06.08.2008
ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து மீண்டும் உரிய பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக டெஹ்ரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஐரோப்பிய யூனியன் அயல் உறவு கொள்கை தலைவர் ஜாவியர் சோலனா மற்றும் ஈரான் அணு பேச்சுவார்த்தை குழு தலைவர் ஜலீலி இடையே திங்களன்று பேச்சு வார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தை முற்றுப் பெறாததாகவே உள்ளது என ஐரோப்பிய அயல் உறவு கொள்கை தலை வர் சோலனா அலுவலகம் தரப்பில் தெரி விக்கப்பட்டது.
இந்த பேச்சுவார்த்தை தொடர்புகள் முற்றுப் பெறவில்லை. வரும் நாட்களில் இதுகுறித்து மீண்டும் பேசப்படுவதை மறுக்க முடியாது என ஈரானின் ஜலீலி தெரி வித்ததாக ஒரு செய்தி தொடர்பாளர் கூறினார்.
இந்த தகவல் ஈரான் அரசு டி.வி.யிலும் ஒளிபரப்பப்பட்டது. ஈரானின் ஜலீலி தொடர் பேச்சுவார்த்தை மற்றும் தொடர்பு அவசியம் என தொலைபேசி அழைப்பில் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.
ஈரானின் அணுசக்தி திட்டத்தில் உரிய வழியை காண ஐ.நா. பாதுகாப்பு கவுன்சி லின் நிரந்தர உறுப்பினர் நாடுகளும், ஜெர்மனியும் முயற்சி மேற்கொண்டுள்ளன.
இந்த நாடுகளின் முயற்சிக்கு ஈரான் உரிய பதிலளிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 19-ல் தேதி ஜெனீவாவில் நடந்த கூட்டத்திற்கு பின்னர், ஈரான் பதிலளிக்க 2 வார கால அவகாசம் தரப்பட்டது.