கேள்வி: தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பிறகு புகலிடத்தில் புதிது புதிதாக அமைப்புக்கள் தொடங்கப்படுகின்றன.இது பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?
-தவராசா
தோற்றம் பெறும் இவ்வாறான அமைப்புக்கள் தொடர்பாக பேசுவதானால் அது நீண்ட உரையாடல் ஆகிவிடும். எனினும் குறிப்பாக சில விடயங்களை கூறமுடியும்.
தொடங்கப்படும் ஒவ்வொரு அமைப்புக்களும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை வேண்டி ; அமைக்கப்படுவதாக நான் நினைக்கவில்லை. தனிநபர்களின் அடையாள விருப்புக்களின் தனிப்பட்ட நலன்சார்ந்த தேவைகளின் அடிப்படையிலேயே தனிநபர்களினால், அவர்களின் நலன் சார்ந்து இயங்கும் சில நபர்களையும் கூட்டிணைத்து இவை தொடங்கப்படுகின்றன. அதற்கு அப்பால் இதனுடைய பெறுமதிகள் எதுவமில்லை.
உண்மையிலேயே ஒடுக்கப்பட்ட எமது மக்களின் விடுதலைவேண்டி அமைக்கபடும் ஒரு அமைப்பு, ஐனநாயக வடிவங்களை கொண்டதாக இருக்கவேண்டும். இதற்கு முதலில் கடந்த காலங்களில் விடுதலை இயக்கங்களின் தோல்விக்கு பின்னடைவுக்கு காரணமான அமைப்பு வடிவங்கள் பற்றிய மறுபரீசிலனை அவசியம். அத்தோடு விடுதலைக் கோட்பாடுகளை வெறும் சூத்திரங்களாக சொல்லிக் கொண்டு, நிஐவாழ்வில் போலிகளாக வாழ்ந்தவர்கள் இன்றும் அதன் தொடர்ச்சியாக வாழ்ந்துகொண்டு ,அமைப்புக் கட்டுபவர்கள் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தப்படவேண்டும்.
இல்லாவிடின் மக்கள் தொடர்ச்சியாக இவர்களால் ஏமாற்றப்பட்டுக்கொண்டே இருப்பார்கள். மக்களின் வாழ்வில் தொடர்ச்சியாய் இவர்கள் தங்கள் பிழைப்புவாதத்தை தொடர்வார்கள்.
ஒரு அமைப்பு ஐனநாயக வடிவத்தோடும், மார்க்ஸ்சிய சிந்தனையோடும், சமூகஒடுக்குமுறைகளுக்கு எதிராக, சுரண்டல் முறைகளுக்கு எதிராக போராட முனையும்போதே மக்கள் நலன் சார்ந்த அமைப்பாக என்னால் கருதமுடியும். அதற்கு அமைப்புக்களை உருவாக்க முனைபவர்கள் மார்க்ஸியத்தின் இயங்கியலை புரிவதோடு வாழ்வில் நேர்மைகொண்டவர்களாக இருக்கவேண்டும்.
கேள்வி: யாழ்ப்பாண மேலாதிக்கத்திற்கு எதிராக மட்டக்களப்பில் யாழ் அகற்றிச் சங்கம் தொடங்கிய வரலாறு உண்மையா?
–குமரன்.
உண்மைதான் இதன்வரலாறு சுவாரசியமானது. 1960களில் மட்டக்களப்பு பிரதேசத்தில் யாழ்ப்பாணதிலிருந்து வந்து வர்த்தக முயற்சிகளில் ஈடுபபட்டவர்களுக்கு எதிராக, மட்டக்களப்பில் நீண்டகாலங்களுக்கு முன்னர் குடியேறி முதலாளிகளாக மாறிய “பழைய” யாழ்ப்பாண வர்த்தகர்களின் பின்புலத்தில் உருவாக்கபட்டதுதான் இந்த ‘’யாழ்அகற்றிச் சங்கம்’’.இதில் சாதிய அம்சங்களும் அடங்கியிருந்தன.
1960களில் மட்டக்களப்பில் வந்து வர்த்தக முயற்சியில் ஈடுபட்ட யாழ்ப்பாண வர்த்தகர்களில் பெரும்பாண்மையோர் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். இவர்கள் சிறுவியாபாரிகளாக கிராமங்கள் தோறும் வியாபாரத்தை தொடங்கினார்கள்.இது அதுவரை காலமும் மட்டக்களப்பு மக்களை சுரண்டிக் கொண்டிருந்த யாழ்ப்பாணப் ‘’பெருமுதலாளிகளுக்கு’’ பலத்த தொந்தரவாக இருந்தது.
எனவே இவர்களை அகற்றுவதற்காக இப் பெரும் முதலாளிகள் தமக்கிருந்த அரசியல் உறவுகளையும் இணைத்துக்கொண்டு, ‘யாழ் அகற்றிச் சங்கத்தை’ தொடங்கினார்கள். யாழ்ப்பாண-மட்டக்களப்பு பிரதேச முரண்பாடுகள் இவ்வாறுதான் இவர்களால் ஊக்குவிக்கப்பட்டு பெருப்பிக்கப்ட்டன. இதில் பலர் தங்கள் பிழைப்புக்காக தொடர்ச்சியாக வழிமொழிந்தனர். இன்றும்கூட மிகத் தீவிரமாக பிரதேசவாதம் பேசும் நபர்களின் “பூர்வீகத்தையும்,” அவர்களின் வர்க்கப் பின்னணியையும் ஆராய்ந்தால் இதன் உண்மை விளங்கும்.
எனினும் இதற்கு அப்பால், அரசியல் சமூக பொருளாதார தளங்களில் மட்டக்களப்பிற்கும், யாழ்ப்பாணத்திற்கும் பாரிய முரண்பாடுகள் இருந்தன. இந்த முரண்பாடுகளும், புறக்கணிப்புக்களும் அரசியல் -சமூக ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டியவை.
கேள்வி: புகலிடத்தில் தலித்தியம் கதைப்பவர்கள் இலங்கை பேரினவாத அரசின் கைக்கூலிகளாக இருக்கிறார்களே உங்கள் அபிப்பிராயம் என்ன?
-சிவா – டென்மார்க்
நண்பரே அனைவரையும் இவ்வாறு கூறுவது சரியல்ல. பல நண்பர்கள் இலங்கை அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராக குரல்கொடுப்பவர்களாக, செயல்படுபவர்களாக இருக்கிறார்கள். இலங்கையில் ஒடுக்கப்பட்ட எமது தலித் மக்களின் சமூக விடுதலையில் அக்கறைகொண்டு எம் மக்களின் கல்வி பொருளாதார மேம்பாட்டுக்காக பல்வேறு செயல்பாடுகளை மேற்கொள்கின்றார்கள். நீங்கள் தலித் முன்னணியைச்சேர்ந்த நபர்களை வைத்துக்கொண்டு பொது முடிவுக்கு வரக்கூடாது. தலித் முன்னணி நபர்களின் பிழைப்புவாதமும் இலங்கை அரசை அண்டிப் பிழைக்கும் வியாபாரத் தனமும் நாம் எல்லோரும் அறிந்ததே. ஆனால் நண்பரே இப்போது இந்தப் பிழைப்புவாதிகள் எம்மைப் போன்றவர்களை பிள்ளையானுக்கும், இலங்கை அரசுக்கும் போட்டுக்கொடுக்கும் “ஆள்காட்டிகளாக,” இலங்கை அரசின் ‘‘ புலனாய்வுத் துறையாக ’’ மாறிவட்டார்கள். எமது தலித் மக்களை வைத்து பிழைப்பு நாடத்தும் இந்த வியாபாரிகளை நாம் மக்கள் மத்தியில் ஒவ்வொரு தனிநபர்களாக அடையாளப்படுத்த்த வேண்டும்.
கேள்வி: புளொட் நேசனைத் தெரியுமா?. அவர் எழுதிய புளொட் வரலாறு பற்றி உங்கள் கருத்து என்ன?.
-பவன் சுவீஸ்.
நேசனை 1983ம் ஆண்டிலிருந்து தெரியுமென நினைக்கின்றேன். யாழ்ப்பாணத்தில் உமா மகேஸ்வரனுக்கு இரண்டு ‘’விசுவாச ரசிகர் மன்ற மையங்கள்’’ இருந்தன. ஒன்று சுழிபுரம் ; மற்றையது கொக்குவில். கொக்குவில் ‘விசுவாச மையத்திலிருந்து’ வந்தவர்தான் நேசன். புளொட்டில் அதிகாரத் துஷ்பிரயோகங்களைச் செய்து, மத்தியதர வர்க்க மனோபாவ சொகுசுகளை அனுபவித்தவர்கள்தான் இவர்கள். அராஜகங்கள், அடாவடித்தனங்கள், கொள்ளை, கொலை என்று உமா மகேஸ்வரன் விசுவாசத்தை மூலதனமாக வைத்து இவர்கள் செய்த அட்டூழியங்கள் அளவற்றவை. புளொட் ‘’மார்க்ஸிய இயக்கமாக’’ தன்னை சொல்லிக்கொண்டபோதிலும் இவர்கள் அரசியலின் அடிச்சுவட்டைக் கூட அறியாதவர்கள். புளொட் ஒரு ‘’வெள்ளாளர் இயக்கம்’’ என்று முத்திரை குத்தப்படுவதற்கு இவர்களின் சாதிய ஆதிக்க மனோபாவ செயல்பாடுகளே காரணமாக இருந்தது.
ஆனால் நேசன் இவர்களில் இருந்து மாறுபட்டவராக, ஜனநாயக பண்பு கொண்டவராக இருந்தார். சுறுசுறுப்பும், உதவும் குணமும் நேசனிடம் தாரளமாக இருந்தன. அதேவேளை அரசியல் ஆழுமை அற்றவராகவும், இருந்தார். எல்லோருக்கும் நல்லவராக இருக்கவேண்டுமென்ற தாராளவாதமும் இவரிடம் இருந்தன. இதனால் இவரை எல்லோரும் பயன்படுத்திக்கொண்டார்கள். குறிப்பாக புளொட்டில் இருந்த கண்ணாடிச் சந்திரன் என்பவரின் தன்னிச்சையான பல நடவடிக்கைகளுக்கு நேசன் பயன்படுத்தப்பட்டார். உதாரணமாக யாழ்- கொட்டடியில் படுகொலை செய்யப்பட்ட ஒடுக்கப்பட்ட தலித் சமூகத்தைச் சேர்ந்த மூன்று பொது மக்களின் கொலைக்கும் நேசன் துணைபோனார். இவ்வாறு பல அதிகார துஷ்பிரயோகங்களை பட்டியல் இட முடியும்.
நேசன் தன் காலம் பூராகவும் யாரோ சிலருடைய அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டுக்கொண்டே வருகின்றார். அவர் அரசியல் தலைமைத்துவ ஆளுமை கொண்டவராக மாறவேண்டும் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். நேசன் மற்றவர்களுக்கு பயன்படும் செயல் புகலிடத்திலும் தொடர்கின்றது. அதன் வெளிப்பாடுதான் அவர் எழுதியதாகச் சொல்லப்படும் புளொட் வரலாறு.
இந்த வரலாற்றில் நேசன் நிறைய உண்மைகளைச் சொல்லுகின்றார். அதே நேரம் ஒரு சிலரின் வரலாற்றை மிக திட்டமிட்டு மறைத்து கொச்சைப்படுத்துகின்றார். இவ்வாறான செயலுக்கு நேசன் பொறுப்பில்லையென்றும் ; ஒரு சிலர் தங்களின் அரசியல் லாபத்திற்காக, சிலபேர்களோடு கொண்ட தனிப்பட்ட முரண்பாட்டிற்காக, அந்த நபர்கள் மீது சேறுபூசியதாகவும், நேசன் சொல்லியவற்றை திரிவுபடுத்தி எழுதியதாகவும் ஒரு செய்தி உண்டு. (சேறு பூசப்பட்டவர்களில் அடியேனும் ஒருவன்). இதனால் நேசன் எழுதிய வரலாறு நம்பகத் தன்மை அற்று, வெறும் காழ்ப்புணர்ச்சி கொண்ட வரலாறாக தோல்வி கண்டுவிட்டது. இதனால் நேசன் கூறிய உண்மையான விடயங்களும் பெறுமதியற்று நம்பகத்தன்மையற்றதாகிவிட்டது. சுயவரலாறு என்பது சுய விமர்சன பரீசீலனையோடு உண்மையோடும், நேர்மையோடும் எழுதப்படவேண்டும். அந்தத் தகுதி நேசனிடமிருந்தும் “கூடாத நட்பினால்” கைநழுவ விட்டுவிட்டார். இவ்வாறுதான் என்னால் சொல்லமுடியும்.
தொடரும்….
புலியின் வழியை ஏற்றுக்கொண்ட வேளாளர்களுக்கு வல்லுவெட்டி துறை சாராத தலைமை தேவைப்பட்டது. அதற்கு முன்னுக்கு வந்த இளையர்கள் தான் சுழிபுரம் கொக்குவில் இளம் பொடியள். புலி பிளஸ் வேளாள தலைமை = புளொட்.
Do you know Vellalars are not the top caste for Tamils !
Then who?
You go and find out
Sengunthar cast is the high cast in Tamil. They are the people to close with kovil activities. All the casts are divided according their jobs they doing but not Sengunthar. Even now in nallur temple they have some rights. Stil participate warriors for “Sooran Por” and “Kodich seelai” is given by them not only for nallur but also for lot of temples
////கேள்வி: புளொட் நேசனைத் தெரியுமா?. அவர் எழுதிய புளொட் வரலாறு பற்றி உங்கள் கருத்து என்ன?.
======அதே நேரம் ஒரு சிலரின் வரலாற்றை மிக திட்டமிட்டு மறைத்து கொச்சைப்படுத்துகின்றார்./////
ஐரோப்பாவில் பல்வேறு வகையான பொருட்களுக்கான நுகர்வோர் கருத்து ஆய்வுகள் செய்யப்படுவதுண்டு.
அந்த ஆய்வை பொதுவாக எதாவது ஒரு வியாபார நிறுவனம் இஸ்பொன்சர் செய்யும் . இறுதியில் வெளியாகும் அறிக்கை அந்த இஸ்பொன்சரை ஆதரிக்காவிடினும் பாதிக்காத வகையில் வெளியாகும் .
ஐயர் முதல் ஆட்டுக் குட்டி வரை எல்லாரும் அதுதான் செய்யினம் .
சுதந்திரமாக எழுதக் கூடிய புறச் சூழலும் இல்லை.
உதாரணமாக ஆழமனக் காயங்கள் உள்ள விசர் நாய்கள் விமர்சனதை அவதூறாக்கி விடுவார்கள்.
அப்படி எழுத்தக் கூடிய எழுத்தாளார்களும் இருப்பதாக தெரியவில்லை .
எல்லா எழுத்தாளர்களும் எவளாவது ஒருத்தியை(அமைப்பை) விருப்பி இருக்கின்ற நிலையில் அவளுக்கு நோகாமல் ….
மொத்தத்தில் சுயவிமர்சனம் செய்யக் கூடிய அரசியல் பக்குவம், முதலில் உருவாக்கப்படவேண்டும்.
புத்திக் கூர்மை இல்லாதவர்களாக எமது மக்களை , அரசியல் ஈடுபாடு உள்ளவர்களை மாற்ற வேண்டும் .
பிறகு எது சரி எது பிழை என விவாதிக்கலாம் . இல்லாட்டில் குரங்கின் கை பூமாலை ஆகிவிடும் .
ஆதலால் தேவ தூதன் போல எல்லாம் தெரியும் , பிறப்பிலேயே ஞனப்பால் குடிச்சானாங்கள் என்டு நினைக்கிறவையை வைச்சுக் கொண்டு சுயவிமர்சனம் ஆரம்பித்தால் not good for anybody .
பக்குவப்பட்ட அரசியல் அறிஞர் சந்திரமவுலீசன் சொல்கிறார் கேளுங்கள்..உண்மையான விடுதலைக்கான …………………………………அரசியல்வேலை என்பது …………………………………தவறான கட்சியில் இருப்பவர்களை வென்றெடுப்பது தானே ! என்று தனது பக்குவப்பட்ட கோசத்தை வைத்துக்கொண்டு அரசியல் அறிஞர் மற்றவர்களுக்கும் இப்போது புலி வழி வந்தவர்களுக்கும் பிரபா வழியில் துரோகிப்பட்டம் கொடுக்கும் அரசியல் ஆசான் வெள்ளை ஆனை பாருங்கோ;சமூகத்துக்கு வழிகாட்டுகிறார் பாருங்கோ.
எங்கட சனத்தை இப்படி சொல்கிறார் புத்தி கூரான அறிஞர் பெருந்தகை;;;;புத்திக் கூர்மை இல்லாதவர்களாக எமது மக்களை , அரசியல் ஈடுபாடு உள்ளவர்களை மாற்ற வேண்டும் .
தோழர் அசோக் வழங்கிய பதிலில் நேசன் ஜனநாயக பண்பு கொண்டவராக விளங்கினார் என்று குறிப்பிடுகின்றார் அனால் செயல் பாட்டில் அப்படி தெரியேல்லை. கனடாவில் நடந்த கூட்டங்களில் குழப்பங்களை விளைவிக்கும் பொழுது அவரில் ஒரு கொக்குவில் வெள்ளாள திமிர் தெரிந்தது.
சொன்னேனே!!!!சொன்னேனே!!!! வந்திட்டங்கையா!!!! வந்திட்டாங்கையா ,!!!
///மொத்தத்தில் சுயவிமர்சனம் செய்யக் கூடிய அரசியல் பக்குவம், முதலில் உருவாக்கப்படவேண்டும்.//
—
//சுயவரலாறு என்பது சுய விமர்சன பரீசீலனையோடு உண்மையோடும்இ நேர்மையோடும் எழுதப்படவேண்டும். அந்தத் தகுதி நேசனிடமிருந்தும் “கூடாத நட்பினால்” கைநழுவ விட்டுவிட்டார். இவ்வாறுதான் என்னால் சொல்லமுடியும்/./ அசோக்.
அசோக் நேசனை நக்கல் அடிக்கிறாரா? அல்லது உண்மையாக இப்படி நம்புகிறாரா? அசோக்க்கு தெரிந்த 1983 ம் ஆண்டு கொக்குவில் நேசன் இல்லை இப்போது இங்கு கனடாவில் இருக்கும் நேசன். இங்கிருக்கும் சிறிலங்கா தூதுவர் ஆலயத்தோடும் சிறீலங்கா அரச ஆதரவாளர்களோடும் கூட்டுச் சேர்ந்து இயங்குபவர். அத்தோடு சண்டித்தன அராஐகவாதி. உங்கள் நண்பர் ரகுமான் ஐhனுக்கு கருத்தரங்கு ஒன்றில் தள்ளிவிட்டு அடிக்க முயன்று அந்த கருத்தரங்கையே குழப்பியவர். தொடர்ந்து இப்படியான அடாவடிகளை இப்போதும் தொடர்கிறார்.இவருக்குப்போய் நீங்கள் ஐனநாயகப் பட்டம் சூட்டுகின்றீர்கள். அசோக்கிற்கு என்னதான் நடந்தது?.
அசோக் யோகனிடம் கேள்வி///:தவராசா, குமரன், சிவா – டென்மார்க்,பவன் சுவீஸ் எவ்வாறு உங்கள் கேள்விகளை அசோக் யோகனிற்கு அனுப்பினீர்கள்?என்னிடமும் சில கேள்விகள் உண்டு.எவ்வாறு அசோக் யோகனிடம் கேட்பது ?
அசோக் யோகனிடமும் என் கேள்வி: எவ்வாறு / யார் மூலம் கேள்வி கேட்பது ?எந்த தலைப்புகளில்?எப்ப வரை கேட்கலாம்? .
.
சில தலைப்புக்கள் : தேசிய விடுதலை,சமூக விடுதலை:எவ்வாறு வெல்வது ?
எமது சமூக அமைப்பு(அரை காலனிய அரை நிலப்பிரபுத்துவ …..) , எமது சமூக அமைப்பின் மற்றும் அதிலிருந்த/இருக்கும் தனி மனிதனின் சமூக ,பொருளாதார, அரசியல் தளங்களில் உள்ள பலம் மற்றும் பலவீனங்கள் ,அந்த சமூகம் முகம் கொடுக்கும் முதன்மை எதிரி,அந்த தேசியம் முகம் கொடுக்கும் முதன்மை எதிரி,
எனக்கு ஒரு உண்ண்மை தெரிஞ்சாகணும் தேவன்,
அரைக்காலனிய அரைநிலப்பிரபுத்துவ என்றால் என்னா? அவசரம்…. தேவன்!
வணக்கம்
Samaran:!!ஒரு கேள்விக்கு பல காரணங்களோ அல்லது நோக்கங்களோ இருக்கலாம்.உம்முடைய அவசரமான கேள்வியின் அர்த்தம் எனக்கு புரியவில்லை.
உம் கேள்வியின் இலக்கு என்ன என்பதை தயவு கூர்ந்து விளக்கவும்.
.
“.எனக்கு ஒரு உண்ண்மை தெரிஞ்சாகணும் தேவன்” இதில் ஒரு நக்கல்தனம் இருக்கிறது :அதனால் உம்முடைய அவசரமான கேள்விக்கு எனது பதில் :
சமரன் பாப்பா தள்ளிப்போய் விளையாடு.
நான் அனுப்பி வைத்த கேள்விக்கு இன்னும் பதில் தரவில்லை. உமா மகேஸ்வரனுக்கும் பிரபாகரனுக்கும் இடையில் ஒரு அபுரிந்துணர்வு இருந்ததால் தான் பிரபா உமா மகேஸ்வர்னை சுடவில்லை என்று பலர் கூறுவது உண்மையா. ஏன் இந்த கேள்வி தணிக்கை செய்யப்பட்டது?
உமாவுக்கும் பிரபாவுக்கும் இடையில் எந்தப் புரிந்துணர்வும் இருந்ததாகத் தெரியவில்லை. உமாவை கொல்ல பிரபா பாண்டிபசாரில் (சென்னை) வைத்து சுட்டார். கண்ணனுக்கு சூடு விழுந்தது. உமா தப்பினார்.
மீண்டும் மதுரையில் அரசியல் கருத்தரங்கொன்றுக்குச் சென்ற உமாவை தனது ஆட்களை வைத்து தாக்குதல் ஒன்றைத் தொடர்த்து கொல்ல முயன்றார். அதுவும் தவறியது. இவை பகிரங்கமானவை. அனைவரும் அறிந்தவை.
உமாவின் பாதுகாவலர்கள் திறமையானவர்கள் என நம்பியதால் யாரும் அசட்டுத் தனமாக உமாவை நெருங்கவில்லை. எனவே தன்னைச் சுற்றியிருந்தோர் தன்னைச் சுடுவார்கள் என உமாவும் ஒரு போதும் நம்பியிருக்கவில்லை. அந்த நம்பிக்கை உமாவுக்கு யமனானது. புலிகளும் இப்படி நடக்கும் என எண்ணியதேயில்லை. தருணம் புலிகளுக்கு சரியாக அமையவில்லை. அவ்வளவுதான்.
அந்த மதுரை சம்பவத்தில்தான் பொட்டனை கொட்டான் மாஸ்டர் கோழியை அமுக்குவதுபோல் அமுக்கிக்கொண்டுபோனவனாம் உண்மையோ…?
it seems that uma has been killed by RAW. Whats their purpose behind the killing?? Even though uma helped RAW to colonize Maldives he was killed be them. why? RAW managed to handle LTTE till the end for their own purpose why not PLOTE.
. நான் பின் தளத்தில் இருந்ததினால் நாட்டில் தளத்தில் நடந்த விசயங்கள்பெரிதாக என்னைப் போன்றவர்களுக்கு தெரியவில்லை. தளத்திலிருந்த தோழர்களோடு பேசியதிலிருந்து கண்ணாடிச் சந்திரனைப்பற்றி நல்ல அபிப்பிராயங்களை யாரும் கூறவில்லை. வேறு ஒரு இணையத் தளத்தில் பின் தள் மகாநாடு பற்றியும் ரெசோ எனப்படும் தமிழ் ஈழ மாணவர் பேரவை பற்றியும் தள மத்திய குழு உறுப்பினர்கள் /தளக் கமிற்றி பற்றி வந்தவை எல்லாம் திட்டமிட்ட காழ்ப்புணர்ச்சிகளே அதிகம் என்றும் கூறினார்கள். அதை எழுதிய NORWAY சிறீ ரெசோவின் யாழ்ப்பாண மாவட்ட கமிற்றியில் ஒரு சாதாரண உறுப்பினர் என்றும் அவர் கூறியதுபோல் அவர் முக்கிய உறுப்பினர் இல்லையென்றும் தள மகாநாடு நடந்த நேரத்தில் சிறீ தனிப்பட்ட பிரச்சனை காரணமாக ‘தேவதாஸ் கோலம்’கொண்டு சோகம் கொண்டு தாடி வளர்த்து புளொட்டில் இருந்து ஒதுங்கி இருந்ததாகவும் சொன்னார்கள். இவை பற்றி புளாட்டில் இருந்த தோழர்கள் எழுத வேண்டும். குறிப்பாக ரெசோவின் பொறுப்பாளராகவும் மத்திய குழு உறுப்பினராகவும் இருந்த தோழர் அசோக் மற்றும் குமரன் போன்றோர் உண்மைகளை வெளிக்கொனர வேண்டும். இல்லாவிட்டால் பிழையான செய்திகளும் திரிபு படுத்தப்பட்ட வரலாறுகளும் சேறடிப்புக்களும் உண்மையாகிவிடும். இதில் வேடிக்கை என்னவென்றால் சேரடிப்புக்களையும் பொய்களையும் எழுதுபவர்கள் சொந்தப் பெயர்களில் எழுதும் துணிவோடு இருக்கிறார்கள். ஆனால் உண்மைகளை எழுதுபவர்கள் சொந்த முகத்தோடு வராமல் புனைபெயரில் வருகிறார்கள். இந்த விவாதங்கள் இப்படியே தொடருவதை நிறுத்தி உண்மைகள் வெளிவருவதற்கு இன்று மெளனமாக இவைகளை பார்த்துக் கொண்டிருக்கும் தோழர்கள் ரகுமான் யான் / அசோக் / குமரன் போன்றவர்கள் தங்கள் மெளனத்தை கலைக்கவேண்டும். உண்மைகளை எழுத வேண்டும். இல்லாவிட்டால் பொய்களும் புரட்டுக்களும் சேறடிப்புக்களும் வரலாறாகிவிடும்
நேசன் போலவே பதுங்கள் சிறியறும் தன் காலம் பூராகவும் யாரோ சிலருடைய அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டுக்கொண்டே வருகின்றார். முன்னர் உமாவாலும், இப்போது சுத்து நியூட்டன் போன்றவர்களால் பயன்படுத்தப்படுகிறார். இவரும் அரசியல் ஆளுமை கொண்டவராக மாறவேண்டும்.
எனக்கு அசோக், நேசன், சிறி, ரயாகரன் எல்லோரையும் நன்றாக தெரியும் எல்லோரும் தங்களை தியாகம் செய்தவர்கள் தான் ..கருத்து வேறு பாடு இருக்கலாம்.. சேறு பூசாமல், கருத்து ரீதியாகப் போராடிக் கொண்டு ஒற்றுமையாக பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்கலாம் தானே?? எல்லோரையும் எனக்கு நன்றாக்ப் பிடிக்கும் ..மாறி மாறி சேறு பூசுவதைத்தவிர…
“ பொய்யுகளும், புரட்டும்களும் எதிர்ப்புரட்சியாளர்களின் ஆயுதமே அன்றி புரட்சியாளர்களின் ஆயுதம் அல்ல“ -என லெனின் மிக மிக தெளிவாகத்தான் சொல்லியுள்ளார். ஆகவே இதில் யார் புரட்சியாளர், யார் எதிர்ப்புரட்சியாளர்கள் என்று மக்களுக்குத் தெரியும்!
சிறி தளத்தில் ( இலங்கையில் ) பழக்கம், மிக நல்ல மனிதர். ஆனால் பிழைகள் நடந்தால் கண்டும் காணாதது போல் இருப்பார். அதனால் நாளடைவில் இப்படி ஒரு கெட்ட பெயர் வந்து இருக்கலாம்….
யாழ் மேளாதிக்கச் சமூக்த்தின் கனவுகளுக்கு புலிகள் பல விதத்தில் வடிவம் கொடுத்தனர்.
அவற்றில்…..
ஒன்றுதான் முஸலீம் மக்களின் கொலையும், வெளியேற்றமும்மாகும். இந்த ஈனச்செயலை சகல மக்களும் கண்டித்ததோடு முஸலீம் மக்களின் நியாயப்பாட்டை ஏற்றதோடு அல்லாமல் முஸலீம் மக்களிற்கு சுயநிர்ணய உரிமை வேண்டும் என குரல் கோடுத்தனர். ஆனால் நியூட்டன் குழுவினாரோ தம்மை மாக்சியவாதிகளாக பிரகடணப்படுத்திய போதும் இதற்கு எதிர்மாறான நிலைப்பாடையே எடுத்தனர்.
லெனின் – ஸடாலின் ஆகியோரின் சுயநிர்ணய உரிமை கோட்பாட்டை நிராகரித்தனர்.!
இவர்களின் முஸலீம் விரோதப் போக்கு பற்றி சிறியருக்கு நன்கு தெரியும்.
இரண்டு கருணா அம்மான் பிரிவின் போது புலிகளின் ஊடகங்கள் கிழக்கு மாகாண விரோத பிரச்சாரங்களை தீவிரப்படுத்தினர்.
நியூட்டன் குழுவினரும் தம் பங்கிற்கு `ரி.பி.சி` வானொலியில் வாய் கூசாது கிழக்கு மாகாண விரோத கருத்துக்களை முன்வைத்தார். `ரி.பி.சி` வானொலி கேட்கும் நேயர்கள் திகைத்துப் போயினர். ( இதன் பின்னரே இவர்களுக்கும் `ரி.பி.சி` வானொலி, தேனீ இணையத் தளத்துடனான நெருக்கம் குறைந்தது )
இவை ஆதார பூர்வமான வரலாறுகள். தற்போது யாழ் மேளாதிக்க கருத்துகளுக்கு வெள்ளைச் சாயம் பூசி மறைத்து விட முயற்சி செய்கின்றனர்.