பாராளுமன்ற அரசியல் கட்சிகளால் அரசியலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. சமூகத்தின் பிற்போக்கு சிந்தனைகளுக்கு ஏற்ப வளைந்துகொடுப்பதன் ஊடாக வாக்குகளைத் திரட்டிக்கொள்வதே அவர்களின் ஒரே நோக்கம். மெலிதான இனவாதம் இழையோடும் கட்சிகளுள் ஜே.வி.பி உம் ஒன்று. ஜே.வி.பி இன் பாராளுமன்ற சந்தர்ப்பவாதம் தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணைய உரிமையை அங்கீகரிப்பதற்கு இடமளிப்பதில்லை.
80 களில் ஜே.வி.பி இலிருந்து பிரிந்த குழுக்கள் சுய நிர்ணைய உரிமையை அங்கீகரித்து ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்க முன்வந்தன. அவை பின்னாளில் இலங்கை அரசாலும் தமிழ் இயக்கங்களில் தவறான வழிமுறைகளாலும் அழிக்கப்பட்டுவிட்டன.
மகிந்தவின் இரண்டாவது பதவிக்காலத்தில் ஜே.வி.பி இன் இன்றைய தலைவர் அனுரகுமார திசாநாயக்க மட்டுமே மகிந்தவிற்கு எதிரான கருத்துக்களை வெளிப்படையாக முன்வைத்தார்.
இன்று காலை மகிந்தவின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும் என அனுரகுமார தெரிவித்துள்ளார்.
அனுர குமார திசாநாயக்கவின் இனவாதக் கருத்துக்கள் போதுமானவை அல்ல என்ற காரணத்தை முன்வைத்து அதன் ஆரம்ப காலத் தலைவர்களில் ஒருவரான சோமவன்ச அமரவன்ச 2015 மே மாதம் கட்சியை விட்டுப் பிரிந்து சென்றார்.
இலங்கையின் பிரபல இசைக்குழுவான ஜிப்சியின் தலைவரும் பாடகருமான சுனில் பெரேரா மகிந்த ஆட்சிக்கு வந்தால் தான் கொல்லப்படுவேன் என அச்சம் தெரிவித்துள்ளார். மகிந்தவைக் கொலைகாரன் என்றும் திருடன் என்றும் பல நேர்காணல்களை வழங்கியிருக்கும் சுனில், அனுரகுமார திசாநாயக்கவை மகிந்த உயிருடன் விட்டுவைத்திருப்பது வியப்பிற்குரியது எனத் தெரிவித்துள்ளார்.
அனுரகுமார திசாநாயக்க எங்களுடனிருப்பது உண்மை தானா என எண்ணிப்பார்க்க்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
மைத்திரிபால சிரிசேன மகிந்தவிற்கு மீண்டும் நியமனம் வழங்கியதைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்றும் மகிந்தவை இறுதித் தடவையாக அழித்துவிட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.