நான் இந்த மடலுக்குக் கொடுத்திருக்கிற தலைப்பு எனது மனதின் உள்ளிருந்து வருகிறது என்பதில் உங்களுக்குச் சந்தேகம் இருக்காது என நினைக்கிறேன்.
இலண்டனில் நடந்த உங்கள் முதல் கவிதைத் தொகுப்பு அறிமுகக் கூட்டத்தில் உங்களது கவிதைகள் குறித்த மேலான அபிப்பிராயத்தையே நான் தெரிவித்திருந்தது உங்களது நினைவில் இருக்கும் எனவே கருதுகிறேன். உங்களிடம் தொலைபேசியில் நேர்காணல் செய்து அதனை இலண்டன் ‘நிருபம்’ இதழிலும் நான் பிரசுரித்திருந்தேன்.
இவ்வளவும் தனிப்பட்டமுறையில் நான் சொல்லக் காரணம், நடந்து வருகிற எந்த சர்ச்சைகளுக்குள்ளும் என்னை ஈடுபடுத்திக் கொள்ளாமல் சுயாதீனமான கருத்துக்களுடன் இந்த மடலை நான் எழுதுகிறேன் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்கு மட்டுமே. நடந்து கொண்டிருக்கும் சர்ச்சைகளுக்கு இடையில் இதனை எழுதுவது நிஜத்தில் எனக்கு மிக மிக வருத்தமாக இருக்கிறது.
நான் நேரில் சந்தித்திருக்கிற தேவ.பேரின்பன், பசுமைக்குமார் போன்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்களும், ச.தமிழ்ச்செல்வன், பா.வெங்கடேசன் போன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்களும் சம்பந்தப்பட்டிருப்பதால் இந்த மடலை நான் எழுத வேண்டியிருக்கிறது.
நீங்கள் எழுதியிருக்கிற மூன்று கவிதைகள் – புணர்ச்சி பற்றிய கவிதையொன்று, பொதுவாக பெண்களை ‘ஆண்கள்’ வண்புணர்வுக்கு ஆட்படுத்துவது தொடர்பான கவிதையொன்று, பிறிதொன்று கொலாண்டாய்,லெனின், சிக்மன்ட பிராய்ட் பற்றியது – ‘தன்னிலை’யில் எழுதியிருப்பதாலும் ’ஆத்திரமூட்டும்‘ பண்பு கொண்டிருப்பதாலும் இரு வேறு தரப்புகளில் இருந்து உங்கள் மீது கடுமையான விமர்சனங்கள் வருகிறது எனக் கருதுகிறேன்.
தீவிர இடதுசாரி விமர்சனம் வேறு காரணங்களுக்காகவும், இந்துத்துவவாதிகளின் விமர்சனம் வேறு காரணங்களுக்காகவும் வருகிறது என்பதையும் நாம் அறிய முடியும்.
பிறப்புறப்புகளை வெளிப்படையாகக் கையாண்டிருப்பதால் ‘மட்டும்தான்’ இந்துத்துவவாதிகளின் விமர்சனம் வந்திருக்கிறது. தீவிர இடதுசாரி விமர்சனம் தங்களது கவிதைகளின் உள்ளார்ந்த அம்சமான ‘ஆத்திரமூட்டலுக்கு’ எதிரான ‘ஆத்திரமூட்டும்’ பண்பு கொண்டதாகவே இருக்கிறது எனவே நான் புரிந்து கொள்கிறேன். கவிதைகள் தன்னிலைப் பண்பு கொண்டதால் விமர்சனம் உங்கள் மீதான வசைகளாகவும் இருக்கிறது. இதுவே நடந்து கொண்டிருக்கும் சர்ச்சைகள் குறித்த எனது புரிதல்.
கவிதையில் அல்லது இலக்கியப் படைப்பில் ஆத்திரமூட்டல் கூடாதா? கவிதையில் அல்லது இலக்கியப் படைப்பில் தன்னிலையைச் கடந்து எழுதமுடியுமா?
கவிதையில் மட்டுமல்ல இலக்கியப் படைப்பிலும் ஆத்திரமூட்டுதலும் நையாண்டியும் ஒரு ஏற்கத்தக்க பண்பு எனவே நான் கருதுகிறேன். அதைப் போலவே தன்னிலையை எந்த அளவு பிரபஞ்ச தரிசனமாக மாற்றுகிறோமோ அந்த அளவிலேயே அது கவிதைத் தன்மையை அடைகிறது என்பதும் எனது புரிதல். இந்த இரு அடிப்படைகளிலும் கவிதைகளை மட்டுமல்ல, அகவிதைகள் அபத்தங்களை எழுதுவதற்கும் உங்களுக்கு உரிமை உள்ளது என்பதனை நான் ஏற்கிறேன்.
யாரை ஆத்திரமூட்டுகிறீர்கள், எந்தச் சூழலில் நீங்கள் ஆத்திரமூட்டுகிறீர்கள், யாரோடு சேர்ந்து நின்று நீங்கள் ஆத்திரமூட்டுகிறீர்கள், எந்தப் பிரச்சினை குறித்து நீங்கள் ஆத்திரமூட்டுகிறீர்கள் என்பதனைப் பொருத்தே உங்கள் கவிதைகளுக்கான எதிர்விணையும் அமையும்.
நீங்கள் பிரச்சினைக்குரிய மூன்று கவிதைகளிலும் யாரை ஆத்திரமூட்டுகிறீர்கள்?
மார்க்சியர்களையும், போராளிகளையும் ஆத்திரமூட்டுகிறீர்கள். போராளிகளை ஏகாதிபத்திய இனவெறி வண்புணர்வாளர்களுடன் ஒப்புமைப்படுத்தி எழுதுகிறீர்கள். கவிதைகள் எடுத்துக் கொள்ளும் பாடுபொருள் மார்க்சியர்களையும் போராளிகளையும் படகேவலமாகச் சித்தரித்திருக்கிறது.
கவிதைகளை இப்படி அரசியல் ரீதியில் அணுகலாமா?
நிச்சயமாகவே கூடாது என்பதுதான் எனது பார்வை. என்ன செய்வது நீங்கள் எழுதியிருக்கிற மூன்றும் நிச்சயமாகக் ‘கவிதைகள்’ அல்ல என்பதுவே எனது வாசிப்பனுபவம்.
‘கூட்டுப்பண்ணைகளை மலைப்புடன் பார்க்கிற சோவியத் விவசாயி போல, உனது அழகை வியப்புடன் பார்க்கிறேன்’ என்கிற தொனியில் மீரா எழுதிய ‘புரட்சிகரக்’ கவிதைகள் எப்படி கூட்டுப் பண்ணைகளையும் கேவலப்படுத்தி, காதலுணர்வையும் கேவலப்படுத்துகிறதோ அதனைப் போன்றுதான் உங்களது கவிதைகளும், புணர்ச்சி அனுபவத்தையும் கேவலப்படுத்தி, மார்க்சியம் குறித்தும், விடுதலைப் போராட்டம் குறித்தும் நடந்தே தீர வேண்டிய விமர்சன மரபையும் கேவலப்படுத்தியதாக இருக்கிறது.
உங்களது இந்த மூன்று எழுத்துக் குவியல்களும் கவிதைகளே இல்லை.
புணர்ச்சி அனுபவத்தில் ஈடுபட்டிருக்கிறபோது, அது காதலுடன் நடந்தாலும் அல்லது உடல் வேட்கையென காதலற்று நிகழ்ந்தாலும் அதில் மார்க்சியப் பிதாமகர்களை அல்ல இட்லரையோ அல்லது சதாம் குசைனையோ நினைவு கூர்ந்தாலும் அது கவிதை அல்ல, அது வெறும் தட்டையான அரசியல். மஹ்மூத் தர்வீஷ், விஸ்லாவா சிம்போர்ஸ்க்கா, தஸ்லீமா, ஜோமனா ஹத்தாத் என நிறைய புணர்ச்சி அனுபவக் கவிதைகள் இருக்கிறது. வாசியுங்கள். கவிதைகளுக்கும் தட்டையான அரசியல் ஆத்திரமூட்டல்களுக்கும் உங்களால் அப்போது வித்தியாசம் காண முடியும்.
போராளிகளையும் பிற ஆதிக்க வண்புணர்வாளர்களையும் ஒரு தளத்தில் பேசுகிறது உங்கள் ‘கவிதைகள்’. செஞ்சேனை பாலுறவு வண்புணர்வில் ஈடுபட்டது நிஜம்தான். அதே அளவு நிஜம் அவர்களுக்கு ராணுநீதிமன்றம் தண்டனை வழங்க வேண்டும் எனும் செஞ்சேனைத் தளபதியின் எழுதப்பட்ட கட்டளையும். இனவெறியர்களும், ஏகாதிபத்தியவாதிகளும், ஏன் இலங்கை ராணுவமும், காஷ்மீரில் இந்திய ராணுவமும், வியட்நாமில் அமெரிக்க ராணுவமும் அவர்கள் புரிந்து வண்புணர்வுகளை ஒப்புக் கொள்கிறார்களா என்ன?
நாம் வாழ்ந்து கொண்டிருப்பது வர்க்கம் கடந்த, சாதி கடந்த, இனம் கடந்த, பால்வேறுபாடு கடந்த சமூகம் அல்ல. நீங்கள் உங்கள் எழுத்துக்களில் எல்லாவற்றையும் கடந்துவிட்டதாகச் சொல்லிக் கொள்ள முடியாது. இன்று உலகிலும் – இந்தியாவிலும் – தமிழகத்திலும் – மார்க்சியர்கள் மீதும் ஈழப் போராளிகளின் மீதும் அதனது எதிரிகள் படுகேவலமான வசைகளை முன்வைத்து வருகிறார்கள். விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்கள்.
உங்கள் மூன்று ‘கவிதைகளும்’ இதில் எங்கே நிற்கின்றன?
தேவ.பேரின்பன், பசுமைக்குமார், ச.தமிழ்ச்செல்வன், பா.வெங்கடேசன் – ஆதவன் தீட்சண்யாவின் அரசியல் நேர்மை பற்றி எனக்கு எந்த மரியாதையும் இல்லை – போன்றவர்கள் இந்த மூன்று கவிதைகள் பற்றியும் இலக்கியத் தோய்வு கொண்ட மார்க்சியர்களாக என்ன கருதுகிறார்கள் என்பதனை அவர்கள் தமது கட்சிகளின் அணிகளுக்குச் சொல்லக் கடமைப்பட்டவர்கள். இந்தக் கவிதைகளின் ‘கவித்துவம்’ பற்றியும் ‘அரசியல்’ பற்றியும் தாம் சார்ந்த அமைப்புக்களின் இலக்கிய வாசகர்களுக்கும் விளக்கிச் சொல்லக் கடமைப்பட்டவர்கள்.
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தார்மீகக் கோபமும் வசைகளும் (இது தொடர்பாக லீனா மணிமேகலை குறித்த கட்டுதளையற்ற சில பின்னூட்டங்கள் அவமானகரமாவை என்பதுவே எனது பார்வை) தவிர்த்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களும் தமது பார்வையை வெளிப்படையாக முன்வைக்க வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது.
அன்புள்ள லீனா மணிமேகலை, நீங்கள் தற்போது சார்ந்திருப்பது ஒரு அரசியல் அணி. இவர்களது அரசியல் ஞாபகமறதி அரசியல். தேர்ந்தெடுத்த மனித உரிமை, கருத்துச் சுதந்திரம், அடிப்படைவாதம் பற்றி தந்திரோபாய ரிதியில் அணுகும் பிதாமகனை தற்போது நீங்கள் இப்போது சார்ந்திருக்கிறீர்கள்.
தங்கள் மீது நேர்மையாக இடதுசாரிகளும் மார்க்சியர்களும் முன்வைக்கத்தக்க விமர்சனங்களை திசைதிருப்பி, அதனை இந்துத்துவ எதிர்ப்பின் பெயரால் மடைமாற்றும் செய்யும் தந்திரோபாயச் செயல்பாட்டில் தமிழகத்தின் மனிதஉரிமைப் பிதாமகன் உங்களின் பொருட்டு இதில் ஈடுபட்டிருக்கிறார் எனவே நான் கருதுகிறேன்.
எவரோடு சேர்ந்து எந்தச் சூழலில் கருத்துச் சுதந்திரத்திற்கான கூட்டத்தை நீங்கள் ஏற்பாடு செய்கிறீர்கள்?
தஸ்லீமா தான் அடைக்கலமாகிய இந்தியாவிலிருந்து இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் விரட்டப்படுகிறார். எம்.எப்.குசைன் கத்தார் குடியுரிமை பெற வேண்டிய சூழலை இந்துத்துவாதிகள் உருவாக்குகிறார்கள். நாவலாசிரியர் பால் சக்கரியா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாலுறவு தொடர்பான இரட்டை நிலைபாட்டைப் பேசியதற்காக அச்சுறுத்தப்படுகிறார். திமுக தலைவரின் குடும்பச் சண்டைக்காக மதுரையில் மூன்று பத்திரிக்கையாளர்கள் எரித்துக் கொல்லப்படுகிறார்கள். ஈழத்தில் ஐம்பதனாயிரம் தமிழ்மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
உங்களுக்காக நடைபெறுகிற இந்தக் கூட்டத்தில் பேசுகிற பெரும்பாலுமான பேச்சாளர்கள் எல்லோரும் இந்தப் பிரச்சினைகளில் எங்கே நின்றார்கள், எங்கே நிற்கிறார்கள் எனபது தமிழகத்தின் மிகச் சமீபத்திய ஞாபகங்கள்தான் என்பது நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பது இல்லை.
கடைசியில் ஒரு விடயத்தைக் குறிப்பாகச் சொல்ல வேண்டும்.
இணையவெளி என்பது எழுத்து ஊடகத்தின் தொடர்ச்சிதான். எழுத்து ஊடகம் என்பது எவ்வாறு சீரிய எழுத்துக்களையும் மஞ்சள் எழுத்துக்களையும் கொண்டிருக்கிறதோ அப்படித்தான் இணையவெளியும் கொண்டிருக்கும். அச்சில் மஞ்சள் எழுத்துக்களை எழுதிவிட்டு, அவதூறுகளைப் புத்தகத்தில் சாதுர்யமாக எழுதிவிட்டு, இணையத்தில் அதே வகைகளில் எதிர்விணை வரும்போது கூப்பாடு போடுவது தற்போதைய தங்களது அரசியல் பிதாமகனின் பிரலபமாக இருக்கிறது.
மனித உரிமை என்பதனையும், கருத்துச் சுதந்திரம் என்பதனையும், அடிப்படைவாத எதிர்ப்பு என்பதனையும், தந்திரோபாயத்தின் மூலம் சாதிக்க முடியாது.
/”கவிதைகளை இப்படி அரசியல் ரீதியில் அணுகலாமா? “(நிச்சயமாகவே கூடாது)/
ஏன்? யமுனா விளக்குவாரா?
/”உங்களது இந்த மூன்று எழுத்துக் குவியல்களும் கவிதைகளே இல்லை|”/
கவிதை என்றால் என்ன?
/‘கூட்டுப்பண்ணைகளை மலைப்புடன் பார்க்கிற சோவியத் விவசாயி போல../
கூட்டுப் பண்ணைக்கும் சோவியத் விவசாயிக்கும் இடையில் பெரு இடைவெளி உள்ளது. .இல்லை எனின் தரவுகளுடன் யமுனா நிறுவ வேண்டும்.
இந்த விமர்சனம் ஏன்? லீனாவின் கவிதைகள் கவதைகள் இல்லை என்பதற்கா? இல்லை லீனாவின் கூட்டு முயற்சிகளுக்கு எதிராகவா?
விமா;சிக்க வேண்டிய விடயங்கள் பல உள்;ளன.
/ கவிதையில் மட்டுமல்ல இலக்கியப் படைப்பிலும் ஆத்திரமூட்டுதலும் நையாண்டியும் ஒரு ஏற்கத்தக்க பண்பு எனவே நான் கருதுகிறேன். அதைப் போலவே தன்னிலையை எந்த அளவு பிரபஞ்ச தரிசனமாக(யுனிவர்ஸல்) மாற்றுகிறோமோ அந்த அளவிலேயே அது கவிதைத் தன்மையை அடைகிறது என்பதும் எனது புரிதல். இந்த இரு அடிப்படைகளிலும் கவிதைகளை மட்டுமல்ல, அகவிதைகள் அபத்தங்களை எழுதுவதற்கும் உங்களுக்கு உரிமை உள்ளது என்பதனை நான் ஏற்கிறேன்./– இதனுடன் நான் உடன்படுகிறேன்!.அ.மார்க்ஸின் போராளி எதிர்ப்பு,புலிக்கொடி எதிர்ப்பா?,ஏனென்றால் கலைஞர் கருணாநிதிக்கு “புலிக்கொடி என்றால் அலர்ஜி” ஆனால் தன் குலக்கொழுந்தான “முரசொலி(டமாரம்)” சின்னம் என்றால் பாசம் பொங்கி வழியும்.அதுதான் திருமாவளவனிடம் “நானும் “பறையன்தானே(டமாரம்) அய்யா” என்றார்!.”மாவோயிஸ்டுகளை” கண்டால்,நானும் “தெலுங்கன்தானே அய்யா” என்பார்!.அவர் ஒரு நடைமுறைவாதி!.ப் உலம்பெயர் இலங்கைத்தமிழர்கள் ஒற்றைப் பனைமரம் என்கிறார்கள்.ஆகையால் “மார்க்ஸியம்” என்பது,ஒரு “சார்பு நிலையான விஞ்ஞான கோட்பாடு” என்றாலும்,”பிஸிக்ஸ்” போல், இந்தியாவுக்கும்,சீனாவுக்கும் பொருந்தாது.”ஹேகலின் இயங்கியல் தத்துவத்தை” சார்பாக கொண்டுள்ளதால்,ஐரோப்பிய சூழலுக்கே பெரும்பாலும் பொருந்தும்- சீனாவில் நடந்த “கலாச்சார- எதிர்ப்புரட்சி” இதற்கு உதாரணம்.ஆகையால்,நம்மவர்களின் தரவுகள்,இந்திய சூழலான,”இந்துத்துவம்,ஜாதி,….” போன்றவற்றையும் உள்ளடக்க வேண்டும் என்று “முள்ளியவாய்க்கால்” சுட்டிக் காட்டுகிறது! .உலக செந்தமிழ்? மாநாடு நடத்தி,நான்தான் பெரியவன்,தமிழிலிருந்தே மற்ற திராவிட? மொழிகள் வந்தது என்றால்,கேரளா,ஆந்திரா தலைவர்களின் ஈகோ பாதிக்கப்பட்டு தமிழகத்தை அழுத்துவார்கள்,இது தேவையா?.இதனுடன் இலங்கைத் தமிழர்களின் அல்லோகல்லம் வேறு!.இதன் அடிப்படையில்,இவர்களின் மார்க்ஸிய,போராளி எதிர்ப்புகள்,தந்திரோபாயமே!.முள்ளியவாய்க்கால் என்பது புலிக் கொடியின் தோல்வியல்ல!.நேருவால் மொழிவழி மாநிலமாக பிரிக்கப்பட்ட மாநிலமான “தமிழகம்” புலிக்கொடியை வைத்து “ஈகோ” கொண்டாட முடியாது!அதாவது “தந்திரோபாயத்திற்காக” இந்திய அஸ்திவாரத்தை பெயர்த்தெடுக்க முடியாது.பிரபாகரனின் தோல்வி இந்திய அஸ்திவாரத்தின் தோல்வியல்ல!.முள்ளியவாய்க்கால்,தமிழ்!,தமிழ்! என்று “டமாரம்” அடித்ததால்,மற்றவர்களின் வயிற்றெரிச்சலை தூண்டி,அந்தத் தீயில் கருகியதாகும்.இந்த வழியிலேயே போராளிகள் கேவலப்படுத்தப் படுகிறார்கள்!.முதலில் எஞ்சியிருக்கும் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் சரியான விளக்கங்கள் தர வேண்டும்!.
1.கவிதைகளை இப்படி அரசியல் ரீதியில் அணுகலாமா? (நிச்சயமாகவே கூடாது).ஏன்? யமுனா விளக்குவாரா?
– கவிதைகளை அரசியல் ரீதியில் விளக்கலாம் என்கிறீர்கள். நல்லது. லீனாவின் கவிதைகளை(?) ‘அரசியல் ரீதியில் நீங்கள் விளக்குங்கள்’. பிற்பாடு நான் ஏன் முடியாது என விளக்குகிறேன்.
2. உங்களது இந்த மூன்று எழுத்துக் குவியல்களும் கவிதைகளே இல்லைகவிதை என்றால் என்ன?
– நான் கட்டுரையில் கவிதை குறித்து இரு அடிப்படைகளைஎழுதியிருக்கிறேன்.நீங்கள் ‘எதனைக் கவிதை என்கிறிர்கள்?’ உங்களது மதிப்பீட்டை வையுங்கள். பிறகு விவாதிப்போம்.
3.கூட்டுப்பண்ணைகளை மலைப்புடன் பார்க்கிற சோவியத் விவசாயி போல..கூட்டுப் பண்ணைக்கும் சோவியத் விவசாயிக்கும் இடையில் பெரு இடைவெளி உள்ளது. இல்லை எனின் தரவுகளுடன் யமுனா நிறுவ வேண்டும்.
– என்ன ‘பெரு இடைவெளி’ என்பதனை முதலில் சொல்லுங்கள். நிறுவுவது பற்றி பிறகு பேசலாம்.
4. இந்த விமர்சனம் ஏன்? லீனாவின் கவிதைகள் கவிதைகள் இல்லை என்பதற்கா? இல்லை லீனாவின் கூட்டு முயற்சிகளுக்கு எதிராகவா?
– கூட்டு முயற்சிகள்? எதனைக் ‘கூட்டு முயற்சிகள்’ என்று சொல்கிறீர்கள் என்பதனைத் தெளிவுபடுத்துங்கள்.
கட்டுரையை எழுதியது யமுனா. உங்களது கருத்துக்கள் தெளிவு பட முன் வைக்கப்டவில்லை. கவிதையும் அரசியலும் என்ற தலைப்பில் எனது கருத்துக்களை தனிக்கட்டுரையாக பதிவு செய்வேன். கவிதைபற்றிய உங்களது புரிதலில் தெளவு இல்லை.
கூட்டுப் பண்ணை – பெரு இடைவெளி என்ன என்பதை “மலைப்புடன் பார்க்கின்ற சோவியத் விவசாயி” என்ற விடயமே தெளிவு படுத்துகின்றது. யாருடன் கூட்டு முயற்சிகள் என்பது பற்றி முன்னரே தெரிவித்திருந்தேன். எடிட் செய்து விட்டார்கள். மீண்டும் கூறுகின்றேன். சோபாவின் மீதான கோபத்தின் வெளிப்பாடு தான் இக் கட்டுரை என எண்ண வைக்கின்றது
உங்களது பதிலை பார்த்த பொழுது எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகின்றது. 1976 என நினைக்கின்றேன் அமிர்தலிங்கம் ஒரு தேர்தல பிரச்சாரக் கூட்டத்தில் பேசினார். முடிவில் ஒருவர் கேள்வி ஒன்றை எழுதி அனுப்பியிருநதார். சிக்கலான அக் கேள்விக்கு பதிலளிக்க விரும்பாத அமிர் கேள்வி கேட்டவரின் பெயரின் முன்னால் இனிசல் இல்லை. உடனே அப்பன் பெயர் தெரியாதவனுக் கெல்லாம்…..
நான் லீனா மணிமேகலை அவா்களின் கவிதையைப் படிக்கவில்லை. மேலும் உங்களைப் போ ல் இலக்கியவாதியொ, இலக்கிய விமா்சனம் செய்பவனோ அல்ல! மேலும் மாா்க்சியம், லெனினியம் உள்ளிட்ட சித்தாந்தங்களடங்கிய நூல்களையும் படித்ததில்லை. அதே போல மதங்கள் சம்பந்தமான நூல்களையும. படித்ததில்லை. எதற்கு இந்த முன்னுரை என யோசிப்பீா்கள்? வேறொன்றுமில்லை, நான் எழுதும் கருத்துகள் பெரும்பாலோனுருக்கு ஏற்புடையதாக இருக்காது என நிச்சயமாகத் தொியும்! அதற்கான எதிா்வினைகள் உனக்கெல்லாம் என்ன தொியும் என்று அலட்சியமாகக் கேட்பாா்கள், அதற்காக முன்கூட்டியே விளக்கமளிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன்! சாி
எனக்கு என்னதான் தொியுமென்றால், காலச்சுவடு, உயிா்மை, உயிா் எழுத்து, தீராநதி முதலிய இலக்கியபத்திாிகை முதல் குமுதம், ஆனந்தவிகடன், ஜுனியா் விகடன், குமுதம் ாிப்போா்டா் முதலியவற்றைப் படிக்கும் சராசாி வாசகன் நான்! நான் படித்த மேற்குறித்த நூல்களில் பலவற்றில் லீனா மணிமேகலை அவா்களின் மேற்குறித்த
கவிதை வாிகளை பாா்க்க/படிக்க நோ்ந்தது. அதுவே ஒரு blue film trailor ரேஞ்சுக்கு இருந்தது. ஒரு பெண் காமத்தைக் குறித்து இவ்வளவு கொச்சையாக எழுதுவாறா என ஆச்சாியமாகவும் இருந்தது. ஆண் எழுதத் தயங்கும் எழுத்துக்களை, வா்ணனைகள இவா் ‘ஆனந்தமாக’ அளித்துள்ளாா். இது போன்ற கவிதைகளை எவ்விதத்திலும் பெண்களே ஏற்கமாட்டாா்கள் என்பதே நிதா்சனமான உண்மை! ஆகவே இதுபோன்ற படைப்புகளை ‘லீனா மணிமேகலை’
தவிா்ப்பது நல்லது.
தனிக்கட்டுரையை எழுதுங்கள். பிற விஷயங்களை அதற்குப் பிறகு பேசலாம். கட்டுரை எழுதப்பட்ட நோக்கம் கட்:டுரையிலேயே தெளிவாக உள்ளது. பிறவற்க்கெல்லாம் என்னிடம் பதில் இல்லை.
லீனா மணிமேகலை இந்த வட்டத்தை விட்டு வெளியே வந்தாரா என்று முதலில் பாருங்கள்!………………………………………………………………………………………………….
யாழ்ப்பாணத்தில்,பெரும்பாலான வெள்ளாலர்கள் புலம்பெயர்ந்து விட்டதால் ……….உதவியில்லாது “டக்ளஸ் தேவானந்தாவால் வெற்றிபெறமுடியாது என்பதே எதார்த்தம்!.ஆகையால் சென்னையிலிருந்து இவர்களின் அபிவிருத்தி? ஏற்றுமதி “காட்டில் மழை”!.விடுதலைப்புலிகளின் பிரதான எதிர்ப்பு சக்தியும் இவர்களே!.
/பாரம்பரியமான திராவிட இயக்கக் குடும்பத்தைச் சேர்ந்தவரும், தி.க.வின் தகவல் தொடர்பு செயலாளருமான வழக்கறிஞர் அருள்மொழியின் தாயார் சரசுவதி சென்ற ஆண்டு மறைந்தபோது, “இந்து” நாளேட்டில் தந்திருந்த அஞ்சலி விளம்பரத்திலும் தனது “உடையார்”சாதி அடையாளத்தைத் தெளிவாகவே காட்டியிருந்தார்.“சாதியை மறந்து தமிழர்களாக நாம் ஒன்றுபட வேண்டும்”என கருணாநிதி பேசுகிறார். ஆனால், அவரின் மகள் கனிமொழியோ, திருப்பூர்-மல்லம்பாளையம் நாடார் சங்கக் கல்வி நிறுவன விழாவிற்கு நாடார் சாதி தி.மு.க. அரசியல்வாதிகளான சற்குணபாண்டியன், கீதாஜீவன், பூங்கோதை போன்றவர்களுடன் கலந்து கொண்டு “நாடார்களாக ஒன்றுபடுகிறார்’.பெரியாரின் கொள்கைகளைத் தங்கள் கொள்கையாகக் கருதுவோரும், தமிழ்த்தேசியத்தை வென்றெடுக்கக் களம் கண்டிருப்பவர்களும், சாதி ஒழிப்பிற்குப் பிறகுதான் சோசலிசம் எனத் தலித்தியம் பேசுபவர்களும், தாங்கள் கொண்டிருக்கும் இலட்சியத்திற்குக் கூட விசுவாசமாக இல்லாமல் சாதி உணர்வாளர்களாகவோ, வெறியர்களாகவோதான் இருக்கிறார்கள். தங்களின் தோலைக் கீறி சாதி இரத்தம் ஓடுவதை அவர்களாகவே ஒவ்வோர் நிகழ்விலும் தெளிவாக வெளிச்சம் போட்டுக் காட்டியும் விடுகின்றனர்./–வினவு.காம்
குசநனசமைமமமம துயஅநளழn என்னும் பெயரில் வரும் நீங்கள் எந்த மார்க்கிசய எழுத்தாளர் ஏன் அவர் பெயரை நாறடிக்கிறீர்கள்.
யமுனா ராஜேந்திரன் அவர்களுக்கு..
இப்படி ஆரம்பித்தாலும் மொத்த தமிழ் சூழலுக்குமான
ஒரு விவாத்திற்கான பேச்சை இங்கிருந்து தொடங்குவதுதான்
எனது விருப்பம்.
எழுத்துக்களில் ஒரு பகுதியை கவிதை என்றும் (இலக்கியம்)
சிலதை அது அற்றது என்றும் பேசப்பட்டும் ஏற்கப்பட்டும்
வருவதை அறிவோம்.
ஏன் எழுத்துக்களில் ஒரு பகுதியை கவிதை என அழைக்கிறீர்கள்?
அதற்கு பிரத்தியேக காரணங்கள் ஏதும் இருக்கிறதா?
கவிதைகளை அரசியல் ரீதியில் மாத்திரமல்ல
எப்படியும் அனுகுவதற்கான உரிமை எவருக்கும் உண்டு.
சரி அது இங்கு தேவையில்லை.
இலக்கியம் என்றும் கவிதை என்றும் ஏதோ பேச முற்படுகிறவர்கள்
எல்லோரையும் நோக்கி எனது இந்த பதிவு.
ஏன் எழுத்துக்களில் ஒரு பகுதியை கவிதை என அழைக்கிறீர்கள்?அதற்கு பிரத்தியேக காரணங்கள் ஏதும் இருக்கிறதா?
இதை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளும்போது
மிக அதிகமான கோழிச்சண்டைகள் முடிவுக்கு வந்துவிடும்
என்பது எனது நிலைப்பாடு.
நட்புடன் யமுனாவிற்கு…..
இன்று தான் லீனாவின் “கவிதை” யைப் பார்க்கவும் வாசிக்கவும் கிடைத்தது….முதலில் எனக்கு இலக்கியம் மற்றும் கவிதை என்பவை பற்றி ஒன்றுமே தெரியாது என்று கூறுவதுதான் பொருத்தமானது…மேலும் அதில் எனக்கு அவ்வளவு அக்கறையோ ஆர்வமோ இல்லை என்பதும் ஒரு காணரம்…
இக் குறிப்பு எழுதுவதற்கு காரணம் பெண்ணியம் மற்றும் ஆணாதிக்க பார்வை தொடர்பானத… ளுநந ஆழசநு….அதாவது ஒன்றைப் பற்றிய நமது பார்வை ( pநசஉநிவழைn) நமது நிலைப்பாட்டில் (ளவயனெpழவைெ) இருந்தே வருகின்றது…..லீனாவிற்கு எதிரான எதிர்ப்பும் இந்த அடிப்படையிலையே மேற்கொள்ளப்படுவதாக உணா;கின்றேன்…மதவாதிகள் காமத்தை இந்தளவு வெளிப்படையாக எழுதியதற்காக அவர்கள் மீது கட்டமைக்கப்பட்ட ஆணாதிக்க கலாசாரத்திற்கும் காமத்தை இரகசியமாகவும் அதேவேளை அடக்கியும் வந்த மதவாத சமூகத்திற்கு இவ்வாறான எழுத்துக்கள் பிரச்சனையானவையே சவாலானவையே……அதானால்தான் அவர்கள் எதிர்க்கின்றார்கள்…..எனது கவலை என்னவென்றால் மார்க்கிஸிய வாதிகளும் இதை எதிர்ப்பதுதான்…ஆனால் இவ்வாறு அவர்கள் எதிர்ப்பதில் எந்த ஆச்சரியமும்இல்லை….ஏனனில் சமூக மாற்றத்திற்காகப் போராட வெளிக்கிட்ட இந்த மார்க்ஸியவாதிகள் இன்று மதவாதிகளைப் போல் மார்க்சியத்தை மாற்றமில்லாத ஒ;ன்றாக புனிதமானதாக நம்புவதும் மார்க்ஸ் லெனின் போன்று முழுமையான பங்களிப்புகடன் தமது பொறுப்பை செய்யாது இந்த மனிதா;களையும் குனிதமானவா;களாகவும் மிகவும் உயா;ந்தவாக்ளகவும் மதிப்பதுடன் தமது கடமை முடிந்துவிட்டதாக நினைக்கின்றாhகள்…
ஆனால ;அதற்கான் உழைப்பதை கொடுப்பதாக இல்லை…மாறாக மதவாதிகள் போல் இவர்களும் இப்படி மல்லுக்கு நிற்பது ஒருவரது எழுத்து உரிமைக்கு எதிரானது என்பதை ஏன்புரிகின்றார்கள் இல்லை….எனது நண்பியொருவர் தனது படுக்கையறையில் சிகப்பு நிறத்திலான படுக்கைவிரிப்பை பாவிக்கின்றார் …..ஏன் என்று கேட்டதற்கு சே மற்றும் பீடல் மீதான மரியாதை எனக் கூறினார்….அதாவது ஒவ்வொருவரும் ஒரு விடயத்தை எப்படிப் பார்க்கின்றோம் என்பது அவரவா; கற்பனையையும் தேடலையும் பொறுத்தது….இதில் நாம் அவரை அவமதித்துவிட்மோம் எனவாதிடுவது ஒருவரை புனிதமாக்கும் செயற்பாடாகவே இருக்கும் மற்றும் ஒருவரது எழுத்து உரிமையை மறுப்பதாகவே இருக்கும்….சிவாவும் பார்வதியும் காமம் தொடாக ;செய்யதா லீலைகள் இல்லை..என்பதை புத்தகங்களின் இரகசியம் என்ற ஓசோவின் புத்தகம் மூலம் அறிந்தேன்….ஒரு விவாதத்திற்காக லீனா மார்க்ஸ் லெனின் சே பிடல் என்பா;களுக்குப் பதிலாக சிவா(பெருமான்) பார்வதி (உமா) முருகன் சரஸ்வதி லெட்சுமி என எழுதி மதவாதிகள் லீனாவிற்கு திராக போர் தொடுத்திருந்ததால் இன்று லீனாவிற்கு எதிராக சண்டையிடும் மார்க்சிய வாதிகள் மகிழ்ந்திருப்பார்களா ? லீனாவிற்கு ஆதரவாக நின்று சமயவாதிகளுக்கு எதிராக வாதாடியிருப்பா;களா?
நன்றி
….மீராபாரதி
எதிர்ப்புக் காரணம் லீனாவின் மார்க்கசிய எதிர்ப்பே. யமுனா போன்ற இடது சாரிகள் மார்க்சியத்தை மதமாக மாற்றுகின்றார்கள். இதனால் தான் மார்க்சியம் மக்களை சென்றடையவில்லை. அதற்கான எதிர் வினைகள் அதிகரித்தமைக்கும இவர்களே காரணம்.
பெண் உடல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளால் துன்புறுத்தப்பட்டுள்ளால். எனவே அவர்கள் உடல் மொழியை பயன’படுத்துகின்றார்கள். பட்டினத்தாரில் இருந்து சாரு நிவேதிதா வரை இதைத் தான் செய்துள்ளார்கள். இவர்கள் அந்தஸ்து பெற்றவா;கள். எனவே இவர்களைப்பற்றிய எதிர்வினைகள் இல்லை.
இந்த விமர்சகர்கள் மக்கள் மத்தியில் வேலை செய்யவேண்டும். மக்களுக்காக களம் இறங்க வேண்டும். அப்படியிறங்கின் இவர்களில் மாற்றம் ஏற்படும். ஆனால் செய்யமாட்டார்கள்.;
மேற்கில் இதை யாரும் ஆட்சேபிப்பதில்லை அதை நகைச்சுவையாக ரசிக்கிறார்கள் கிழக்கில் இப்போதுதான் நகைச்சுவை பிரதான இடத்திற்கு வருகிறது.மேற்கின் புத்தகங்கள வாசித்து அதன் பாதிப்பால் எழுத முற்படும்போது முரண்பாடுகள் வருகின்றன.காலம் இவற்ற சரி செய்யலாம்.
யமுனா அவா.களுக்கு கவிஞனை லினாமணிமேகளையின் கவிதைதொகுப்பிற்கு
பல விளக்கம்
கொடுத்திருந்தீர்கள் அருமை என்றாலும் பல கருத்துக்களில் நான் உடன்பாடில்லை ஏனெனில் விளக்கம் தருகிறேன் உள்ளத்தில் உள்ளது கவிதை உணா.வில் ஊற்றொடுப்பது கவிதை தெள்ளதெளிந்த மொழியில் உண்மையுணா;ந்துரைப்பது கவிதை இதை மறுக்கமாட்டிர்கள் இந்த வகையில் இந்த லீனா என்ற பெண் எழுதியகவிதையை கவிதையாய் பார்க்கவில்லை என்று எப்படி எழுதுவிர்கள் தவறு எழுத்துசுதந்திரம் எல்லாருக்கும் உண்டு யமுனா பூpயுங்கள் எனக்கு லீனா என்ற பெண்னைை தொpயவேதொpயாது ஆணாலும் ஒடுக்கு முறைக்காக குரல் கொடுக்கும் பெண்ணாக நான் உங்களை பல இலக்கியசந்திப்பில் சந்தித்தோம் நான் தலைமைவகிக்க நீங்கள் பக்கத்தில் இருந்த அந்த நாட்களை நினைவுபடுத்துகிறேன் ஞாபகம் இருக்கா விடயத்திற்கு வருவோம் லீனாஎன்ற பெண்ணைை நன்றாக தொpந்தும் நீங்கள் பல மாச்:சியவாதிகளை கம்யுனிஸ்வாதிகளையும் நண்பா;களாக வைத்திருப்பதால் லீனாவின் கருத்தை கவிதையி;லை என்கிறீர்கள் கவிதையென்பதற்கு விளக்கம் தந்துவிடடேன் லீனாவிற்கு மாக்;சியவாதியைபிடிக்கவில்லை கம்யுனிஸ்வாதியைபிடிக்கவில்லை போராளியைபிடிக்கவில்லை லீனாவின் மனக்கருத்து இதைதடைைசெய்யயாருக்கும் உரிமையில்லைை மாக்;சியவாதிகளும் சமுகத்தில் நிறையதவறுவிடுபவர்கள் இட்லரை சதாம்குசைனைஇவா;களைபற்றி இழிவுகளை கொட்டுவதே கவிதை யமுனா சீனாவை உதாரணத்திற்கு பாருங்கள் மாக்சியவாதிகள் வாழும் நாட்டில் என்ன நடக்கிறது வாக்களிக்க உரிமையில்லை சொந்தநாட்டில் இருந்து சீனாவின் எல்லை;கு போகவீசா எடுக்கவேண்மாம் உழைப்பாளிக்கு உழைக்கும் வேலைக்கு கூலியிலலை அடிமைகளாய் பேசும் மொழிவேறு எழுதும் மொழிவேறு முதலாளித்துவத்தை அழிக்கவேண்;டியா;கள் உலகத்து முதலாளிகள் எல்லாரும் தொழிச்சாலைகள் போட்டு கொழுத்த பணக்காரர் ஆகிவிட்டா;கள் இன்னும் சொல்லமுடியா கொடுமைகள் மாக்சே தன்சொந்த மண்ணில் மாக்சியகருத்தை விதைக்கமுடியாது அப்பாவி மக்கள் மீதுவிதைத்தார் மாக்சின் கருத்து கொள்கைை அருமை ஆனால் மாக்சியக்:கருத்தை விதைக்காது போலிபோர்வை போத்தியுள்ளார்கள் இதை யூப்பதாக இருக்கலாம் அல்லவா லீனாவின் செயல்பாடு யமுனா உங்களுக்கு மாக்சியவாதிகள் நண்பா;கள் இருக்கிறார்கள் என்பதற்காக இப்படி தரம் பிரிக்கவேண்டாம் இந்துவாதிகளே இந்து கோயில்கள் பல ஆண்பெண்களை நிர்வாணசிலைகள் இதைஉலகத்து சுற்றுலாபயணிகள் பார்த்து கழிக்கிறார்கள் அத்துடன் நிர்வாணசாமிகள் காசியில் நிராடி முடிந்த பின்புதான் மற்றவா;கள் நிராட முடியும் இது இந்து அறிவுகளின் கட்டளைஇன்:னும் காமசுத்திரத்ததை உலகத்திற்கு கற்றுகொடுத்த ஆண்மகனும் பிறந்த மண் இந்தியா இன்னும் திரைபடங்கள் சின்னதிரைகள் நாடகம் பத்திரிகைகள் சஞசிகைகள் பெண்களின் அரைநிர்வாண படத்தைபோட்டும் கவிஞா;கள் பெண்களின் அங்கங்களை உள்ளுறுப்பு வெளியறுப்பு அவள் ஆயையில் துடிப்பது மாதிரி கவிதை எழுதி கவிஞா; ஆகவில்லையா இது கவித்துவம் என்று விடடிர்களா? யமுனா கூறுங்கள் ஒரு பெண்ணாக இருந்து பேசுங்கள் அந்த வேதனை வரும் ஆண் பெண் பிறப்பால் ஒன்று பட்டவா;கள் உடற்கூற்றால் வேறுபட்டவா;கள் இவ்வளவுதான் இதற்கு ஏன் இவ்வளவு ஆர்பாட்டம் மதம்;அரசியல் இது மனிதனின் கற்பனாசக்தியில்;உருவானது இதைபற்றி எழுதுவதுதானே கவிதை பொய்களை மெய்யென்று கூறவரும் பொய்யா;களுக்காக எழுதுவதே கவிதை யமுனா லீனா தன் கருத்தை எழுதிஇருக்கின்றா என்று நினைக்கிறேன் நான் லினாவின் கவிதையை வாசித்ததேயில்லை ஆனாலும் பச்சைபச்சையாக இதுவரையிலும் சீனிமாக்கள் பத்திரிகைகள் கவிஞா;கள்சின்னதிரைகள் சஞசிகைகள் யார் எதிர்த்தீர்கள் இல்லை இப்ப மாக்சியத்தை தொட்டுவிட்டதால் மதத்தைதொட்டுவிட்ட கருத்தாக லீனாவின் கவிதைதொகுப்பு என்றால் அத்தனை இலக்கியமும் கலைகளும் பெண்ணை கொச்சபடுத்துவதாகவேயுள்ளது மாக்சியம் என்ற போர்வையை போர்க்க போபவா;களே மார்சியம் கூறுவது என்ன இயற்கையை ஒட்டிவாழவேண்டும் ஒருவாத.மனக்கருத்தை கூறதடைகூடாது எதிர்கருத்திற்கு மாச்சியத்தில் தடையில்லை எதிரும் புதிருமே வாழ்வை இவ்வுலகை நடத்தி செல்லுகிறது இந்தவகையில் யமுனா நீங்கள்எழுத்தாழா; ஒரு பெண்ணின் கவிதை கவிதையே இல்லை யென்று கூறியதில் இருந்து உங்களை ஒரு ஆணாதிக்க வாதியாக தெளிவுபடுத் முற்றபடுகிறது.மீண்டும் உங்களோடு நான் அதிகம் வாதிட விரும்புகிறேன் முடிந்தால் உங்கள் கருத்தை எனக்கு அறியத்தரவும் அன்புடன்
வழக்கறிஞா் அருள்மொழி – உடையாா் ஜாதி, கனிமொழி, கீதா ஜீவன், சற்குணபாண்டியன் நாடாா் – ஜாதி அடையாளமின்றி இயங்க முடியாத இவா்கள் ஜாதியை ஒழிப்பாா்களாம்! நம்புவோமாக!
1.’எதிர்ப்புக் காரணம் லீனாவின் மார்க்சிய எதிர்ப்பே’ லீனா மார்க்சிய எதிரி என்றால் ஆதரவுக் கூட்டத்தில் பேச ஏன் சிபிஐ சிபிஎம் தோழர்களை அழைத்தார்கள்? அகதி- நீங்கள் தமாஷ் பண்ணுகிறீர்கள். இன்னொரு தமாஷ் சாரு உடல் மொழியை எழுதுகிறார் என்பது. நித்தியானந்தர் ரஞ்ஜிதா விஷயத்தில் சாருவோடு ஒப்பிட பழைய இந்துநெஷன் பரவாயில்லை. கவிதையும் அரசியலும் கட்டுரையை எழுதுங்கள். விவாதிக்கலாம்.
2. மீரா பாரதி- நான் லீனா கவிதை எழுதக்கூடாது என்றோ மாரக்சியப் பிதாமகர்களை விமர்சிக்கக் கூடாது என்றோ சொல்லவில்லை. தட்டையான ஆத்திரமூட்டலுக்கும் கவிதைக்கும் வித்தியாசம் இருக்கிறது என்கிறேன். அந்தக் கவிதை முழுதுமே ஆண்கள் கம்யூனிசப் பிதாமகர்கள்தான். ‘பிற’ மதத்தலைவர்கள். அப்புறமாகப் பிற ஆண்கள் என்ன ஆனார்கள் என்று கேட்பது எப்படி ‘ஆணாதிக்கம்’ ஆகும் என்பதுதான் புரியவில்லை.
3. லீனாவின் கவிதைகள்தான் விவாதத்திற்கு பகுதியாக ஆகியிருக்க வேண்டும். என்ன நடந்திருக்கிறது? காவல்துறையினால் பொருட்படுத்தப்படாத இந்து மக்கள் கட்சியின் புகார் பூதாகரப்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்கு எதற்குக் கூட்டம்? ஒரு அறிக்கை போதுமே. கூட்டம் மகஇகாவிற்கு எதிரானது எனக் குறிப்பிட்டுவிட்டு அதனைக் கூட்ட மேடையில் சொல்ல என்ன தயக்கம்? மகஇக விமர்சனத்திற்கு லீனா தரப்பினர் எதிர்விணைகளில் அவர்களுக்கு கவிதையைப் பற்றி என்ன தெரியும் எனப் பெத்த எழுத்தாளர்கள் கேட்கிறார்கள். இது மேட்டிமை மன நிலை என்கிறேன். கூட்டத்தில் கலந்து கொண்ட பலர் லீனாவின் கவிதை தமக்கு உடன்பாடு இல்லை என்கின்றனர். அந்த உடன்பாடின்மையைப் பதிவு செய்யாவிட்டால்தான் பரவாயில்லை. உடன்படும் அம்சங்களைப் பட்டியலிட்டு அவர்கள் எழுதலாமே? எங்கே அது? தோற்றக் காரணத்தை விட்டுவிட்டு அல்லது திசைதிருப்பிவிட்டு- இந்துதுவம் என்பதையும் இப்போது பின்தள்ளிவிட்டு மகஇகாவை எதிரியாக ஆக்கியிருக்கிறாரகள். இதன் பின்னால் இருக்கும் அரசியல் மோசமானது என்கிறேன் நான்.
4. லீனாவை ஆதரிக்கிறவர்கள் – லீனாவின் மாரக்சிய எதிர்ப்பு பற்றிப் பேசுகிற அகதி – லீனாவின் குறிப்பிட்ட கவிதைகள் பற்றி தமது கருத்துக்களை முன்வையுங்கள் என்கிறேன். மற்றதெல்லாம் அக்கப்போர் என்பதுவே எனது நிலைபாடு.
5. றியாஸ் குரானா – நீங்கள் ஒரு பிரச்சினையை எழுப்பியிருக்கிறீர்கள். நல்லது. விரிவாக ஏன் வித்தியாசங்கள் அவசியமில்லை என ஒரு கட்டுரை எழுதுங்கள். நிஜத்தில் பின்னூட்டங்களில் தீவிரமாக விஷயங்களை விவாதிக்க முடியாது என்பது எனது நிலைபாடு.
நல்லது யமுனா ராஜேந்திரன்.
“விரிவாக ஏன் வித்தியாசங்கள் அவசியமில்லை என ஒரு கட்டுரை எழுதுங்கள்.”
இப்படி ஒரு அறிவிப்புச்செய்ய என்ன காரணம் என்பது எனக்கு புரியவில்லை.
வித்தியாசங்களை அதன் இருப்பை நான் ஏற்றுக்கொள்ளவில்லை என
உங்கள் புரிதல் சார்ந்த உளவியல் கருதுமெனில்:
அதற்கு பதில் சொல்லும் கடமைப்பாடு எனக்கு உண்டு.
வித்தியாசங்கள் அவசியமானது அல்லது வித்தியாசங்களின்
இருப்புத்தான் இங்கு புரிதலுக்கான வெளி ஆயினும்:
வித்தியாசம் என்பதை புரிதலின் அடிப்படையாக அனுமதிக்கும் போது
வன்முறைகளும் வித்தியாசம்தானே என்றவகையில் தனக்கான இடத்தை கோருகிறது.
வன்முறைக்கு எதிரானதாகவே வித்தியாசத்தை புரிந்துகொள்ள வேண்டியுள்ளது தோழர்.
//நிஜத்தில் பின்னூட்டங்களில் தீவிரமாக விஷயங்களை விவாதிக்க முடியாது என்பது எனது நிலைபாடு.//
குறும் விவாதங்களும் சாத்தியம். அது பின்னூட்டங்களினால் உருவாக்கப்படுவதும்: தொடருவதுமாகும்.
குறும் விவாதங்கள் உங்களால் நிகழ்தமுடியும் என நம்புகிறேன்.
உங்களிடம் வித்தியாசம் தவிர சில கேள்விகளும் கேட்டிருக்கிறேன்.
அது தொடர்பிலான குறும் பேச்சுக்கள் தொடரப்படும் என்று நம்புகிறேன்.
தனியாகச் சென்று லீனாவைக் கூட சந்திக்கிற தைரியம் தங்களுக்கு
இல்லை என்று ஒப்புக்கொள்ளும் மக இக வினர்,ராஜிவ்காந்தி கொலையில் தங்களை தொடர்புபடுத்தி கிட்டு பேசினார் என்றும்,
பல்லாவரம் பக்கத்தில் ஆயுத பயிற்சி எடுப்பதாக சிபிம் எம் தங்களை
பற்றி பேசுவதாகவும் சொல்லி படம் காட்டுவது கொஞ்சம் ஓவராக இல்லை
இது மக இக வினரின் வார்த்தைகள்.
//உன் வாதம் என்ன? உன் கருத்துக்கு யாரும் மறுப்பு சொல்லக்கூடாது. அல்லது நீ விரும்புகிற முறையில் விமரிசிக்க வேண்டும் என்பதுதானே! இதுதான் உண்மையான பாசிசம்.//
http://stalinguru.blogspot.com/2010/03/2.html
இந்த தலைப்பின் பின்னூட்டத்தில் இவர்களின் கருத்துக்கு மறுப்பு சொல்லக்கூடாது அல்லது இவர்கள் விரும்புகிற முறையில் விமர்சிக்க
வேண்டும் என்று என்னிடம் கோரியிருக்கிறார்கள். பாசிசம் பற்றி யார் பேசுவது என்று விவஸ்தை இல்லாமல் போய் விட்டது
ஆசிரியருக்கு யமுனா என்ற எழுத்தாளருக்கு என கருத்தை எழுதியிருந்தேன் இதை ஏன் எடுத்தீர்கள் யமுனாவிற்கு தான் எழுதியிருந்தேன் இதைஎடுத்துவிடடிர்கள் அறியதரவும் ஒரு பெண்ணின் அடக்குமுறைக்கு எதிராக எழுதியதை தடைசெய்திருக்கிறீர்கள்ஆசிரியா; உங்களை யாரென எனக்கு அடையாளம் தொpயும் நான் எழுதியதை திரும்பபோட்டு விடவும்
குமுதம் இதழ் தலைமை நிருபரின் பாலியல் முறைகேடு மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் ?
குமுதம் குழுமத்தின் முதன்மை தலைமை நிருபர் மீது அந்த நிறுவன பெண் ஊழியர் அளித்துள்ள முறைகேடுகளின் பேரில், இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று சட்டசபையில் பா.ம.க. உறுப்பினர் வேல்முருகன் வினா எழுப்பினார்.
“பிரபல பத்திரிக்கை ஒன்றில் பணிபுரியும் பெண் ஊழியர் தமது சக ஊழியர் மீது பாலியல் துன்புருத்தல் புகார் அளித்துள்ளார். மாநகரக் காவல்துறை ஆணையரை சந்தித்து இந்தப் புகாரை அந்தப் பெண் ஊழியர் அளித்தார். புகாருக்கு உள்ளானவரை இதுவரை விசாரணைக்கு அழைக்கவில்லை. இந்த விவகாரம் பெண் பத்திரிகையாளர்களுக்கிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் புகார் அளித்துள்ள பெண் பத்திரிகையாளர் சார்பில் எனக்கும் ஒரு மனு தரப்பட்டது. தனக்கு நேர்ந்த கொடுமைகளை அந்த மனுவில் அவர் கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதா? என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது ? என்பதை சட்டப்பேரவையில் அரசு தெரிவிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
– தமிழ் ஓசை 21.04.10
http://arulgreen.blogspot.com/2010/04/blog-post_21.html
இப்பிரச்சினையில் மனித உரிமை தீவிரவாதிகள் மௌனம் சாதிப்பது ஏன்?
இந்தக் (http://viduthalaivengaigal.blogspot.com/2010/03/blog-post_08.html)கவிதையைப் படித்துப் பாருங்கள். அவர்கள் இருவரது பெண்ணியப் புரிதலும் தெளிவாக விளங்கும். ஆண்மைய வாழ்க்கை எப்படி ஒரு பெண்ணின் தனித்துவத்தை சிதைக்கிறது என்பதை இக்கவிதை காட்ட, அதற்கு நேர்மாறாக ஆண்மையப் புணர்தலையே கொண்டாடும் கவிதையாக லீனாவின் கவிதை இருக்கிறது. அரைகுறை பெண்ணிய அரசியல் அறிவுடன் ஒரு கவிதையையும் எழுதிவிட்டு, அதற்கு சப்பைக்கட்டு கட்ட, தனது நண்பர்களையும் ஏவிவிடுகிறார்.
நேற்றைய
அவளுடைய சாவு எனக்கு
வேதனையைத் தரவில்லை
மரத்துப் போய்விட்ட உணர்வுகளுக்குள்
அதிர்ந்துப் போதல்
எப்படி நிகழும்?
அன்பான என் தமிழச்சிகளே,
இத்தீவின் சமாதானத்திற்காய்
நீங்கள்
என்ன செய்தீர்கள்!?
ஆகவே, வாருங்கள்
உடைகளை கழற்றி உங்களை
நிர்வாணப்படுத்திக் கொள்ளுங்கள்.
என் அம்மாவே
உன்னையும் தான்!
சமாதானத்திற்காய் போரிடும்?
புத்தரின் வழிவந்தவர்களுக்காய்
உங்கள் யோனிகளைத் திறவுங்கள்…
பாவம், அவர்களின்
வக்கீரங்களை
எங்கு கொட்டுதல் இயலும்?
வீரர்களே வாருங்கள்
உங்கள் வக்கிரங்களைத்
தீர்த்துக் கொள்ளுங்கள்.
என் பின்னால்
என் பள்ளித் தங்கையும் உள்ளாள்.
தீர்ந்ததா நின்று விடாதீர்!
எங்கள் யோனிகளின்
ஊடே நாளைய சந்ததி தளிர்விடக்கூடும்.
ஆகவே, வெடி வைத்தே
சிதறடியுங்கள்
ஒவ்வொரு துண்டுகளையும் கூட்டி,
அள்ளிப் புதையுங்கள்.
இனிமேல் எம்மினம் தளிர் விடமுடியாதபடி.
சிங்களச் சகோதரிகளே!
உங்கள் யோனிகளுக்கு இப்போது தேவையில்லை.
(17.05.1997 அன்று பத்து காவல் துறை வெறியர்களால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு, பெண்குறியில் கிரானைட் வைக்கப்பட்டு சிதறடிக்கப்பட்ட மட்டக்களப்பு 11-ஆம் கொலனியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாய்.)
இதற்கும் லீனா எழுதிய கவிதைக்கும் உள்ள வேறுபாலட்டையும் ஒப்பிடுங்கள்.
மாலதி மைத்ரி, குட்டி ரேவதி, சுகிர்தராணி என எல்லோருமே கலாசாரக் காவலர்களிடமிருந்து பல்வேறுவிதமான குற்றச்சாட்டுகளைச் சந்தித்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் லீனாவைப் போல், அதிகாரத்தின் தொனிகளையும் அதன் திசை வழிப் போக்கையும் புரிந்து, தனது மனவக்கிரங்களை அதன்மேல் ஏற்றி எழுதியவர்களில்லை. குடும்பம், சமூகம், தன் மீது நிகழ்த்தும் வன்முறைகளின் வெளிப்பாடுகளாகவே அவர்களின் கவிதைகள் இருந்தன;
இதுதான் தட்டைக் கவிதைக்கும் உண்மைக் கவிதைக்கும் உள்ள வேறுபாடு.
நன்றி. keetru.com
//இதுதான் தட்டைக் கவிதைக்கும் உண்மைக் கவிதைக்கும் உள்ள வேறுபாடு.//
அய்யாக்களே….
அன்பள்ள கவிதை …
பாலினக் குறியீட்டு இலக்கியங்களைப் படைப்பவர்கள் சமூகத்தின் மன நிலையைக் கேள்விக்குரியதாக்கி தங்கள் அழுத்தப்பட்ட முரண்களை அதே சமூகத்தின் பார்வைக்கு வைக்கிறார்கள்இ அது இலக்கிய சமூகமாகட்டும்இ பொது மனித உளவியல் வெளியாகட்டும் இத்தகைய படைப்புகளின் மூலத்தை நோக்கி பயணிக்கும் போது ஒழுங்கற்ற பாலின வேறுபாடுகளும்இ அழுத்தங்களும் வெளிச்சத்திற்கு வரும் வாய்ப்புகள் இருக்கிறதுஇ பெண்களின் பால் விருப்பங்கள் பெரும்பாலும் முதன்மை ஆண் சமூகத்தால் புறக்கணிக்கப் படுவதும்இ வரம்பற்றஇ ஒழுங்கற்ற பால் விருப்பங்கள் பெண்களின் மீது அவர்களின் விருப்பின்றிச் சுமத்தப்படுவதும் உடல் மொழி கவிதைகளாகவோஇ படைப்புகளாகவோ பிறக்கக் காரணமாகின்றன. அவ்வாறு அவை வெளியேற்றம் அடையும் போது பெண்ணைத் தனக்கான உரிமைப் பொருள் என்று கற்பிதம் செய்யப்பட்டிருக்கும் முதன்மை ஆண் சமூகம் விழிப்படைந்து பல்வேறு குற்றங்களை இத்தகைய படைப்புகளின் மீது சுமத்துகிறதுஇ பண்பாட்டுச் சீரழிவு ஏற்பட்டு விட்டதாகவும்இ மஞ்சள் கவிதைகள் என்றும் அது இத்தகைய படைப்புகளை எதிர் கொள்கிறது.
தட்டையும் குட்டையும் என்ன ….இருந்தாதான் என்ன?
சாமியோ…கவிதையின்னு எப்புடி கண்டுபடிக்கிறீங்க…கசாமியோ..
நட்புடன் யமுனாவிற்கு….தங்களது கட்டுரையில் ஆணாதிக்கம் எங்கே வருகின்றது எனக் கேட்டிருக்கின்றீர்கள்….முதலில் நானும் நீங்களும் இந்த சமூகத்தால் சகல வாய்ப்புகளும் பெறப்பட்டு வளர்க்கப்பட்ட கட்டமைக்கப்ட்ட ஆண்கள்…நமது சிந்தனைகளும் அதற்கெற்றவாறு ஒழுங்கமைக்கட்டே வந்திருக்கின்றது…இன்று நாம் தர்க்கவியலான கேள்விகளுடன் சிறிது பிரக்ஞையுடனும் நம் மீதான ஆணாதிக்க கட்டமைப்பை சிறிது சிறிதாக உடைக்க முற்படலாம்..ஆனாலும் இக் கட்டுடைப்பானது முழுமையாக நடைபெறும் வரை நமக்குள் ஆணாதிக்கம் நம்மையறிமால் உயிர் வாழலாம்…பிரக்கஞையற்று நமது தன் முனைப்பு பாதிக்கப்படும் பொழுது ம் வெளிவரலாம்…இநத டிப்படையில் தங்களின் கீழ் கூற்றுக்ள் ஆணாதிக்க தன்மையானவைக இருக்கலாம் என்றே உணா;கின்றேன்…”உங்களது கவிதைகளும்இ புணர்ச்சி அனுபவத்தையும் கேவலப்படுத்திஇ மார்க்சியம் குறித்தும்இ விடுதலைப் போராட்டம் குறித்தும் நடந்தே தீர வேண்டிய விமர்சன மரபையும் கேவலப்படுத்தியதாக இருக்கிறது.”….
“உங்களது இந்த மூன்று எழுத்துக் குவியல்களும் கவிதைகளே இல்லை.”….
”
புணர்ச்சி அனுபவத்தில் ஈடுபட்டிருக்கிறபோதுஇ அது காதலுடன் நடந்தாலும் அல்லது உடல் வேட்கையென காதலற்று நிகழ்ந்தாலும் அதில் மார்க்சியப் பிதாமகர்களை அல்ல இட்லரையோ அல்லது சதாம் குசைனையோ நினைவு கூர்ந்தாலும் அது கவிதை அல்லஇ அது வெறும் தட்டையான அரசியல். ” ….இவ்வாறு முடிவு செய்யும் அதிகாரத்தை தங்களுக்கு தந்தது எது? மேலும் இன்னுமொருவருக்கு எதிராக தங்களுக்கு இருக்கும் முரண்பாட்டை அல்லது ஆத்திரத்தை லீனாவின. கவிதைக்கு விமர்சனம எழுதுவதன் மூலம் நிறைவேற்றுகின்றீர்கள் என்றே நினைக்கின்றேன்…இதனால்தான் தங்களது கட்டுரை இருபாpவாக இருக்கின்றது…முதலி பிரிவு லீனாவின் கவிதை தொடா;பான ஆரோக்கியமான விமா;சனத்தை முன்வெைக்குமு; அதேவேைளை இரண்டாவது பகுதி தனிநபர் மீதான ;தாக்குதல்களாக இருக்கின்றன….இநத உலகில் எதுவும் புனிதமில்லை…ஆகவே லீனாவிற்கும் இவ்வாறு கவிதை எழுத சுதந்திரமுண்டு அல்லவா?
ந’ன்றி நட்புடன்
……..மீராபராதி
அன்புள்ள மீராபாரதி. மதிப்பீடுகள் அவசியமானவை. முன்மதிப்பீடுகள்? என்ன சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. அன்புள்ள றியாஸ் குரானா. முயற்சி செய்கிறேன்.அன்புள்ள ஜெயா. மாரக்சியவாதிகளைத் தூற்றிவிட்டதால் மட்டும் இவைகளைக் கவிதை இல்லை என நான் சொல்லவில்லை. வேறு காரணங்கள் அதற்கு இருக்கின்றன எனவே கட்டுரை சொல்கிறது. மறுபடியும் அன்புள்ள மீராபாரதி. எல்லா விமர்சனங்களையும் எதாவது ஒன்றின் மீது பொருத்திவிட்டால் எதையும் நியாயப்படுத்திவிடும் ஆபத்தைத் தாங்கள் உணரவில்லை என்பதுவே எனது வருத்தமாக இருக்கிறது. அன்புடன் ராஜேந்திரன்.