Tuesday, March 10, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

அப்பா மகனுக்கு எழுதும் கடிதம்…

இனியொரு... by இனியொரு...
02/18/2014
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
1
Home பிரதான பதிவுகள் | Principle posts

அமெரிக்க ஏகாதிபத்திய அரசிலிருந்து, இலங்கை பாசிச அரசு வரைக்கும் துயர்படும் ஒரே விடயம் வர்க்கப்போராட்டத்தை எப்படி அழிப்பது என்பதே. இலங்கையில் தேசிய இனங்களின் விடுதலை சிங்கள மக்கள் மத்தியில் வர்க்கப் போராட்டத்தை தோற்றுவிக்கும் என்ற காரணத்தாலேயே சிறுபான்மைத் தேசிய இனங்களை இலங்கை அரசு ஒடுக்கி இனப்படுகொலை செய்கிறது. அதற்கு உலகின் அனைத்து அதிகார வர்க்கங்களும் உதவி புரிகின்றன.
2025 இல் உலகில் அதிகாரவர்க்கங்கள் எப்படியிருக்கும் என அமெரிக்க அரசு ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதன் முடிவுகள் முழுவதும் உலகில் வர்க்கப்போராட்டம் தோன்றிவிடுமே என்ற துயரமே இழையோடுகிறது. டேர்கையிம் போன்ற மார்க்சின் பிற்காலக் கல்வியாளர்களிலிருந்து, சமுவேல் ஹன்டிங்டன் போன்ற 70 களின் ஏகாதிபத்திய ஆலோசகர்கள் ஈறாக, இன்றைய அமெரிக்க பொருளியல் ஆலோசகர் ஜோசெப் ஸ்டிகிளிட்ஸ் வரை வர்க்கப்போராட்டத்தை எப்படி அழிப்பது என்பது குறித்தே ஆய்வு செய்கிறார்கள்.
வர்க்கப்போராட்டத்தை தற்காலிகமாகப் பின்போடுவதற்கு தன்னார்வ நிறுவனங்களின் உதவிகளில் மக்கள் தங்கியிருக்கும் நிலையை உருவாக்க வேண்டும் என்று வெளிப்படையாகக் கூறியே பங்களாதேஷிலும், இலங்கையிலும் தன்னார்வ நிறுவனங்கள் 60 களின் இறுதியிலேயே உருவாக்கப்பட்டு இன்று வரை அழிவுகளை ஏற்படுத்தி வருகின்றன.
இலங்கை போன்ற பிந்தங்கிய கலாச்சார பண்பாட்டு தொடர்ச்சியைக் கொண்ட நாடுகளில் மார்க்சியத்தையும், வர்க்கப் போராட்டத்தையும் போராடும் முன்னணி சக்திகள் நிராகரிக்கும் போக்கு ஏகாதிபத்தியங்களின் நிகழ்ச்சித்திட்டத்திற்கும் சுரண்டல் தந்திரத்திற்கும் கிடைத்த வெற்றியாகவே கணிக்கப்படுகிறது.
சமூக விஞானத்தை எளிமைப்படுத்தி, ஒரு தந்தை மகனுக்கு எழுதும் கடிதங்கள் போன்று கட்டுரைத் தொடராக வெளியிட்டவர் செ.கணேசலிங்கன். சிறிய அச்சகம் ஒன்றின் உரிமையாளரான கணேசலிங்கனின் ‘உற்பத்தி சக்தியின் மறு உற்பத்தி’ என்ற மகன் குமரனுக்கான கடிதம் ஒன்றை இங்கு பதிவுசெய்கிறோம்:

அருமை மகனுக்கு,

உற்பத்தி சக்தியின் மறு உற்பத்தி

letterநமது அச்சகத்தியில் சில தொழிலாளகளை வேலைக்கு நியமிக்கிறோமல்லவா? அது போலவே எல்லாத் தொழிற்சாலைகளிலும் நிறுவனங்களிலும் அலுவலகங்களிலும் நடைபெறுகிறது. ஆகவே தொழிலாளர்கள். தொழிலாளர்களின் உழைப்புச்சக்தியின் உற்பத்தி தொடர்ந்து நடைபெறத் தேவையிருக்கிறது.

தொழிலாளர்கள் குழந்தைகளைப் பெறுகிறார்கள். அவர்கள் வயதானதும் தமது உழைப்புச் சந்தையில் விற்கத் தயாராகின்றனர்.
ஆனால் இங்கு ஒன்றை நினைவூட்ட வேண்டும். உழைப்புச் சக்தியின் மறு உற்பத்தி தொழிற்சாலைகளிலோ, அலுவலகங்களிலோ நடைபெறுவதில்லை, அவற்றிற்கு வெளியே நடைபெறுகிறது.

யந்திரங்களை மீள நிறுவும்போது மூலதனம் தேவைப்படுகிறது.ஆனால் உழைப்புச் சக்தியின் மறு உற்பத்தி எவ்வாறு உறுதிப்படுத்தப்படுகிறது. எங்கிருந்து மூலதனம் வருகிறது. என்றெல்லாம் கேட்கிறாயா?

தொழிலாளருக்கு வழங்கும் கூலியிலேயே உழைப்புச்சக்தியின் மறு உற்பத்திக்கு உரிய மூலதனமும் அடங்கியுள்ளது என்றே கூறவேண்டும்.(மார்க்ஸ் இதை மாறுதல் மூலதனம் என்றார்). தொழிலாளர் தமக்குக் கிடைக்கும் கூலியைக் கொண்டு உணவு, வீட்டு வாடகை, உடை மட்டுமல்ல: திருமணம் செய்து, குடும்பமாக வாழ்ந்து, குழந்தைகளைப் பெற்று வளர்த்துக் கல்வியும் அளிக்கிறார்கள்.

தொழிலாளி உற்பத்தி தொடர்ந்து நடைபெறத் தேவைப்படும் பல்வேறு ரகமான உழைப்புச் சக்தியை மறு உற்பத்தி செய்கிறான். உழைப்பின் தேவைகள் பலரகமல்லவா? உழைப்போரின் தேவைகளுக்காக முதலாளிகள் மிகக்குறைந்த கூலியையே வழங்குவர்.ஆயினும் தொழிலாளர் உயர்ந்த கூலிக்காகவும் வேலை நேரத்தைக் குறைப்பதற்காகவும்,தொடர்ந்து போராடிக் கொண்டே இருப்பர் என்பதை மறந்துவிடாதே.

தாமரைக்குளத்தில் ஓரளவு தண்ணீர் இருக்கும் வரையிலேயே தாமரைக் கொடியும் உயிர் வாழ முடியும். தண்ணீர் இல்லாவிடின் கொடியும் அழிந்துவிடும். எந்த அரசும் தொழிலாளர்மேல் கவனம் செலுத்துவதையும் கவனித்திருப்பாய். உழைப்பாளி வர்க்கத்தையும் சுரண்டும் வர்க்கத்தையும் சமரசப்படுத்தி வைப்பதற்கே அரசு என்ற ஓர் அமைப்பு தோன்றியது. இன்றும் நிலவுகிறது. ஆனால் ஒரு முக்கிய விசையம் இங்கு நினைவில் கொள்ளவேண்டும். இந்த அரசு எப்பொழுதும் உற்பத்திச் சாதனங்களைக்கொண்ட சுரண்டும் வர்க்கத்தைச் சார்ந்ததாகவே இருக்கும். நடுநிலைமை போலக் காட்டுவது வெறும் பொய்மையே என்பதை மறந்துவிட வேண்டாம்.

ஒரு தொழிற்சாலையை அல்லது ஒரு நிறுவனத்தை நடாத்துவதற்குப் பல்வேறு வகைப்பட்ட உழைப்பாளர்கள் தேவைப்படுவர். நமது அச்சகத்தில் மெசின்களை ஓட்டுவோர், அச்சுக்கோர்ப்போர், பைண்டிங் செய்பவர், மானேஜர் என்று இருக்கவில்லையா?அதேபோல் தொழிற்சாலைகளில் இஞ்சினியர்,தொழில்நுட்பம் அறிந்தோர்,யந்திர இயக்குநர், உடலுழைப்பாளர், கணக்காளர், குமாஸ்தாக்கள், சுருக்கெழுத்தாளர், தட்டெழுத்தாளர், வாகனம் ஓட்டுநர், முகாமையாளர் எனப் பலதரப்பட்டவர்கள் பணியாற்றுவர். இவர்களெல்லோரும் ஒரே நாளில் தம் திறமைகளை மந்திர சக்தியால் பெற்றவர்களல்லர்.

முதலாளித்துவம் தனக்கு வேண்டிய கல்வி அமைப்பு மூலம் இத்துறைகளில் பயிற்சியளிக்கிறது. ஆரம்பப்பயிற்சி, பின்னர் இதன் துணையுடன் தன் தொழிற்சாலைக்கோ அலுவலகத்திற்கோ வேண்டியபடி மேலதிக பயிற்சியளித்து அவர்களின் உழைப்பைப் பயன்படுத்திக்கொள்கிறது.
எல்லாப் பிள்ளைகளுக்கும் தேவையான ஆரம்பக்கல்வி உற்பத்தியில் ஈடுபடுவதற்கு அவர்களுக்குப் பயன்படுகிறது.முதலாளிகள் படியாத முட்டாள்களை விரும்புவார்கள் என எண்ணிவிடாதே , ஓரளவு கல்வியறிவுள்ள விவேகமானவர்களையே வேலையில் அமர்த்த விரும்புவார்கள்.ஏனெனில் அவர்களிடமிருந்தே அதிக , வாய்ப்பான உழைப்பைப் பெறமுடியும். வேலைகளை மட்டுமல்ல, ந்ர்வாக ஒழுங்கு விதிகளையும் கற்று அவர்களே ஒழுங்காக உழைப்பர். இவற்றைப் பின்னர் விபரமாக அறிந்து கொள்வாய். முதலாளித்துவம் ஒரு பகுதி மக்களை வேலையின்றியும் வைத்துக் கொள்ளும். கார.ணம்; வேலை தேடும் போட்டியில் குறைந்த கூலியில் உழைப்புச் சக்தியை வாங்க முடியும். வேலையில் இருப்போர் அங்கேயே ஒட்டி இருப்பர். வேலையற்ரோரின் வறுமை,பட்டினி நிலையைக் காட்டிப்பிற தொழிலாளரை அடிமைப்படுத்தி வைக்க முடியும்.

அன்பான,
அப்பா

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
மட்ராஸ் கோப்பியிலிருந்து நவிப்பிள்ளை வரைக்கும் தீர்க்க தரிசனம் : சோளன்

ஜெயலலிதா பிரதமராக வந்தால் ஆதரிப்பேன்: சீமான் -கேட்க மறந்த கேள்விகள்

Comments 1

  1. ஆனந்த்.க says:
    12 years ago

    வர்க்க போராட்டம் என்பது நாம் தமிழர்கள் பிரச்னை என்பதை மற்றும் வைத்துகொண்டு பார்த்தோமானால் புரிந்து கொள்ள எளிமையாக இருக்கும். தமிழர்கள் என்ற வர்க்கம் இலங்கையில் இருக்க கூடாது என்று தமிழர்களை அழித்து ஒழிக்கும் சிங்களர்கள் செய்த அநியாயம் அதிகம்.அதற்கு துணை போன இந்திய அரசாங்கம்,தமிழ் நாடு அரசியல் சக்திகள் ஊழல் செய்வதற்கு வாய்ப்பாக இந்திய அரசாங்கத்திற்கு துணை போனது இந்த சூழல்கள் தமிழ் மக்களை கொன்று குவித்தது. மன மோகன் சிங் dr பட்டம் வாங்கியது அமெரிக்க பொருளாதாரத்தை எவ்வாறு உயர்த்தலாம் என்று ஆராய்ச்சி செய்து அதில் முனைவர் பட்டம் வாங்கியுள்ளவரை நாம் பிரதமாராக தேர்ந்து எடுக்கவில்லை.அமெரிக்க இவர்தான் இந்தியாவின் பிரதமர் என்று முடிவு செய்து தான் மன மோகன் சிங் இந்தியாவின் பிரதமர் ஆகிறார்.அதே போல் மற்ற முக்கிய அமைச்சர்களும் அமெரிகாவின் ஆலோசனையின் அடிபடையில் நியமிக்க படுகின்றனர்.அப்பாவி இந்திய மக்கள் ஏமாற்றப்பட்டு சுரண்டபடுகின்றனர்.இவர்கள் போன்ற அந்நிய சக்திகள நம்மை அடிமை படுத்தி ஏகாதிபத்திய சக்திகள் வளர்கின்றன.இந்த சூழலில் வர்க்க போராட்டம் எளிதாக முறியடிக்க படுகின்றது.
     (  புரிந்து கொள்ள இன்னும் எளிமையாக பின்னர் எழுதுகிறேன்.ஏனெனில் பிரச்னைகளை காரணங்களுடன் மையபடுத்தி விரிவாக எழுதினால்தான்புரியும்.)

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...