சோபாசக்திக்கு:
குறிப்பு :01
ஹற்றன் நஷனல் வங்கி பணம் சம்பந்தமான ஆதாரங்களை இரயாகரனே தனது பதிவுகளில் வழங்கியுள்ளார். அதன் அடிப்படையிலேயே எம் கேள்விகளை- குற்றச்சாட்டுக்களை முன் வைக்கின்றோம். இது பற்றி, கேள்வி பதில் -பகுதி 04ல் விபரமாக எழுதப்பட்டுள்ளது.
மக்களின் அவலங்களையும் அழுகுரல்களையும் தமது சொந்த நலனுக்காகப் பயன்படுத்திக்கொள்ளும் வழியை முள்ளிவாய்க்கால் அழிவுகளின் பின்னரே அதிகமாகக் கேள்விப்படுகிறோம். ஒரு வகையில் அதன் ஆரம்பமாக ஹட்டன் நஷனல் வங்கிக் கொள்ளைப்பணம் அமைந்தது எனலாம். இலங்கை வரலாற்றில் அதிகமாகக் கொள்ளையிடப்பட்ட பணத்திற்குப் பொறுப்பாகவிருந்த ஒரு நபர் அதற்கு என்னவானது என்பது தொடர்பாகத் தெளிவுபடுத்த மறுப்பது ஏன்?.
நாம் தனிப்பட்ட ஒரு நபரின் வாழ்க்கை விவரங்களைக் கோரவில்லை. புலிகளிடம் கேட்பது போன்றே இரயாகரனிடமும் கேட்கிறோம். புலிகளின் முக்கிய பிரமுகர்கள் பல பணத்தை பல வழிகளில் மூலதானமாக்கியுள்ளதாக சந்தேகம் எழுப்புகிறோம். இரயாகரனின் கணக்குக் காட்டப்படாத பணமும் அவ்வாறே தனிப்பட்ட தேவைகளுக்கு முதலீடு செய்யப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுப்புகிறோம். இதனைத் தெளிவுபடுத்தும் பணி எம்மைச் சார்ந்தது இல்லை. இரயாகரனுடையது. அவர் பருமட்டான கணக்கு விபரத்தை முன்வைத்தாலே சந்தேகங்கள் எழாது. இது இரயாகரனுக்கு மட்டுமல்ல புலிகளுக்கும் பொருந்தும்.
நீங்கள் உங்கள் நண்பர் ரயாகரனின் உரிமைகள் மீது அக்கறையுள்ளவராக இருந்தால், மக்கள் பணத்தின் கணக்குவிபரங்களை முன்வைக்கக் கோருங்களேன். எம்மைக் கடிந்துகொள்வதில் பயனில்லை. அவர் விபரங்களை தெளிவாக விபரங்களை முன்வைத்தால் நாம் அவதூறு செய்கிறோம் என்று நிரூபணமாகிவிடுமல்லாவா?
மக்களின் கோடிக்கணக்கான பணங்களை புலிகளும், புலிகளின் பினாமிகளும் தங்களின் பெயர்களில் முதலீடு செய்துள்ளமை பற்றி நாம் கேள்விகளை, குற்றச்சாட்டுக்களை, விமாசனங்களை எழுப்புகின்றோம். எந்த ஆதாரத்தின் அடிப்படையில்?
மக்களின் பணத்தை கொள்ளை கொண்ட மக்கள் விரோதிகள்- மோசடிப் பெயர்வழிகள் ஆதாரங்களை வைத்துக் கொண்டு முதலீடுகளை-பணத்தை பதுக்குவதில்லை. அதற்காக புலிகளின் முதலீடுகள் பொய் என்றோ புனைவென்றோ ஆகிவிடுவதில்லை.
மேலும் எம்மால் கேள்விக்கு உள்ளாக்கப்படும் “நபர்” ‘’கள்ள மெளனம்’’ சாதிக்க, எம் கேள்வியின் நியாயத்தின் வீச்சம் கண்டு, பயம் கொண்டு, அந்த ‘’நபரை’’ காப்பாற்றுவதன் மூலம் தங்களின் ‘’மக்கள் விரோத அரசியலை’’ காப்பற்றிவிட முடியுமென நினைக்கும் சில ‘’நபர்களின்’’ செயல்பாடுகளை நாம் என்னவென்னபது? இதுதான் மக்கள் விரோத அரசியலின் கூட்டிணைவு என்பதோ ! .
குறிப்பு :0 2
இரயாகரனுக்கு எனது எழுத்துக்களிலிருந்து நீதி கிடைக்க வேண்டும் என்று உங்களுக்கு மனிதாபிமானம் பிறந்தபோது தான் எட்டு வருடத்தின் முன்னைய ‘’பிளாஸ்க் பாக்’’ எனக்கு ஓடியது. தவிர சம்பவம் பற்றி எனக்கு அக்கறை கிடையாது. நீங்கள் குற்றம் சுமத்திய அப்பாத்துரையோடு சமரசம் செய்து கொண்டு நண்பராகி விட்டீர்கள். அவர் பாதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. ஆக, சம்பவம் தொடர்பான எனது அக்கறை என்பதைத் தவிர ; அது கையாளப்பட்ட முறைமை என்பதே எனது குறிப்பின் தொனிப்பொருள். அதே ‘’முறைமை’’ மீண்டும் மீட்டப்படுகிறது என்பதைக் காட்டவே முன்னைய சம்பவத்தைக் குறிப்பிட வேண்டியதாயிற்று.
ஒரு பெண் ஏன் சட்ட நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று என்னிடம் கேட்காமல் அந்தப் பெண்ணிடமே நீங்கள் கேட்டிருந்தால் பெண், அதுவும் இந்தியத் தமிழ்ப் பெண் என்ற அடிப்படையில் உங்களுக்குப் பதில் கிடைத்திருக்கும். இதே கேள்வியை உங்களிடம் நான் கேட்டுத் தொலைத்திருக்க வேண்டும் என்று தோன்றியது சோபா ; பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக வழக்குப் போடலாம் எனக் கருதும் நீங்கள், பாதிக்கப்பட்ட இரயாகரனுக்காக நீங்கள் ஏன் வழக்குப் போடமுடியாது?
இலங்கையில் கிராமங்களில் கூட குடும்பங்களிடையே இவ்வாறான சிக்கல்கள் உருவாகுவது வழமை. ஆனல் பெண்ணின் வாழ்க்கை பாதிக்கப்படக் கூடாது என்ற பொதுப் புத்தி சாதாரண மனிதாபிமானியிடம் கூட காணப்படும் ஒன்று. இப்போது வரைக்கும் அது ‘’மெய்யா- பொய்யா’’ என விவாதித்து பெண்கள் ஒடுக்கப்படும் சமூகம் ஒன்றில் அவரைத் தெருவுக்கு இழுக்கிறீர்களே, அதுதான் உங்கள் பாலியல் வன்முறையின் உச்சம்.
உங்களுக்குப் ‘’புரவலர்கள்’’ இருப்பதற்கான ஆதாரம் கேட்கிறீர்கள் சோபா!. நீங்கள் தலித்தியம், பின் நவீனத்துவம் போன்ற இத்தியாதிகளைத் துறந்துவிட்டு சட்டத்துறையில் இறங்கியுள்ளீர்களோ என சந்தேகம் ஏற்படுகிறது. இனி, சட்டத்துறையில் இறங்கியதற்கான ஆதாரத்தைக் கேட்டுத் தொலைத்துவிடாதீர்கள்.
சோபாசக்தி, உங்களுக்கும் – எனக்குமான உரையாடல் தொடரப்படவேண்டியது அவசியமாகின்றது. பேசியவை- பேசப்படாதவை பற்றி நாம் பேசவேண்டும். வெறும் சம்பவங்களின் கோர்வைகளாக எம் உரையாடல் தொடர்வதை தவிர்த்து சம்பவங்களின் பின்னாலான ‘’அரசியலை’’ கோட்பாட்டுத் தளத்தில் அணுக விரும்புகின்றேன். இதன் மூலமே மக்கள் நலன் சார்ந்த அரசியலை நோக்கி இவ் உரையாடலை நகர்த்திச் செல்ல முடியுமென நினைக்கின்றேன்.
எனினும் இத் தொடரில் இவற்றை தொடர்வது எம் நண்பர்களுக்கும் தோழர்களுக்கும் வாசகர்களுக்கும் உவப்பற்ற – இடைஞ்சலாக இருப்பதாக விசனம்- அதிருப்தி கொள்கின்றனர். எமது உரையாடல் ‘முக்கியம்’ எனினும் அவற்றின் அரசியல் முன்வைக்கப்பட வேண்டும் எனக் கருதுகின்றனர். அவற்றை இப் பகுதியில் தவிர்க்கும்படி கோருகின்றனர். இந்த கேள்வி பதில் தொடரை விரைவில் பூர்த்தி செய்யலாமென நினைத்துள்ளேன். இதன் தொடர்ச்சியாக நம் உரையாடலை இத் தளத்திலேயே தொடங்குவோம். அதுவரை சற்று அவகாசம் கொள்வோம்.
அசோக் தங்களிடம் இரண்டு சமபவங்களை கேட்க விரும்புகின்றேன் சம்பவங்கள் நடைபெற்ற போது நீங்கள் மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பாளராக இருந்தீர்கள்.. 1.மட்டக்களப்பு சிறை உடைப்பு 2. மட்டக்களப்பு கச்சேரி துப்பாக்கி கொள்ளை. இந்த இரண்டு சமபவங்களையும் PLOT செய்ததா ? உண்மைகளை விபரங்களை அறிந்துகொள்ள விரும்புகிறேன்.
தயாளன்
சிறை உடைப்பைப் பற்றி முதலில் பேசுவோம்.
இச் சிறை உடைப்புக்கு முக்கிய உதவிகரமாக இருந்தவர்கள் சிறைக் காவலர்கள்தான். அவர்களின் உதவியின்றி இது சாத்தியப்பட்டிருக்க முடியாது. அதிலும் குறிப்பாக கிருஸ்ணமுர்த்தி (புளொட்டில் இணைந்து பி.எல்.ஒ பயிற்சி பெற்ற தோழர் பிரசாத்.) அவர்களின் பங்களிப்பும் செயற்பாடும் மிக மிக முக்கியமானது. அத்தோடு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முண்னனி (ஈ.பி.ஆர்.எல்.எப் ) தோழர்களின் ஒருங்கிணைந்த செயல்பாடும் குறிப்பி டத்தக்கது.
மட்டக்களப்பு சிறையிலிருந்த தோழர்கள் வேறு சிறைக்கு குறிப்பிட்ட காலத்திற்குள் மாற்றுவதற்கான ஏற்பாடுகள் நடப்பதாக நாம் அறிந்தோம். எனவே விரைவாக தோழர்களை அங்கிருந்து வெளியில் எடுக்கவேண்டிய அவசிய நிலை எங்களுக்கு உருவாகியது. அந் நேரத்தில் எங்களிடம் எந்தவித ஆயுதங்களும் இருக்கவில்லை. எனவே ஆயுதங்களை அவசரமாக பெறவேண்டி தோழர் காந்தன் (ரகுமான் ஜான் ) பின் தளத்திற்கு சென்றார். அவரின் வருகையை நாங்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தோம். ஒருநாள் இரவு வெறுங்கையோடு காந்தன் வந்துசேர்ந்தார்.
( இக் காலங்களில் நான் கடுமையான பொலிஸ் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டிருந்தேன். எனவே எங்கள் வீட்டில் உறங்காமல் அன்றிரவு நண்பனின் வீட்டில் தங்கினோம். அன்று அதிகாலை என் வீடு பொலிசாரால் சுற்றிவளைக்கப்பட்டது. அந்தளவிற்கு மோசமான சூழ்நிலையே அன்றிருந்தது.)
ஆயுதமற்ற நிலை எங்களை சோர்வுக்குள்ளாக்கியது. இது எங்களுக்கு பலத்த ஏமாற்றமாக அமைந்திருந்தது. இந்த நேரத்தில் ஈ பி ஆர் எல் எப் தோழர்களும் சிறையுடைப்பு சம்பந்தமான முயற்சிகளில் ஈடுபடுவதாக அறிந்தோம். அவர்களோடு தொடர்புகளை கொண்டோம். ஈ பி ஆர் எல் எப் தோழர்கள் தங்களிடம் ஆயுதம் இருப்பதாக கூறினார்கள். ஆனால் அவர்களிடமும் ஆயுதங்கள் இருப்பதற்கான அறிகுறிகளை காணமுடியவில்லை.
(யோகராஜா என்றொரு ஈ பி ஆர் எல் எப் தோழர் கல்முனையில் இருந்தார். அவர் தன்னிடம் இயந்திர துப்பாக்கி இருப்பதாக என்னிடம் கூறினார். எங்களுக்கு மகிழ்ச்சியும் நம்பிக்கையும் உருவாகியது. அதைவிட எனக்கு ஒரே ஆர்வம் அந்த துப்பாக்கியை பார்த்துவிடவேண்டுமென்று. புகைப்படங்களில் மாத்திரமே இயந்திர துப்பாக்கியை நான் பார்த்திருக்கின்றேன். எனவே இதைப் பார்க்க தோழரைத் தேடி பல தடவை சென்றும் கண்ணால் அதை பார்க்கவே முடியவில்லை. பிறகுதான் தெரிந்தது தோழர் எமக்கு ‘’கரடிவிட்டார்’’ என்று.)
அதன் பின் நாங்கள் சில இடங்களிலிருந்து சாதாரண துப்பாக்கிகளை பறிமுதல் செய்தோம்.( பறிமுதல் என்பது கௌரவ வார்த்தை!!!) அத் துப்பாக்கிகளை சிறிய வடிவமாக்கினோம். இன்னும் கடும் தேடுதலுக்குப் பிறகு பிரயோசனமற்ற கைத் துப்பாக்கிகள் சில கிடைத்தன. அவற்றில் ஒன்றிரண்டு வேலை செய்யும் .
பால் ரின்னை வெடி மருந்து நிரப்பி “பாம்” செய்தோம். அவற்ரைக் கொழுத்துவதற்கு தீப்பெட்டி , லையிற்றர். இவைகளே மட்டக்களப்பு சிறையுடைப்புக்கான எமது ‘’பெரும் ஆயுதங்கள் !’’.
அத்தோடு இந் நேரத்தில் தோழர் மாசிலாமணியை பங்களிப்பை நினைவு கூறுவது மிக அவசியம். அவர்தான் சிறைச்சாலை கதவு திறப்புக்களை செய்து உதவியவர். அவரின் இந்த உதவியின்றி சிறைச்சாலை கதவுகளை திறந்திருக்க முடியாது.
நான் பொலீசாரினால் கடுமையாக தேடப்பட்டுக் கொண்டிருந்தமையால் சிறை உடைப்பு சம்பவத்தில் நேரடியாக கலந்து கொள்ளவில்லை. தோழர்களே சென்றார்கள். (குறிப்பாக தோழர்கள் வாசுதேவா, ஈஸ்வரன், சங்கர், ஜீவா, கணன், கராட்டி அரசன், சசி, விஜீ போன்றோர் முக்கியமானவர்கள். ) ஈபிஆர்எல்எப் தோழர்களும் துணை நின்றார்கள். இவர்கள் எல்லோருடைய ஒத்துழைப்போடுதான் மட்டக்களப்பு சிறையுடைப்பு நடைபெற்றது.
காந்தியம் அமைப்பு வவுனியா போன்ற எல்லா இடங்களிலும் தடைசெய்யப்பட்டிருந்தபோதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதன் சேவை ஓரளவு நடைபெற்றது. பாலர் பாடசாலைகள் இயங்கின. இச் சிறையுடைப்பு நடவடிக்கைகளில் மற்றும் சிறைகளிலிருந்து வெளியேறிய தோழர்களின் போக்குவரத்திற்காக காந்திய வாகனங்கள் பயன்பட்டதனால் காந்திய நடவடிக்கைகள் தடைசெய்யப்பட்டு காந்திய வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன காந்தியத்தில் வேலை செய்த பலரும் பொலீஸ் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டார்கள் என்பது வரலாறு.
பின் தளத்தில் இச் சிறையுடைப்பு சம்பந்தமாக புளொட்டும் ஈ பி ஆர் எல் எப் உம் தனித்தனியாக உரிமைகோரி ‘’அறிக்கைப்போர்’’ நடாத்தினர். இதனால் மனக் கசப்புக்களும் இடம்பெற்றன. இதன் தாக்கம் யாழ்பாணத்திலும் எதிரொலித்தது.
இதில் சம்பந்தப்பட்ட இரு அமைப்புக்களும் புரிந்துணர்வு அடிப்படையில் தோழமையோடு இணைந்து கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்க முடியும். ஆனால் நிலப்பிரபுத்துவ – ‘’உடமை கொள்ளும் சமூக மன’’ கட்டமைப்பையும், அதன்சார் வர்க்க நிலையின் எச்ச சொச்சங்கள், தனித்த அதிகார ஆளுமை ஆசை, கதாநாயக விம்பம் போன்றவற்றின் பிடியின், அகப்படலில் சிக்குண்ட இரு அமைப்புத் தலைமைகளும் இதற்கு தயாராக இருக்கவில்லை. இந்த அறிக்கை போர்களுக்கு அன்றைய நிலையில் எமக்கு நம்பிக்கை தரக்கூடிய சக்திகளாக இருந்த தோழர்களும் துணை போனது எமக்கு வேதனையைத் தந்தது. இந்த அறிக்கைப் போர் தோழமையோடு இருந்த ஈபிஆர்எல்எப் தோழர்களுக்கும் எங்களுக்குமிடையில் முரண்பாட்டை ஏற்படுத்தி, பரஸ்பரம் நம்பிக்கையின்மையையும் உருவாக்கி விட்டது. இந்த விடயத்தினால் நான் தனிப்பட்ட வகையில் பாதிக்கப்பட்டேன்.
மட்டக்களப்பு சிறையுடைப்பை தெரிந்தவன், அதனோடு சம்பந்தம் கொண்டவன் என்ற அடிப்படையில் இந்த அறிக்கைப் போர் எனக்கு உடன்பாடானதாக இருக்கவில்லை.
(சமீபத்தில் டேவிட் ஐயா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை -உரையாடலை ஒளிப்பதிவு செய்தோம். அதில் டேவிட் ஐயா சிறையுடைப்பு சம்பந்தமான மிகவும் சுவாரசியமான சம்பவங்களை நினைவு கூர்ந்தார். சுமார் 6 மணித்தியாலம் கொண்ட இந்த ஒளிப்பதிவு மிக முக்கியமான ஆவணமாகும்.)
‘’சிறை உடைப்பு’’ என்பதைவிட ‘’சிறை திறப்பு’’ என்ற சொல்லாடலே பொருத்தமாக இருக்க முடியுமென நினைக்கின்றேன்.
2. மட்டக்களப்பு கச்சேரி துப்பாக்கி கொள்ளை. :
மட்டக்களப்பு கச்சேரி துப்பாக்கிகளை பறிமுதல் செய்யும் திட்டம் எங்களுக்கு இருந்தது. இதற்கான வரைபடம், ரெக்கி, ஏனைய அவதானிப்பு நடவடிக்கைகளை தனிப்பட்ட நண்பர் ஒருவர் செய்திருந்தார். சிறையுடைப்பு நடைபெற்றதினால் நாங்கள் கடுமையாக தேடப்பட்டோம். சில தோழர்கள் மட்டக்களப்பைவிட்டு வேறு இடங்களுக்கு தலைமறைவாகிப் போனார்கள். இதனால் கச்சேரி விடயம் செய்வது சாத்தியம் இல்லாமல் இருந்தது.
இந்தநேரத்தில் நானும் சில தோழர்களுமே மட்டக்களப்பில் மிஞ்சியிருந்தோம். வாசுதேவாவும், ஈஸ்வரனும் சிறைத்தோழர்களோடு சென்றிருந்தார்கள். அக் காலத்தில் எமது நண்பர்கள் சிலர் மட்டக்களப்பில் தனி இயக்கம் தொடங்குவது பற்றி விருப்பத்தோடும் திட்டத்தோடும் இருந்தார்கள். சிறையுடைப்பிற்கு பின் இவர்களின் தனி இயக்கத் திட்டம் மீண்டும் உயிர்ப்பித்தது. எங்களால் செய்ய முடியாமல் கைவிடப்பட்ட மட்டக்களப்பு கச்சேரி துப்பாக்கி பறிமுதல் திட்டத்தை இவர்கள் செய்ய திட்டமிட்டார்கள். இதற்கான வரைபடம் ரெக்கி பார்த்தவர் இவர்களின் நெருங்கிய நண்பராகவும் இருந்தார். .
நண்பர்களால் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டு அது எனது கிராமத்தில் பாதுகாப்பாக புதைத்து வைக்கப்பட்டது. துப்பாக்கிகள் வைக்கப்பட்ட இடம் எனது கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்குத் தெரிய அவர் பலரிடம் சொல்லி துப்பாக்கிகளை தோண்டி எடுத்து தங்கள் தங்கள் வீடுகளுக்கு கொண்டு சென்றுவிட்டார்கள். நண்பர்கள் சென்று பார்த்தபோது அங்கு எதுவுமே இல்லை. மொத்தம் 52 துப்பாக்கிகள். பின் விபரம் கண்டுபிடித்து எனது நண்பர்கள் கிராமத்தவர்களின் வீடு சென்று கேட்டபோது அவர்கள் கொடுக்க மறுத்து விட்டார்கள். இதனால் என் ஒத்துழைப்பை கோரினார்கள். நான் நேரடியாக செல்லவேண்டிய நிலை உருவானது. இதன் பின்னால் உள்ள அபாயத்தை விளங்கிக்கொள்ளாமல் வீடுகளில் வைத்திருந்தார்கள்.
நிலமையை விளங்கப்படுத்தி துப்பாக்கிகளை பெற்றுவந்தோம். இதன் பின் பொலிசாருக்கு விடயம் தெரிந்து நாங்கள் மிகக் கடுமையாக தேடப்பட்டோம். நண்பர்களும் நானும் வெவ்வேறு திசைகளில் தலைமறைவானோம்.
இந் நேரத்தில் எனது கிராமத்தில் வேறொரு இடத்தில் வைக்கப்பட்ட துப்பாக்கிகளை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றவேண்டிய அவசிய நிலை ஏற்பட்டது. என்னால் கிராமத்திற்கு போகமுடியாத சூழல். நண்பர்களாலும் போகமுடியாத நிலமை. பிரச்சனை அற்ற, பொலீசாருக்கு சந்தேகம் வராத ஒருவரை கிராமத்திற்கு அனுப்பி விபரம் சொல்லவேண்டிய நிலை.
என் நண்பர் ஒருவரின் ஆலோசனைப்படி சிவராமின் உதவியை நாடினேன். சிவராமை எனக்கு முன்னரே தெரியும். மட்டக்களப்பு ‘’வாசகர் வட்டத்தின்’’ ஊடாக எனக்கு அறிமுகமானவர். எனது கிராமத்தில் நாங்கள் ‘’இளந்தளிர் வாசகர் வட்டம்’’ ஒன்றை நடாத்தி வந்தோம். இதற்கூடாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடாத்தினோம். நாங்கள் நடாத்திய இலக்கிய கருத்தரங்குகளில் சிவராம் பேச்சாளராக கலந்துகொண்டிருந்தார். எனவே பழக்கமான சிவராமை எனது கிராமத்திற்கு அனுப்பி நண்பர்களை சந்திக்க வைத்து விபரம் கூறச் செய்தேன்.
இவ் கச்சேரி துப்பாக்கி பறிமுதல் நடந்தது பற்றி பின் தளத்தில் கேள்விப்பட்ட புளொட் தலைமை இதனைச் செய்தது புளொட் என அறிக்கைவிட்டது. இது தவறான புரிதலின் அடிப்படையில் நடந்தது. புளொட் செய்வது பற்றிய திட்டமிருந்ததினால் ‘புளொட்தான் செய்திருக்கும்’ என்ற அனுமானத்தில் இவ் அறிக்கை வெளியிட்டதாக பின்னர் சொல்லப்ட்டது.
காலப்போக்கில் இயக்கம் தொடங்க நினைத்த நண்பர்கள் பாதுகாப்பு காரணம் கருதி தமிழ் ஈழவிடுதலைப் புலிகளோடு இணைந்தார்கள். அதன் பின் நண்பர்களை தமிழ் ஈழவிடுதலைப் புலிகளாக நான் சந்தித்தேன். அவர்களிடமிருந்த நட்பு, நேசம் அனைத்தும் காலவதியாகி நண்பர்கள் வேறுபட்டு நின்றார்கள். புலிகளின் பாசறை அவர்களுக்கு நிறைய ‘’வஞ்சகங்களை’’ கற்றுக் கொடுத்திருந்தது.
ஒரு தடவை என் நண்பன் ஒருவனை சென்னை வள்ளுவர் கோட்டத்திற்கு அருகில் தற்செயலாக சந்தித்தேன். முழுமையாக மாறியிருந்தான். மட்டக்களப்பில் நிறையப் பேருக்க ‘’வெடி’’ வைக்கவேண்டுமென்றான்.
அதில் நானும் ஒருவன் என்றான். நான் சந்தோசமாக வாழ்த்துக்கூறி முன்னாள் நண்பனிடமிருந்து விடைபெற்றேன்.
இப் பதிவுகளில் குறிப்பிடவேண்டிய முக்கிமான நண்பர்கள், தோழர்கள் சிலரின் பெயர்களை அவர்கள் நாட்டில் இருப்பதன் காரணமாக அவர்களின் பாதுகாப்பு கருதி தவிர்த்துள்ளேன்.
(சம்பவங்களை சுவைபடக் கூறல் ஒரு கலை. அதற்கு திறமையும், தேர்ச்சியும் வேண்டும். இவ்விடயத்தில் நான் பூச்சியமே !. இதனால் சம்பவங்களை “சம்பவங்களாக” கூற மாத்திரமே என்னால் முடிந்திருக்கிறது.)
I hear that they are going to build a new prison for Batticaloa else where. Then who are the guys that are lingering in the prison here now.
அசோக்!
மட்டக்களப்பு சிறையுடைப்பில் தம்பாபிள்ளை மகேஸ்வரன் அமைப்பின் பங்களிப்பு பற்றி நீங்கள் எதுவும் குறிப்பிடாதது ஏன்?
கிழக்கு மாகாணத்தில் “சென்ரல்காம்ப்” பொலிஸ் நிலைய தாக்குதல் புளட் அமைப்பு செய்ததாக உரிமை கோரப்பட்டதே. இது உண்மையா?
//சோபாசக்திஇ உங்களுக்கும் – எனக்குமான உரையாடல் தொடரப்படவேண்டியது அவசியமாகின்றது. பேசியவை- பேசப்படாதவை பற்றி நாம் பேசவேண்டும். வெறும் சம்பவங்களின் கோர்வைகளாக எம் உரையாடல் தொடர்வதை தவிர்த்து சம்பவங்களின் பின்னாலான ‘’அரசியலை’’ கோட்பாட்டுத் தளத்தில் அணுக விரும்புகின்றேன். இதன் மூலமே மக்கள் நலன் சார்ந்த அரசியலை நோக்கி இவ் உரையாடலை நகர்த்திச் செல்ல முடியுமென நினைக்கின்றேன்.
எனினும் இத் தொடரில் இவற்றை தொடர்வது எம் நண்பர்களுக்கும் தோழர்களுக்கும் வாசகர்களுக்கும் உவப்பற்ற – இடைஞ்சலாக இருப்பதாக விசனம்- அதிருப்தி கொள்கின்றனர். எமது உரையாடல் ‘முக்கியம்’ எனினும் அவற்றின் அரசியல் முன்வைக்கப்பட வேண்டும் எனக் கருதுகின்றனர். அவற்றை இப் பகுதியில் தவிர்க்கும்படி கோருகின்றனர். இந்த கேள்வி பதில் தொடரை விரைவில் பூர்த்தி செய்யலாமென நினைத்துள்ளேன். இதன் தொடர்ச்சியாக நம் உரையாடலை இத் தளத்திலேயே தொடங்குவோம். அதுவரை சற்று அவகாசம் கொள்வோம்.//
இது அவசியமானது அசோக் தொடருங்கள்.இதை வரவேற்கிறேன்.
//சோபாசக்தி, உங்களுக்கும் – எனக்குமான உரையாடல் தொடரப்படவேண்டியது அவசியமாகின்றது. பேசியவை- பேசப்படாதவை பற்றி நாம் பேசவேண்டும். வெறும் சம்பவங்களின் கோர்வைகளாக எம் உரையாடல் தொடர்வதை தவிர்த்து சம்பவங்களின் பின்னாலான ‘’அரசியலை’’ கோட்பாட்டுத் தளத்தில் அணுக விரும்புகின்றேன். இதன் மூலமே மக்கள் நலன் சார்ந்த அரசியலை நோக்கி இவ் உரையாடலை நகர்த்திச் செல்ல முடியுமென நினைக்கின்றேன்.எனினும் இத் தொடரில் இவற்றை தொடர்வது எம் நண்பர்களுக்கும் தோழர்களுக்கும் வாசகர்களுக்கும் உவப்பற்ற – இடைஞ்சலாக இருப்பதாக விசனம்- அதிருப்தி கொள்கின்றனர். எமது உரையாடல் ‘முக்கியம்’ எனினும் அவற்றின் அரசியல் முன்வைக்கப்பட வேண்டும் எனக் கருதுகின்றனர். அவற்றை இப் பகுதியில் தவிர்க்கும்படி கோருகின்றனர். இந்த கேள்வி பதில் தொடரை விரைவில் பூர்த்தி செய்யலாமென நினைத்துள்ளேன். இதன் தொடர்ச்சியாக நம் உரையாடலை இத் தளத்திலேயே தொடங்குவோம். அதுவரை சற்று அவகாசம் கொள்வோம்.// – அசோக்
இதைத் தொடருங்கள் அசோக்.மிக அவசியமானது.இரயாகரன்மீதான நமது”அவதூறுகளுக்கான”மக்கள்சார்ந்த அரசியலறமொன்றுண்டென்பதைக் குறித்தான விரிந்த தளத்திலானவொரு உரையாடலும் “இதன் வெளியில் ” அவசியமானது.
யுத்தத்துக்குப் பின்பான தமிழ்மக்களது அரசியலூக்கமானது இதைத் தவிர்த்துப் புரட்சி பேசமுடியாது.இந்தவிடத்துள் ,புலிப்பினாமிகளது சொத்துக்களை ஏலேவே, அவர்களது “தேசிய விடுதலை” அறத்தின் வழி நாம் புரிவதும் அதன்வழியில் அவர்கள் மீளவும் ,அதே கதையோடு தொடர்வதில் அனைத்தும் உறுதிப்படும்.
ஆனால் ,புரட்சி பேசுபவர்களது அரசியலுக்கு இதைப் பொருத்துவதைவிட இது, குறித்து நீண்ட உரையாடல் அவசியமானது!எனவே ,உங்கள் தொடர் எவ்வளவு விரைவாக எழுதமுடியுமோ அவ்வளவு சீக்கரம் வரட்டும்.
ஶ்ரீரங்கன்.
10.03.2013
அசோக் அண்ணா! தங்களது நேரத்தைச் செலவிட்டு மிக மிக தெளிவான பதில்ளை வழங்கியதற்கு கோட்டானு கோடி நன்றிகள். என்னுடன் உரையாட விரும்பியுள்ளீர்கள்.நெடுங்குருதி நிகழ்வின் அடிப்படையில் நீங்கள் எழுதியவற்றை வகுத்துத் தொகுத்து ஒரு நீண்ட கட்டுரையை எனது வலைப்பதிவில் இங்கே எழுதியிருக்கிறேன்:
http://www.shobasakthi.com/shobasakthi/?p=203 உங்கள் குறித்து எனது முழுமையான மதிப்பீடு இங்குள்ளது. அங்கிருந்து உரையாடத் தொடங்குவோம். வாங்க பழகிப் பார்க்கலாம்.
மிக அவசியமான தகவல்கள் காத்திரமானவையும் .இன்னும் வரணும்
நன்றி
நட்புடன் மட்டுவில் ஞானகுமாரன்.
தேவன் தம்பாப்பிள்ளை -மகேஸ்வரன் அமைப்பினர் சிறை உடைப்பிற்கு வெளியிலிருந்து பங்களித்தமைக்கான சாத்தியங்கள் நான் அறிந்தவரை இல்லையென்றே நினைக்கின்றேன். சிறைக்குள் அவர்கள் தோழர்கள் சிறைப்பட்டு இருந்தமையால் அங்கு அவர்களின் ஒத்துழைப்புக்கான சாத்தியங்கள் உண்டு. ஆனால் நான் அறிந்திருக்கவில்லை.
அம்பாறை- சென்றல் காம்ஸ் பொலீஸ் நிலையத் தாக்குதல் பாதுகாப்பு பேரவை தோழர்களினாலேயே நாடத்தப்பட்டது. இது புளொட் அமைப்பினால் உரிமைகோரப்பட்டது. இதனால் மட்டக்களப்பில் இரு அமைப்பிற்கும் இடையில் முரண்பாடுகளும் தோன்றின.
அசோக் அவ்வப்போது ‘லைட்’டாகத் தன்னை மார்க்ஸியவாதி என்று கூறிக்கொள்வது உண்டு. அதற்காக நாங்கள் கலங்கிவிட மாட்டோம். தன்னை ஒரு சோஸலிஸ்ட் என்று அ. அமிர்தலிங்கம் சொன்னதையே தாங்கியவர்கள் நாங்கள், இதைத் தாங்க மாட்டோமா!
செம அடி சோபா வாழ்த்துக்கள்.
இந்த சிறையிலிருந்து தப்ப வேண்டும் என்ற முடிவை முதல் தீர்மானித்தவர் தம்பாப்பிள்ளை மகேஸ்வரந்தான். அவருக்கு மட்டக்களப்பில் சிறைக்கு வெளியில் நம்பிக்கையானவர்கள் தேவைப்பட்டது இதற்கு அவர் சிறையிலிருந்த பரமதேவவுடன் இது பற்றி கதைத்தபோது
வெளியிலிருந்த சித்தாவை தொடர்வு படுத்தினார். உள்ளிருந்தவர்கள் சிறைக் காவலர்களின் உதவியுடன் சிறையை திறந்துகொண்டு வெளியே வந்தனர். இதற்கு காவலாளி கிருஷ்ணமுர்த்தியின் பங்கு முக்கியமானது. வெளியே வந்தவர்கள் தாங்கள் சார்ந்த அமைப்பை சேர்ந்தவர்களுடன் தமிழ் நாடு போய் சேர்ந்தனர்.
மகேஸ்வரன் மட்டக்களப்பில் இருந்து உடனே போகவில்லை இவர் தலைமையில் காத்தான்குடி மக்கள் வங்கி இருந்து பணம் நகை கொள்ளையடிக்கப்பட்டது. மகேஸ்வரனுக்கு துணையாக மட்டக்களப்பில் செயல்பட்டவர்கள் சித்தா , தம்பிராசா , வரதன் போன்றவர்கள்
இது இந்ததப் பக்கத்தில் பதியப் பட முடியுமா எனத்தெரியவில்லை. ஷொபா சக்தியின் வலைப் பக்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். “ஈழப் போராட்டத்துக்கு ஆதரவான நிலையெடுத்ததால் எண்பதுகளின் மத்தியில் அவர் உறுப்பினராயிருந்த பொதுவுடமைக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்.”
இதற்காகத்தான் உண்மையில் வெளியேற்றப்படாரா? அல்லது விரும்பி வெளியேறினாரா? இதை அ.மார்க்ஸ் கூட ஏற்றுக்கொள்ள மாட்டார் எனநினைக்கிறேன்.
ஷொபா சக்தி, மார்க்ஸ் உங்களுக்குச் சொன்னாரா? தேவையற்ற மகுடங்கள் தேவையில்லை .
இந்த மட்டு சிறை உடைப்பின்போது எனதுநண்பர் ஒருவரும் வெளியில் வந்தார். அப்பொழுது நான் ஒரு வெளிநாட்டில் இருந்தேன். மிகவும் பளிச் சென்றுநினைவில் இருக்கிறது. எனது நண்பர் தன்னைதானே ஒரு பெரிய புலி ஆதரவாளரெண்றும் உள்வீட்டுப் பிள்ளை என்று கூறிக்கொள்பவரும் ஒரு பாரில் தனது தற்காலிக காதலியுடன் இருந்து கொண்டு வழியால் போன என்னையும் என் நண்பனையும் இழுத்து பீற்றிக்கொண்டார், நிர்மலாவை வெளியில் எடுத்திட்டம் எண்று. ஒரு கையில் பியர் கிளாசும் மறுகையில் கியூபன் சுருட்டுமாய் அவர் இருந்து பீற்றிக்கொண்டிருந்தது இன்னும் மறக்க முடியாதது. இப்பொழுது அவர் ஒரு மேலை நாட்டில் வசதியாக இருப்பதாக கேள்வி. என்னுடன் தொடர்பு இல்லை. புலியேண்றால் என்னநிறமென்று கேட்டாலும் கேட்பார் இப்ப.நாங்கள் யாழ் மக்கள் இல்லை என்பதால் என்னை எப்பொதும் சந்தேகித்தாரோ தெரியாது. இப்படி பல யாழ்நண்பர்கள், ஆனால் அனைவரும் அப்படியில்லை. ஒன்று மட்டும் தெரியும் அவர் பெரிய சந்தர்பவாதி என்பது.
அம்பாறை மத்திய முகாம் தமிழ் மக்கள் பாதுகாப்பு பேரவையால் தாக்கப்பட்டது? ஆனால் எல்லோரும் நினைப்பது போல் அங்கு ஆயுத சண்டை நடைபெற்று முகாம் கைப்பற்றப் படவில்லை சாதாரண சீனவெடியை கொளுத்திப் போடவே பொலிசார் தப்பிச் சென்று விட்டனர். பேரவை போராளிகள் அங்கிருந்த 303 , MG , ரிபீட்டர் வகையறாக்களை கைப்பற்றிச் சென்றனர்.
கிழக்கில் அக்காலத்தில் மட்டக்களப்பில் கண்ணிவெடி தாக்குதல் ஒன்றை வெற்றிகரமாக நடாத்தி பேரவை போராளிகள் 9 பொலிசாரை கொன்றனர் இவை அக்காலத்தில் பெயர் சொல்லக் கூடிய தாக்குதலாக அமைந்து இருந்தன.
ஆக பிளாட் அமைப்பு ஏனைய இயக்கங்கள் நடாத்திய தாக்குதலை தேடி தேடி உரிமை கோரும் வறுமை நிலையில் இருந்தததாக அசோக் குறிப்பிடுகிறார். உண்மையும் தான். பிளாட் தலைமைக்கு உள்ள வறுமை நிலைமை அது.
அசோக்கின் எழுத்துநடை வாசிக்கும் ஆர்வத்தில் எந்த தடையையும் ஏற்படுத்தவில்லை, மாறாக தனிநபர் விவாதங்கள் சலிப்பை ஏற்படுத்துகின்றன. சோபாசக்தி எதிர் அசோக் விவாதம் தேவையற்றது.
வாசல் படி தாண்டா தமிழ் பெண் போலீஸ் நிலையம் செல்ல அஞ்சுவாள் எனக் கூறி தமிழ் பெண்களை சிறுமை படுத்தும் புரட்சிகர ஓடுகாலித்தனம் இங்கு தெளிவாக தெரிகிறது.
அம்பது பேர் சேர்ந்து அறிக்கையில் கையொப்பம் இட்டு அப்பெண்ணை தெருதெருவாய் மானபங்கம் செய்யும் முறையிலே இவர்களின் சோஷலிச கோமணச் சீலையில் உள்ள சீலை பேன் இவர்களின் சீத்துவத்தை பறை சாற்றி சொல்லும் போல் ………………
யாரோ ஒருத்தன் அவர்களே! இந்தக் கேள்வியைக் கூடவா புனைபெயரில் கேட்க வேண்டும். சரி போகட்டும் விடுங்கள். ஈழ விடுதலையை ஆதரித்தார் என்பதற்காக சி.பி.எம்மிலிருந்து அ.மார்க்ஸ் வெளியேற்றப்பட்டார். இதை அ.மார்க்ஸ் தனது பல்வேறு கட்டுரைகளிலும் நேர்காணல்களிலும் பதிவு செய்துள்ளார்.
அ.மார்க்ஸ் மக்கள் யுத்தக்குழுவின் வெகுஜன அமைப்பில் இருந்ததாக த்தான் அறிந்திருக்கின்றேன். எப்போது சி.பி.எம் இல் இருந்தார்? மக்கள் யுத்தக்குழுவை விட்டு விலகியபின் சி.பி.எம் இல் சேர்ந்தாரா?
மகிழ்ச்சிகள் அசோக்.
விஜய்
கச்சேரி துப்பாக்கிக் கொள்ளையை தானே செய்ததாக சிவராம கூறித்திரிந்தான்.
விஜய்,
இச் சம்பவத்தை செய்தவர்கள் 1983 க்கு முன் ஈரோஸ் இயக்கத்தின் கீழ் இயங்கிய மட்டக்களப்பு மாணவர் பிரிவிலிருந்து வெளியேறி இருந்த சில மாணவர்கள். சிறி கல்லடி, கருணாகரன் முனைததெரு மட்டுநகர், ராஜன் கல்லடி, மோகன் (கஜன்) கல்லடித்தெரு மட்டுநகர், சின்னத்தம்பி (மாறன்) களுவாஞ்சிக்குடி, ஈசன் வந்தாறுமூலை, பயஸ் நாவற்குடா, முத்து களுவாஞ்சிக்குடி இவர்கள்தான் இந்த சம்பவத்தோடு சம்பந்தப்பட்ட முக்கியமானவர்கள் இவர்கள் தங்களை ஈஸ்டன் குறுப் என்று சொல்வார்கள் சம்பவத்தின் பின் இவர்கள் குழு LTTE யுடன் இணைந்துவிட்டார்கள். இவர்களில் கஜன். ஈசன், பயஸ்,முத்து LTTE யில் இருந்த காலத்தில் வீரமரணம் அடைந்துவிட்டனர். இயக்கத்தை விட்டு வெளியேறி சிறி ,ராஜன், வெளிநாடுகளில் வாழ்கின்றனர். கருணாகரன் வெளியேறிய பின் எங்கே இருக்கிறார் தெரியவில்லை, மாறன் வெளியேறி தனது
சொந்த ஊரில் (களுவாஞ்சிக்குடி) யில் வாழ்ந்து வந்தார். 1987 இந்திய இராணுவத்துடன் வடகிழக்குக்கு வந்த இயக்கம்மொன்று அவரை கொலை செய்து விட்டனர்.
என்ன மட்டக்களப்பு சிறையுடைப்பில் ஈபிஆர்எல்எப் உப்புக்குச்சப்பாணியாக செயல்பட்டதா ? யாரிடம் கதை சொல்கின்றார்கள். அச்சிறையுடைப்பில் 47 துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டன.கிட்டத்தட்ட 415 தோட்டாக்கள் உபயோகத்துக்காக வாங்கப்பட்டன. நிறைய முஸ்லீம் இளைஞர்கள் பங்களித்தார்கள். துப்பாக்கிகளை அம்பாரைமாவட்டத்தில் இருந்து மட்டக்களப்பு ராஜேஸ்வரா தியேட்டர்வரை கொண்டுவர முஸ்லீம்களின் கார்கள் பயன்படுத்தப்பட்டன.
மேலும், தம்பாபிள்ளை மகேஸ்வரன் குரூப்புக்கும், ஈபிஆர்எல்எப் தோழர்கள் நட்பு அடிப்படையில் இலவசமாக சொட்கன்களை வழங்கியிருந்தனர். அதுமட்டுமல்ல ரிப்பிட்டர் ஒன்றும், எஸ்எல்ஆர் துப்பாக்கி இரண்டும் கடனடிப்படையிலும் வழங்கியிருந்தனர். இன்னும் அதற்கு பணம்கூட பட்டுவாடா பண்ணப்படவில்லை.
இனியொருவும்,வாசகர்களும் விரும்பினால் மட்டக்களப்பு சிறையுடைப்பின் நல்லது,கெட்டதுகளை விளக்க தயாராக இருக்கின்றேன்.
யஹியா வாஸித்
ஷோபா ஷக்திக்கு,
உங்கள்வலைப்பக்கத்தில் உள்ள அ.மார்க்ஸின் பேட்டியில் பின்வருமாறு கூறுகின்றார்.
“மாவோயிஸ்டுகள் என அறியப்படும் நக்சல்பாரி அமைப்பின் வெகுஜன இயக்கங்களே தனி ஈழம், புலி ஆதரவு முதலியவற்றைத் தீவிரமாக ஆதரிக்கின்றனர். அவர்களின் சில சமீபத்திய வெளியீடுகளை அட்டையைக் கிழித்துவிட்டுப் பார்த்தால் புலிகளின் வெளியீடு என்றே யாரும் கருதக் கூடும்.”
“ஈழப் போராட்டம் உச்சத்திலிருந்த 80களின் இறுதியில் நான் தஞ்சையிலிருந்தேன். இன்றைய மாவோயிஸ்ட் கட்சியின் மூதாதையான மக்கள் யுத்தக் குழுவில் இருந்தேன். அந்த அமைப்பில் வெகுஜன இயக்கமான ‘புரட்சிப் பண்பாட்டு இயக்கத்தின்’ சார்பாக ‘ஈழப் போராளிகளின் சிந்தனைக்கு’ என்றொரு வெளியீட்டைக் கொண்டு வந்தோம். ”
ஷோபா ஷக்தி பின்வருமாறு கூறுகின்றார்.
“அ. மார்க்ஸ், ஈழப் போராட்டத்தை அதன் ஆரம்ப காலகட்டத்திலிருந்தே ஆழமாகக் கவனித்து வருபவர். ஈழப் போராட்டத்துக்கு ஆதரவான நிலையெடுத்ததால் எண்பதுகளின் மத்தியில் அவர் உறுப்பினராயிருந்த பொதுவுடமைக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்.”
“ஈழ விடுதலையை ஆதரித்தார் என்பதற்காக சி.பி.எம்மிலிருந்து அ.மார்க்ஸ் வெளியேற்றப்பட்டார்.”
__________
அ.மார்க்ஸ் சி.பி.எம்மில் இருக்கவில்லை. மாறாக நக்சல்பாரிகளின் வெகுஜனப்பிரிவான ‘புரட்சிப் பண்பாட்டு இயக்கத்தில்” தான் இருந்தார். சி பி .எம் வேறு. நக்சல்பாரிகள் வேறு.நக்சல் பாரிகள் தமிழீழ விடுத்லையை ஆதரித்தவர்கள். இந்த வித்தியாசம் கூட ஷோபா ஷக்திக்குத் தெரியவில்லை. இங்கே “ஈழ விடுதலையை ஆதரித்தார் என்பதற்காக சி.பி.எம்மிலிருந்து அ.மார்க்ஸ் வெளியேற்றப்பட்டார்.இதை அ.மார்க்ஸ் தனது பல்வேறு கட்டுரைகளிலும் நேர்காணல்களிலும் பதிவு செய்துள்ளார்.” என்ற ஷோபா ஷக்தி யின் கூற்றுக்கு என்ன அர்த்தம் என புரியவில்லை. இதை எந்தக்கட்டுரையில் அல்லது நேர்காணல்களில் குறிப்பிட்டுள்ளார் என கூற முடியுமா? இங்கே பொய்சொல்வது ஷோபா ஷக்தியா? அல்லது அ. மார்க்ஸா?
யாரே ஒருத்தன் அவர்களே! நீங்கள் ஒரு சுத்த சோம்பேறி. ஒரு இணையச் சொடுக்கிலேயே அ.மார்க்ஸ் சிபிஎம்மில் இருந்ததைக் கண்டுபிடித்துவிடலாம். அதைவிட்டு அதிகப் பிரசங்கித்தனமாக பேச மட்டும் செய்கிறீர்கள். இதைப் படியுங்கள்: இனியாவது அதிகப்பிரசங்கித்தனத்தை நிறுத்திக்கொள்ளுங்கள்: //சிபிஎம் இயக்கத்தில் சேர்ந்த உடனேயே எனது தீவிரமான பணிகள் காரணமாக உறுப்பினராகச் சேர்த்துக்கொள்ளப்பட்டேன். அங்கே அத்தனை சீக்கிரமாக யாரையும் உறுப்பினராக்கமாட்டார்கள். தீக்கதிர் பத்திரிகையில் எழுதிய கட்டுரைகள் எழுத்துப் பயிற்சிக்கு துணையாக இருந்தது. மாதத்துக்கு ரெண்டு மூணு அரசியல் கட்டுரைகளாவது அதில் வரும். அதிலிருந்து விலகிப்போய் மற்ற விஷயங்களை படிப்பது எழுதுவது எனக்கும் கட்சிக்குமான முரண்பாடாகத் தொடங்கியது. முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துலே இருந்துகொணடே இதைப் பேச முடியாது என்பதால், கைலாசபதி இலக்கியவட்டம் வைத்து இலக்கியக்கூட்டம் நடத்துவது. கட்சி வித்தியாசத்துக்கெல்லாம் அப்பாற்பட்டு தமிழவனை அழைத்து அமைப்பியல்வாதம் குறித்து பேசவைப்பது போன்ற முயற்சிகளைச் செய்தோம். கட்சிக்கான நிலைப்பாடுகளைத் தாண்டிப் பேசுவது சிக்கலாக இருந்தது. ஐ.மாயாண்டிபாரதி சுதந்திரப் போராட்ட வீரர். நெல்லை சதி வழக்கு முதலான கம்யூனிஸ்டுகளுக்கு எதிரா போடப்பட்ட வழக்குகளிலும் பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான வழக்குகளிலும் சிறையில் இருந்தவர். தஞ்சாவூர்க் கூட்டம் ஒன்றுக்கு வந்திருக்கும்போது அவருக்கு உடல்நலமில்லாமல் போனது. அவரை என் வீட்டில் தங்கவைத்து மருத்துவரிடம் அழைத்துச் சென்று கவனித்தேன். அப்போது பேசிக்கொண்டிருக்கும்போது,அவருடைய சிறைஅனுபவம், தலைமறைவு வாழ்க்கை, போலீஸ் கொடுமை பற்றிய விஷயங்கள் ஆர்வமூட்டுவதாக இருந்தன . அதை டேப்பில் பதிவுசெய்து, பொன்.விஜயனின் புதிய நம்பிக்கை பத்திரிகையில் முதல் பாகம் வெளிவந்தது. கட்சி ஊழியர் வீரமணி நல்ல வேகமான சுருக்கெழுத்தாளர்.அதனால் அவரிடம் பதிவுசெய்த டேப்பைக் கொடுத்து குறிப்பெடுத்துத் தரச்சொன்னேன். அதை அவர் தலைமையிடம் கொடுத்துவிட்டார்.திருவாருரில் கட்சித் தலைமை அலுவலகத்தில் சங்கரய்யா போன்ற தலைவர்கள் விசாரணைக்கு அழைத்தார்கள். நானும் போனேன்.கடுமையாக என்னை எச்சரித்து என் முன்னாலேயே டேப்பை அழித்துவிட்டார்கள். திரும்பிப் பேருந்தில் வரும்போது கிட்டத்தட்ட அழுதுகொண்டே வந்தேன். இப்படித்தான் விலகல் ஏற்பட்டது.
83 ஜூலையில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான கலவரம் ஏற்பட்டது. அப்போது இலங்கையிலிருந்த முக்கியமான கம்யூனிஸ்ட் தலைவரும் தமிழருமான சண் சென்னைக்கு வந்திருந்தார். நான் அவரைச் சந்தித்துப் பேசினேன். மேலும் ஈழப்பிரச்னைக்கு ஆதரவாகக் கூட்டங்கள் பேசினேன். திருச்சியில் நான் பேசுவதைக்கு குறிப்பெடுக்க டாக்டர் ஆத்ரேயா வந்திருந்தார். என்னை மறுபடியும் விசாரணைக்குக் கூப்பிட்டார்கள்.நான் போகவில்லை. அவங்க உடனே என்னை கட்சியிலிருந்து நீக்கிவிட்டார்கள். அதற்கான உத்தரவை இப்போது பிரபலமாக மொழிபெயர்ப்பெல்லாம் பண்ணும் கி.இலக்குவன் சைக்கிளில் கொண்டுவந்து என் வீட்டில் கொடுத்தார்.
அதற்குப் பிறகு பீப்பிள்ஸ் வாரலென்கிற நக்ஸல் குழுவில சேர்ந்து கட்சி ஊழியராகவே செயல்பட்டேன்// http://amarx.org/?p=304
சிபிஎம் இயக்கத்தில் சேர்ந்த உடனேயே எனது தீவிரமான பணிகள் காரணமாக உறுப்பினராகச் சேர்த்துக்கொள்ளப்பட்டேன். அங்கே அத்தனை சீக்கிரமாக யாரையும் உறுப்பினராக்கமாட்டார்கள். தீக்கதிர் பத்திரிகையில் எழுதிய கட்டுரைகள் எழுத்துப் பயிற்சிக்கு துணையாக இருந்தது. மாதத்துக்கு ரெண்டு மூணு அரசியல் கட்டுரைகளாவது அதில் வரும். அதிலிருந்து விலகிப்போய் மற்ற விஷயங்களை படிப்பது எழுதுவது எனக்கும் கட்சிக்குமான முரண்பாடாகத் தொடங்கியது. முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துலே இருந்துகொணடே இதைப் பேச முடியாது என்பதால், கைலாசபதி இலக்கியவட்டம் வைத்து இலக்கியக்கூட்டம் நடத்துவது. கட்சி வித்தியாசத்துக்கெல்லாம் அப்பாற்பட்டு தமிழவனை அழைத்து அமைப்பியல்வாதம் குறித்து பேசவைப்பது போன்ற முயற்சிகளைச் செய்தோம். கட்சிக்கான நிலைப்பாடுகளைத் தாண்டிப் பேசுவது சிக்கலாக இருந்தது. ஐ.மாயாண்டிபாரதி சுதந்திரப் போராட்ட வீரர். நெல்லை சதி வழக்கு முதலான கம்யூனிஸ்டுகளுக்கு எதிரா போடப்பட்ட வழக்குகளிலும் பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான வழக்குகளிலும் சிறையில் இருந்தவர். தஞ்சாவூர்க் கூட்டம் ஒன்றுக்கு வந்திருக்கும்போது அவருக்கு உடல்நலமில்லாமல் போனது. அவரை என் வீட்டில் தங்கவைத்து மருத்துவரிடம் அழைத்துச் சென்று கவனித்தேன். அப்போது பேசிக்கொண்டிருக்கும்போது,அவருடைய சிறைஅனுபவம், தலைமறைவு வாழ்க்கை, போலீஸ் கொடுமை பற்றிய விஷயங்கள் ஆர்வமூட்டுவதாக இருந்தன . அதை டேப்பில் பதிவுசெய்து, பொன்.விஜயனின் புதிய நம்பிக்கை பத்திரிகையில் முதல் பாகம் வெளிவந்தது. கட்சி ஊழியர் வீரமணி நல்ல வேகமான சுருக்கெழுத்தாளர்.அதனால் அவரிடம் பதிவுசெய்த டேப்பைக் கொடுத்து குறிப்பெடுத்துத் தரச்சொன்னேன். அதை அவர் தலைமையிடம் கொடுத்துவிட்டார்.திருவாருரில் கட்சித் தலைமை அலுவலகத்தில் சங்கரய்யா போன்ற தலைவர்கள் விசாரணைக்கு அழைத்தார்கள். நானும் போனேன்.கடுமையாக என்னை எச்சரித்து என் முன்னாலேயே டேப்பை அழித்துவிட்டார்கள். திரும்பிப் பேருந்தில் வரும்போது கிட்டத்தட்ட அழுதுகொண்டே வந்தேன். இப்படித்தான் விலகல் ஏற்பட்டது.
83 ஜூலையில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான கலவரம் ஏற்பட்டது. அப்போது இலங்கையிலிருந்த முக்கியமான கம்யூனிஸ்ட் தலைவரும் தமிழருமான சண் சென்னைக்கு வந்திருந்தார். நான் அவரைச் சந்தித்துப் பேசினேன். மேலும் ஈழப்பிரச்னைக்கு ஆதரவாகக் கூட்டங்கள் பேசினேன். திருச்சியில் நான் பேசுவதைக்கு குறிப்பெடுக்க டாக்டர் ஆத்ரேயா வந்திருந்தார். என்னை மறுபடியும் விசாரணைக்குக் கூப்பிட்டார்கள்.நான் போகவில்லை. அவங்க உடனே என்னை கட்சியிலிருந்து நீக்கிவிட்டார்கள். அதற்கான உத்தரவை இப்போது பிரபலமாக மொழிபெயர்ப்பெல்லாம் பண்ணும் கி.இலக்குவன் சைக்கிளில் கொண்டுவந்து என் வீட்டில் கொடுத்தார்.
அதற்குப் பிறகு பீப்பிள்ஸ் வாரலென்கிற நக்ஸல் குழுவில சேர்ந்து கட்சி ஊழியராகவே செயல்பட்டேன் – http://amarx.org/?p=304
ஷோபா ஷக்திக்கு,
1984,1985களில் சிலதடவைகள் நான்மார்க்ஸை சந்தித்திருக்கின்றேன். அப்போது அவரை மகக்ள் யுத்தக் குழுவினராக்த்தான் சந்தித்ருக்கின்றேன். அந்த சந்திப்புகளில் அவரது கடந்தகாலம் பற்றிய உரையாடலுக்கு அவசியம் இருக்கவில்லை.
அந்த அடிப்படையியே எந்து கருத்தை இங்கு பதிவு செய்திருந்தேன். எனது முதற் பதிவுக்கே மேற்குறிப்பிட்டிருந்த மின்வலை முகவரியை மட்டும் நீங்கள் பதிவு செய்திருந்தால் நான் மீண்டும் உங்கள் பாணியில் சொல்வதானால் “அதிகப் பிரசங்கித்தனமாக பேச மட்டும் “செய்திருக்கமாட்டேன். மக்கள்யுத்தக் குழுவில் இருந்த ஒருவர் சி.பி.எம் இல் இருந்திருக்கமுடியும் என என்னால்நினைத்துக் கூடப் பார்க்க முடியாமல் இருந்தது. அது என் தவறு தான்.
என்னை நீங்கள், “ஒரு சுத்த சோம்பேறி” என அழைத்ததைநான் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். ஆனால்நான் உண்மையில் சோம்பேறியில்லை. என்தவறுக்காக உங்கள் குற்றச்சாட்டுக்களை நான் மெளனமாக ஏற்பதைத்தவிர வேறு வழியில்லை.
தவறுக்கு வருந்துகின்றேன்.
Dharmaratnam Sivaram (Taraki) got an opportunity to read for a degree at the Peradeniya Campus in 1983. He should have done that. We surrendered out Wembly and Scott Shot Gun too. More later.