நான் பெயர்களைக் கூற விரும்ப்பவில்லை ஆனால் எமது நாட்டைப்பற்றிய தவறான தகவல்களைக் கூறுபவர்கள் அறிக்கை எழுதுபவர்கள் அமரிக்க டலர்களால் வாங்கப்பட்டவர்கள் என்று தனது மேதின உரையில் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டார். முன்னதாக ஆசியன் திரிப்யூன் என்ற இணையச் சஞ்சிகைக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியிருந்த அரச துணைக்குழுவின் தலைவரான டக்ளஸ் தேவானந்தாவும், ஐ.நா நிபுணர் குழுவினர் பணம் லஞ்சமாகப் பணம் வாங்கிக்கொண்டே இலங்கைக்கு எதிரான அறிகை எழுதியதாக் குறிப்பிட்டிருந்தார்.
தமிழர்கள், சிங்களவர், முஸ்லீம்களுக்கு தாம் உண்மையான சுதந்திரத்தை வழங்கியிருப்பதாக மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டார்.