Friday, March 6, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

அணுஉலையை ஆதரிக்கும் வல்லுநர்களின் பொய்யுரைகள் : தொரட்டி

இனியொரு... by இனியொரு...
12/20/2011
in பிரதான பதிவுகள் | Principle posts, புதிய ஜனநாயகம், அரசியல்
0 0
1
Home பிரதான பதிவுகள் | Principle posts

கூடங்குளம் அணு உலை தொடர்பான விவாதம், ‘அணுசக்தி பாதுகாப்பானதா, இல்லையா?’ என்ற சட்டகத்துக்குள்ளேதான் பெரும்பாலும் நடந்து வருகிறது. கூடங்குளம் அணு உலையை நிறுவுவதாக இருக்கட்டும், அணு மின்சாரம்தான் ஒரே மாற்று என்று மன்மோகன் சிங் தற்போது எழுப்பும் கூக்குரலாக இருக்கட்டும், இவை மறுகாலனியாக்க கொள்கைக்கும், பன்னாட்டு முதலாளிகளின் கொள்ளைக்கும் ஏற்ப நமது நாட்டின் மீதும் மக்களின் மீதும் திணிக்கப்பட்ட முடிவுகள். இந்த உண்மையை மறைத்துவிட்டு, தேசத்தின் மீதும் அறிவியலின் மீதும் உள்ள மாளாக் காதலின் காரணமாகத்தான் இம்முடிவுகள் எடுக்கப்பட்டதைப் போல அரசும் அதிகாரவர்க்கமும் நடிக்கின்றன. இதனை அம்பலப்படுத்துவதுதான் இப்பிரச்சினையில் கேந்திரமானது.

‘ஏன் கூடாது கூடங்குளம் அணுஉலை’ என்ற தலைப்பில் சுவராத் ராஜு, எம்.வி.ரமணா என்ற இரு இயற்பியலாளர்கள் இந்து நாளேட்டில் (12, நவ.) ஒரு கட்டுரை எழுதியிருக்கின்றனர். அறிவியல் தொழில்நுட்ப ரீதியான கேள்விகளுக்குப் பின், அறிவியல் தெரியாத பாமர மக்களின் சார்பில் இறுதியாக அவர்கள் எழுப்பியிருக்கும் ஒரு கேள்வி முக்கியமானது. “கூடங்குளம் உலை அத்தனை பாதுகாப்பானதென்றால், ‘கூடங்குளம் அணு உலையில் விபத்து ஏற்பட்டால் அதனைத் தயாரித்த ரசிய நிறுவனம் சல்லிக்காசு கூட இழப்பீடு தரவேண்டாம்’ என்று இந்தியரசிய ஒப்பந்தத்தின் 13ஆவது ஷரத்து கூறுகிறதே, அது ஏன்?” என்று அவர்கள் கேட்டிருக்கிறார்கள்.

விற்பனை செய்யப்பட்ட ஒரு பொருளில் உற்பத்தி சார்ந்த குறைபாடு (manufacturing defect) இருந்து அதனால் பாதிப்பு ஏற்பட்டால், உற்பத்தி செய்த நிறுவனத்திடம் இழப்பீடு கோருவதென்பது மிகச் சாதாரணமான நுகர்வோர் உரிமை. மின்விசிறி முதல் விமானம் வரை எல்லாப் பொருட்கள் விசயத்திலும் உள்ள இந்த உரிமை அணு உலைக்கு மட்டும் கிடையாதாம். “உற்பத்திக் குறைபாட்டினால் விபத்து நேர்ந்தாலும் கம்பெனி பொறுப்பல்ல” என்ற சட்டத் திருத்தத்தை ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டிருக்கும் அணு உலை பாதுகாப்பு சட்டத்தில் செய்ய வேண்டும் என்று அமெரிக்க, பிரெஞ்சு கம்பெனிகள் நிர்ப்பந்திக்கின்றன. இதனை ஏற்று அச்சட்டத்திற்கு திருத்தமும் கொண்டு வந்திருக்கிறார் மன்மோகன் சிங். (தி இந்து, நவ.12)

‘விபத்துக்கு வாய்ப்பே இல்லை’ என்று கூறும் பன்னாட்டு முதலாளிகள் இழப்பீடு பற்றி ஏன் அஞ்ச வேண்டும்? ஏனென்றால், அணுஉலை விபத்து சிறியதாக இருந்தாலும் அழிவு போபாலைக் காட்டிலும் பெரியதாக இருக்கும். இழப்பீடு பெரும் தொகையாக இருக்கும். பன்னாட்டு முதலாளிகள் தங்களது இலாபத்தைப் பணயம் வைக்க மாட்டார்களாம். ஆனால், கூடங்குளம் மக்களை உயிரைப் பணயம் வைக்கச் சொல்கிறது, அரசு.

இதற்காக விஞ்ஞானிகள், வல்லுநர்கள் என்ற பட்டங்களைச் சுமந்து திரியும் அயோக்கியர்களை அமர்த்தி அணுஉலைக்கு ஆதரவாகக் கூவச் சொல்கிறது. இந்த ‘வல்லுநர்கள்’தான் நாட்டைக் கெடுப்பதில் முன்னோடிகள். சாதாரண பாட்டரி கம்பெனி என்று மக்கள் நம்பிக் கொண்டிருந்த யூனியன் கார்பைடு நிறுவனத்திற்குள் நச்சு வாயுவை உற்பத்தி செய்யத் திட்டம் வகுத்துத் தந்த விஞ்ஞானி, அதற்கு ஒப்புதல் தந்த அதிகாரி, மூச்சுத் திணறி இறந்த மக்களின் சவப்பரிசோதனை அறிக்கையில்கூட தில்லுமுல்லு செய்த மருத்துவர்களென எல்லா அயோக்கியர்களும் ‘வல்லுநர்கள்’தான். ஆபத்தான இரசாயன ஆலைகளுக்கு அனுமதி வழங்குவது முதல் காடுகளை அழித்துச் சுரங்கம் தோண்டச் சுற்றுச்சூழல் அனுமதி தருவது வரை எல்லாப் பித்தலாட்டங்களையும் முதலாளிகளுக்கு செய்து கொடுப்பவர்களும், விவசாயிகளுக்கே தெரியாமல் மரபீனி மாற்றம் செய்யப்பட்ட விதைகளைப் புகுத்தி, விவசாயப் பல்கலைக்கழகங்களைப் பன்னாட்டு நிறுவனங்களின் அடியாள் கழகங்களாக மாற்றி விவசாயிகளின் குடியைக் கெடுப்பதும் விஞ்ஞானிகளும் வல்லுநர்களும்தான்.

விஞ்ஞானத்தை நம்புவது வேறு, விஞ்ஞானிகளை நம்புவதென்பது வேறு. கூடங்குளத்தில் போராடும் மக்களையெல்லாம் பகுத்தறிவற்ற மூடர்கள் போல தனது (தினமணி) கட்டுரையில் சித்தரித்து, ‘கெக்கெக்கே’ என்று சிரிக்கிறார் நெல்லை சு.முத்து என்ற எழுத்தாளர். ஸ்ரீஹரிகோட்டாவில் சூடம் கொளுத்தி ஏவுகணை பத்தவைக்கும் கோமாளிகளுக்கு இவ்வளவு கொழுப்பு தேவையில்லை.

அணுகுண்டுக்கே அல்லேலுயா பாடியவரும், இந்தியஅமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் எனும் அடிமை ஒப்பந்தத்தின் ஆதரவாளரும், தினமலரால் நேர்மையின் இருப்பிடம் என்று போற்றப்படுபவருமான அப்துல் கலாம் கூடங்குளம் மின் நிலையத்துக்குள் இரவு 1.30க்கு நுழைந்து அதிகாலை 4 மணி வரை ஆய்வு நடத்தி விட்டு, ‘கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது’ என்று 40 பக்க அறிக்கையை உடனே வெளியிட்டிருக்கிறார்.
‘கலாம்தான் இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி’ என்று நம்பும் பழ.நெடுமாறனால் கூட, அக்னி ஏவுகணையை விஞ்சும் வேகத்தில் கலாம் தயாரித்திருக்கும் இந்த அறிக்கையை நம்ப முடியவில்லை. ரசிய நிறுவனமான “ஆட்டம் ஸ்ட்ராய் எக்ஸ்போர்ட்” டின் இணையதளத்தில் கம்பெனி விளம்பரத்துக்காக அவர்கள் வெளியிட்டுள்ள விவரங்களையே சுட்டுத் தயாரிக்கப்பட்டிருப்பதுதான் கலாமின் அறிக்கை.

கூடங்குளம் பகுதி நிலநடுக்கத்தாலும் சுனாமியாலும் பாதிக்கப்படாது என்றும், நாகப்பட்டினத்தை 2004இல் தாக்கிய சுனாமி கன்னியாகுமரி மாவட்டத்தைத் தாக்கவில்லை என்றும் கலாம் கூறுகிறார். அரசு புள்ளிவிவரப்படியே கன்னியாகுமரியைத் தாக்கிய சுனாமியால் மாண்டவர்களின் எண்ணிக்கை 808. இப்பகுதியில் இதுகாறும் ஏற்பட்டுள்ள நிலநடுக்கங்கள் குறித்த விவரங்களையும் கூடங்குளம் போராட்டக் குழுவினர் பட்டியலிட்டுள்ளனர். சுனாமியின்போது, குமரிமுனை திருவள்ளுவர் சிலையின் உயரத்துக்கு133 அடிக்கு அலைகள் எழும்பின. ஆனால், கூடங்குளம் உலை 13.5 மீட்டர் (சுமார் 42 அடி) உயரத்தில் இருப்பதால், சுனாமி அலைகள் இதனைத் தாக்காது என்கிறார் கலாம். 133ஐ விட 42 பெரிது என்பது கலாமின் கண்டுபிடிப்பு போலும்!

உலகம் முழுவதும் நடந்துள்ள அணு உலை விபத்துக்கள் இதுவரை ஆறே ஆறுதான் எனவும், இந்தியாவில் இதுவரை ஒன்றுகூட நடைபெறவில்லை என்றும் கூறுகிறார் கலாம். ஆனால், 1947இலிருந்து 2008 வரை உலகெங்கிலும் 76 விபத்துகள் நடந்துள்ளன. இவற்றில் 56 விபத்துகள் 1986இல் செர்நோபில் விபத்துக்குப் பிறகு நடந்தவை.
4, மே 1987இல் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் உலைத்தண்டு சிதைந்து 2 ஆண்டுகள் மூடல். செலவு 300 மில்லியன் டாலர். 10, செப். 1989தாராப்பூர் அயோடின் கசிவு கதிர்வீச்சு 700 மடங்கு. செலவு 78 மில்லியன் டாலர். 3, பிப். 1995 கோட்டா ராஜஸ்தான் ஹீலியம்/கனநீர் கசிவு 2 ஆண்டு மூடல். செலவு 280 மில்லியன் டாலர். 22, அக். 2002 கல்பாக்கம்100 கிலோ சோடியம் (கதிர் வீச்சு) கசிவு. செலவு 30 மில்லியன் டாலர். (பொன்.ஏழுமலை, தினமணி, 24 நவ.) இவை இந்தியாவில் நடந்த சில விபத்துகள். இவற்றில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானோர்; இறந்தவர்கள் பலர்.

மிகப்பெரும் விபத்துகளாக மாறியிருக்க வேண்டியவை, தொழில்நுட்ப வல்லுநர்களின் சமயோசிதத்தால் தடுக்கப்பட்டிருக்கின்றன என்பதே உண்மை. கல்பாக்கம் உள்ளிட்ட எல்லா அணுஉலைகளைச் சுற்றியும் வாழும் மக்கள் கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். காற்றில் கலந்துள்ள கதிரியக்கத்தின் அளவு என்ன என்பதை வேறு யாரும் அளவிடுவதை அரசு அனுமதிப்பதே இல்லை. தேசத்தின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை என்று இவை தடை செய்யப்படுகின்றன.

செர்னோபில் விபத்தில் இறந்தவர்கள் வெறும் 57பேர் மட்டும்தான் எனப் புளுகுகிறார் கலாம். புற்றுநோய் வந்து 70,000 பேர் உயிரிழந்ததாகவும், இன்றும் பல்லாயிரம் பேர் அதன் பாதிப்பினால் புற்றுநோய்க்கு ஆளாகியிருப்பதாகவும் அமெரிக்காவின் நியுயார்க் அகாடமி ஆஃப் சயின்ஸ் கூறுகிறது. உலகெங்கும் உள்ள 136 அணு உலைகளைச் சுற்றி வாழும் மக்கள் மத்தியில் செய்யப்பட்ட மருத்துவ ஆய்வில், அவர்களிடையே புற்றுநோயும், ஊனமும் மிக அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது.

ஃபுகுஷிமா விபத்துக்குப் பின் ரசிய அணுஉலைகளைச் சோதித்த அந்நாட்டு விஞ்ஞானிகள், “நிலநடுக்கம், தீ, வெள்ளத்தை எதிர்கொள்ளும் திறன் நமது உலைகளுக்கு இல்லை” என்று அந்நாட்டு அரசுக்கு அறிக்கை கொடுத்துள்ளனர். கலாமோ கூடங்குளம் உலை 100 சதவீதம் பாதுகாப்பானது என்று கூறுகிறார். இந்த விசயத்தில் அணுசக்தித் துறை தலைவர் முகர்ஜியை, கலாமுக்கே அண்ணன் என்று சொல்லலாம். ஃபுகுஷிமா விபத்து பற்றி தொலைக்காட்சியில் செய்தி வந்த மறுகணமே, “இது விபத்தல்ல, ஜப்பானிய விஞ்ஞானிகள் சோதனை செய்கிறார்கள்” என்று இவர் இந்தியாவிலிருந்து அறிக்கை விட்டார். இதனைக் கேட்டு ஜப்பானிய விஞ்ஞானிகளே வெலவெலத்து விட்டனர்.

கலாம், முகர்ஜி போன்ற வல்லுநர்களின் பொய்களுக்கு மறுப்பெழுத பக்கங்கள் போதாது. கலாமின் பொய்களைக் காட்டிலும் கீழ்த்தரமானது, அவர் கூடங்குளம் மக்களுக்கு சிபாரிசு செய்திருக்கும் பத்து அம்சத் திட்டம். “கூடங்குளத்தில் மருத்துவமனை, சாலை, தொழிற்சாலை, பள்ளி, விளையாட்டு மைதானம், 200 கோடிக்கு வளர்ச்சித் திட்டம் ” என்று பயாஸ்கோப் காட்டுகிறார் கலாம். ஓட்டை விலை பேசுவதையும், ஒரு பெண்ணின் மானத்தை விலை பேசுவதையும் விடக் கேவலமாக மக்களின் உயிரை விலை பேசுகிறார் இந்த ‘விஞ்ஞானி’. கூடவே, கூடங்குளம் உலைக்கு தண்ணீர் கொண்டுவரும் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக, பேச்சிப்பாறை அணையிலிருந்து குடிநீர் கொண்டுவர வேண்டும் என்று கூறி இரு மாவட்ட மக்களுக்கும் சிண்டு முடிகிறார்.

அணுசக்தியை ஆதரிக்கும் அனைவரும் இதன் உற்பத்தி செலவு மற்றெல்லாவற்றையும் விடக் குறைவானது, சுற்றுச் சூழலை மாசுபடுத்தாதது என்றும் கூறுகின்றனர். ஆடு கால்பணம், சுமை கூலி முக்கால்பணம் என்பதுதான் அணுசக்தி. உற்பத்திச்செலவு குறைவு. அணுக்கழிவைப் பராமரிக்கும் செலவு அதிகம். அணு உலை 30 ஆண்டுகளில் மூடப்பட்டு விடும். அது தோற்றுவித்த கழிவின் கதிர்வீச்சு 25,000 ஆண்டுகள் நீடிக்கும். அதனைப் பாதுகாக்க பல்லாயிரம் கோடி செலவு. இதுதான் சுற்றுச்சூழலுக்கும் எதிர்கால சந்ததிக்கும் அணுஉலை விட்டுச்செல்லும் பரிசு.

கூடங்குளம் உலையின் அணுக்கழிவுகள் ரசியாவுக்குக் கொண்டு செல்லப்படும் என்று முதலில் ஒப்பந்தம் போடப்பட்டது. பின்னர், அது கூடங்குளத்திலேயே மறுசுழற்சி செய்யப்படும் என்றார் கூடங்குளம் உலையின் இயக்குநர் காசிநாத் பாலாஜி. கழிவைப் பாதுகாப்பாக ரயில் மூலம் வேறு இடத்துக்கு கொண்டு போய் விடுவோம் என்றது அணுசக்தித் துறை. அக். 7 அன்று பிரதமரைச் சந்தித்தபோது அணுக்கழிவை ஒரு சிறிய கண்ணாடிப் பந்துக்குள் உருக்கி அடைத்து விடுவோம் என்று சொல்லியிருக்கிறார் எஸ்.கே.ஜெயின். பயன்படுத்தப்படும் யுரேனியத்தில் 25% கழிவாகத் தங்கும் என்கிறார் அப்துல் கலாம். இரண்டு வாரங்களுக்குள் இத்தனை முரண்பட்ட பதில்கள் தரப்பட்டதாக அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் அம்பலப்படுத்துகிறார்.

இந்த அணுக்கழிவிலிருந்துதான் அணு ஆயுதம் தயாரிக்கப்படுகிறது என்பதால், இது தேசப் பாதுகாப்பு இரகசியமாகிவிட்டது. இது பற்றி நம் நாட்டு மக்களுக்கு கூற மறுக்கும் அரசு, இதே விவரத்தை ஆண்டுதோறும் அமெரிக்காவுக்கு எழுதிக் கொடுக்கவும், அமெரிக்காவின் அடியாளான சர்வதேச அணுசக்தி முகமை இந்திய அணுஉலைகளைச் சோதனையிடவும் அனுமதிப்பதாக ஏற்றுக் கொண்டிருக்கிறது.

கூடங்குளம் மக்களுக்கு விளக்கமளிப்பதற்காக மத்திய அரசு அனுப்பி வைத்த வல்லுநர் குழுவிடம் 49 கேள்விகளைப் போராட்டக் குழுவினர் கொடுத்திருக்கின்றனர். அவற்றுக்கு வெளிப்படையாக பதிலளிக்காமல், “இந்தக் கேள்விகளையெல்லாம் உங்களுக்கு யார் தயாரித்துக் கொடுத்தார்கள்?” என்று எதிர்க்கேள்வி எழுப்பியிருக்கிறது வல்லுநர் குழு. (http://www.dianuke.org/koodan kulamudayakumar)

இந்திய அரசின் இந்த அணுஉலைக் காதல் எப்போது உருவானது? இரான்இந்தியா எரிவாயுக் குழாய் திட்டம் கையெழுத்தாகவிருந்த சூழ்நிலையில், 2005 இல் இந்தியாவுக்கு வந்த அமெரிக்க வெளியுறவு செயலர் கண்டலிசா ரைஸ், “இரானுடன் சகவாசம் வேண்டாம். அமெரிக்காவிலிருந்து அணுஉலை தருகிறோம், அணுசக்திதான் சுற்றுச்சூழலுக்கு நல்லது” என்று அறிவுரை கூறினார். “அப்படியிருக்கும்போது 30 ஆண்டுகளாக அமெரிக்காவில் ஏன் ஒரு அணுஉலை கூட அமைக்கவில்லை?” என்று அந்த அம்மையாரை மன்மோகன் கேட்கவில்லை.

2050ஆம் ஆண்டுக்குள் ஆயிரம் மெகாவாட் திறனுள்ள 208 உலைகளை நாம் சுயசார்பாக அமைக்க முடியும் என்றும் யாரையும் சார்ந்திருக்கத் தேவையில்லை என்றும் 2004இல் இந்திய அணுசக்தி துறை கூறியது. 2005இல் அமெரிக்காவின் உபதேசத்தைக் கேட்டபின், “அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போடாவிட்டால் ஒரு அணு உலைகூட இயங்க முடியாது” என்று பல்டியடித்தார் மன்மோகன். இப்போது, 2050க்குள் 1000 மெகாவாட் திறனுள்ள 655 உலைகளை அமைத்து, 6.5 லட்சம் மெகாவாட் அணுமின்சாரத்தை உற்பத்தி செய்யப்போவதாகப் பேசியிருக்கிறார் மன்மோகன். அதாவது இந்தியாவின் 3000 கி.மீ. நீளக் கடற்கரையில் 55 கி.மீட்டருக்கு ஒரு அணுஉலை! (டாக்டர்.கோபாலகிருஷ்ணன், முன்னாள் தலைவர், அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம், ஈச்டிடூதூ Nஞுதீண் ச்ணஞீ அணச்டூதூண்டிண், அணீணூடிடூ 4, 2011) பேரழிவுக்கு இதைக் காட்டிலும் குறுக்கு வழி உண்டா?

ஜெர்மனி அணு உலைகளை மூடுகிறது. பிரான்சும் ஜப்பானும் குறைக்கின்றன. இந்தியா அதிகரிக்கிறது. இந்தியாவில் தயாரிக்கப்படும் உலைகளைப் போல 4 மடங்கு விலையில் இவை அமெரிக்க, பிரெஞ்சு கம்பெனிகளிடமிருந்து இறக்குமதி செய்யப்படுவதாகச் சொல்கிறார், கோபாலகிருஷ்ணன்.

வால்மார்ட்டுக்காக சிறுவணிகர்களை அழிப்பதையும், போஸ்கோவுக்காக காடுகளை அழிப்பதையும் முன்னேற்றம் என்று சொல்வதைப் போலத்தான், அணு உலைக்காக மக்களை அழிப்பதையும், அணுஉலைகளை இறக்குமதி செய்து உள்நாட்டு அணுஅறிவியலை அழிப்பதையும் முன்னேற்றம் என்கிறார் மன்மோகன் சிங். “அணு உலை வேண்டாமென்பவர்கள் மின்சாரம் வேண்டாமென்று சொல்வார்களா?” என்று மிரட்டுகிறார்கள் கலாம் ரசிகர்கள். மின்சாரத்தைப் போற்றுவதற்காக உயர்அழுத்த மின்கம்பியை முத்தமிடவா முடியும்?
மக்களை மரணத்தின் விளிம்பில் நிறுத்தியாவது உற்பத்தி செய்தே ஆகவேண்டிய இந்த மின்சாரத்தால் பயனடைபவர்கள் யார்? “1995 இல் இந்தியாவின் மின் உற்பத்தித் திறன் 81,000 மெகாவாட். அப்போது 52% கிராமங்களுக்கு மின்வசதி கிடையாது. இன்று உற்பத்தித்திறன் 1.82 லட்சம் மெகாவாட். இன்றும் 42% கிராமங்கள் இருட்டில்தான் உள்ளன” (இந்தியா டுடே, நவ.30, 2011) சிறு நகரங்களும் சிறு தொழில்களும் மின்வெட்டால் மடிந்து கொண்டிருக்கின்றன. பெருநகரங்களில் பன்னாட்டு நிறுவனங்களின் தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், நுழைவாயில் முதல் கக்கூசு வரை குளிர்சாதன வசதி செய்யப்பட்ட ஷாப்பிங் மால்கள், நட்சத்திர விடுதிகள், பணக்காரர்களின் வீடுகள் ஆகியவற்றுக்குத்தான் தடையற்று மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. உன்னுடைய முன்னேற்றத்துக்காகவும், ஆதாயத்துக்காவும், சொகுசுக்காகவும் நாங்கள் ஏன் அழியவேண்டும் என்பதுதான் நம்முடைய கேள்வி.

கடைசியாக, “அறிவியலுக்காக மேரி க்யூரி தியாகம் செய்யவில்லையா?” என்று கேட்டிருக்கிறார் கலாம். அவருடைய வாதத்தின்படி போபாலில் கொல்லப்பட்ட மக்கள் வேதியியலின் முன்னேற்றத்துக்காகத் தியாகம் செய்தவர்கள். ஹிரோஷிமாவில் கொல்லப்பட்ட மக்கள் அணு விஞ்ஞானத்தின் முன்னேற்றத்துக்காக உயிர் கொடுத்த தியாகிகள்!

அப்படியானால், குண்டு வீசியவர்கள்? அவர்களை விஞ்ஞானிகள் என்று யாரும் அழைத்ததில்லை. எனினும், அப்துல் கலாம் விஞ்ஞானி என்றுதான் அழைக்கப்படுகிறார். இடக்கரடக்கலாக இருக்கக்கூடும்!

நன்றி : புதியஜனநாயகம்

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

ஐக்கிய தேசியக் கட்சிக்கு சரியான முடிவைக் கொடுத்திருப்பேன் : நிழல் உலக அமைச்சர்

Comments 1

  1. thurai ilamurugu says:
    14 years ago

    கூடங்குளம் அணுமின் நிலையம் பற்றிய செய்திகளில் பழமைவாதிகள், மதத்தலைவர்களுடன் ஒன்றுபட்டு குரல் கொடுப்பதில் வியப்பில்லை. ஆனால் பெரியார்வாதிகளும் வாழும் பெரியாரான வே.ஆனைமுத்து போன்றவர்களும் மற்றும் சில “மார்க்சியவதிகளூம்”அறிவியல் செய்திகளுக்கு எதிராக மதவாதிகளுடன் சேர்ந்து குரல் கொடுக்கும் போதுதான் வேதனையாய் இருக்கிறது. ‘கூடங்குளம்’ எதிர்ப்பு குழுவினரின் வாதத்தில் உள்ள கருத்துகளுக்கு மட்டும் இக்கட்டுரையில் பதில் சொல்ல விழைகிறோம்.

    அதற்கு முன்னால் இரண்டு செய்திகளை நோக்குவோம். ஒருவர் கல்பாக்கம் அணுமின் நிலையம் 25 வருடங்களாக இயங்குகிறதே அதனால் விளைந்த தீமை என்ன? என்று பொருத்தமான கேள்வி கேட்டுள்ளார். அதற்கு முத்துக்குட்டி குழப்பமான பதிலை அளித்துள்ளார். உண்மையான பதில் இதோ. கல்பாக்கத்தில் அருகே உள்ள கிராமங்களில் வசிக்கும் மக்களிடம் மரபணு .திரிபு. காரணமாக தோன்றும் நோய்கள் அதிகரித்துள்ளன என்ற வாதம் ஒன்று வைக்கப்படுகிறது. மருத்துவர் புகழேந்தி அவர்கள் (இவர் ஒரு அல்லோபதி, M.D.மருத்துவர்.) இக்கருத்தினை முன்வைக்கிறார். ஆனால் இது முறையான ஆய்வின் அடிப்படையில் எழுந்த அறிவியல் முடிவல்ல. அகவயப்பட்ட சிந்தனையின் காரணமாக எழுந்த முடிவு. அங்கு காணப்படும் மரபணு சார்ந்த நோய்களின் விழுக்காடு மற்ற உள்ள மக்களிடத்தில் காணப்படும் விழுக்காட்டினை விட அதிகமாக வேறுபடவில்லை. மேலும் 25 ஆண்டுகள் என்பது ஒரு பெரிய செய்தி அல்ல…….. 30 ஆண்டுகள் என்பதே ஒருதலை முறையாகக் கருதப்படுகிறது. எனவே இன்னும் ஒரு 50 ஆண்டுகள் கழித்துதான் இது பற்றிய முடிவிற்கு வரமுடியும். இதுவரையில் கிடைத்துள்ள ஆய்வுகளின் படி நோய்களின் எண்ணிக்கை விழுக்காட்டு அடிப்படையில் அதிகமாக உள்ளது. என்பது பொருந்தாத கூற்றாகும்.

    மேலும் அவர் மற்ற நாடுகளுடன் என்ன செய்கின்றன என்று கேட்டுள்ளார். அதற்கும் முத்துக்குட்டி தவறான தகவல்கள் அளித்துள்ளார். கூடங்குளம் போன்ற அணுமின் நிலையங்கள் அமைத்துக் கொண்டிருக்கும் நாடுகளின் பட்டியல்
    அமெரிக்கா 20 அணுஆலைகள்கட்டதிட்டமிட்டுள்ளது
    ருச்சியா 9அணுஆலைகள்கட்டிக்கொண்டு இருக்கிறது
    பிரான்சு 2
    இங்கிலாந்து 4
    சப்பான் 54 அணுஆலைகள் உள்ளன. அதில் 43 அலைகள் சுனாமி மற்றும் நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்டன. ஆனால் மற்ற 11அணுஆலைகள்தொடர்ந்து செயல் பட்டு வருகின்றன பாதிக்கப்பட்டாணுஆலைகள் செப்பனிடப,ட்டு வருகின்றன
    ஒரு ஆலை கூட நிரந்தரமாகமுடப்படவில்லை
    1. சீனம்- 13 ஆலைகள்
    2. பாகிஸ்தாந் 4 ஆலைகள்
    3. இந்தோனேசியா- 4 ஆலைகள்
    4. பர்மா, மலேசியா போன்ற நாடுகளும் இவற்றை அமைத்து வருகின்றன.

    1 நாம் கூடங்குளம் அணுமின் எதிர்ப்பாளர்கள் ஒரே மதத்தை சேர்ந்தவர்கள். அதனால் தான் இத்தனை நாட்கள் போராட்டம் நடத்த முடிகிறது.
    2. மாநில அரசின் உதவி அதற்கு உண்டு. மத்திய அரசுடன் தனக்கு உள்ள பகையை தீர்த்துக் கொள்வதற்கு முதல்வர் செயலலிதா கூடங்குளம் அணுமின் நிலையத்தின் எதிர்ப்புக்….. குழுவினரை ஒரு பகடைக்காயாகப் பயன்படுத்துகிறார். கணக்கு தீர்க்கப்பட்ட உடன் அவர் மாறிவிடுவார்.

    3. தலைக்கு 500 ரூ கொடுத்து அழைத்து வரப்படுகிறது.

    4. உதயகுமார். குழுவினர் வெளி நாட்டு சக்திகளின் ஏவலர்கள். அவர்களுக்கு நிதி உதவி மேலை நாடுகளில் இருந்து வருகிறது போன்ற செய்திகளுக்குள் செல்ல முடியவில்லை.

    அவர்கள் தூய தேசபக்தர்களாகவும் தமிழ் தேசியவாதிகளாகவும் இருக்கட்டும். ஆனால் கூடங்குளம் அணுமின் நிலையமே தமிழர்களைப் படுகொலை செய்வதற்காக அமைக்கப்படுகிறது என்ற வாதம் நகைச்சுவையாக இல்லை.??
    அப்படி என்றால் கல்பாக்கம் சென்னையை அழிப்பதற்காகவும் தாராப்புரில் மராட்டியத்தை அழிப்பதற்காகவும் (50 ஆண்டுகள் முன் நிறுவப்பட்ட அமைக்கப்பட்டவையா)
    ராஜஸ்தானத்து பொக்ரான் பாலைவனத்தில் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது. ராஜஸ்தானிய மக்களை அழிப்பதற்காக!! தமிழ்த் தேசியம் வளர்ப்பதற்கும் அதற்காக பரப்புரை செய்வதற்கும் ஒரு எல்லை உண்டு. இது போன்ற வாதங்கள் அதற்கு உதவி செய்வதற்கு பதில் தீமையே செய்யும்.

    மேலும் கூடங்குளம் அணுமின் நிலையம் முல்லைப் பெரியாறு சிக்கலுக்கும் ஒரு அடிப்படையான ஒற்றுமை உண்டு. இரண்டு அகவயப்பட்ட சிந்தனையில் இருந்து எழுவன. புற நிலைச் சான்றுகளாக எவ்வளவு காட்டப்பட்டாலும் நிபுணர்கள் அறிஞர்கள் ஆய்வாளர்கள் எவ்வளவு சொன்னாலும் கேட்கமாட்டோம். எங்களுக்கு வேண்டாம். அதை எடுத்து விடுங்கள் என்றூதயகுமார். கூட்டம் கூறுகிறது. .உம்மன் சாண்டி…………… முல்லைப் பெரியாறு அணை உறுதியாக இருக்கிறது என்று எந்த கொம்பன் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளமாட்டேன். எங்களுக்கு மக்கள் உயிர் முக்கியம். எனவே அணையை இடித்து புதிய அணையைக் கட்டியே தீருவோம் என்கிறார். இரண்டிற்கும் என்ன வேறுபாடு? தெரிந்தவர்கள் விளக்கவும். இரண்டும் மக்களிடம் அச்ச உணர்வை கிளப்பி அறிவியலை மறுத்து செய்யப்படும் வாதங்களாகும். பெரியார் கருத்தடை முதல் சோதனைக் குழாய் குழந்தை வரை அனைத்தையும் வரவேற்றார் அவர். ஆனால் பெரியார் பெயரிலான இயக்கங்கள் நடத்துபவர்களும் பெரியார் வாதிகளும் அறிவியலை மறுத்து அகவயப்பட்ட சிந்தனையில் மூழ்கி நடுவண் அரசை தாக்குவதற்காக கூடங்குளம் சிக்கலை ஆதரிக்கின்றனர். நடுவண் அரசை நாடுவதற்கு வேறு பல செய்திகள் உள்ளன. அவற்றையெல்லாம் விட்டுவிட்டு கூடங்குளம் சிக்கலை கையில் எடுப்பது சரியன்று.

    உதயகுமார்.. குழுவினரின் சில வாதங்களைப் பார்ப்போம்.

    1. அணுமின் நிலையம் அமைப்பதே தவறு. அதை அனல் மின் நிலையங்களாக மாற்றுக.

    ஏன்? அனல் மின் நிலையம் சுற்றுச் சூழலை மாசுபடுத்தாதா?. அணுமின் நிலையம் அமைந்துள்ள சுற்றுச் சூழலிலும் அதிலிருந்து தொலைதூரத்தில் உள்ள இடங்களிலும் உள்ள கதிரியக்கம் ஒரே அளவாகத்தானே உள்ளது. அப்படி இருக்க கெடுதல் எப்படி ஏற்படும்.?

    2. நாங்கள் எங்களுடைய மின்சார தேவைக்கு வைத்துக் கொள்கிறோம். குண்டு விளக்கு, குழல் விளக்குக்கு பதிலாகவளை விளக்குகளைப் பயன்படுத்துகிறோம். (CFC) நல்லது நண்பரே அப்படியே உங்கள் வீட்டில் உள்ள மின்விசிறிகள், தொலைக்காட்சிப் பெட்டிகள், குளிர்சாதன கருவிகள், ஆயர்கள் வீட்டில் உள்ள மற்ற சாதனங்கள் நீர் இறைக்கும் பம்புகள் இவற்றையும் விட்டு வாழுங்கள். தற்காலத்தை நோக்கிய பயணத்தை உடனே தொடங்குங்கள். இதுவரை அணுமின் நிலையமே சுற்று சுழலை அதிக அளவில் மாசுபடுத்தாமல் மின் உற்பத்தி செய்யும் வழி என்பது உலகம் ஒப்பிய அறிவியல் உண்மையாகும். ஆனால் இவர்களோ உண்மையை தலைகீழாக நிற்க வைக்கிறார்கள்.

    எனவே அணுமின் நிலையம் அமைப்பதினாலேயே அந்த இடம் கெட்டுப் போவதில்லை. கல்பாக்கம் கெடவில்லை. தாராப்பூர் இன்று ஒரு பெரிய நகரமாக சுற்றிலும் சிறிய பெரிய தொழிற்சாலைகளைக் கொண்ட நகரமாக வளர்ந்து இருக்கிறது. இந்த வாதத்தை நாம் முன்வைத்தால் உடனே அவர்கள் அணுமின் நிலையம் இருந்து அதை கடல் தாக்கினால் சுனாமி ஏற்பட்டால் என்ன செய்வது. அப்போது அணுக்கதிர்கள் வெளியே வந்து மக்களைக் கொன்றுவிடும். அணுக்கதிர் பலகாலம் நீடித்திருக்கும். பின்வரும் தலைமுறைகளை நோயாளிகளாக ஆக்கிவிடும். எனவே அது எங்களுக்கு தேவையில்லை. எடுத்துக்கொண்டு போ என்கிறார்கள். அதாவது விபத்து ஏற்பட்டால் பாதிப்பு ஏற்படும். எனவே வேண்டாம் என்கிறார்கள் அது செல்க. உம்மன் சாண்டி என்ன சொல்கிறார்.? முல்லைப் பெரியார் அணை பலமாகவே இருக்கட்டும் பெரிய நில நடுக்கம் வந்தால் உடையாது என்று கூற முடியும?. இல்லை பெரிய நில நடுக்கம் வராது என்று 100% உறுதி அளிக்க முடியுமா. எனவே எங்களுக்கு காங்கிரீட் அணைதான் வேண்டும்.சுண்ணம்பால் கட்டப்பட்ட அணை 116 பழமையான அணை தேவையில்லை.
    இவர்கள் இவருடைய வாதத்திலும் ஒரு ஒற்றுமை இருப்பதை நடுநிலையாளர்கள் உணர்வார்கள். அதாவது தற்செயல் விபத்து நடந்துவிட்டால் என்ன செய்வது, எனவே வேண்டாம் புதிய அணை வேண்டும்.
    இந்த வகையான வாதத்தை நீட்டிக்கொண்டே போனால் உலகில் எந்த செயலும் செய்ய இயலாது. திருச்சியில் இருப்பவர் மலைக்கோட்டை இடிந்து விழுந்தால் என்ன செய்வது, கன்னியாகுமரியில் இருக்கும் கடல் பொங்கினால் என்ன செய்வது, கடலூரில் இருக்கும் மனிதர்கள் இன்னொரு தானே வந்தால் என்ன செய்வது என்று கேட்டுக்கொண்டே போகலாம். இதற்கு முடிவே கிடையாது. இதற்கு ஒரே பதில் தான் மனித குலம் இதுவரை இயற்கையைக் கண்டு அஞ்சியதில்லை. அதை எதிர்த்து போராடி தன்வயமாக்கி பயன்படுத்தித்தான் வளர்ந்து இருக்கிறது. 10 அணு அலை வெடித்தாலும் ஒரு சுனாமி இந்தோனேசியா முதல் இந்தியா வரையில் ஏற்படுத்திய …பேரழிவை. போல் ஏற்படுத்த இயலுமா? .ஹிரோசிமவில் கூட அப்படி நடக்கவில்லையே.

    முதன்முதலில் தீயைக் கண்டு அஞ்சிய மனிதன் அதை அப்படியே விட்டிருந்தால் என்னவாகியிருக்கும்.? அதை தன்வயப்படுத்தி பயன்படுத்தினான். முன்னேறினான். காவிரியின் நீர்ப்பெருக்கை கண்டு அஞ்சி சோழ நாட்டு மக்கள் ஓடவில்லை. கல்லனையைக் கட்டி நீரை தன் வயப்படுத்தினார்கள். .மேட்டுர்… முதலிய அணைகளும்,.. நெய்வேலி அனல் மின் நிலையமும் அப்படித்தான். இப்பொழுது யாராவது கல்லனையை திடீரென்று உடைத்து விட்டால் மேட்டூர் அணை பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டால் நெய்வேலி நிலக்கரி சுரங்கம் வெடித்து விட்டால் என்று கேள்வி எழுப்பினால் என்ன சொல்வது. சீனாவில் நிலக்கரி சுரங்கங்களில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. அதற்காக நிலக்கரி ..சுரங்கங்களை.. அந்த நாடு …… மூடவில்லையே.

    அணு மின் நிலையம் என்பது சற்று புதிய தொழில் நுட்பம் அதை மனிதன் இப்பொழுதுதான் வயப்படுத்தி வருகிறான். கழிவுகளை என்ன செய்வாய். கையில் எடுத்து செல்வாயா, விமானத்தில் எடுத்து செல்வாயா போன்ற கேள்விகள் கேட்கப்படுகிறது. உலகெங்கும் அணு உலைக் கழிவுகளை எப்படி ..பாதுகாக்கப்படுகின்றனவோ…… அவ்விதமே இங்கும் செய்யப்படும். கூடங்குளம் வேண்டாம் என்று சொல்வதற்கு சிலருக்கு உரிமை இருப்பது போல், வேண்டும் என்று சொல்வதற்கும் உரிமை உண்டு. இது அறிவியல் சார்ந்த செய்தி. இதில் இனம், மொழி இவற்றைப்போட்டு குழப்பிக் கொள்ளக்கூடாது.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...