மாநிலத்தின் தந்தேவாடா மாவட்டத்தில் உள்ள ஷியாம்கிரி பகுதியில் மாவோயிஸ்டுக்களைத் தேடிச்சென்று கிராமம் ஒன்றைத் தாக்கிய அதிரடிப்படையினரைச் சுற்றி வளைத்த மாவோயிஸ்டுக்கள் அவர்கள் மீது தற்காப்பு தாக்குதல் நடத்தினர்.
இந்திய அரசிற்கு எதிராகப் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் நடத்தும் மாவோயிஸ்டுக்களை அழிப்பதற்கு இந்திய அரசு இராணுவ ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. நீண்ட வரலாற்றைக் கொண்ட மாவோயிஸ்டுக்களின் ஆயுதப் போராட்டத்தை அழிப்பதற்கு இந்திய அரசு கட்டவிழ்த்துவிடும் ஒடுக்குமுறைகள் அப்பாவி மக்கள் மீதான தாக்குதலாக்வே அமைகிறது.
தாக்குதலில் எட்டு அதிரடிப்படை இராணுவ வீர்ர்கள் பலியாகியிருப்பதாகவும் ஆயுதங்கள் கையகப்படுத்தப்பட்டிருப்ப்தாகவும் தகவல்கள் வெளியாகின்றன. அரச தரப்புத் தகவல்களின் அடிப்படையில் பலியான இராணுவத்தினரின் எண்ணிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை.