16.12.2008.
அமெரிக்க அதிபர் புஷ் அவர்கள் மீது செய்தியாளர் சந்திப்பின்போது காலணிகளை வீசிய முன்தசார் அல் சைதி என்கிற செய்தியாளர் ராணுவத்தின் காவலில் இருப்பதாக வெளியான செய்திகளை இராக்கிய ராணுவத்தின் சார்பில் பேசவல்ல அதிகாரி மறுத்திருக்கிறார்.
அதேசமயம் அந்த செய்தியாளர் எங்கு இருக்கிறார் என்பதை சொல்ல அவர் மறுத்துவிட்டார்.
சைதி நல்ல முறையில் நடத்தப்படுவதாகவும், அவரை சந்திக்க தமக்கு அனுமதி அளிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டிருப்பதாகவும், இராக்கிய செய்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
அதேசமயம் சைதியின கைகள், விலா எலும்புகள் முறிக்கப்பட்டதாகவும், அவரின் உடலுக்குள் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் சைதியின் சகோதரர் பிபிசியிடம் தெரிவித்தார்.
தமது சகோதரர் அமெரிக்க ராணுவ மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டருப்பதாக தாம் நம்புவதாகவும் அவர் கூறினார்.
BBC.
உலகத்தின் நான்காவது எண்ணைஉற்பத்திநாடான ஈராக்கின் மீது சதிபின்னலின்
அடிப்படையில் போர்தொடுத்து அந்தநாட்டை முடவன் நிலைமைக்கு கொண்டுவந்ததமல்லாமல்
இருப்பில்லிருந்தஎண்ணையும் சூறையாடி ஈராக்உதவியாளருடன் உள்ளஎண்ணையுடன்
உறுஞ்சிஇழுத்துக்கொண்டிருக்கிறது அமொரிக்கா.ஈராக்மக்கள் நாம்மென்ன ?கற்காலத்திற்கா
திரும்பி வந்துவிட்டோம் என பிரமைபிடித்தவர்களாக இருக்கிறார்கள்.
இவர்கள் தம்மை சுதாகரித்துக்கொண்டு சர்வதேசதொழிலாளர்களின் ஆதரவையும் அறிவையும்
பெற்று பயங்கரவாதத்தன்மையைத்விட்டு தம்முள்ஐக்கியப்பட்டு அமெரிக்காவுக்கும் அவர்கூட்டாளிகளுக்கும்
பதில் அடிகொடுப்பார்கள்…….செருப்படி ஆரம்பவாழ்துப்பாவே!