அரசியல் நிறுவனமய மாவது நாட்டின் ஜன நாயகத்திற்கு ஆபத்து என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறினார்.
பெரும் நிறுவனங்க ளால் இந்திய அரசியல் தீர்மானிக்கப்படுவது, நாட்டின் ஜனநாயக மற் றும் பொருளாதார நடவ டிக்கைகளிலிருந்து சாதா ரண மனிதர்களை முழு மையாக வெளியேற்றுவ தற்கு சமமானது என்றும், அதே நேரத்தில் ஒரு சில ரது கைகளில் நாட்டின் ஒட்டுமொத்த வளமும் குவிவதற்கும், இது வழி வகுக்கும் என்றும் பிர காஷ் காரத் கூறினார்.
டில்லியில் உள்ள ஜவ ஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் முன்னாள் மாணவர்களது முதல் சந் திப்பு வியாழனன்று நடை பெற்றது. இந்தியாவின் புகழ் பெற்ற உயர்கல்வி நிறுவனமான ஜவஹர் லால் நேரு பல்கலைக் கழகம், இந்திய அரசிய லில் பெரும் பங்களிப்பு செய்து வரும் பல்வேறு தலைவர்களை அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பல்கலைக்கழகத்தில் பயின்ற முன்னாள் மாண வரான பிரகாஷ் காரத், 1974-ல் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு செயலாற்றினார். இந்திய மாணவர் சங்கத்தின் தலைவராகவும் அவர் பணியாற்றினார்.
இப்பல்கலைக்கழகத்தில் பயின்று மாணவர் இயக் கத்தின் தலைவராகவும், தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராகவும், மிகச் சிறந்த பொருளாதார வல் லுனராகவும் பணியாற் றும் சீத்தாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரசின் பொதுச்செயலாளர் டி.பி. திரிபாதி, ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த திக் விஜய் சிங், பாஜகவைச் சேர்ந்த அமீத் சிங் உட்பட முன்னாள் மாணவர்கள் இக்கூட்டத்தில் பங் கேற்றனர்.
இந்நிகழ்வின், இந்திய அரசியல் – இன்றும் நாளை யும் என்ற பொருளில் நடைபெற்ற விவாதத்தில் பேசிய பிரகாஷ் காரத், ஆசியாவிலேயே இந்தியா மகா கோடீஸ்வரர்களின் வளர்ச்சியில் வேகமாக செல்கிறது என்றும், அதே நேரத்தில் இந்த வளர்ச்சி ஏழை மனிதர்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்றும் குறிப்பிட்டார்.
பொருளாதார நெருக் கடி ஏற்பட்டுள்ள நிலை யில், அதைத் தடுக்க தொழிற்சங்கங்களையோ, சிறு வியாபாரிகளையோ பிரதமர் மன்மோகன் சிங் அழைத்துப் பேசவில்லை; ஆனால் இந்த நெருக்க டிகளுக்கு காரணமான பெரும் நிறுவன தொழி லதிபர்களை அழைத்துப் பேசுகிறார் என குற்றம் சாட்டிய பிரகாஷ் காரத், இந்தியா பல்வேறு மதங் கள், இனங்கள், கலாச் சாரங்களைக் கொண்ட நாடு; ஆனால் அதை மறுத்து இந்தியாவின் பன் முகத் தன்மையை சீர் குலைக்க அரசியலை மத வெறிமயமாக்கும் போக்கும் அதிகரித்துள் ளது. இது ஆபத்து என் றும் கூறினார். (பிடிஐ)