நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்துச் செல்லும் அமரிக்க அரசிற்கு அதிகமாகக் கடன் வழங்கியுள்ள நாடு சீனா. அமரிக்க அரசின் கடன் இரண்டாக வகைப்படுத்தப்படுகின்றது. முதலாவதாக பொதுசன கடன் என்றும் இரண்டாவதாக அரசுகளுக்கிடையேயான கடன் என்றும் அழைக்கபடுகின்றது. முதலாவது வகயான பொதுசன கடன் தொகை சில மாதங்களின் முன்னான கணிப்பீட்டின் படி 11.9 ரில்லியன் டொலர்கள். அரசுகளுக்கு இடையேயான கடன் தொகை 4.8 ரில்லியன் டொலர்கள். 4.8 ரில்லியன் டொலர்கள் கடன் ஏனைய நாட்டு அரசுகளிடம்ருந்து அமரிக்க அரசு பெற்றுக்கொண்ட கடனாகும். அமரிக்கவிற்கான உச்சபசக் கடனை வழங்கியுள்ள நாடு சீனாவாகும். நாடுகள் வழங்கியுள்ள கடந்தொகையில் இது 20.4 வீதமாகும். 891.6 பில்லியன் டொலர்களை சீன அரசு அமரிக்காவிற்குக் கடனாக வழங்கியுள்ளது.
சீனாவிற்கு அடுத்ததாக ஜப்பான் அதிக அளவிலான கடனை வழங்கிய நாடாக உள்ளது. ஜப்பான் 883.6 டொலர்களைக் கடனாக வழங்கியுள்ளது. இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, வேல்ஸ், வட அயர்லாந்து, சனல் தீவுகள் ஆகின இணைந்து 541.3 பில்லியன் டொலர்களைக் கடனாக வழங்கியுள்ளது. எண்ணை ஏற்றுமதியாளர்கள் இணைந்து 218 பில்லியன் டொலர்களைக் கடனாக வழங்கியுள்ளனர்.
தவிர பொதுசனக் கடன் என அழைக்கப்படும் 11.9 ரில்லியன் டொலர்களில் 341.4 பில்லியன் டொலர்களை தனியார் வங்கிகள் வழங்கியுள்ளன. இத்தொகையின் பெரும்பகுதி பல்தேசிய நிறுவனங்களின் உபரி முதலீடுகளாகும். தனியார் ஓய்வூதியத் திட்டத்திலிருந்து 457.7 பில்லியன் டொலர்கள் கடனாக வழங்கப்பட்டுள்ளது. காப்புறுதி நிறுவனங்கள் 263.3 பில்லியன்களை வழங்கியுள்ளன. பல்தேசிய வியாபார நிறுவனங்கள் 1.5 ரில்லியன்களை வழங்கியுள்ள்ன.
சீனாவிற்கும் அமரிக்காவிற்குமான முரண்பாடே உலகின் பிரதான முரண்பாடாக வெளிக்காட்ட முயலும் அரசியலுக்குப் பின்னால் சீனாவே அமரிக்கவின் நம்பிக்கைக்குரிய வெளிநாட்டு முதலீட்டாளகள் என்பது மறைக்கப்படுகிறது.
சீன வெளி நாட்டமைச்சர் சூ குவான்கியாஒ அமரிக்க அரசு எந்த நிலையிலும் சீன அரசின் முதலீட்டுற்குப் பொறுப்புக்கூற வேண்டும் என்றும் அமரிக்க டொலரின் ஆதிக்கம் குறைக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
It is true that Chinese have been financing the American Public Debt. This will bring countries closer and make them responsible.
The Chinese do not have any other option with the dollars they, do you expect them to by the SL treasury notes. ?
since 2005 China has provided loan commitments upwards of $75 billion to Latin American countries. These figures have now been updated through 2012, showing $87 billion in loans, as part of the China-Latin America Finance Database, a collaboration between GDAE, Boston University’s Global Economic Governance Initiative, and the Inter-American Dialogue. China’s loan commitments of $37 billion in 2010 was more than the World Bank, Inter-American Development Bank, and the United States Export-Import Bank combined for that year.
For more…
http://www.ase.tufts.edu/gdae/policy_research/NewBanks.html
சீன வெளிநாட்டு நாணயக் கையிருப்பில் 80 சதவீதம் அமெரிக்க டொலர்கள்.
இதை வைத்து தனக்குத் தேவையான பொருட்களை இறக்குமதி செய்யலாம்.
அதேவேளை, தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை ஏற்றுமதி செய்தால், அதை வாங்கும் நாடுகளிடம் அமெரிக்க டொலர் இருக்க வேண்டும்.
ஆகவே பிற நாடுகளின் கடன் பத்திரங்களை (முறிகள் ) வாங்குவதால், சீனாவிற்கு இரண்டு இலாபங்கள்.
கடனிற்கு வட்டியும் வரும்.. தான் உற்பத்தி செய்த பொருட்களை கடனில்லாமல் விற்ற மாதிரியும் இருக்கும்.
இப்படியும் ஒரு வலுவான வாதம் உண்டு.
அமெரிக்காவிற்கு கடன் கொடுக்காவிடில் சீனாவிற்கு பாதகமான நிலை ஏற்படலாம்.:
http://veltharma.blogspot.co.uk/2013/10/blog-post_17.html