இலங்கையில் மதவாதம் மற்றும் பிரிவினை வாதத்தைப் பரப்பிவரும் பொதுபல சேனா என்ற இலங்கை அரச ஆதரவில் இயங்கும் பௌத்த பயங்கரவாத அமைப்பு. அமரிக்காவில் தனது கிளை அலுவலகத்தைக் கொண்டிருக்கும் பொதுபல சேனாவின் செயலாளர் ஞானதாச தேரர் என்ற பௌத்த பிரிவினைவாதி, முஸ்லிம் தீவிரவாத கொள்கைகளை பௌத்த நாட்டில் பரப்பி பௌத்த சின்னத்தை அழித்து முஸ்லிம் நாடாக இலங்கையை மாற்றவே பலர் செயற்பட்டு வருகின்றனர்.தேசிய பாதுகாப்பிற்காகவே அரசாங்கம் பர்தா, தொப்பி அணியக்கூடாதென வலியுறுத்துகின்றது. இதனை ஏற்றுத்தான் ஆக வேண்டும். என்று கூறினார். தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்ட பின்னரும் அந்த அமைப்பைப் பயங்கரவாத அமைப்பாகப் பிரகடனப்படுத்தித் தடைசெய்திருக்கும் அமரிக்க அரசு பொதுபல சேனாவை சுதந்திரமாக உலவரவிட்டுள்ளது.
இந்திய இனக்கொலையாளி நரேந்திர மோடிக்கு எந்தவகையிலும் குறைவற்ற பொதுபல சேனா, இப்போது தமிழீழம் கேட்பவர்கள் யாரானாலும் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று மிரட்டியுள்ளது.