கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த கப்பலொன்றை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கப்டன் அலி என்ற கப்பலையே இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளதாகவும் அதிலிருந்த 15 பேரையும் கைதுசெய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கைக்கு சொந்தமான கடற்பரப்பில், மேற்கு திசையில் 250 கடல்மையில் தூரத்தில் வைத்தே கப்டன் அலி கப்பலை கைது செய்துள்ளதாகவும் அக்கப்பலை கரைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
பிரிட்டனில் இருந்து வன்னி மக்களுக்கு பொருட்களை ஏற்றிவந்த கப்பலே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது
கப்பலைக் கொண்டு போனவர்களைவிடவும் சிறிலங்காவின் கப்பற்படைக்கு விசுவாசமாயிருக்கிறாயா கபோதி
நிவாரணப் பொருட்களை கொண்டுவந்த ‘வணங்கா மண்’ கப்பல் விடுவிக்கப்படும்: கோத்தபாய
[ஞாயிற்றுக்கிழமை, 07 யூன் 2009, 04:23 பி.ப ஈழம்] [கி.தவசீலன்]
உணவு, மருந்து இன்றி வாழும் தமிழ் மக்களுக்கு உதவுவதற்காக உணவு, மருந்துப் பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்தபோது, பிடிக்கப்பட்ட ‘வணங்கா மண்’ கப்பல் ஓரிரு நாட்களில் விடுவிக்கப்படும் என்று சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அறிவித்துள்ளார்.
தாயக மக்களுக்காக பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளில் திரட்டப்பட்ட 884 மெற்றிக் தொன் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை ஏற்றிக்கொண்டு ‘வணங்கா மண்’ என்ற கப்பல் கடந்த மே மாதம் பிரான்சில் இருந்து இலங்கை நோக்கிப் புறப்பட்டது.
இதில் மனித உரிமை ஆர்வலர்கள், பணியாளர்கள் என மொத்தம் 16 பேர் பயணம் செய்தனர். கடந்த வியாழக்கிழமை அதிகாலை சிறிலங்கா கடல் எல்லைக்குள் இக்கப்பல் நுழைந்தபோது அதனை சிறிலங்கா கடற்படையினர் சுற்றிவளைத்துச் சிறைப்பிடித்தனர்.
சிறிலங்காவில் உள்ள பாணந்துறை கடற்பரப்பில் இருந்து ஏழு கடல் மைல் தொலைவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இக்கப்பலில் சிறிலங்கா கடற்படையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
இரண்டு நாட்களாக நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில் ‘வணங்கா மண்’ கப்பலில் ஆயுதங்கள் எதுவும் இல்லை என்றும், முழுக்க முழுக்க உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் மட்டுமே இருப்பதாகவும் தெரியவந்திருக்கிறது.
இதையடுத்து கப்பல் வெகு விரைவில் விடுவிக்கப்படும் என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கூறியிருக்கிறார்.
‘வணங்கா மண்’ கப்பலில் ஆயுதங்களோ அல்லது தடை செய்யப்பட்ட வேறு பொருட்களோ இல்லை. முழுக்க முழுக்க நிவாரண உதவிப் பொருட்கள்தான் உள்ளன. சிறிலங்காவுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோக்குடன் இக்கப்பல் வரவில்லை.
இக்கப்பலில் வந்தவர்கள் செய்த ஒரே தவறு அனைத்துலக கடல் விதிகளை மீறி சிறிலங்கா கடல் எல்லைக்குள் நுழைந்ததுதான். இது தொடர்பாக கப்பலில் வந்த பணியாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களிடம் நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம். இந்த விசாரணை முடிவடைந்தபிறகு அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள்’ என்று கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
‘வணங்கா மண்’ கப்பலில் தடை செய்யப்பட்ட பொருட்கள் எதுவும் இல்லை என்பதை சிறிலங்கா கடற்படையினரும் ஒப்புக்கொண்டிருக்கின்றனர்.
எனினும் ‘வணங்கா மண்’ கப்பல் விடுவிக்கப்படுவதற்கு முன்பாக அதிலிருந்த பொருட்கள் அனைத்தையும் சிறிலங்கா அரசு கைப்பற்றிக் கொள்ளுமா அல்லது திருப்பி எடுத்துச் செல்ல அனுமதிக்குமா என்பது தெரியவில்லை.
Sri Lanka navy confirms aid cargo
By Charles Haviland
BBC News, Colombo
Captain Ali at sea off the Sri Lankan coastline
The navy searched the vessel with the crew on board
The Sri Lankan navy says it has found only food, medical items and similar goods on board a ship sent by Tamil expatriate groups in Europe.
The vessel was intercepted by the navy days ago and the government said the expedition was intended to help the now-defeated Tamil Tiger rebels.
But a Tamil spokesman denies this, saying he hoped aid would still reach Tamils displaced by the war.
A navy spokesman could not comment on what would happen to the cargo.
A naval team has been searching the Captain Ali vessel, but the spokesman told the BBC that up to now it had found only food and medical items.
Those on board are a British Tamil citizen, 13 crew members from Syria and Egypt, and an Icelandic man.
He said the search had stopped for now and the navy personnel still on board were very friendly and courteous.
The expedition began in two legs from Britain and France in April and May.
‘Divisive’ description
Sri Lanka’s defence ministry had described the boat as an “LTTE [Tamil Tiger] vessel”.
But the defence secretary, Gotabhaya Rajapaksa, in a Sunday newspaper interview, has confirmed that the ship “did not have any dangerous intentions”.
A London-based spokesman for the voyage, Arjunan Ethirveerasingam, said such a description was divisive and damaging.
The organisers wanted to continue sending aid to the vast number of Tamils displaced by the war, he said.
He said the ship had nothing whatsoever to do with the Tamil Tigers, although he acknowledged that when it first set out, it was planning to go directly to what was then the war zone.
Mr Ethirveerasingam says he was concerned for the welfare of the man in Sri Lanka due to take delivery of the goods, a diabetic who, he says has been in detention since Thursday morning at the Criminal Investigation Department.