Fortune இதழ் 500 மிகப் பெரிய அமெரிக்க நிறுவனங்களின் தரப்பட்டியலை வெளியிட்டது. இது அந்நிறுவனங்கள் 2010ல் இருந்து 16% அதிகமாகவும் 2011 இல் மிகஅதிகளவில் மொத்த இலாபங்களாக $824 பில்லியனை ஈட்டியுள்ளன என்பதைக் காட்டுகிறது.
ஆனால் முன்னைக் காட்டிலும் அதிக பணம் ஈட்டியுள்ளபோதிலும்கூட, நிறுவனங்கள் முதலீடு செய்யவும், பணியாளர்களை நியமிக்கவும் மறுக்கின்றன. மாறாக, அவை நிர்வாகிகளுக்கு மிக அதிக மேலதிககொடுப்பனவுத் தொகைகளை வழங்குவதுடன், எஞ்சியிருப்பதை ரொக்கமாகப் பதுக்கி வைத்துள்ளன.
ஒரு சராசரி தலைமை நிர்வாக அதிகாரி 2011ல் $12.14 மில்லியன் ஊதியத்தை வீட்டிற்கு எடுத்துச் சென்றார். இது 2010ல் இருந்த $12.04 மில்லியனைவிடவும், 2009ல் இருந்த $10.36 மில்லியனைவிடவும் அதிகமானதாகும். இத்தகவல் இம்மாதம் முன்னதாக Economic Policy Institute வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்படுகிறது.
தலைமை நிர்வாக அதிகாரியின் ஊதியம், தொழிலாளர்களின் ஊதியங்களோடு விகித முறையில் ஒப்பிட்டுப்பார்த்தாலும், உறுதியாக ஏற்றம் பெற்றுள்ளது என்று அறிக்கை காட்டுகிறது. ஒரு சராசரி தலைமை நிர்வாக அதிகாரி 2011ல் ஒரு சராசரித் தொழிலாளியின் ஊதியத்தைப் போல் 231 மடங்குகள் அதிகம் பெற்றார். இது 2010ல் இருந்த 228 மடங்கு, 2009ல் இருந்த 193 மடங்கு ஆகியவற்றைவிட அதிகம் ஆகும். இது 2000ம் ஆண்டின் சராசரித் தொழிலாளியை விட நெருக்கடிக்கு முந்தைய உச்சக்கட்டமான 383.4 மடங்கை விரைவில் மீண்டும் அடைந்து விடும்.
நிர்வாகிகள் தங்கள் பைகளில் நிரப்பி வைத்தது போக எஞ்சியிருக்கும் நிதிகள் வெறுமே பதுக்கி வைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு பெருநிறுவனங்கள் ரொக்கமாக $1.8 டிரில்லியன் வைத்திருந்தன. இது முந்தைய தசாப்தங்களில் அவை வைத்திருந்த தொகையைப் போல் கிட்டத்தட்ட இரு மடங்கு ஆகும்.
இப்படி ரொக்கத்தைப் பதுக்கி வைத்தல் என்பது உற்பத்தித்திறனுடைய முதலீட்டின் இழப்பில் நடத்தப்படுகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் முதலீட்டிற்காகப் பயன்படுத்தப்பட்ட பெருநிறுவனச் சொத்துக்களின் பங்கு பெரிய நிறுவனங்களில் மூன்றில் ஒரு பகுதி சரிந்தது. அதே நேரத்தில் ரொக்கமாக வைக்கப்பட்ட சொத்துக்களின் பங்கு இருமடங்கு ஆகிவிட்டது என்று இந்த மாதம் முன்னதாக சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு கொடுத்துள்ள அறிக்கையில் இருந்து தெரிகிறது.
2006 முதல் 2010 க்குள் மட்டும், பெரு நிறுவனங்களால் ரொக்கமாக வைக்கப்பட்டுள்ள சொத்துக்கள், 2006ல் 4.2 சதவிகிதம் என்பதில் இருந்து 2010ல் 5.3% என உயர்ந்துள்ளது என்று அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
வணிக முதலீடு இப்பொழுது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16% இற்கு அண்ணளவாக உள்ளது; இது ரொக்கமாக வைத்திருக்காத முந்தைய அளவுகளைவிட 20% இனால் மிகவும் குறைவாகும் என்று தொழிலாளர் பற்றிய சர்வதேச அமைப்பு கூறியுள்ளது.
பொருளாதார நெருக்கடியின்போது, அமெரிக்கப் பொருளாதாரம் 9 மில்லியன் வேலைகளை இழந்தது. மிகவும் குறைந்த வேலையிலிருப்போர் என்ற மட்டத்தை தொட்டதில் இருந்து, பொருளாதாரம் 4 மில்லியன் வேலைகளை மட்டுமே சேர்த்துள்ளது. அதே நேரத்தில் 2010ல் இருந்து 3 மில்லியன் மக்கள் பணிபுரியும் வயதிற்கு வந்துவிட்டனர்.
இதன் விளைவாக வேலை-மக்கட்தொகை விகிதம் மூன்று தசாப்தங்களில் இல்லாத அளவிற்கு மிகவும் குறைந்து விட்டது. 2008ல் இருந்து தற்காலம் வரை, பணிவயதில் இருக்கும் மக்கட்தொகையின் பங்கு வேலையைத் தக்க வைத்துக் கொண்டிருப்பது என்பது 5 முழு சதவிகிதப் புள்ளிகள் சரிந்துவிட்டது.
அமெரிக்காவின் மிகப் பெரிய வங்கியான ஜே.பீ.மோர்கன் செஸ் [J P Morgan Chase] , 6 வாரத்துள் $2 பில்லியன் டொலர்களை இழந்துள்ளது. பங்குச் சந்தையில் இன்றும் வீழ்ச்சியை எதிர்கொள்கிறது.
Two billions is not big for MC and US survive this and much more.
That is right Roopan. They know what they are doing since 1776.