தமிழர்களுக்கு எதிரான இனவாதத்தைக் கேரள அரசு தொடர்ச்சியாகத் தூண்டிவருகிறது. முல்லைப்பெரியாறு அணையை உடைக்க எங்களுக்கு அதிகாரம் உள்ளது என்று சுப்ரீம்கோர்ட்டு நியமித்த உயர்மட்ட குழுவில் கேரள அரசு சார்பாக புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முல்லைப்பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு இருக்கிறது. அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையில் உயர்மட்ட குழுவை சுப்ரீம்கோர்ட்டு நியமித்துள்ளது. இந்த குழுவானது விரைவில் அறிக்கையை சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளது. சுப்ரீம்கோர்ட்டும் விரைவில் தீர்ப்பு வழங்க உள்ளது. இந்த நிலையில் உயர்மட்ட குழு முன்பு கேரள அரசு புதுப்புது மனுக்களை தாக்கல் செய்து வருகிறது. முதலில் புதிய அணை கட்ட அனுமதிக்க வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்தது. இரண்டாவதாக அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தது. இதை சுப்ரீம்கோர்ட்டு நிராகரித்துவிட்டது