சிவகாசியில் ஏற்பட்ட ஓம் சக்தி பட்டாசு ஆலையில் பாதுகாப்பு விதிகள் மீறப்பட்டதாகக் கூறி அதன் உரிமம் அண்மையில் ரத்து செய்யப்பட்டும் அது இயங்கி வந்துள்ளது.
தீவிபத்து ஏற்பட்டு 38 பேரின் உயிரை காவு வாங்கிய ஓம் சக்தி பட்டாசு ஆலை சிவகாசியைச் சேர்ந்த விருதுநகர் ஒன்றிய அதிமுக கவுன்சிலர் முருகேசனுக்கு சொந்தமானது. இந்த ஆலை வளாகத்தில் ஓம்சக்தி ப்ளு மெட்டல்ஸ் என்ற நிறுவனத்தையும் அவர் நடத்தி வந்துள்ளார். கடந்த 23ம் தேதி சிவகாசி வெடிமருந்து கட்டுப்பாட்டு துணை தலைமை அலுவலர் ராமசாமி தலைமையிலான குழு ஓம் சக்தி பட்டாசு ஆலையில் ஆய்வு செய்து விதிமீறல்கள் அதிகம் உள்ளதை கண்டுபிடித்தது.
அளவுக்கு அதிகமாக வெடிபொருட்கள் குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை கண்டறிநது பட்டாசு ஆலையின் உரிமத்தை ராமசாமி ரத்து செய்துள்ளார். ஆனால் அந்த சமயத்தில் உரி்மத்தை ரத்து செய்ததோடு மட்டுமின்றி விதி்முறைகளை காரணம் காட்டி பட்டாசு ஆலையை சீல் வைத்திருந்தால் இவ்வளவு பெரிய விபத்து நடந்திருக்க வாய்ப்பில்லை. ஆய்வு மேற்கொண்ட அதிகாரியின் கவனக்குறைவு தான் இவ்வளவு பெரிய விபத்திற்கு காரணமாக அமைந்துவிட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
நெஞ்சை பதறவைக்கும் பட்டாசு ஆலை விபத்துகள் விபரம்:
1998ம் ஆண்டு சிவகாசியில் நடந்த பட்டாசு ஆலை விபத்தில் 150 பேர் பலியானார்கள் என்று கூறப்படுகிறது.
2002ம் ஆண்டு கோவில்பட்டியில் 16 பேர் பல
2005ம் ஆண்டு மீனாம்பட்டியில் 20 பேர் பல
2006ம் ஆண்டு பர்மா காலனியில் 12 பேர் பல
2007ம் ஆண்டு நாராயணபுரத்தில் 4 பேர் பல
2009ம் ஆண்டு மதுரை வடக்கம்பட்டியில் 19 பேர், நமஸ்கரித்தான்பட்டியில் 18 பேர், சிவகாசியில் 3 பேர், திருவள்ளூர் மாவட்டத்தில் 32 பேர் பல
2010ம் ஆண்டு சிவகாசியில் 8 பேர் பல
2011ம் ஆண்டு விருதுநகர், சிவகாசி, தூத்துக்குடியில் 14 பேர் பல
ஆக மொத்தம் கடந்த 14 ஆண்டுகளில் நடந்த பட்டாசு ஆலை வெடிவிபத்துகளில் கிட்டத்தட்ட 300 பேர் வரை பலியாகியுள்ளனர் என்று கூறப்படுகிறது.
மனித உயிர்கள் தொடர்ச்சியாகக் காவுகொள்ளப்பட்டாலும் அருவருப்பான பண வெறியர்கள் அதிகாரத்திலிருக்கும் இந்திய ‘ஜனநாயகம்’ வெறும் கோப்ரட் வியாபார ஜனநாகம் மட்டும் தான் என்பதை உலகமக்களுக்கு இன்னொரு தடவை சொல்லிவைத்திருக்கிறது.
வருஷம் வருஷம் இது போன்று நடந்து கொண்டு தான் இருக்கிறது…. பாவம் அன்றாடம் கூலி வேலைக்கு செல்லும் அப்பாவி மக்கள் உயிர் கருஹி கொண்டு தான் இருக்கிறது…., நமது நாட்டில் , ஏழை மனிதர்கள் மற்றும் தனி ஒரு மனிதனுக்கு என்றுமே பாதுகாப்போ, உரிமைகலோ என்றுமே பாது காக்க படுவது இல்லை. ஏழைகளின் உயிரிகு என்றுமே நம் நாட்டில் மதிப்பு கிடையாது…., கேவலம் இலஞ்சதிர்ற்காக வும், சின்ன வீடு வைத்து உல்லாச வாழ்கை வாழும் சில பொருக்கி அரசு அதிகாரிகளின் கவன குறைவு, பாதுகாப்பு விதிகள் பின் பற்ற படாத தொளிச்சளைக்களுக்கு பணத்தை கை நீட்டி வாங்கி விட்டு உரிமம் வழங்குவது, சரி வர இது போன்ற இடங்களில் அவபோது பார்வை இடுவது கிடயாது, இது போன்று சம்பவங்கள் நடந்த பின்னர் ஓடி ஒளிந்து விடுவது, பின்னர் மக்கள் மறந்து ஈயல்பு வாழ்கை இக்கு திருபிய பின்னர், தனது லஞ்ச வேட்டையை ஆரம்பிப்பது, அரசும் நமது சட்டமும் அவர்களை சில காலம் சுச்பென்ட் செய்து மதம் மாதமும் சம்பளம் கொடுத்து மீண்டும் பணியில் அமர்த்தி கொல்ஹிறது, இது போன்றவர்ஹல், சிறுவயதில் இருந்து பிட் அடித்து பாஸ் செய்து, பல லட்சம் லஞ்சம் கொடுத்து, Tண்Pஸ்C ஊPஸ்C போன்ற வினாத்தாள்களை திருடி, பல மாமா வேலைகளை பார்த்து வரும் திருட்டு அதிகாரிஹலே, இதற்க்கு காரணம். என்ன வேடிக்கையான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்று அறியாத மக்கள் மீண்டும் இது போன்ற சாவு மேடைகளில் வேலை செய்ய கிளம்பிவிடுஹிண்டறனர், என்ன செய்வது அடுத்த நேரம் வயிற்றை கழுவ வேண்டும் அல்லவே?… இதை யார் கவனிப்பது?
ஐயா சஹாயம், அஷ்ர கார்க் , அன்சுல் மிஸ்ரா போன்ற சில நேர்மையான அதிகாரிஹல் செயல் பாடே பல குற்றங்கள் வெளியாஹா காரணம், பல மக்கள் தங்கள் அடிமை வாழ்வில் இருந்து விடுபட்டனர்…, அவர்ஹல் உரிமைகள் மீட்கப்பட்டன. நாடு முழுவதும் இது போன்று மாற வேண்டுமெனில் மக்களின் உயிர் ஒரு பொக்கிஷம் ….., பாதுகாக்க பட வேண்டும் எனில், ஏழை, பண்பாலும், ஒழுக்கத்தாலும், இறக்க குணம் உள்ள, நேர்மையான அதிகாரிகளை உருவாக்குங்கள். உங்களுக்கு கோடி புண்ணியம்.
To me Sivakasi means American educated economist Palaniyappan Chidamabaram the current Union Home Minister of India.
சிவகாசி விருதுனகர் மாவட்டத்துல இருக்கு, சிதம்பரம் சிவகங்கை மாவட்டத்துல பிறந்தவர். கொளப்பாதீங்க சார். அவுரோட அமெரிக்க கல்விக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் ? இதத்தான் சொல்லுற மொட்டத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சி போடுறன்னு.
அன்புடையீர் வணக்கம்.
சிவகாசி வெடி விபத்து மட்டுமல்ல இது போன்ற சம்பவங்கள் எங்கு எப்படி நடந்தாலும் வருந்த்தக்கதே,கண்டிக்கதக்கதே.
அதே சமயம் இது மாதிரி நடைபெறும் அசம்பாவிதங்களில் எல்லோரும் கிட்டதட்ட அனைவருமே அரசாங்கத்தைக் குறை சொல்வதே வாடிக்கை.அது எந்த அரசாங்கமாக இருந்தாலும் சரி.
ஏன் மக்களாகிய நமக்கு பங்கு இல்லையா?
ஒரு வாதத்திற்கு பேசுவோம்.அரசாங்கமும் அதிகாரிகளும் தவறே செய்கிறார்கள்.ஆனால் மக்களாகிய நாம் சரியாக இருக்கலாமே? அங்கு பட்டாசுத் தொழிலை நடத்தும் அதிபர்களும் மக்கள்தானே.
நாம் நடத்தும் தொழிலை நியாயமாகவும்,நேர்மையாகவும் சட்டத்துக்கு உட்பட்டும் தான் இயக்குவேன் என மக்களாகிய நாம் முடிவு செய்து விட்டால் யாருக்கும் லஞ்சம் தந்து செயல்பட வேண்டியது இல்லையே?
ஒரு ரூபாய்க்கு பட்டாசு தயாரித்தால் மூன்று ரூபாய் இலாபம் என்ற பேராசைதானே இத்தனை உயிர் பலிகளுக்கு காரணம்.
ஒரு தொழிலாளி எட்டு மணி நேரம் வேலை,நியாமான கூலி,தகுந்த பாதுகாப்பு இருந்தால்தான் வேலை செய்வேன் என்று முடிவு செய்தால் மற்றொரு சக தொழிலாளி அதை விட குறைவாகவும்,எந்த கட்டுபாடும் இல்லாமல் வேலை செய்கிறேன் என போய் நிக்கிறான்.
அரசாங்கமும் அதிகாரிகளும் கடும் நடவடிக்கை எடுத்தால் அங்குள்ள மற்ற கட்சிகள் (ஆளும் கட்சி எதுவாக இருந்தாலும்) தொழிலாளிகளை முடிக்கிவிட்டு வேலை வாய்ப்பு இல்லை,பண்டிகை காலத்தை நாங்களும் எங்கள் குடும்பமும் எப்படி கொண்டாடுவது?சோற்றுக்கே வழி இல்லை என கோசம் போட வைக்கிறார்கள்.
ஆக இதற்கு நிரந்தர தீர்வு அனைவரும் பொறுப்பேற்கவேண்டும்.சட்டத்தின் விதிகளை கடுமையாக அனைவரும் பின்பற்ற வேண்டும்.
நன்றி.வணக்கம்.
கொச்சி தேவதாஸ்
//அங்கு பட்டாசுத் தொழிலை நடத்தும் அதிபர்களும் மக்கள்தானே.//
கொலைகார மக்கள். கொள்ளை அடிக்கும் மக்கள்
I am more interested of Indiana, USA then India. It is mind boggling that they operated this factory without a permit.