கொத்துக் குண்டுகள், இரசாயன ஆயுதங்கள் போன்ற சர்வதேச சட்டங்களடிப்படையில் தடைசெய்யப்பட்ட கனரக ஆயுதங்களின் தாராள பாவனை காரணமாக பெருமளவிலான மக்கள் உயிரிழந்துள்ளதாக அவ்வேளையில் அங்கிருந்த உதவி அமைப்பொன்றின் ஊழியர் ஒருவர் தெரிவித்ததாக அமெரிக்கா மகசின் என்ற சஞ்சிகை கருத்து வெளியிட்டுள்ளது.
இன்று வன்னியில் போர் நடந்த பகுதி சுடுகாடாகக் காட்சியளிப்பதாகவும் தேவாலயங்கள், கட்டிடங்கள் என்று எல்லாமே அழிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் அச்சஞ்சிகைக்குத் தெரிவித்ததுள்ளார்.
அப்பாவிப் பொதுமக்களிற்கெதிரான பல கொடூரங்களை நேரில் கண்ட சாட்சி என்ற வகையில் தனது அடையாளத்தைத் தற்போது வெளியிட விரும்பவில்லை என மேலும் அவர் தெரிவித்ததாக அச்சஞ்சிகை மேலும் கூறுகிறது.