துபாய் கடல் பகுதியில் தமிழக மீனவர்களின் படகின் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய அமெரிக்க கடற்படையினர் எந்தவித எச்சரிக்கையும் விடுக்கவில்லை என்று தமிழக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
துபாயில் மீன்பிடி நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளராக வேலை பார்த்து வந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த சேகர் என்பவர் கடலில் மீன் பிடிக்கையில் அமெரிக்க கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த துப்பாக்கிச்சூட்டில் ராமேஸ்வரம் கரையூரைச் சேர்ந்த முத்து முனிராஜ், தொண்டி அருகே உள்ள முள்ளிமுனையைச் சேர்ந்த முத்துகண்ணன், முருகன் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
துபாய் நிறுவனத்திற்காக ஒரு படகில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் படகு அமெரிக்க கடற்படையின் கப்பலை நோக்கிச் சென்றதால் அது தீவிரவாதிகளின் படகாக இருக்குமோ என்று நினைத்து அமெரிக்க மாலுமிகள் அதை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டனர். அவ்வாறு சுடுவதற்கு முன்பு தாங்கள் பலமுறை எச்சரித்ததாகவும், அதையும் தாண்டி அந்த படகு தங்கள் கப்பலை நோக்கி வந்ததால் தான் சுட்டதாகவும் அமெரி்கக மாலுமிகள் தெரிவித்தனர்.
ஆனால் அவர்கள் எந்தவித எச்சரிக்கையும் விடுக்கவில்லை என்றும், அமெரி்க்க கடற்படை கப்பலை சுற்றிச் செல்ல முயன்றபோது தான் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும் இந்த சம்பவத்தில் காலில் குண்டு பாய்ந்து துபாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முத்து முனிராஜ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க மாலுமிகள் எங்களை எச்சரிக்கவில்லை. எச்சரிக்கை ஒலி எப்படி இருக்கும் என்று எங்களுக்கு தெரியும். ஆனால் அவர்கள் அவ்வாறு எந்த ஒலியும் எழுப்பவில்லை. திடீர் என்று அவர்கள் சுடத் தொடங்கினர். அதில் என் நண்பன் குண்டு பாய்ந்து இறந்தான். அந்த நிமிடம் என்ன நடந்தது என்றே எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றார்.
இதே வேளை, அமரிக்க விசேட அலகுகளைத் தாங்கிய பாரிய கடற்படைக் கப்பல் ஒன்று பேர்சியன் கால்ப் கடற்பரப்பிற்கு அனுப்பிவைக்கப்பட்டதாக அமரிக்க கடற்படையின் ஐந்தாவது பிரிவைச் சேர்ந்த பேச்சாளர் தெரிவித்தார்.
இந்தக் கடற்படைக் கப்பலைத் தவிர ஐந்து கண்ணிவெடி அகற்றும் கப்பல்களும் பேர்சியன் கல்ப் கடற்பரப்பில் நிலைகொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
வளைகுடாவின் மொத்தப்பரப்பும் யுத்தவலையம் போன்று காட்சிதருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஒபாமா தலைமையிலன அமரிக்க உலகம் முழுவதையும் பாதுகாப்பற்ற பிரதேசமாக மாற்றிவருகிறது.
ஒரு அப்பாவி மனிதன் இறந்தது பரிதாபமானநிகழ்வு. ஆனா இதுல ஏதோ ஒண்டு சறுக்குது. இதே செய்திய தமிழ்னாட்டு மீனவர் இலங்கை/இந்திய கடற்பரப்பில் மீன்பிடிக்க முடியாமல் அங்குபோய் மீன் பிடித்து இப்ப அமெரிக்கனால் சுட்டுக்கொல்லப்படுகிறங்க எண்டும் ஒரு தளத்துல பீலா விட்டிருக்காங்க.
வறியநாடுகளின் விவசாய நிலங்களை பன்னாட்டு நிறுவனங்கள் பயிர்செய்கை எனும் பெயரில் சுரண்டுவதும்,ஆபிரிக்க,ஆசிய நாடுகளின் நீர் வளங்களை குடிநீருக்காக சுரண்டுவதுபோலவும்,கடல் வளங்களையும் சுரண்டுகிறன.இவர்களின் இவ் சுரண்டலுக்கு குறைந்த ஊதியம் பெறும் ஒப்பந்தக்கூலிகள் ஆசிய,ஆபிரிக்க நாடுகளிலிருந்து வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள் அப்படி ஒப்பந்த அடிப்படையில் வந்தவர்கள்தான் இந்த தமிழ்நாட்டு மீனவர்கள்.
இலங்கை கடல்பரப்பில் அத்துமீறுவதாக கூறப்படும் மீனவகளும் இந்தியப்பெருமுதலாளிகளுக்காக கூலிக்கு தொழில்செய்யும் வறிய மீனவர்கள்தான்.
United States Navy is also opening up with their guns close to our shores. That is interesting. Our sympathies are always with the Tamil victims. Tamils need protection by the United Nations like the Palestinians.