இலங்கையில் இவ்வருடத்திற்கான க.பொ.த.உயர் தர பரீட்சை பெறுபேறு பல்வேறு குலறுபடிகளுக்கு மத்தியிலும், காலதாமதமாகவும் வெளியிடப்படுள்ள அதேவேளை மாணவர்கள் கல்வியியலாளர்கள், ஆசிரிய தொழிற்சங்கங்கள் மாணவர் அமைப்புக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகத்தினையும், எதிர்ப்பினையும் தோற்றுவித்துள்ளது.
அத்தோடு பரீட்சை நடைபெற்ற காலப்பகுதியில் இலங்கையின் பல பிரதேசங்களிலும் பரீட்சை வினாத்தாள் வெளியாகியிருந்தமை பத்திரிகை, தொலைக்காட்சி, வானொலி வாயிலாக அறியக்கூடியதாக இருந்தது.
இவ்வாறான செயற்பாடுகள் பரீட்சை முறைமையின் தேவையையும், அதன் பக்கம் சாராத தன்மையையும் கேள்விக்குட்படுத்துவதுடன் நன்கு கற்ககூடிய வரிய மாணவர்களை பாதிக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. பரீட்சை வினாக்கள் பற்றி முன்னமே அறிவதாயின் பரீட்சை முறை ஒன்று தேவையில்லை. அதேப்போல பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டின் போது வலைந்து கொடுக்காத தன்மை காணப்பட்டதாகவும், அதிகம் எழுதியோர் புள்ளி குறைக்கப்பட்டதாகவும் அறிகிறோம். இது மிகவும் மோசமான நடவடிக்கை என்பதுடன்; இவ்வாறு செயற்படுவதன் மூலம் மாணவர் சிந்தனை முடக்கப்படும.; இவ்வாறான மதிப்பீடுகளுக்கு இயந்திரங்கள் போதும் ஆசிரியர்கள் தேவையில்லை. கடந்த வருடம் G.C.E (O/L) மாணவர் சித்தி உலக வங்கிக்கு ஓர் பூச்சாண்டி விளையாட்டு A, B, C, S தரத்திற்கான புள்ளி குறைக்கப்பட்டது. அதிகமானோர் சித்தியாளர்களாயினர். கடந்த A/L பரீட்சையில் பதவியிலுள்ளோர் வாரிசுகளை பல்கலைக்கழகம் செல்லவைப்பதற்காகவே புள்ளி குறைக்கப்பட்டு பல்கலைகழகம் நுழையும் மாணவர் தொகை கூட்டப்பட்டது. இது அரசாங்கத்தின் சூழ்ச்சி.
இவ்வாறான நடவடிக்கைகள் இலங்கையில் கல்வித்தரத்தினை கேள்விக்குட்படுத்தும். இந்த A/L பரீட்சை பெறுபேற்றை தனியார் பல்கலைக்கழகத்துடன் சேர்த்து பார்த்தால், சித்தியடையாத திறமைப்படைத்த, பணம்படைத்தோர், தனியார் பல்கலைகழகத்துக்கு செல்வர். செல்ல வைக்கும் ஓர் ஏற்பாடே இது இதையே Constructive Failure என்பார்கள், வேண்டுமென்றே சிறந்த திறமைசாலி மாணவர்களை தோற்கடித்து நாடு மந்தமானவர்களை உருவாக்கி சீரழிய இவ்வரசு வழிசமைக்கிறது.
Z.புள்ளியிலும், தேசிய, மாவட்ட மட்டதர நிர்ணயத்திலும் சில குலறுப்படிகள் ஏற்பட்டுள்ளன. இது மட்டுமின்றி விஞ்ஞான பாடம் செய்த ஒருவர் கலைத்துறையில் பெறுபேறு பெறுகிறார். இவ்வாறு விசித்திரங்கள் இந்த பரீட்சையில் நடந்தேறி சாதனை படைத்துள்ளது. இது போலியான ஏமாற்று வேலை. மாணவர் வாழ்வில் அரசு விளையாடும் சில்லறை விளையாட்டை நாம் முற்றாக மறுப்பதுடன் வன்மையாக கண்டிக்கிறோம். ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட தெளிவான, நேர்மையான, இரகசியமான பரீட்சை முறையும், பெறுபேற்று முறையும் தேவை.
பெறுபேற்று கால தாமதம், Z.புள்ளி கணக்கீட்டில் தெளிவின்மையும், பிழையும் என்பன அரசின், அரசாங்க திணைக்களத்தில் வினைத்திறனின்மையை சுட்டிக்காட்டுகிறது. இதனால் – மீண்டும் ஓர் மீள்;- மதிப்பீடு செய்யப்பட வேண்டும். என கோரிக்கை விடுப்பதுடன் இப்பரீட்சை பெறுபேற்றை நாம் ஏற்காமல் – பகிஸ்கரிக்கிறோம்.
பாரதி கலைக்கூடம்
இராகலை.
இயக்குனர்.
எஸ்.மோகனராஜன்
சட்டத்தரணி