தொடரும்.
மேலதிக வாசிப்புக்கு,
http://enbtamil.blogspot.com/2008/05/blog-post_26.html
-கிழக்கு தலித்
தோழர் அசோக் நீங்கள் எழுதிய கடிதத்தை தீரா நதியில் படித்தேன். அ.மார்க்ஸ் பற்றி இன்னும் நிறைய சொல்லமுடியும். இங்கு அ.மார்க்ஸின் நடவடிக்கைகள் சம்பந்தமாக எல்லோருக்கும் விமர்சனம் இருக்கிறது.ஆனால் எழுதுவதற்கு பயம். ஏனெனில் அ.மார்க்ஸின் சீடப் பிள்ளைகளே இச் சஞ்சிகைகளில் ஆசிரியர்களாக இருக்கிறார்கள். அ.மார்க்ஸால் எதுவும் எழுத முடியும். யாரையும் கண்ணாபின்னா என்று அவரால் திட்டவும் முடியும். இதனால் அ .மார்க்ஸ்சை பற்றி யாரும் எழுதுவதில்லை. நீங்கள் கேட்டுள்ள கேள்விகள் மிக மிக நியாயமானவை. பொறுத்திருந்து பார்ப்போம் அ.மார்க்ஸின் பதிலை.
பேரினவாதத்துக்கு விளக்கு பிடிக்கும் அ.மார்க்ஸ் – ஷோபாசக்தி கும்பல்
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4345:2008-11-04-12-01-35&catid=74:2008
அன்புடன் நண்பர்களுக்கு, அ.மார்க்ஸ்க்கு நான் எழுதியுள்ள கடிதத்திற்கான பின்புல சம்பவங்கள் , செய்திகளை மேலதிகமாக தெரிந்து கொள்ள பின்வரும் இணைப்பை தொடர்பு கொள்ளவும்.
அசோக்.
துப்பாக்கிச் சூட்டால் , நெடுங்குருதி நிகழ்வு புறக்கணிக்கப்பட்டது : வி அருட்சல்வன்
http://thesamnet.co.uk/?p=1914
அ.மார்க்ஸ் பாகிஸ்தானை வியந்தோதுவதும், அவருடைய ஆதரவைப் பெற்ற தமிழக முஸ்லீம்
முன்னேற்றக் கழகம(தமுமுக) ஈழப்பிரச்சினையில் கிழக்குப் பகுதி முஸ்லீம்களுக்கான உரத்து குரல் கொடுப்பதும்,அடையாள அரசியல் என்ற பெயரில் ஈழத்தமிழர் என்ற அடையாளத்தை அ.மார்க்ஸ்,சோபா சக்தி போன்றோர் நிராகரிப்பதும் தொடர்பற்றவை அல்ல.இலங்கை அரசுக்கு ஆயுதம் தரும் பாகிஸ்தானை எதிர்த்து இவர்கள் வாய் திறக்க மாட்டார்கள்.தமுமுகவும் வாய்
திறக்காது. இவர்கள்,தமுமுக காஷ்மீரின் சுயநிர்ணய உரிமையை, விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பார்கள். ஈழம் என்று வரும் போது வேறு அரசியல் பேசுவார்கள். இது ஏன் என்று இவர்கள் விளக்கியதுண்டா?. கிழக்கில் இப்போது பரவாயில்லை என்று சோபா பேசுவதும், அடையாள அரசியலை முன்னிலைப்படுத்தி ஈழததமிழர் அரசியலை நிரகாரிப்பதும் யாருடைய நலனுக்காக என்பதை அடையாளம் காண முடியாதா?.
இந்து ராமும்,மாலனும்,அ.மார்க்சும்,சோபாவும் இணையும் புள்ளி இதுதான் – ஈழத்தமிழர் விரோத,இலங்கை அரசு ஆதரவு அரசியல். இதை கட்டுடைக்க பெரிதாக மெனக்கிட வேண்டியதில்லை. அடையாள அரசியல் மூலம் சோபா,அ.மார்க்ஸ் இதை
செய்தால், புலி எதிர்ப்பின் பெயரில் ராமும்,மாலனும் இதை வேறு வார்த்தைகளில் செய்கிறார்கள்.
//இங்கே தொழிற்படுவது வெறும் அதிகார மோகமும் பழிவாங்கும் உணர்ச்சியுமே. 80 களில் இடதுசாரியப் பார்வையுடனும் தாழ்த்தப்பட்டவர்களுடன் சாரப்பட பல இயக்கங்கள் இருந்தும் ஏன் நிர்மலா புலியைத் தெரிவு செய்தாரோ? அதற்குச் சற்றும் குறைவில்லாத வகையில் இன்றைக்கு தனது நடவடிக்கையை மேற்கொள்கின்றார்.//கிழக்கு தலித் .
அனைவரும் சிந்திக்க…