அனைத்துப் பல்கலைக்கழ மாணவர் பேரவையின் தலைவர் உதுல் பிரேமரத்ன 29.10.2010 அன்று பகல் கொழும்பில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரனைகளுக்காக கறுவாத்தோட்டைப் பெலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார். ஆயினும்இறுதி மாணவர் கைது செய்யப்படும் வரை போராட்டங்களைத் தொடரப் போவதாக அனைத்துப் பல்கலைக்கழ மாணவர் பேரவை தெரிவித்திருக்கிறது.
இதற்கிடையில், பேராதனைப் பல்கலைக்கழக கலை, விவசாய பீடங்கள் காலவரயறையின்றி மூடப்பட்டுள்ளன. ரஜரட்ட பல்கலைக்கழக மாணவி ஒருவருடன் முறைகேடாக பொலிஸ் அதிகரி ஒருவர் தகாத முறையில் நடந்து கொணடார் எனக்கூறி அப்பல்லைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுட்டனர்.
ரஜரட்ட பல்கலைக்கழகம் பொலிஸாரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு 400க்கும் மேற்பட்ட பொலிஸார். பாதுகாப்புக் கடமையாற்றி வருகின்றனர். அந்நிலையில் விடுதியை நோக்கிச் சென்ற மூன்று மாணவிகளை பொலிஸார் கையைப் பிடித்து இழுத்து பலாத்காரம் செய்ய முற்பட்டுள்ளனர் என அனைத்துப் பல்கலைக்கழ மாணவர் பேரவையின் தலைவர் தெரிவித்திருக்கிறார்.
மாணவாகள் மீதான அடக்குமுறை தொடர்ந்தால் தொழிற்சங்கங்களும் போராட்டத்தில் குதிக்கும் என இலங்கையின் தேசிய வர்த்தக தொழிற்சங்க நிலையம் அறிவித்திருக்கிறது. அதே வேளை தமது போராட்டம் தொடர்பாக ஐ.தே.க, மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி என்பவற்றுடன் சந்திப்புக்களையும் மாணவர் பேரவையினர் மேற்கொண்டுள்ளனர்.
ஆயினும், பல்கலைக்கழக நெருக்கடியை அரசாங்கம் கையாண்டு வரும் முறைக்கு ஆதரவு தெரிவித்து அரசதரப்பு அரசியல் வாதிகளின் தலைமையில் கோட்டை ரயில் நிலையம் முன்பாக நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, பல்கலைக்கழ மாணவர் குழுக்களின் செயற்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளன.
களனியில் நடைபெற்ற வைபவமொன்றில் பேசிய மேர்வின் சில்வா, களனிப் பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்ப்புச் செயற்பாடுகளைப் பொறுத்துக் கொண்டு இனியும் தம்மால் சும்மா இருக்க முடியாது எனவும் எதிர்ப்புப் போரட்டங்களில் ஈடுபடும் மாணவர்களை பல்லாயிரக்கணக்கானோர் பார்த்துக் கொண்டிருக்க நடுவீதியில் மண்டியிட வைப்பேன் எனவும் பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தை வளப்படுத்திக் கொள்வதைப் பற்றி மட்டும் சிந்திக்க வேண்டும். அதை விடுத்து எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டால் நடுவீதியல் நாய்களைப் போல மண்டியிட வைத்து கடுமையாக தண்டிப்பேன் எனவும் சூளுரைத்திருக்கிறார்.
இதற்கு முன்னர், பல்கலைக்கழக மாணவ, மாணவியரை சரியான பாதையில் இட்டுச் செல்வது அரசின் பொறுப்பு என்று ஜனாதிபதி தெரிவித்திருந்தமையும், அமைச்சின் செயலாளர், ‘பல்கலைக்கழக முறைமையை சீர்குலைக்க அவர்கள் முயற்சிக்கின்றனர், பல்கலைக்கழகங்கள் சுத்திகரிக்கப்படும்” எனத்தெரிவித்திருந்தமையும் கவனத்தில் கொள்ளப்படவேண்டியவை.
எனினும்; ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்கா, குழப்பத்தை விளைவிக்க முற்படும் உயர் கல்வி அமைச்சரை கைது செய்ய வேண்டும், மாணவர்களைப் பாதுகப்பதற்கென உள்ள பொலிஸார் மாணவர்கள் மீது தாக்குதல்கள் நடத்தும் போது வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது கவலையளிக்கிறது : இவை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்காமல் இருக்கிற பொலிஸ் மா அதிபர், அவருடைய சீருடைய அணியத் தகுதியற்றவர் எனவும் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார்.
இலங்கை சீனாவிடமிருந்து பொருளாதார உதவியை மட்டுமல்ல,போராட்டங்களை,குறிப்பாக மாணவர் போராட்டங்களை நசுக்குவது எப்படியென்றும் கற்றுக் கொள்ள ஆரம்ப்த்திருக்கிறது போலும்!மேர்வின் சில்வாவின் கூற்று இதனையே மெய்ப்பித்து நிற்கிறது!சீனாவின் மாணவர் மீதான அடக்கு முறை யுத்தி மண்டியிட வைத்தல்,அதுவும் பல நூறு,லட்சம் மக்கள் முன்னிலையில்!போதாததற்கு பெற்றோரும் கூடவே!வாழ்க ஜனநாயகம்!!!!
சில்வாக்கள் இலங்கையின் களங்கங்களாகவே இருக்கிறார்கள்.அதி கூடிய அறீவும், செயறபடும் துணீவும் மாணவரிடம் மட்டுமே இருக்கும்.மாணவர் சக்தி மாபெரும் சக்தி.இப்படி கத்தி நாலு பெட்டைகள பார்த்து காணாமல் போகும் மாணவர்களூம்,விக்டோரியாக பார்க்கில் ஓவராக படிப்போரும் உண்டு.இதில் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட உதுல் பிரேம ரத்தினத்தை நினைத்தால் தான் கவலையாக இருக்கிறது.அவரிடம் இப்போது எத்தனை பற்கள் இருப்பில் இருக்கிறதோ/ எருமை மாடுகள் மிதித்தே பிழிந்திருப்பார்கள்? இனி யோசித்து என்ன பயன் இனியாவது யோசிப்பம் என எல்லா மாணவரும் எழுக்,,,,