தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைகள் விடயத்திலும் கைது செய்யப்பட்டுதடுத்து வைக்கப்பட்டுள்ள அப்பாவித் தமிழ் இளைஞர்கள் விடயத்திலும்அரசாங்கம் மாறுபட்ட கொள்கையினைக் கடைப்பிடித்து வருகின்றது எனவும் நீதிமன்றங்களின் மீது குடும்பவாத அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன எனவும் ஜனநாயகத் தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித்குமார பாராளுமன்ற உரையில் குற்றம் சாட்டியிருக்கிறார்.
பாராளுமன்றத்தில் வரவு – செலவுத் திட்டம் மீதான விவாதத்தில்
உரையாற்றுகையிலேயே அஜித்குமார இந்தக் குற்றச்சாட்டுக்களை
முன்வைத்திருக்கிறார். அஜித்குமார பாராளுமன்றத்தில் தொடர்ந்து உரையாற்றுகையில், தடுத்து வைக்கப்பட்டுள்ள 5000 ஆயிரம் இளைஞர்களை ஜனவரியில் விடுவிக்க இருப்பதாக
அமைச்சர் எயூ குணசேகர அறிவித்திருந்நதார். அவர் அறிவித்த படி அந்த இளைஞர்கள் விடுவிக்கப்படுவார்களா எனக் கேள்வியெழுப்பியதுடன், அப்பாவி மக்களுக்கு ஏற்படுகின்ற அநீதிகளுக்காக ஜே.வி.பி எப்போதும் குரல் கொடுத்து
வருகின்றது. அந்த வகையில்தான் வட பகுதியின் அப்பாவி இளைஞர்களுக்காகவும் ஜே.வி.பி. குரல்கொடுக்கின்றது என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் எனவும் தெரிவித்திருக்கிறார்.
மேலும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுடன் சிரித்துப் பேசினார்கள் என்பதற்காக சிறைச்சாலை அதிகாரிகள் இருவர் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது ஏற்கத் தகாதவையாகும். சிறைச்சாலைகளில் இடம் பெற்று வருகின்ற அநாவசிய மற்றும் சட்டத்துக்கு முரணான நடவடிக்கைகள் தொடர்பாக புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அமைச்சர் தலையீடு செய்ய வேண்டும்
என்றும் கேட்டுக் கொண்டார்.