அமெரிக்க கடற்படையினரின் தாக்குதலில் பலியான தமிழக மீனவரின் உடல் இன்று விமானம் மூலம் கொண்டு வரப்படுகிறது.
வளைகுடாவின் மொத்தப்பரப்பும் யுத்தவலையம் போன்று காட்சிதருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஒபாமா தலைமையிலன அமரிக்க உலகம் முழுவதையும் பாதுகாப்பற்ற பிரதேசமாக மாற்றிவருகிறது.இதன் விளைவுகளை உலகம் முழுவதும் மக்கள் சந்தித்து வருகின்றனர். மத்திய கிழக்கு, ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளில் அமரிக்க மற்றும் நேட்டோ இராணுவ ஆக்கிரமிப்பும் கொலைகளும் அதிகரித்து வருகின்றன.
தமிழக மீனவர்கள் கடந்த 16-ம் தேதி, அரபிக் கடலில் ஜெபல் அலி துறைமுகம் அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அப்பகுதிக்கு வந்த, யுத்தம் செய்வதற்காகக் குவிக்கப்பட்டுள்ள அமெரிக்கக் கடற்படையினர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் சேகர் என்பவர் உயிரிழந்தார். மேலும், 4 தமிழக மீனவர்கள் காயம் அடைந்தனர்.
சேகரின் உடலை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர் அமைப்புகள் வலியுறுத்தின. இதனிடையே, இந்திய வெளியுறவுத்துறையும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது.
அவரின் உடல் இன்று விமானம் மூலம் திருச்சி கொண்டு வரப்படுவதாக வெளியுறவுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நலனுக்காகப்பலியிடப்பட்ட இந்தியனில் சேகரையும் சேருங்கள்
Our sympathies are always with the family of the slain Tamilian. Flag Ship of the Seventh Fleet U.S.S. Enterprise is in the Meditteranean. 1971.