தமிழகத்திலிருந்து இலங்கைக்கு இறக்குமதிசெய்யப்பட்ட அடையாள அரசில் பாசிச இலங்கை அரசுசார் குழுக்களின் தத்துவமாக முன்வைக்கப்படுகிறது. என்.குணசேகரின் கட்டுரை தனது கட்சிசார்ந்த பிரச்சாரமாக ஒருபுறத்தில் காணப்பட்டாலும் அடையாள அரசியலின் ஆபத்தைத் தெளிவுபடுத்துகிறது என்ற அடிப்படையில் கட்டுரையைப் பதிவுசெய்கிறோம்.
சாதி மறுப்புத் திருமணங்களுக்கு எதிரானப் பிரச்சாரங்கள்,சாதிவெறியைத் தூண்டி வரும் பல முயற்சிகள் என தொடர்ந்து பல நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. தலித் எதிர்ப்பு வெறியை தூண்டி, சாதி ஆதிக்க அணிசேர்க்கையை ஏற்படுத்த பாட்டாளி மக்கள் கட்சித் தலைமை சதி செய்து வரு கிறது. இச்சூழலில் தமிழக அடையாள அர சியல் குறித்த தெளிவான மார்க்சியப் பார்வை தேவைப்படுகிறது.சாதி ஒடுக்குமுறை சக்திகள், தலித் மக் களும் பிற்பட்ட சாதிகளைச் சார்ந்த ஏழை களும், பிரிந்துதான் இருக்க வேண்டுமென்று செயல்படுகின்றனர். ஆனால் அந்த உழைக் கும் மக்கள் ஒன்றுபட்டு நிற்க பல ஆயிரம் கார ணங்கள் உள்ளன. வாழ்விடங்களை இழந்து நகர்ப்புற ஏழைகளாக அவர்களை மாற்றி வரு கின்ற அழித்தொழிப்பினை தாராளமயம் செய்து வருகின்றது.எனவே,ஒன்றுபட்ட செயல்பாடு காலத்தின் கட்டாயமாக உள்ளது. தொடர்ந்து வரும் இன்றைய சாதித் திரட் டல்கள், பல கேள்விகளை மீண்டும் எழுப்பி யுள்ளன. இந்த 21-ம் நூற்றாண்டிலும் சாதி,மத அடிப்படையிலான மூடத்தனங்களும், கொடு மைகளும் ஏன் நீடிக்கின்றன? இவற்றை ஒழிப்பதற்கு என்ன வழி? இக்கேள்விகள் அடையாள அரசியல் குறித்த விவாதத்திற்கு இட்டுச் செல்கின்றன. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் 20-வது மாநாட்டின் அர சியல், தத்துவார்த்த தீர்மானங்கள் சரியான அணுகுமுறையை வழங்குகின்றன
அடையாள அரசியலும் பொருள்முதல்வாதமும்தமிழக அடையாள அரசியலுக்கென்று சில விசேடத் தன்மைகள் உண்டு.இதனை பலர் ஆய்வு செய்துள்ளனர். அவற்றுள் முக் கியமானது, பேராசிரியர் முத்துமோகன் அவர் கள் “தமிழ் அடையாள அரசியலின் இயங்கி யல்” என்ற தனது நூலில், தமிழக அடையாள அரசியலை ஆய்வு செய்து பல கருத்துக்களை முன்வைத்துள்ளார். ஆனால் அவர் இந்தப் பிரச்சனையில் மார்க்சியத்தை பிரயோகிக்கிற முறையில் சில குறைபாடுகள் உள்ளன. இதன் காரணமாக, அவர் வந்தடைந்துள்ள ஆய்வு முடிவுகளிலும் பல விமர்சனங்கள் உள்ளன.அறிவியலாளர் ஜெயராமன் இயக்கவியல் பற்றி குறிப்பிடும் போது, ‘அறிவியல் உலகில் பெரும்பாலும் பொருள்முதல்வாதம் தாக்குத லுக்கு உள்ளாவதில்லை; இயக்கவியலை ஏற்றுக் கொள்ளுவதில்தான் பிரச்னைகள் இருக்கிறது’ என்று கூறுகிறார். ஆனால் தமிழ கத்தில், இன்றைய சமுக நிகழ்வு பற்றிய விவா தங்களில் பொருள்முதல்வாதப் பார்வையே புறக்கணிக்கப்படும் நிலை உள்ளது. மார்க்சிய இயங்கியல் அடிப்படையில் தமிழக அடை யாள அரசியலின் வரலாற்றை ஆராய்வதாக தொடர்ந்து நூல் முழுவதும் பேசுகிறார் பேரா சிரியர் முத்துமோகன். ஆனால், அடையாள இயக்கங்களைப் பற்றி விவாதிக்கும் போது, பல இடங்களில் பொருள்முதல்வாத அணுகு முறையை கைவிடுகிற தவறை செய்கின்றார். அயோத்திதாசர், ஆறுமுகநாவலர், இராம லிங்க வள்ளலார், ஆகியோரின் பங்களிப்புக் களும் திராவிட இயக்கம் உள்ளிட்ட இயக்கங் களும் ‘‘தமிழ் அடையாள மீட்டுருவாக்கம்’’ என்றே அவர் காண்கிறார். இந்த இயக்கங் களின் உருவாக்கத்தில் பொருளாதார உற் பத்தி நிகழ்வுப் போக்குகள் ஏற்படுத்திய தாக் கம் ஆழமாக அலசப்படவில்லை. அப்பட்ட மாக, பொருளியல் வாழ்வுப் பிரச்னைகளைப் பற்றிப் பேசிய வள்ளலாரையும் கூட அடையாள அரசியலில் அடக்க முயல்கிறார் பேராசிரியர்.
வள்ளலார் பற்றி துவக்கத்தில் குறிப்பிடு கிற போது, ‘’இராமலிங்கரின் எல்லாத் தத்து வத்தையும், மானுடப்பசி எனும் அப்பட்டமான உண்மை தாங்கி நிற்கிறது’’ என்கிறார் பேராசி ரியர். .(பக்கம்.148.) ஆனால் கடைசியாக வள்ள லார் பற்றிய ஆய்வை முடிக்கிற போது, “…நவீன தமிழ் அடையாள உருவாக்கத்திற்கான சில வலுவான அடிப்படைகளை வள்ளலார் உருவாகியுள்ளதாக முடிக்கிறார்”. (பக்கம்.153.). வள்ளலார் கருத்துக்களுக்கு பின்னணியாக இருக்கும் காலனிய பொருளாதார சுரண்டலை யும் அது உருவாக்கி, வளர்த்த பசிப் பிணியை யும் அவர் ஆராய முற்படாதது ஏன்? இயங்கியல் முறை:ஒரு சமுகத்தின் இயக்கத்தை முழுமை யாகப் பார்க்க வேண்டும். துண்டு துண்டாக, தொடர்புகள் அற்றவாறு, பார்ப்பது இயங்கியல் முறை ஆகாது. தமிழகத்தில் எழுந்த பல இயக்கங்கள் ஒன்றோடொன்று தாக்கம் செலுத்தின. இந்த பரஸ்பர வினையாற்றுகிற நிகழ்வினை முழுமைத் தன்மையோடு ஆராய்வதுதான் இயக்கவியல் முறை.தமிழகத்தில் எழுந்த பல இயக்கங்களை அடையாள அரசியல் இயக்கங்கள் என்று சொல்லி அவற்றை பேராசிரியர் விளக்குகி றார். ஆனால், காலனியாதிக்கத்தை எதிர்த்து எழுந்த இயக்கத்தை அவர் அதிகம் விவா திக்கவில்லை. ஏனென்றால் இது அடையா ளங்கள் கடந்த, நாடு தழுவிய ஒற்றுமை. சாதி, மத கூட்டுக்களை மீறி எழுந்த விடுதலை இயக்கம் அது. காலனியாதிக்க பொருளாதார சுரண்டல் அதன் முக்கிய உந்து சக்தியாக இருந்தது.
இவ்வாறு எழுந்த ஒற்றுமையை நீர்த்துப் போகச் செய்திடும் தன்மை கொண்டதாக பல அடையாளத் திரட்டல்கள் இருந்தன என்ப தை மிக வசதியாக பேராசிரியர் மறந்துவிடு கிறார். இந்த இயக்கங்களில் சில, ஒடுக்கு முறை எதிர்ப்பு எனும் நல்ல அம்சம் கொண்ட வையாக இருந்தாலும் காலனியாதிக்க எழுச் சியிலிருந்து விலகியதாக இருந்தன என்பது வரலாறு. இதை உணர்வது இன்றைய படிப் பினைகளுக்கு உதவிடும். இன்றைய ஒடுக்கு முறை எதிர்ப்பு இயக்கங்களுக்கு ஏகாதிபத் திய எதிர்ப்பு தேவை என்பதை இந்த வரலாற்று அனுபவத்திலிருந்துதான் உணர்த்த வேண்டும். அதேபோன்று, அன்று காலனியாதிக்க எதிர்ப்பை மேற்கொண்ட சக்திகளில் கம்யூ னிஸ்டுகள்தான் சமுக ஒடுக்குமுறை எதிர்ப்பு வேலைத் திட்டத்தையும் முன்னெ டுத்துச் சென்றனர். காங்கிரஸ் இதில் உறுதி காட்டவில்லை. இதுவும் பதிவு செய்யப்பட வேண்டும். முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ கட்சிகள் அடையாள இயக்கங்களை சுய லாபத்திற்கு பயன்படுத்திக் கொள்வார்களே தவிர அடையாளம் சார்ந்த ஒடுக்குமுறை களை ஒழிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை.
இடதுசாரிகளுக்கு ‘அறிவுரை’நூலின் பல இடங்களில் அவர் வெளிப் படுத்தும் ஒரு கருத்து அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.கடந்த காலங்களில் எழுந்த அடையாள இயக்கங்கள் மேல்மட்டம் சார்ந்த தாக மட்டுமே இருந்ததாகவும், அடித்தள மக் கள் இயக்கங்களாக எழவில்லை என்று கூறி, இனி அடித்தள மக்கள் உள்ளடங்கிய அடை யாள இயக்கங்கள் உருவாக வேண்டும் என்றும் எழுதுகிறார். இந்த வகை அடையாள அரசியலின் மீது அவருக்கு ஏற்பட்ட அதீத உற்சாகத்தினால் இடதுசாரிகளுக்கு கீழ்க் கண்ட அறிவுரையை வழங்குகின்றார்.“இன்று திராவிட அரசியல் முழுச்சிதை வை எட்டி வரும் நிலையில் தமிழ் அடையா ளத்தை கையிலேடுப்பதில் இடதுசாரிகள் முனைப்பு காட்ட வேண்டும்……. சமுக அடித் தள நிலைபாடுகளிலிருந்து கட்டப்பட வேண் டும்”.(பக்கம்.298).மற்றொரு இடத்தில், “பெரியார்-சிங்கார வேலர்-ஜீவா என்ற சந்திப்பின் சிக்கல்கள், வெற்றி, தோல்விகள் ஒருபுறமிருக்க, அச்சந் திப்பின் பொருள் தமிழ் அடையாளம் அடித்தள மக்களை நோக்கி நகரவேண்டும் என்பதா கும். தமிழ் அடையாளம் என்பது சுயமரியாதை யின் குறியீடாக இருந்தால் மட்டும் போதாது, அது சமுக மாற்ற ஆற்றல் கொண்ட ஆயுத மாக மாற வேண்டும் என்பதே அச்சந்திப்பின் பொருளாகும்”. (பக்கம்.220) என்கிறார்.சமுக மாற்றம் உழைப்பாளி மக்களின் வர்க்க ஒற்றுமையால் நிகழும் புரட்சிகர அதி கார மாற்றம் என்பதை அறியாதவரல்ல, பேரா சிரியர். அடையாளம் சார்ந்த அறைகூவல் மேட்டிமை சக்திகளுக்கே பயன்பட்டுள்ளது தமிழக அனுபவம். இன, மொழி, பண்பாட்டு தனித்தன்மைகளில் உள்ள முற்போக்கான கூறுகள், வர்க்க ரீதியான ஒற்றுமை உருவாக பங்களிப்பு செலுத்தும் வல்லமை கொண் டவை என்பதை மார்க்சியம் எப்போதும் மறுத்த தில்லை. ஆனால் பேராசிரியர் காட்டும் வழி தலைகீழானது, இது இலக்கு தவறிய பாதையாக முடியும். குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்குமுறையிலிருந்து நிரந்தர தீர்வு காணும் பாதையை நோக்கி செல்லாது தடுத்திடும். தமிழகத்திலும், ஏனைய மாநிலங்கள் போன்றே, புதிய தாராளமய சூழலில்தான், அடையாள இயக்கங்கள் எழுச்சியாக உரு வெடுத்தன. வட-தென் தமிழகங்களில், தலித் மக்களின் அரசியல் இயக்கங்கள் எழுந்தன. மார்க்சிஸ்ட் கட்சி இந்த எழுச்சிகளை ஆரோக்கியமான போக்காக கருதியது. கடந்த இருபது ஆண்டுகளில் கடுமை யாக அந்த இயக்கங்கள் செயல்பட்டன. எனி னும், அவை,
மாவட்டங்களில் உள்ள தலித் மக்கள் அனைவரையும் முழுமையாகத் திரட் டிய இயக்கங்களாக மாற இயலவில்லை.
இன் னமும் பெரும்பகுதி மக்கள் இந்த அடையாள அரசியல் இயக்கங்களிலிருந்து ஒதுங்கியே உள்ளனர். தேர்தல்களின் போது தமிழகத்தில் உள்ள இரண்டு பிரதானக் கட்சிகளின் வாக் காளர்களாகவே இருந்து வருகின்றனர். இந்த இரு கட்சிகளும் தலித் மக்களின் ஒடுக்கு முறை பிரச்சனைகளையோ, வாழ்வாதாரப் பிரச்சனைகளையோ தீர்க்கவில்லை என்ப தும் தலித் மக்கள் ஓட்டு வங்கிகளாக பயன் படுத்தப்படுகின்றனர் என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று. இருப்பினும், ஏன் அவர்கள் அடையாள இயக்கங்களில் ஆர்வம் காட்ட வில்லை? மிகவும் சரிந்து வரும் தங்களது வாழ்வாதாரத்தை நிலைநிறுத்த ஏன் பிரதான அரசியல் இயக்கங்களை நம்புகின்றனர்? தங்களது பொருளாயத, வாழ்வியல் தேவை களை நிறைவேற்ற அவர்கள் அடையாள அரசியல் பாதையை தேர்ந்தெடுக்கவில்லை. அவர்களிடம், நீங்கள் தேர்ந்தெடுக்க வேண் டிய சரியான பாதை வர்க்க இயக்கங்களின் பாதை எனச் சொல்வதற்கு பேராசிரியர் ஏன் தயங்குகிறார்? அந்த உழைக்கும் மக்கள் அடையாள அரசியலைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டுமா? அடியாள அரசியலின் குறுகிய தளம்‘சாதி,மதம், பாலினம், இனம் எனும் அடையாளம் சார்ந்த திரட்டல்கள் இயல்பா கவே குறுகிய தளம் கொண்டவை; உழைக் கும் மக்களின் ஒற்றுமை என்ற விரிந்த தளம் உருவாகும் நோக்கத்திற்கு இது உதவாது’ என்று இந்த கட்டுரையாசிரியர் “புத்தகம் பேசுது” இதழில் எழுதிய கருத்துக்கும் மறுப்பு தெரிவித்திருக்கிறார் பேராசிரியர்.
அடையாளம் சார்ந்த திரட்டல்கள் இயல் பாகவே குறுகிய தளம் கொண்டவை என்ற வாதத்திற்கு “எப்போதுமே அடையாள அரசி யல் குறுகிய தளம் சார்ந்திருந்தது என்று மதிப் பிட முடியாது” என்கிறார். இதற்கு அவர் கூறும் பல உதாரணங்களில் ஒன்றினை மட்டும் தற்போது விவாதிப்போம். “பிராம்மணரல்லா தோர் என்ற சொல்லாடல் இருபதாம் நூற்றாண் டின் முதல் பத்தாண்டுகளிருந்து பலதரப் பட்ட சமூகப் பகுதியினரை ஒன்றுபடுத்த முயன்றது” என்கிறார் பேராசிரியர். “பிராம் மணரல்லா தோர் சாதியில்லாதோர்களா” என்று அயோத்திதாசர் கேள்வி எழுப்பினார். இந்த இயக்கம் செயல்பட்டு வந்த போதே, அது ஒருங்கிணைத்து வந்த இடைநிலை சாதியினர் தங்களது சாதி அடையாளம் சார்ந்த திரட்டல்களுக்கும் ஆளாகி வந்துள்ளனர். எனவே பிராம்மணரல்லாதோர் இயக்கம் ஒரு ஒற்றை அடையாள இயக்கமாக கருத இய லாது. அப்படியே அதனை அடையாள இயக் கம் என்று எடுத்துக் கொண்டாலும் அது பிரா மணரல்லாதோரில் உயர் தட்டில் இருந்த வசதி படைத்த ஒரு சிறு கூட்டத்தின் நலன் களுக்காகவும், பிராம்மணர் அன்று பெற்றி ருந்த சமுக, நிர்வாக அந்தஸ்தினை தாங்க ளும் பெறுவதற்காகவும் செயல்படும் இயக்க மாக விளங்கியது.
இதே இயல்பு கிட்டத்தட்ட திராவிட இயக்கத்திற்கும் பொருந்துகிறது. இங்கு பிராந்திய முதலாளிகளின் நலன்கள் முதன்மை பெற்றன.எனவே சாதி போன்ற அடையாளங்களை அடிப்படையாகக் கொண்ட திரட்டல்கள் குறுகிய தளம் கொண்டனவாக செயல்பட்டு உழைக்கும் மக்களை பிளவுபடுத்துகின்றன. சிறிது விரிந்த தளமாகத் தோற்றமளிக்கும் இனம் போன்ற அடையாளங்களும் ஒரு மேட் டிமை கூட்டத்தின் நலன்களை பிரதானப் படுத்தின. அந்த வகையில் அவையும் உழைக்கும் மக்களின் விரிந்த தளம் உருவாக தடையாகவே இருந்து வந்துள்ளன. உழைக்கும் வர்க்கங்களை திரட்டும் பணி யில் ஈடுபடும் ஒரு இடதுசாரி இயக்க ஊழியர் அடையாளம் சார்ந்த திரட்டல்கள் இயல் பாகவே குறுகிய தளம் கொண்டவை என்ற புரிதல் கொண்டவராக இருக்க வேண்டும். இந்த புரிதலோடு அடையாள பிரச்னைகளை எடுத்து மக்களை திரட்ட வேண்டும்: ஒரு மக்கள் தங்களது மொழிக்கான முக்கியத்துவம் மறுக்கப்படுகிறது என்கிற போது, அந்த மக்களை மொழி வளர்ச்சிக் கோரிக்கைகளை முன்வைத்து திரட்ட வேண்டும். இப்பணியை மேற்கொள்ளும் இடதுசாரி இயக்க ஊழிய ருக்கு இந்தவகைத் திரட்டல் ஒரு துவக்கம் தான்; முதலாளித்துவ முறைக்கு எதிரான பாதையை நோக்கி அந்த மக்களை கொண்டு செல்வதுதான் முக்கியமானது என்ற அழுத்த மான நோக்கம் இருக்க வேண்டும். இதற்காகத்தான் “புத்தகம் பேசுது” கட்டு ரைக்கு “வர்க்க அரசியலில் அடையாள அரசியலின் தளம்” என்று தலைப்பிட்டிருந் தேன். இதுவும் கூட பேராசிரியருக்கு வருத் தத்தை ஏற்படுத்திவிட்டது. இது அடையாள அரசியலை “உள்ளடக்கும் பண்பு கொண்ட தாகவே உள்ளது” என்கிறார். அத்துடன் “சமுக அரசியல் சக்திகளை கம்யூனிஸ்ட்கள் உள்ளடக்க முயற்சி செய்யக் கூடாது” என்று கண்டிப்பு காட்டுகிறார்.
இதன் அர்த்தம் என்ன? தனித் தனி அடையாளங்களை அடிப்படையாக கொண்ட இயக்கங்கள் அப் படியே இயங்க வேண்டும். அவற்றில் தொழி லாளிகள் இருந்தாலும் வர்க்க இயக்கத்தில் அவர்கள் வர வேண்டியதில்லை; கம்யூ னிஸ்ட்கள் இந்த இயக்கங்களோடு சேர வேண்டும் அப்படி சேர்ந்தாலும் தொழிலாளர் களை வர்க்க இயக்கத்தில் கொண்டு வர முயற்சிக்கக் கூடாது; அப்படிச் செய்வது ‘உள்ளடக்கும் முயற்சி’. இதையே தான் அடையாள அரசியலும் விரும்புகிறது. வர்க்க அடிப்படையில் திரள்வ தற்கு பதிலாக அடையாளம் சார்ந்து தனி தனிக் கூறுகளாக மக்கள் திரள வேண்டும் என்பதும், இதன் மூலம் சோஷலிச வேலைத் திட்டம் கைவிடப்பட வேண்டும் என்பதும் பின்நவீனத்துவம் எனும் பெயரில் வலியுறுத் தப்படும் கருத்துக்கள். மார்க்சியத்தை கற்ற றிந்த தோழர் முத்துமோகன் இந்த வலையில் சிக்க வேண்டுமா? உலக அனுபவம்பின் நவீனத்துவம் பற்றி பேராசிரியர் ஏராளமாக அலசுகிறார். ஆனால் கடந்த அரை நூற்றாண்டுக்குப் பிறகு அது ஏற்படுத்திய பாதிப்புக்களை உரியவாறு விளக்கவில்லை.
அத்தகைய ஆய்வு தான் அடையாள அரசி யல் நடைமுறை அரசியலில் ஏற்படுத்திய பாதிப்பினை தெளிவாக்கும். மார்க்சிய அறிஞர் அய்ஜாஸ் அகமது இதை விளக்கும் போது, கீழ்க்கண்ட விளைவுகளை பட்டியலிடுகிறார்.* “அரசியலை அணுவளவு குறுக்குவது”* “தெளிவற்ற பொருளில் பண்பாடு என்று வரையறுத்து, அரசியலை அதில் அடக்குவதன் மூலம் வர்க்க அரசியலை அகற்றுவது”* “அதன் தொடர்ச்சியாக, சமத்துவம் அடிப்படையாகக் கொண்ட அரசியலை அடையாளம் அடிப்படையாகக் கொண்ட அரசியலாக உருமாற்றம் செய்வது”* “எண்ணற்ற சிறிய எதிர்ப்புக்களாக ஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட மக்களின் ஒற்றுமையை உடைப்பது”¨* “இதன் மூலம், எதிர்ப்பியக்கம் எங்கும் நிறைந்ததாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி, உண்மையில் எதிர்ப்பு எங்கும் நிலைத்து நிற்காமல் இருக்கச் செய்வது”உலகளாவிய நடைமுறை அனுபவம் இவ்வாறு இருக்கும் போது, தமிழகத்தில் இந்த அடையாள அரசியலை பேராசிரியர் ஏன் வலிந்து திணிக்கிறார்?அடையாள அரசியல் வரலாறாக தமிழக வரலாற்றை சித்தரிக்கும் பேராசிரியரின் வாதங்கள், மார்க்சியமே அடையாள அரசிய லுக்கு ஆதரவானது என்ற தோற்றம் ஏற்படும் வகையில் அவர் தெரிவித்துள்ள கருத்துக்கள் ஆகியன தமிழக நலனுக்கும் எதிர்கால இடதுசாரி இயக்க வளர்ச்சிக்கும் உதவிடாது.
தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் உரிமைக்காக ஒன்று திரண்டு போராடினால் “சாதி அரசியல் ” அல்லது “அடையாள அரசியல் ” என்றால் வெள்ளாளர் தலைமையில் நடக்கும் ” தேசிய ” போராட்டம் அடையாள அரசியல் இல்லையா ..?அதை நீங்கள் ஆதரிக்கலாம்.
ராமதாசு தலைமையில் தமிழரை தமிழர் கொல்லலாம் ,சுரண்டலாம் எல்லாம் செய்யலாம் .
தமிழ் தேசியம் பற்றி வாய் கிழிய கதைக்கலாம்.
ஆனால் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் உரிமைக்காக போராடினால் அது அடையாள அரசியல்.
உங்கள் காலம் இப்படியே பேசி வீணாகப் போவது தான் மிச்சம்.