1930-ம் ஆண்டுக்குப் பிறகு இத்தகைய நிதி நெருக்கடி முன்னெப்போதும் அமெரிக்காவில் ஏற்பட்டது கிடையாது. அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி எவ்விதம் சீர் செய்யப்படுகிறது என்பதை அனைத்து முதலீட்டாளர்களும் பொறுமையுடன் கவனித்துக் கொண்டிருக்கின்றனர். இதனால் முதலீடு குறைந்துள்ளது. நிதி நெருக்கடியைச் சமாளிக்க 70,000 கோடி டாலர் முதலீடு செய்யப்படும் என அதிபர் புஷ் தெரிவித்துள்ளார். இந்த முதலீடு எந்த வகையில் சரிவை ஈடுகட்டும் என அனைத்து முதலீட்டாளர்களும் உன்னிப்பாக எதிர்பார்க்கின்றனர்.
அமெரிக்க மற்றும் ஆசிய பங்குச் சந்தைகளில் கடுமையான சரிவு ஏற்பட்டதால் உள்ளூர் முதலீட்டாளர்கள் முதலீடுகளை நிறுத்தி வைத்துள்ளனர். இது தவிர, ஒரே நாளில் அதாவது திங்கள்கிழமை மட்டும் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதுவும் முதலீட்டாளர்களை அச்சமடையச் செய்துள்ளதாக பங்குச் சந்தை வல்லுநர்கள் தெரிவித்தனர்.
அமெரிக்க அரசு நிதி உதவி செய்யும் என அறிவித்தபோதிலும் நியூயார்க் பங்குச் சந்தையில் 4.17 சதவீதம் சரிவு ஏற்பட்டது.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 5 சதவீத அளவுக்குச் சரிவைச் சந்தித்தன. இன்ஃபோசிஸ் பங்குகள் ரூ.84.50 குறைந்து ரூ. 1,543.35-க்கும், சத்யம் கம்ப்யூட்டர்ஸ் ரூ. 21.10 குறைந்து ரூ. 331.65-க்கும், டிசிஎஸ் ரூ. 45.25 குறைந்து ரூ. 720.75-க்கும் விற்பனையாயின.
இதேபோல ரியல் எஸ்டேட் நிறுவனப் பங்குகளும் சரிவைச் சந்தித்தன. டிஎல்எஃப், யுனிடெக் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்கு விலைகள் கடுமையாகச் சரிந்தன.
வங்கிகளின் பங்குகளும் சரிவிலிருந்து தப்பவில்லை. பாரத ஸ்டேட் வங்கியின் பங்குகள் ரூ. 63.95 சரிந்து ரூ. 1,502.75-க்கு விலைபோனது. எச்டிஎஃப்சி வங்கி ரூ. 59.90 மற்றும் ரூ. 1,237.70-க்கு விலைபோனது. ஐசிஐசிஐ வங்கி ரூ. 34.35 குறைந்து ரூ. 599.70-க்கு விற்பனையானது.
ரிலையன்ஸ் பங்கு விலை ரூ. 27.45-ம், அபான் ஆஃப்ஷோர் பங்குகள் ரூ. 21.95-ம், ரிலையன்ஸ் பெட்ரோ ரூ. 1.10-ம் குறைவான விலைக்கு விற்பனையானது.
அமெரிக்காவின் பங்குசந்தை தனியஅமெரிக்கர்ளுடையதுதல்ல
உலகத்தில்லுள்ள பணக்காரர்களின் சூதாட்டவிடுதியே வோல்ஸ்ரிட் தான்
இது தன்சரிவை அடையும் போது முதாளித்துவம் தன்சரிவை அடைகிறது எனகொள்ளலாம்
உலகப்பொருளாதாரம் மந்தநிலை அடைகிறது எனவும் கொள்ளலாம் சிலவேளை இன்னும்
சிறிது காலத்திற்கு மூச்சுபிடித்துவைத்திருக்க முடியும். ஏதோ இரவில் மூச்சு விட்டுவிட்டார்
என்றசெய்தியையும் கேட்கமுடியும்.
அதன்பிறகு என்ன?வல்லரசுகள் உலத்தின்வளங்களை பங்கு போடஆயுதங்களுடன் புறப்படுவார்கள். தேசத்துக்குள் மேல் தேசமும் மதத்திற்கு மேல் மதமும் இனத்திற்கு மேல்
இனமும் பகைமை அடைவார்கள்.உலகத்தை ஒரு யுத்தக்களமாக மாற்றிவிடுவார்கள். இதன்
ஒருமுற் பகுதிதான் ஆப்கானிஸ்தான் ஈராக் இனிவரப்போகிற ஈரான் என்பதை யாரும்
மறக்கக்கூடாது.இந்தயுத்தத்தில்லிருந்து இந்த உலத்தையும் உலகமக்களையும் எப்படி பாதுகாப்பது என்ற கேள்வி நீண்டுகொண்டேயிருக்கும்.கிட்லரும் முசலோனியும் லெனினும்
ரொக்சியும் ஸ்டாலினும் மாவோவும் இப்படியான சூழ்நிலைகளில் தான் தோற்றம் பெற்றார்கள்
என்பதையும் உணர்ந்துகொண்டு இதில்லுள்ள வேறுபாடுகளைய முற்படுவார்கள்.
சந்திரன் ராஜா நீங்கள் சொல்வதை இலங்கை நிலமைகயோடு பொருத்தி பார்க்கும் போது சில விடயங்கள் சரியாய் பொருந்துகின்றன.உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வராத நிலையில் அங்கு சாதி பிரச்சனை, பிரதேச முரண்பாடு என்பன மெல்ல வளர புலம் பெயர் தேசங்களில விதை போடப்பட்டு வருகிறது.பெண்ணியமும் கைகோர்த்து கொள்ள ……….
ஈரான் ஈராக் மட்டுமல்ல இலங்கையையும் சற்று சிந்தியுங்கள்.