தனக்கு அருகாமையிலுள்ள நாடுகள் முழுவதிலும் இரத்தக் கறைகளைப் பதித்த இந்திய அரசு தமிழ்ப் பேசும் மக்களின் விடுதலைப் போராட்டத்தை மிக அருகிலிருந்தே சிதைத்தை கண்கூடாகக் கண்டிருக்கிறோம். இலங்கையின் ஒவ்வோர் அரசியல் அசைவிலும் இந்திய அரசின் தலையீட்டைக் காணமுடியும். அமைதிப்படை என்ற தலையங்கத்தில் இராணுவத்தை அனுப்பி சாரி சாரியாகக் கொன்று போட்டது இந்திய அரசு. வன்னிப் படுகொலைகளில் இந்திட இராணுவம் நேரடியாகவே பங்களித்து தனது கொலை வெறியாட்டத்தை நடத்தியிருக்கிறது.
இத்தனைக்குப் பின்னரும் இந்திய அரசை இலங்கைக்கு அழைக்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட விக்னேஸ்வரன் என்ற திடீர் வேட்பாளர். இந்துஸ்தான் டைம்ம்ஸ் இற்கு அவர் வழங்கிய நேர்காணலில் தனது ‘அரசியல்’ அடிமைத்தனத்தைப் பகிர்ந்துகொள்கிறார்.
இந்துஸ்தான் டைம்ஸ்: ஆனால் இந்தியா ஒரு விடயத்தை, உதாரணமாக காஷ்மீர் விடயத்தையோ அல்லது நக்சலைட் கிளர்ச்pயாளர்கள் விடயத்தையோ எப்படி கையாளவேண்டும் என்று அதற்கு உபதேசம் செய்ய யாரையும் அனுமதிப்பதில்லை, உண்மையில் இந்தியா தலையீடு செய்வதாக வட மாகாணம் உட்பட ஸ்ரீலங்கா முழுவதிலிருந்தும் கண்டனக் குரல்கள் எழுகின்றனவே. எனவே ஏன் இந்தியா இதில் தலையிட வேண்டும்?
விக்கினேஸ்வரன்: இதோ ஒரு எதிரான கேள்வி. வடக்கில் 150,000 ஸ்ரீலங்கா துருப்புகள் தென்னிந்தியாவில் உள்ள உங்கள் அணு உலைகளுக்கு மிகவும் நெருக்கமாக நிலை கொண்டுள்ளார்கள். கச்சதீவுக்கு படகுகளில் சென்ற எங்கள் கடற்படையினருடன் சீன தேசத்தவர்கள் இருந்ததை கண்டுள்ளார்கள். இந்த விடயங்களை இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ள விடயங்களாக கருதக்கூடாதா? ஓ! அது ஸ்ரீலங்காவின் உள்வீட்டு விடயங்கள் என்று நீங்கள் சொல்கிறீர்களா, வடமாகாணத்துக்கு அதிகாரத்தை பரவலாக்குவதற்காக இந்தியாவால் உருவாக்கப்பட்ட 13வது திருத்தத்தை பாருங்கள் அது கொழும்பினால் ஏற்கனவே பல தடவைகள் வெட்டியும் கொத்தியும் மாற்றப்பட்டு வருகிறது. தற்சமயம் அதை முற்றாக நீக்குவதற்காகக்கூட ஸ்ரீலங்காவின் பாராளுமன்றம் அதை விவாதித்து வருகிறது. இந்தியா விரும்பினால்கூட அதனால் செயற்படாமல் இருக்க முடியாது.
இந்துஸ்தான் டைம்ஸ்: இதில் என்ன ஆக்கபூர்வமான பங்களிப்பை இந்தியா வழங்கமுடியும். மற்றும் வரப்போகும் மாகாணசபைக்கு முந்திய 2 மாதங்களில் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தென் பகுதியில் உள்ள சிங்கள பேரிவாதிகளுக்கோ அல்லது வட மாகாண தமிழ் வாக்காளர்களுக்கோ எரிச்சலை மூட்டாமல் எத்தகைய பங்களிப்பை வழங்க முடியும்.
விக்கினேஸ்வரன்: எங்கள் இராணுவம் முகாம்களுக்கு திரும்புவதை, வாக்காளர்களின் தேர்தல் அடையாள அட்டைகள் பறிக்கப்படாமல் இருப்பதை, மக்களை அசு;சுறுத்தி வாக்களிக்காமல் தடுக்கும்படியான மர்மமான குண்டுகள் வெடிக்காமல் இருப்பதை இந்தியாவால் உறுதி செய்ய முடியும். கண்காணிப்பாளர்களை அங்கு நியமித்து நீதியானதும் ஊழலற்றதுமான தேர்தல் நடப்பதை அது உறுதி செய்வதுடன், தேர்தல் வித்தியாசமான ஒரு எண்ணத்தை பிரதிபலிப்பதை கட்டாயப்படுத்தவதற்குப் பதிலாக, தமிழர்கள் உண்மையில் எதை விரும்புகிறார்கள் என்பதை எங்கள் அரசாங்கத்துக்கு உணர்த்தவும் முடியும்.தமிழ் நாட்டிலுள்ள நண்பர்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவது இயற்கையானது, ஆனால் ஸ்ரீலங்கா விடயம் அங்கு அரசியல் ஆதாயம் தேடுவதற்காகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவர்களுக்கு நான் இதை மட்டும் சொல்ல விரும்புகிறேன்: நீங்கள் எங்களுக்கு வேறு எந்த விதமான உதவிகளைச் செய்வதையும் நாங்கள் வரவேற்கிறோம், ஆனால் தயவு செய்து எங்கள் சொந்தப் பிரச்சினைகளுக்கான எங்கள் சொந்த தீர்வுகளை ஐக்கியமான ஸ்ரீலங்காவுக்குள் நாங்களே தீர்த்துக் கொள்வதற்கு எங்களை அனுமதிக்க வேண்டும்.
இந்தியாவிற்கு அதன் புதிய நண்பரான விக்கிக்கும் ஒரே துயரம் தான். தமிழ் நாட்டில் எழுச்சிகள் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதே அது. காங்கிரஸ் காரர்களுக்கு விக்கி ஒரு வரப்பிரசாதம். வரவிருக்கும் தேர்தலில் காங்கிரசிஸ் ஈழத் தமிழர்களைக் கொன்று போட்ட கறையை நீக்குவதற்கு விக்கினேஸ்வரனை விட சிறந்த முதலமைச்சர் இந்தியாவிற்குக் கிடைக்கபோவதில்லை.
விக்னேஸ்வரன் தனது பரிவரங்களோடு இந்திய நலனுக்காக தனது ஓய்வு நாட்களைக் ஓட்டி முடித்துவிடும் போது இலங்கை இந்திய அரசுகள் தமிழ்ப் பேசும் மக்களை ஒட்டச் சூறையாடி முடித்திருப்பார்கள்.
இதில் உள்ள இரண்டாவது கேள்வியும் பதிலும், ‘எரிச்சலூட்டும்,ஆதாயம் தேடும் தமிழக அரசியல்வாதிகள் பற்றியது.
“விக்கி தமிழ் நாட்டு மக்களை அவமானப்படுத்துகிறார்.” எனக் கொண்டை போட்டு,எங்கள் காதுகளில் பூவைக்கும் திறமை ‘இனியொருவின் விதி’
இங்கே ‘மீட்பர்களை உருவாக்குதலும்’,’செம்மறியாடுகளாக சாய்த்தலும்’ செய்வதாக,பல கோஷ்டி கானங்களைக் கேட்கக் கூடியதாகவிருக்கிறது.
‘ஊர் ஓச்சம்;வீடு பட்டினி’ என்பதைத் தவிர வேறு எதாகிலும் உண்டா?
///ஆனால் ஸ்ரீலங்கா விடயம் அங்கு அரசியல் ஆதாயம் தேடுவதற்காகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது./// 100 % true .
ஈழத் தமிழர் விவகாரத்தை சுயநல அரசியலாக்கும் தமிழக அரசியல் வாதிகள் இருக்கின்றார்கள் . அந்த உண்மையை நாம் ஏறுக்கொள்ள அல்லது அடையாளம் காண தவறினால் .
தமது மக்களை சாதி ரீதியாகவும் ஊர் ரீதியாகவும் மோதவிட்டு ஆட்சிக் கதிரைக்கு அலையும் தமிழக பிராடு அரசியல் வாதிகளுடனான அனைத்து தொடர்புகளும் துண்ணிக்கப்பட்டால் தான் . அங்குள்ள நியாயமான மனிதர்கள் எம்மை நேசிப்பார்கள்.
இல்லையேல்
அந்த பிழைப்பு வாதிகளின் கட்சிப் போட்டி அரசியலுக்கு எமது மக்களின் இரத்தம் வீணாக சிந்தப்படும் .
Here is some prove I will publish more soon
Part 1 —–> ஈழத் தமிழர் விவகாரத்தை சுயனல அரசியலாக்கும் தமிழக அரசியல் பிராடுகள் பிராடுகள் …….http://tmwtmw.blogspot.co.uk/2013/07/blog-post_24.html
Part 2 —–> ஈழத் தமிழர் விவகாரத்தை சுயனல அரசியலாக்கும் தமிழக அரசியல் பிராடுகளும் http://tmwtmw.blogspot.co.uk/2013/07/part-2.html
Part 3 —–> ஈழத் தமிழர் விவகாரத்தை சுயனல அரசியலாக்கும் தமிழக அரசியல் பிராடுகள் http://tmwtmw.blogspot.co.uk/2013/07/part-3.html
More will be published @ tmwtmw.blogspot.com
தமிழக முதன்மை கட்சிகளான அதிமுக வும் , திமுகவும் ஈழத் தமிழர் அவலத்தை சுயநல அரசியல் இலாபங்களுக்காக பாவிக்கவில்லை என்று இனி ஒரு சொல்ல வருகின்றதா? இதற்கு இனி ஒரு பதில் சொல்லுங்கள்? அப்படி நீங்கள் சொல்வீர்களானால் இனி ஒருவின் மானம் கப்பல் ஏறும்.
ஈழத் தமிழர் விவகாரத்தை சுயனல அரசியலாக்கும் தமிழக அரசியல் பிராடுகள் பிராடுகள் Special edition சீமான் வைத்தவேட்டு!!!! கலக்கத்தில் பிரித்தானியா !!!http://tmwtmw.blogspot.co.uk/2013/07/blog-post_22.html
சீமான் பேச்சில் அதிசயம் ஒன்றுமில்லை. இது கத்தோலிக்க மிஷனரிகள் 30 ஆண்டுகளுக்கு முன்னமே, நான் பள்ளிக்கூடத்தில்படிக்கும் போது தமிழாசிரியர்கள் கிண்டலாக கூறியதுதான், அப்போது பெல்பாட்டம் போல் சென்னையில் இது பிரபலம். “போட்” (படகு) டை தண்ணீரில் போட்டு ஓட்டியதால் அதற்கு “போட்டு” என்று பெயர் வந்ததாக. மறைந்த என்.வி.என்.செல்வம் அவர்கள் ஒரு தமிழ் ஆசிரியர், அவரும் திராவிட இயக்கங்களின் மேடைப்பேச்சை கேலி செய்ய இது போன்ற உதாரணங்களை தன் மாணவர்களுக்கு கூறியிருக்கிறார்.
சந்திரமெளலீசன் !, நீங்கள் ஒரே பதட்டப்படுகிறீர்கள்.
தமிழ் மொழி என்பது சமஸ்கிருதம் போல் பழமையானதுதான். இந்து மதமும் தவிர்க்கமுடியாமல் அதன் புற்வீக வடிவில் தென்னிந்தியாவில் படிமாணமாகிவிட்டத்தான், ஆனால் உலகமயமாக்கலில், மேற்கத்திய “எண்லைட்டன்மெண்ட்” ஒழுங்கு முறையில் புரியாத ஆதிமனித மதம் தன் ஆதிநிலையில் இன்னும் (ஆப்பிரிக்கா போலல்லாமல்) இருப்பது தலைவலி பிடித்த ஒன்று. இது நிச்சயம் வன்முறையை வரவேற்கும்.
ஆனால் ஈ.வே.ரா. பெரியார் போன்ற வரப்பிசாத தலைவர்கள் இந்த ஆபத்தை “மதசார்பின்மை” மூலம் தவிர்த்தார்கள். அவர்கள் ஒழுக்கமுள்ள “அப்சலுயூட்” தலைவர்கள் அல்ல ஆனால் குறையுள்ள மக்களை பிரதிபலித்தார்கள். ஆனால் மேற்குலகம், பல மில்லியன் தன் மக்களை குறிப்பாக, போர்வீரர் கிளாஸை இழந்து, “பொலிட்டிகலி கரெக்டான” அப்சலுயூட் சட்ட ஒழுங்கைநிறுவினார்கள். அவர்களின் சட்டத்தைப் படித்துவிட்டு, குறையுள்ள ஆதி மத சமுதாயமான தெற்காசிய சமூகத்தில் தலைமை தாங்குவது, மக்களின் அபிலாஷைகளுக்கு வடிகாலாக அமையா.
அதனால்தான் பிரச்சனை முற்றியவுடன் “அப்சலுயூட்டான” பிரபாகரன் போன்ற அப்சலூயூட் தலைவர்களின்நிர்பந்தம் ஏற்ப்பட்டது. மதத்தையும், மொழியையும் அமுக்கி வாசித்ததால்தான் இந்தியாவுக்குள் குப்பைக் கொட்ட முடிந்தது. “தமிழ் வாழ்க” என்று கார்ப்பரேஷன் கட்டிடம் மீது எழுதியது விஷயம் புரியாத, சுயநல, பாபுலிஸ்டான மு.கருணாநிதி ஆகும்.
மொழியையும், மதத்தையும், முன்னின்று இலங்கைத் தமிழர்கள் தூக்கிப் பிடித்ததுதான், “டிரைபல் சொசைட்டியை” (ஆப்கானிஸ்தான் போல்), பற்றி அதன் விஞ்ஞான நிலையைப் பற்றி உண்மையில் “பயந்துக் கொண்டிருக்கும்” மேற்குலகின் “வன்முறையை” முள்ளியவாய்க்காலுக்கு வரவழைத்தது !.
சந்திடமௌலி,
நீங்கள் சர்வதேசம் பற்றிய விவாதத்திற்கு இன்னும் பதில் சொல்லாமல் அடுத்த விவாதத்தில் இறங்கிவிட்டீர்கள். ஜெயலலிதா கருணாநிதி மட்டுமல்ல, சீமானில் ஆரம்பித்து பல குட்டி நடிகர்கள் வரை ஈழத்தமிழர்களின் அவலத்தைத் தமது சொந்த பிழைப்புவாத நலன்களுக்காகவே பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்று இனியொரு அம்பலப்படுத்திய அளவிற்கு புலம்பெயர் நாடுகளில் யாரும் இதுவரை அம்பலப்படுத்தியதில்லை.
தமிழ் நாட்டில் பல புரட்சிகர அமைப்புக்களும், மாணவர்களும் ஈழத்தமிழர்களுக்காக அர்ப்பணத்தோடு போராடியிருக்கிறார்கள். இன்றும் போராடுகிறார்கள். பலர் தீமூட்டி உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்கள். இவர்களின் போராட்ட வழிமுறைகள் தவறானதாக இருக்கலாம். ஆனால் விக்கிக்கோ அன்றி உங்களுக்கோ அல்லது யாருக்கும் இவர்களின் தியாகங்களைக் கொச்சைப்படுத்தும் உரிமை கிடையாது. அதுவும் உங்கள் விக்கி கொலைகார இந்திய அரசை கைகூப்பி அழைத்துகொண்டு மக்களின் போராட்டங்களையும் தியாகங்களையும் கொச்சைப்படுத்துகிறார். விக்கியும் நீங்களும் மட்டுமல்ல இன்னும் பலர் இந்தியாவினதும் இலங்கை அரசினது நிகழ்ச்சி நிரலுக்குள் தெரிந்தோ தெரியாமலோ விழுந்துவிட்டார்கள். திட்டமிடப்பட்ட இந்த நிகழ்ச்சி நிரலின் அடிப்படையான பகுதி விக்கி கூறுவதைப் போல சுய நிர்ணய உரிமை வேண்டாம், ஆயுதப் போராட்டம் சாத்தியமல்ல போன்ற விடையங்கள் முன்னிலைப்படுத்தப்படுகின்றன.
நிங்கள் தெரியாமல் இந்திய ஆதரவாளராக இருப்பீர்களானால் புரிந்து கொண்டு வெளியேறுங்கள். அப்படித்தான் நான் நம்ப முனைகிறேன்.