பாடசாலை அதிபர்களுக்கு இராணுவப் பயிற்சி கொடுப்பதானது இந் நாட்டில் ஆரம்பக் கல்வியையும், உயர்கல்வி முறையைப் போல இராணுவ மயப்படுத்துவதற்கான முயற்சி என்றும் அதற்கு தமது சங்கமானது பலத்த எதிர்ப்பினைத் தெரிவிப்பதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்னும் சில நாட்களில் அதிபர்கள் 1000 பேருக்கு இராணுவ முகாம்களுக்குள் தலைமைத்துவப் பயிற்சியை வழங்க தான் தயாராக இருப்பதாக கல்வியமைச்சின் செயலாளரினால் கடந்த 25ம் திகதி வழங்கப்பட்ட அறிவிப்பைப் பற்றி, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் திரு. ஜோசப் ஸ்டாலினிடம் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.