ஜனநாயகம் ஊற்றெடுத்து ஆறாக ஓடுகிறது என்று மார்தட்டிக்கொள்ளும் அமரிக்காவில் நேற்று (14.12.2012)நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பச்சிழம் குழந்தைகளின் இரத்தம் ஆறாக ஓடியது. சாண்டி ஹூக் எலிமென்டரி(Sandy Hook Elementary) சிறுவர் பள்ளியில் நடைபெற்ற இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் பலியாகியுள்ளனர். இதில் 20 பேச் ஐந்திற்கும் பத்து வயதுக்கும் இடைப்பட்ட குழந்தைகள். வருடத்திற்கு ஒருதடைவையாவது துப்பாகிக் கொலைகாரர்கள் தமது வெறியாட்டத்தை சுந்திரமாக நடத்தும் நாடான அமரிக்க வரலாற்றில் இந்தக் கொலைகள் மிகவும் பாரதூரமானதாகும் என்று கருதப்படுகின்றது.
நியூயோர்க் சிட்டியிலிருந்து 60 மைல் தொலைவில் அமைந்துள்ள நியூ ரவுன் என்ற இடத்திலேயே இந்த பாடசாலை அமைந்துள்ளது. கறுப்பு உடையணிந்த துப்பாக்கி ஏந்திய மனிதன் பல துப்பாக்கிகளுடன் பாடசாலைக்குள் அமரிக்க நேரப்படி காலை 9.30 இற்கு நுளைந்து 26 உயிர்களைப் பலியெடுத்துவிட்டு தான்னையும் சுட்டுக்கொண்டு மாண்டுபோனான்.
கொலையாளியின் தாயார் அதே பாடசாலையில் ஆசிரியராக வேலை செய்தவர் என்றும் அவர் கொலையாளியின் வீட்டில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார் என்றும் போலிஸ் தகவல்கள் தெரிவித்தன.
கொலையாளியான அடம் லன்ஸா முதலில் தாயாரைக் கொலைசெய்துவிட்டு குழந்தைகளின் பள்ளிக்குச் சென்று அங்கு ஏனையோரைக் கொலைசெய்ததாக தகவல்கள் கூறின. 20 வயதான ரயனின் தாயாரான நான்சியின் கொலையை அறிவித்த பின்னர் கொலையின் பின்னணி குறித்து மேலும் ஆராய்வதாகக் அமரிக்கப் போலீசார் கூறினர்.
உலகம் முழுவதும் மனிதப்படுகொலைகளை நிகழ்த்தும் அமரிக்காவின் பிரசை ஒருவருக்கு மனிதப் பெறுமானங்கள் குறித்த பிரக்ஞை அருகி வருகின்றது. தாம் சார்ந்த பல்தேசிய முதலைகள் பணத்தை விழுங்குவதற்காக உலகம் முழுவதும் இரத்த ஆற்றை பெருக்கெடுக்கச் செய்யும் அமரிக்காவின் பொது மனிதனுக்கு மனிதாபிமானம் அருகி வருகிறது. இளைய சமுதாயம் துப்பாக்கிக் கலாச்சாரத்திற்குப் பழக்கப்பட்டிருக்கிறது.
சினிமா தொலைக்காட்சி போன்ற அமரிக்க ஊடகங்கள் வன்மத்தையும், பயங்கரவாதத்தையும், கொலைகளையும் நியாயம் எனக் கற்பிக்கின்றன. வன்முறையை சமூகத்தின் மேலுள்ள அனைத்திலும் பொதுப் புத்தியாக வளர்த்து வைத்திருக்கிறது அதிகார வர்க்கம். அமரிக்காவின் வெளியுறவுச் செயலர் ஹில்லாரி கிளிங்டன் கடாபி என்ற வயதான மனிதரை இறைச்சித் துண்டம் போல தெருக்களில் வீசியெறிந்து விளையாடியதைப் பார்த்துக் கைகொட்டிச் சிரித்து குழந்தைகளுக்கு பயங்கரவாததை நியாயப்படுத்தினார்.
அமரிக்க அதிகார வர்க்கம் உலகம் முழுவதும் நியாயம் என விதைத்த வன்முறையை இன்று அந்த நாட்டின் மக்கள் அறுவடை செய்கிறார்கள். கொலை நடந்து முடிந்ததும், அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் தாம் செயற்பட்டு கொலைகளை நிறுத்தப்பொவதாக அமரிக்க சனாதிபதி ஒபாமா தெரிவிக்கிறார்.
அவர்கள் உலகம் முழுவதும் நடத்துகின்ர சாரி சாரியான கொலைகளே குழந்தைகளுக்கு கொலைகள் நியாயம் என சொல்லிக் கொடுக்கின்றன.
இலங்கை உட்பட தெற்காசியாவில் நடத்தப்படும் மனிதப்படுகொலைகளும், கொலைகளை நியாயப்படுத்தும் இந்தியத் திரைப்படங்களும், அமரிக்க வன்முறைக் கலாச்சரத்தை நேரடியாகவே விதைக்கும் தொலைக்காட்சிகளும் இந்தியா, இலங்கை உட்பட்ட தெற்காசிய நாடுகளில் அடம் போன்ற பல கொலைகாரர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
//அவர்கள் உலகம் முழுவதும் நடத்துகின்ர சாரி சாரியான கொலைகளே குழந்தைகளுக்கு கொலைகள் நியாயம் என சொல்லிக் கொடுக்கின்றன.
இலங்கை உட்பட தெற்காசியாவில் நடத்தப்படும் மனிதப்படுகொலைகளும், கொலைகளை நியாயப்படுத்தும் இந்தியத் திரைப்படங்களும், அமரிக்க வன்முறைக் கலாச்சரத்தை நேரடியாகவே விதைக்கும் தொலைக்காட்சிகளும் இந்தியா, இலங்கை உட்பட்ட தெற்காசிய நாடுகளில் அடம் போன்ற பல கொலைகாரர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.//
இந்த அப்பாவிக் குழந்தைகளின் அநியாயச் சாவு பரிதாபத்திற்குரியது.அமெரிக்க அரசியல் வலைக்குள் இதனை முடிச்சுப் போடவேண்டாம்.அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொடூரத்திற்கு இத்தகு பிஞ்சுகுழந்தைகளின் உயிர் பலியானால் பரவாயில்லை.என்பது மொத்தமனுக்குலத்து நேசத்தையும் கேள்விக்குட்படுத்துவதாகும். துப்பாக்கி கலாச்சாரம் அமெரிக்க மண்ணுக்கு மட்டுமே சொந்தம் என்று வாதிடுவது ஆபத்தானது.களைத்துக் கிடக்கிற நமது மண்ணும் அதில் சளைத்ததல்ல..
கட்டுரை குழந்தைகளின் சாவை நியாயப்ப்டுத்தவில்லை. உலகம் முழுதும் அமெரிக்கா பரப்பியிருக்கும் வன்முறையை ஊடகங்கள் மூலம் தம் நாட்டு மக்களிடம் நியாயப்படுத்தும் செயலின் விளைவே இது.
People have a right to bear arms in the USA which is not true in any other country in the world. There is a gun lobby in the country that is very powerful and it will not allow any changes to this right. When people carry guns the probability of someone hurting a number of people in oe instance is higher than with any ther weapon like a knife or anything similar. When we say guns they can be semi-automatic rifles too. It has nothing to do with their foreign policy and their actions overseas. It is some rule they created when the country was lawless and they are trying to grapple with it now. Insome sates you have a right to shoot and kill someone who is in your property without your permission,no questions asked. It is much more complex than what you know, especially when you live outside of the USA and now little about the internal affairs.
இதுக்குத்தான் சொலுற மொட்டத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுற எண்டு.
பிடுங்கி நீர் ஒரு பண்டிதர்.
அவர் பண்டிதரோ என்னவோ சொலுறதுல ஒரு பாயிண்ட் இருக்கத்தான் செய்கிறது.
சுட்டவனும் குழந்தை. உயிரை இழந்தவர்களும் குழந்தைகள் . இக்குற்றத்தின் பின்னணி சமூகமே.