‘அதாவுல்லா’ காக்கா மறைந்தார்….
—————————— ————————-
எரியுது எங்கள் தேசம்
நாங்கள் உழைத்தது அனைத்தும் நாசம்
அரசியல் வாதிகள் கோசம்
அரைநொடியிலே கலைந்திடும் வேசம்
மீனுக்கு தலையினை காட்டி-தினம்
பாம்புக்கு வாலினை ஆட்டி
கொடுக்கிறார் அரசுக்குக்கூட்டி
அதை சொல்லுது ‘அஸ்வரின்’ பேட்டி
‘அதாவுல்லா’ காக்கா மறைந்தார்-நாம்
அழிந்தபின் அலுத்கம விரைந்தார்
பாராளுமன்றத்தில் கொதித்தார்-பின்
பகைவனின் சேலைக்குள் ஒளித்தார்.
‘ரிஸாத்தின்று’ நடிக்கின்ற நடிப்பு-அட
சிவாஜியும் தோற்கிற நடிப்பு
‘அரசுக்கு தூக்குறார் செருப்பு’-அதை
நினைக்கையில் வருகுது சிரிப்பு…!
மாமி செருப்பால அடிச்சும்
மாமா ‘ரவுசர’ உரிஞ்சும்
மருமகன் தலைவர் ‘ஹக்கீம்’-அவ
மகள்ட மடியிலே படுக்கார்.
கழுதைகள் எம்மை நெருக்க
எம் கடைகளை அடித்து நொறுக்க
உலகமே அதனை வெறுக்க-இன்னும்
உலக்கைகள் அரசிலே இருக்க….
‘வட்டரக்க விஜித தேரர்’
‘பாலித தேவர பெரும-உங்க
சிறுநீர் கொஞ்சம் கொடுங்க-எங்க
சிரங்குகள் வாயில் பருக்க..
FANTASTIC
ஆயிரம் வார்த்தகளும் நூறு மணி நேரங்களிலும் எழுதப்படும் கட்டுரைகளியும் நூலையும் விட ஒரு சில வரிகளில் நச்சென்று தைக்கும் கவிதைகளின் வலிமைக்கு இக் கவி ஒரு உதாரணம். இனிமேலாவது இந்த அரசியல்வாதிகள் திருந்துவார்களா?
அரசியல் வாதிகள் திருந்தமாட்டார்கள் வாக்கு போடும் மக்கள்தான் திருத்த வேண்டும். சிந்திந்து வாக்கு போட்டு இருந்தால் சிறந்தது. இனியாவது மக்கள் சிந்திக்கட்டும்.
உணர்வற்ற ஊம்பிகலின்
உண்மைகளை உரக்கச் சொன்னீர்…
உதிரம் சிந்த புத்தனும்
உரமிடவில்லை எனவும் நவின்ரீர்…
உனக்குள்ளும் ஓடுதடா ஒரு
உரிமைக்கான உதிரம் – இருந்தும்
உலக்கைகள் அறிந்ததே
உத்தம நபியின் வழி வந்த
உம்மத்தவரின் இன்முகத்தை…
நிகழ்காலத்தின் தலையில்
உட்கார்ந்துகொண்டு
எதிர்காலத்தின் குரல்வளையில்
கத்திவைத்து மிரடுகிறார்கள்….
கடந்தகாலத்தைக் கடத்தி…
காலால் மித்துக் கொலை செய்துவிட்டு..
கைகோர்த்துக் கொண்டவரகளின்
கால்களை நக்கி
பேய்களாய் மக்களை
பிணங்களில் நடந்து வந்து
பாராளுமன்றக் கதிரைகளில் அமர்ந்தனர்.
சுற்றி எரிகிறது
…சுந்தரத் தீவு
நெற்றி வைத்து
…நீளமாய்க் கேளு
காலமும் காணாக்
…காட்சித்தான் பின்ன
பாலகர் செய்த
… பாவம்தான் என்ன?
கொடுமையிலும் கொடுமை
…கொலைசெயுமிவ் வன்மை
கடுமையுடன் தடுத்தால்
…களைந்துவிடும் தீமை
இறைவனின் கோபம்
….இவர்களைஅடையுமா?
விரைவுடன் தீர்ப்பு
…வந்திடவும்; மடிவர்
இறுதிநாள் வருகைக்கு
….இக்கொடுமை ஒருசான்றா?
உறுதியாய்க் கொடுமைக்கு
…உள்ளமெலாம் உருகாதா?
கொத்துக் கொலைகண்டு
…குழந்தைகள் நிலைகண்டு
கத்தும் கடல்கூட
…கதறுமே பழிதீர்க்க
தீர்ப்புநாள் வராதென்று
….தீதைச் செய்தாயோ?
யார்க்குமே அடங்காத
…யுத்தப் பித்தனே
அர்ஷில் எட்டும்
….அலறல் சத்தம்
குர்ஸி தட்டும்
…குழந்தை ரத்தம்
பாதிக்கப் பட்ட
…பள்ளியும் மக்களும்
நீதிக்கு முன்பு
…நிற்கின்ற வேளை
கூட்டுச் சதியால்
..கூடிக் குலாவி
வேட்டு வெடித்தல்
..வேடிக் கையே!
பொய்நாக் கூட்டம்
…புரிய வில்லையா?
ஐநா சபையோர்
…அறிய வில்லையா?
பிரிவினை கேட்டனரா?
பிரியமுடன் நடந்தனரா?
எரியுமுன் கோபமதில்
இழந்ததுவுன் பகுத்தறிவே!
“கவியன்பன்” கலாம்
—
KALAM
“ABUDHABI , UAE
http://www.kalaamkathir.com
http://gardenofpoem.blogspot.ae/
அருமை….. உம்மை நினைத்து நான் கொள்கிறேன் பெருமை….திரும்ப திரும்ப வாசிச்சின்டே இருக்கணும்போல இருக்கு.
கவியனுக்கே உள்ள வேகம், கவியனுக்கே உள்ள கோபம், கவிதை இறுதியிலே கொடுத்தார் ஒரு அடி அப்பாடா இதுதான் அவர்களுக்கு நல்ல வெடி. அஸ்மின் எங்கள் வேதனைகள் இப்படித்தான் நச்சென்று பதியப் படவேண்டும். தமிழ் பேசும் மக்கள் மத்தியில் துட்டத்தனமான தன்மானமற்ற அரசியல் நடத்தும் பலரையும் அம்பலப் படுத்தி இருக்கலாம். அளுத்கம உட்டபட்ட மற்ற இடங்களில் நடந்த அநியாயங்களில் அரசை காப்பாற்ற எழுந்த டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதை பருக்கினால் மனித உணர்வு வரும்? இலங்கை புலனாய்வு பிரிவுகளுடன் சேர்ந்து எப்படி வடக்கு கிழக்கில் தமிழ் முஸ்லிம் கலவரத்தை தூண்டி இப்போது (எப்போதும்) இலங்கை அரசுக்கு எழுந்திருக்கும் அவப் பெயரை நீக்க முடியும் என சதா சிந்திக்கும் டக்கர் மாமா உள்ளிட்ட சிலருக்கு எதை பருக்கினால் மனிதமும் மனிதாபிமானமும் வரும்?
“‘வட்டரக்க விஜித தேரர்’
‘பாலித தேவர பெரும-உங்க
சிறுநீர் கொஞ்சம் கொடுங்க-எங்க
சிரங்குகள் வாயில் பருக்க..“
இந்த வரிகள் கொஞ்சம் வலிக்கிறது.
உறைக்கட்டும் காவடிதூக்கும் அரசியல் வாதிகளுக்கு
வேதனை வேதனை