பிரான்ஸ்- பாரீஸில் சமூகப் பாதுகாப்பு அமைப்பு ( Comité de Défense Social) மற்றும் Les Libertaires அமைப்பினரால் ஒழுங்கு செய்யப்பட்ட மே தின ஊர்வலம் நேற்றைய தினம் (01.05.2009) மிச் சிறப்பாக நடந்தேறியது. இலங்கை மக்கள் எதிர்கொள்ளும் யுத்த அவலங்களை வெளிப்படுத்தும் கோசங்களை முதன்மைப்படுத்தி இவ் மே தின ஊர்வலம் அமைந்திருந்தது. குறிப்பாக இலங்கை அரசு, தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் , இலங்கை அரசோடு சேர்ந்து இயங்கும் ஆயுதக் குழுக்கள் மீதான கண்டன கோசங்கள் மே தின ஊர்வலத்தில் கலந்துகொண்டோரால் முன் வைக்கப்பட்டது. பெரும்திரளான மக்கள் கலந்துகொண்ட இந்த மே தின ஊர்வலம் இலங்கையில் நடக்கும் அனைத்து வன்முறைகளையும் எதிர்க்கும் மே தின ஊர்வலமாக இவ்வருடம் அமைந்திருந்தது. பிரான்சில் இருக்கும் பல்வேறு அமைப்புக்களைச்சார்ந்த இடதுசாரிகள், பெண்ணியலாளார்கள் ,அனார்க்கிஸ்டுக்கள் சுற்றுப்புறச்சுhழலியலாளர்கள் என பலரும் இவ் மே தின ஊர்வலத்தில் கலந்துகொண்டு இலங்கையில் நடக்கும் அனைத்து வன்முறைகளுக்கும் எதிரான தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். வழமைபோல் அரச ஆதரவாளர்களினதும் புலி ஆதரவாளர்களினதும் பல்வேறு எதிர்ப்பையும் தடைகளையும் மீறி இவ் ஊர்வலம் நடாத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நண்பர்களே நீங்கள் நடத்திய மே தின ஊர்வலத்தில்
நானும் கலந்துகொள்ள திட்டமிட்டிருந்தேன் தவிர்க்க
முடியாமல் வரமுடியவில்லை. என் நண்பர் புலிகளுக்கெதிராக வீரவசனம் பேசுவார் என்னோடு. அவர் புலிகளுக்குப் பயந்து உங்கள் ஊர்வலத்திற்கு வராமல் ஒழிந்துவிட்டார். இவரை கடைசிநேரம்வரை வருவார் வருவார் என்று நம்பியே என்னால் கலந்துகொள்ளமுடியாமல்போய்விட்டது.
நீங்கள் உங்கள் போராட்டத்தை சரியாக இ எல்லா கொலைகாறர்களையும் கண்டித்து மக்களை நேசித்து அவர்கள் விடிவுக்காக நடாத்துகிறீர்கள்.இதுதான் உங்கள் வெற்றி.இங்கு இருக்கும் அரச ….. இணையத்தளங்கள் புலிகளின் ……..இணையத்தளங்கள் போன்றவை உங்கள் மே தின ஊர்வல செய்தியை போடாததிலிருந்தே நீங்கள் மக்களை நேசிக்கிறீர்கள் சரியான வழி செல்கிறீர்கள் என்பதை நீருபித்துவிட்டீர்கள்