குறிப்பு – 0 1
புகலிட ஈழ எழுத்தாளர் சோபாசக்தி அவர்கள் தன்னுடைய முகப் புத்தகத்தில் என் ‘’கேள்வி பதில்’’ தொடர்பாக “ஏதோ” எழுதியிருப்பதாக நண்பர்கள் சொன்னார்கள். நிதி மோசடி , நிதி ஆதாரம், அரசு சாரா நிதி நிறுவனங்கள் பற்றியெல்லாம் நான் எழுதும்போதெல்லாம் சில ‘‘நபர்களுக்கு’’ பதட்டமும், கோபமும் ஏற்படுவது இயல்பாய் போய்விடுகின்றது. என் எதிரே பாரீசில் வாழும் சோபாசக்தியின் “தினசரி வாழ்க்கை” முறையை நேரில் காண்பவன் நான் என்பதால் நிதி தொடர்பான விமர்சனங்களால் சோபாசக்தி ‘’பதட்டம்’’ அடைவதில் எந்தவித வியப்பும் இருக்கமுடியாதுதானே !.
ஒரு காலத்தில் சோபாசக்தியின் வாசகன் நான். இன்று அந்நிலை மாறிவிட்டது. சோபாசக்தியையும், அவர் எழுத்துக்களையும் ஒரு பொருட்டாகவே நான் மதிப்பதில்லை. தன்னுடைய இருத்தலுக்காக எல்லாவித “எல்லைகளையும்” கடக்கக்கூடிய , ‘’புலிகளை எதிர்கின்ற- இன்னொரு புலிதான்’’ சோபாசக்தி என்பதே என் புரிதல் ஆகும். புலிகளின் பாசறையில் பயின்று வந்த எல்லா “வஞ்சகங்களையும்” தன்னகத்தே நிரம்பப் பெற்றவராகவே இவர் இருக்கின்றார். இதனால் புலிகள் மீதான என் பயம் சோபாசக்தி தொடர்பாகவும் தொடர்கிறது.
உதாரணத்திற்கு ஒருவிடயத்தை இங்கு பதிவு செய்ய விரும்புகின்றேன்.
சில காலங்களுக்கு முன் நடந்த சம்பவம் இது.
பரிசில் அரவிந் அப்பாத்துரை என்றொரு எழுத்தாளர் உள்ளார். இவர் சோபாசக்தியின் சகோதரியின் சிநேகிதியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும், அப் பெண் அவரிடமிருந்து தப்பிவந்து தங்களிடம் முறையிட்டதாகவும் சோபாசக்தி மிகவும் ‘’தேர்ந்த துயரத்தோடு’’ எங்களிடம் கூறினார். ஒரு ‘’பெண்ணிய காப்பாளனுக்குரிய’’ கோபம், ஆத்திரம் ,துயரம் கொண்டவராக அவர் எங்களுக்கு காட்சி கொடுத்தார். நாங்களும் “பெண்ணிய காப்பாளர்கள்” என்பதை நிரூபிக்கவேண்டுமானால் இதை நம்பியே ஆகவேண்டிய நிலைக்கு கொண்டுவரப்பட்டடோம்.
அரவிந் அப்பாத்துரையின் பாலியல் பலாத்காரம் தொடர்பாக காரசாரமான கண்டன அறிக்கை சோபாசக்தியால் எழுதப்பட்டு “பெண்ணிய காப்பாளர்கள்” நாங்கள் எல்லோரும் கையெழுத்திட அது உலகம் பூராகவும் பறந்தது. சில மாதங்களுக்குப்பின் உண்மை வெளிப்பட்டது. சோபாசக்திக்கும் அரவிந் அப்பாத்துரைக்கும் ஏற்பட்ட தனிப்பட்ட முரண்பாட்டினால் சோபாசக்தி தீட்டிய ‘’சதிப் புனைவே’’ இதுவென்று.
புலிகள் ஒருவரை அழிக்கவேண்டுமானால் எத்தகைய வகைப்பட்ட “ஆயுதங்களையும்” பயன்படுத்த தயங்குவதேயில்லை. சோபாசக்தியும் அதன் தொடர்ச்சியே அன்றி வேறு ஒருவரல்ல. இதனாலேயே நான் புலிகள் மீதான பயத்தையும் இவர் மீதும் கொள்ள காரணமாக அமைந்துவிடுகின்றது.
இதைவிடக் கொடுமையானதும், அருவருப்பானதுமான சோபாசக்தியின் இன்னொரு முகத்தையும் சில காலங்களுக்கு முன் நாம் தரிசித்துள்ளோம். புகலிடத்தில் ஒரு பெண்ணை பழிவாங்கவும், அவமானப்படுத்தவும் எனத் திட்டம் இட்டு அப் பெண்ணோடு தான் ‘’உடலுறவு’’ கொண்டதாக அறிக்கை சமர்பித்ததை நாம் மறந்துவிடமுடியாது.
இந்த கேடுகெட்ட அயோக்கியத்தனங்களை ஆதரிக்கவும், ஊக்கப்படுத்தவும் சோபாசக்திக்கு பல ‘’புரவலர்கள்’’ இருக்கும்வரை சோபாசக்தி இந் நிலையை இப்படியே தொடர்வார். நாம்தான் தள்ளி நிற்கவேண்டும். இதனாலேயே சோபாசக்தி பலமுறை என்னோடு “சொறிந்த” போதிலும் நான் அவற்றிற்கு பதிலளிப்பதை தவிர்த்தே வந்ததேன்.
குறிப்பு – 0 2
சென்ற ‘’கேள்வி பதிலில்’’ பின்தள உட்கட்சிப்போராட்டம் பற்றிய பதிவில் தோழர் சண்முகலிங்கம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். இதைத் தொடர்ந்து சண்ணின் மரணச் செய்தியும் என்னை வந்தடைந்தது. என் நினைவும், சண்னின் மரணமும் சமநிலையில் நிகழ்ந்தது எனக்கு மனக் கவலையையும், அதிர்ச்சியையும் தந்தது. சண்முகலிங்கத்தை நான் 1981 ன் தொடக்க காலங்களிலிருந்தே ஞாபகம் கொள்கின்றேன். அவருக்கும் எனக்குமான உறவு நீண்டது- சுவாரசியமானது.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு விடுதலைக்குப்பின் இந்தியாவுக்கு சென்ற பின்னால் சண்னுடனான என் உறவுகள் மட்டுப்படுத்தப்பட்டுவிட்டன. எனினும் நான் பின்தளம் செல்லும்போதெல்லாம் சண்னை சந்திப்பேன். சண் இலங்கையின் சீனசார்பு கம்யூனிச கட்சியிலிருந்து தமிழ்பேசும் மக்களின் சுய நிர்ணய கோரிக்கையின் நியாயப்பாட்டை உணர்ந்து புளொட்டினுள் வந்தவர்களில் ஒருவர். அத்தோடு ‘ஐனதா விமுத்தி பெரமுன’ என்ற J.V.P யோடும் உறவுகளை வைத்திருந்தவர். காந்திய அமைப்பின் முக்கிய செயல்பாட்டாளராக இருந்தவர். பின் தளத்தில் இடம்பெற்ற புளொட்டின் உட்கட்சிப்போராட்டத்தில் காத்திரமான பாத்திரத்தை வகித்தவர்.
சண் கனடாவுக்கு புலம்பெயாந்து வந்த பின்பும் கூட அவருடைய அரசியல் சமூக செயல்பாடுகள் தொடர்ந்தன. கனடா- ‘’தேடகம்’’ தமிழ்ஈழ விடுதலைப் புலிகளினால் தீக்கிரையாக்கப்பட்டபோது அதற்கெதிரான சண்னின் கண்டனங்களும், செயல்பாடுகளும், தேடகத்தை மீள் நிர்மாணிப்பதில் அவரின் பங்களிப்பும் பதிவு செய்யப்படவேண்டியது. சண் பன்முக ஆற்றல் கொண்டவர். தேடகத்தினரால் தயாரிக்கப்பட்ட இருமொழி நாடகமான ‘’ The D.M.O ‘’ என்ற நாடகத்தில் முக்கிய பாத்திரமேற்று தன் புலமையை வெளிப்படுத்தியவர். தேடகத்தின் உறுப்பினராக இருந்து மானிட மேம்பாட்டுக்காகவும், சமூக விடுதலைக்காகவும் சண் அற்றிய பங்களிப்பு நினைவு கூறப்படவேண்டியது.
பாரிசிக்கு நான் வந்த பின்பு சண் இரண்டு தடவை இங்கு வந்துள்ளார். வரும்போதெல்லாம் நாங்கள் சந்திப்பதும் ‘நக்கலும்- நளினமும்’ நிறைந்த சண்னின் உரையாடலை கேட்பதிலும், பழைய நினைவுகளை மீட்பதிலும் நேரங்கள் கழியும். சண் சிறப்பான விபரச் சேகரிப்பாளர். ஒன்றைப்பற்றி, ஒருவரைப்பற்றி சண்னின் சேகரிப்பு பெறுமதி மிக்கதாக இருக்கும். (சில நேரங்களில் இது ‘வில்லங்கத்தனமாகவும்’ அமைந்துவிடுவதும் உண்டு. அரசியல் – சிந்தாந்த கோட்பாடுகளுக்கு அமைய அவரிடமிருந்து பெரும் தகவல்களை தரம் பிரித்துக்கொள்ளவேண்டியது அவரவர் பொறுப்பு)
பாரீஸ் வந்திருந்தபோது நண்பனும் தோழனுமாகிய கலைச்செல்வனை சந்திப்பதற்காக முதல் நாள் ரெலிபோனில் கலைச்செல்வனோடு உரையாடிவிட்டு அன்று இரவு நானும், சண்னும் நீண்ட நேரத்திற்குப் பின் படுக்கைக்கு சென்றோம். சென்ற சிறிது நேரத்தில் அதிகாலையில் ரெலிபோன் மணி அலறியது. அதிகாலையில் ரெலிபோன் மணி அலறும்போதெல்லாம் எனக்கு ஒருவித பயம் கலந்த உணர்வு ஏற்படுவதுண்டு. அம்மாவின் மரணச் செய்தியும் இவ்வாறே வந்தது. பல நண்பர்களின் மரணச் செய்தியும் இப்படியேதான் என்னை வந்தடைந்தது. தொடரும் இந்த மனநிலையோடு ரெலிபோனைத் தூக்கியதும் கலைச்செல்வனின் மரணம் பற்றிய செய்தி. நான் உறைந்தே விட்டேன். சண்னுக்கு ஒரே அதிர்ச்சி .
சண், கலைச்செல்வனின் இறுதி மரண நிகழ்வில் உரையாற்றினார். தன் கனடா பயணத்தை இரண்டு வாரங்கள் தள்ளி வைத்தார். எங்கள் துயரோடு பங்குகொண்டார். அந் நேரங்களில் சண்னின் இருத்தல் எங்களுக்கு பேருதவியாக இருந்தது.
சண் பல செயல்பாட்டுத் திறங்கள் வாய்க்கப்பெற்றவர். அந் நேரங்களில் நாங்கள் பாரீசில் மாற்று அரசியல் –கலாச்சார- பண்பாட்டுத்தளங்களில் கலந்துரையாடல்களையும், குறும்படங்களையும், புகைப்படக் கண்காட்சியையும் நடாத்திக்கொண்டிருந்தோம். இங்கு நடாத்திய குறும்பட நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியாக கனடாவிலும் சண் குறும்பட நிகழ்ச்சியை ஏற்பாடு பண்ணி இதற்கான புதிய வழித்தடம் ஒன்றை அங்கு உருவாக்கினார். புலம்பெயர்ந்த சூழலில் சிறு சஞ்சிகை விற்பனை என்பது அபூர்வமானது. நண்பர்களுக்கும், தோழர்களுக்கும் அதனை இலவசமாக கொடுக்கலாமே அன்றி அவர்களிடமிருந்து பணம்பெறுதல் என்பது முடியாத காரியம் . ஆனால் சண் எனது “அசை” சிற்றிதழை கனடாவில் விற்பனை செய்து அதற்குரிய பணத்தை முழமையாக அனுப்பியவர் என்பதிலிருந்தே அவரின் சமூக அக்கறையையும், செயல்பாட்டுத் திறனையும் நாம் விளங்கிக்கொள்ளமுடியும்.
கடைசி காலங்களில் சண்னுக்கும் எனக்குமான உறவு சற்று ‘மனவருத்தம் கொண்டதாக’ அமையப்பெற்றிருந்தது. சண், தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் கொடூரமான மனித உரிமை மீறல்களையும், கொலைகளையும் மிகத் தீவிரமாக வெளிப்படையாக துணிந்து எதிர்த்த ஒரு மானுட விடுதலைப்போராளி என்பதில் எனக்கு எந்தவித கருத்து வேறுபாடுகளும் கிடையாது. அதன் மீது எப்போதும் மதிப்பும் மரியாதையும் உண்டு. ஆனால் ‘’அரசு – பாராளுமன்றம்’’ என்ற ஐனநாயக அமைப்பு வடிவத்திற்குள் ஒழிந்திருந்து, புலிகளின் கொடூரமான கொலைகளைவிட அதிகொடுமைகளை, இனப்படுகொலைகளை செய்த ஒரு பேரினவாத ஒடுக்குமுறை அரசின் மீது அவர் கொண்டிருந்த ‘மென்மையான அரசியல் ஆதரவு போக்கு’ எனக்கு கடும் விமர்சனத்திற்குரியதொன்றாகவே கடைசிவரை நீடித்திருந்தது.
இன்று சண் இல்லை. ஒரு சகாப்தத்திற்கு முன் மரணம் பற்றிய பயம் எம்மிடம் இருந்ததில்லை. இதனைவிட்டு ‘அனைத்தையும்’ நாம் சிந்தித்தோம். இன்று அவ்வாறு இருத்தல் என்பது யதார்த்தம் அற்றதாய்விட்டது. தோழர்கள்- நண்பர்கள் ‘வரிசைக்கிரகமாக’ பயணித்துக்கொண்டிருக்கின்றார்கள். நாமும் ‘நினைவுக் குறிப்புக்களை’ எழுதிக்கொண்டிருக்கின்றோம். நாளை எமக்கும் ஒரு நண்பர் அல்லது ஒரு தோழர் எழுதக்கூடும்.
பிளாட் அமைப்பு அழிவடைய தமிழ் சமுகம் மத்தியில் ஏலவே நிலவி வந்த சமூகச் சிந்தனைகள் பிரதேச சமுக வேறுபாடுகளுடன் அமைப்பில் நிலவிய சமச் சீரற்ற தொடர்பாடல்கள் என்பவற்றுடன் பின் தளத்தில் நிலை கொண்டதால் “ரா” அமைப்பின் ஊடுருவலும் காரணமாக இருந்ததா?
S.G. Ragavan
புளொட் அமைப்பின் தலைமை சக்திகளின் தவறான போக்குகளே புளொட் சீர்குலைவதற்கு காரணமாக அமைந்ததேயன்றி தமிழ் சமூகத்தில் நிலவி வந்த சாதிய முரண்பாடுகளோ, பிரதேச வேறுபாடுகளோ அல்ல என நினைக்கின்றேன்.
. புளொட் யாழ்ப்பாண சமூகத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட அமைப்பல்ல. அது முழுக்க முழுக்க உழைக்கும் மக்களின் விடுதலையை வேண்டி உருவாக்கப்பட்டடிருந்தது. இதன் களப்பணிகள் 1983 யூலைக் கலவரத்திற்கு பின்பே யாழ்குடாநாட்டினுள் தீவிரப்படுத்தப்பட்டது. புளொட்டின் மத்திய குழுவில் பெரும்பாண்மையானோர் யாழ்ப்பாணத்திற்கு வெளியில் உள்ளவர்களே.
புளொட்டினுடைய கொள்கைப் பிரகடனம் இன்றளவும் என்னைப் பொறுத்தவரை முற்போக்கானதாகவும், மார்க்சிய வழிப்பட்ட தீர்வுகளை வலியுறுத்துவனவாகவும் அமைந்திருக்கின்றன. ‘’அனைத்து ஒடுக்குமுறைகளையும் உடைத்தெறிவோம்’’ என்ற புளொட்டின் அடிப்படைக் கோசமே அதற்குச் சான்று. தேசிய ‘விடுதலைப்போராட்டத்திற்கு ஊடாக வர்க்கப்போராட்டம்’ என்ற சித்தாந்த- செயப்பாட்டு- போராட்ட வடிவம் இதன் வெளிப்பாடே. அனால் இவை அனைத்தும் எழுத்துக்களாகவும், கீழ் அணித் தோழர்களின் கனவாகவும் இருந்ததேயன்றி இவற்றின் மீது எந்தவித அக்கறையுமற்ற நபர்களாகவே அதிகார ஆசை பிடித்த தலைமைகள் இருந்தன.
1983 யூலைக்குப் பின் யாழ்ப்பாணத்திலும் அரசியல் வகுப்புக்களும், அரசியல் மயப்படுத்தலும், களப்பணியும் தீவிரமாக உருவாகிக்கொண்டுவந்தன. இதன் காரணமாக அரசியல் கல்வியூட்டல் பிரதேச வேறுபாடுகளை , சாதிய முரண்பாடுகளை களைவதிலும், அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான – அதனை நோக்கிய வேலைத் திட்டங்களாகவும் உருப்பெற்றன. அன்றைய கால வெளியீட்டு பிரசுரங்களை அவதானித்தால் இதனை புரிந்துகொள்ளமுடியும். ‘’நிர்மாணம்’’ என்ற அரசியல்- சித்தாந்த- கோட்பாட்டு விமர்சன இதழ் சாதியம் தொடர்பாக பல்வேறு கட்டுரைகளை விவாதங்களை பிரசுரித்துள்ளது. தோழர்கள் ‘சாதிய தற்கொலையும்’, ‘பிரதேச வாத தற்கொலையும்’ செய்துகொண்டவர்களாகவே அன்றைய காலங்களில் காணப்பட்டனர். எனவே புளொட்டின் அழிவுக்கு இவற்றை காரணங்களாக சுட்டிக்காட்டுதல் தவறென்றே நான் நினைக்கின்றேன். பின் தளத்தைப்பொறுத்தவரை புளொட்டின் பயிற்சி முகாம்களில் எந்தவித பிரதேச வேறுபாடுகளோ, சாதிய முரண்பாடுகளோ இருந்ததாக நான் கேள்விப்பட்டதில்லை.
ராகவன், புளொட்டின் அழிவுக்கு றோவின் ஊடுருவல் காரணமாக இருந்ததா என கேட்டுள்ளீர்கள். அதை என்னால் உறுதிப்படுத்த முடியாமல் உள்ளது. புளொட்டிற்கும், இந்திய அரசுக்குமான உறவு ஆரம்பம் தொட்டே முரண்பாடு கொண்டதாகவே இருந்தது. இந்தியா எல்லா இயக்கங்களுக்கும் வழங்கிய இராணுவப் பயிற்சி முதலில் புளொட்டிற்கு வழங்கப்படவில்லை. பலத்த முயற்சிகளின் பின்புதான் வழங்கப்பட்டது. அதுவும் குறிப்பிட்ட எண்ணிக்கையோடு. இந்திய அரசு புளொட்டை சந்தேகக் கண்கொண்டே பார்த்தது. இதற்கு புளொட்டில் இருந்த தோழர்களின் மாவோசிய ஆதரவு நிலைப்பாடும், தென் இலங்கை இடதுசாரி தோழர்களின் உறவும், இந்தியாவில் நக்சல்பாரி தோழர்களின் தொடர்பும் ஒரு காரணமாக அமைத்திருந்தது. அத்தோடு ‘’வங்கம் தந்தபாடம்’’ புத்தக வெளியீடு, ஏனைய புளொட்டின் வெளியீடுகளில் காணப்பட்ட மார்க்சிய- மாவோசிய கருத்துக்கள் இந்தியாவிற்கு- றோவுக்கு உவப்பானதாக இருக்கவில்லை. மேலும் தமிழர் விடுதலைக் கூட்டணி ஏனைய அமைப்புக்களின் ‘‘முறையீடுகளும்’’ காரணமாக இருந்தன.
பின்தள மாநாட்டின் பின் நாங்கள் புளொட் என உரிமை கோரியபோது, நாங்கள் மாவோசிய ஆதரவாளர்கள் என்றும், இந்தியாவிற்கு எதிரானவர்கள் என்றும் உமாமகேஸ்வரன் பக்கதிலிருந்து ஒரு கதை உருவாக்கப்பட்டிருந்தது . இதுவும் நாங்கள் புளொட் என உரிமைகோருவதற்கு தடையாக இருந்தது.
மேற்கூறிய விடயங்களை முன்வைத்து ‘’றோ ‘’ திட்டமிட்டு புளொட்டை சீர்குலைத்திருக்கலாம் என்ற முடிவுக்கும் நாம் வரமுடியும். ஆனால் இந்த “முடிவு” எந்தளவுக்கு ஆதார பூர்வமானதாக இருக்க முடியுமென்பது ஆய்வுக்குரியது.
புளொட்டின் அழிவுக்கு காரணமாக நான் கருதுவது புளொட்டின் உள்ளக அதிகார போக்குகளும் அதன்வெளிப்பாடுகளாய் அமைந்த செயல்பாடுகளுமே. எனினும் இது பற்றி முழுமையாக ஆராயப்படவேண்டும். இக் ‘கேள்வி -பதில்’ பகுதியில் இது சாத்தியமற்றதென்றே நான் நினைக்கின்றேன்.
ஈஸ்வரன் பின்னாளில் மீண்டும் பிளாட் (DPLF ) அமைப்பில் இணைந்தாரா? மலையக மக்கள் முன்னணி, தலைவர் சந்திரசேகரனுக்கு ஆதரவாக இருந்த சமயம் இலங்கை படை புலன் ஆய்வாளர்களால் கடத்திச் செல்லப் பட்டு காணாமல் போகச் செய்யப் பட்டாரா? ஈஸ்வரன் பற்றிய தகவல் என்ன?
S.G. Ragavan
ஈஸ்வரன் பின்தள மாநாடு முடிந்து தளம் (இலங்கை) சென்றபின் எந்தவித அரசியல் ஈடுபாடும் கொள்ளவில்லை. தலைமறைவு வாழ்வையே அவர் மேற்கொள்ள வேண்டியிருந்தது. மலையகத்தில் சில காலம் தலைமறைவாக இருந்தார். இக் காலங்களில் மலையக மாணவர்களுக்கு ரியூசன் வகுப்புக்களை நடாத்தினார். எந்தவித கட்சிகளோடும் அவருக்கு உறவு இருக்கவில்லை.பின் சுவீஸ் புலம்பெயர்ந்து 1995ல் அவருக்கு ஏற்பட்ட முளைநரம்பு அடைப்புக் காரணமாக காலமானார்.
ஒரு நல்ல வடிவான என்னுடைய போட்டோ ஒன்றைப் போட்டிருக்கலாம்…அது ஒண்டுதான் கவலை.
கீழுள்ள கேள்விகளை பின்னூட்டமாகவோ எதிர்வினையாக அசோக் அவர்கள் கருத்தில் கொள்ளாமல் ஒரு வாசகன் (அவர்தான் என்னை வாசிப்பதில்லை நான் அவரது தீவிர வாசகனே) கேட்கும் கேள்விகளாகக் கருதி பதிலளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்:
1. நீங்கள் இராயகரன் பிரான்ஸிலும் வேறுநாடுகளிலும் வணிகத்தில் கொள்ளைப் பணத்தை முதலீடு செய்திருப்பதாக எழுதியதிற்கு நான் கண்டனம் தெரிவித்ததை முன்னிட்டே இந்தக் குறிப்பை எழுதியுள்ளீர்கள். இராயகரன் அவ்வாறு முதலீடு செய்திருப்பதாக நீங்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள் எவை? நீங்கள் ஆதாரங்களை முன் வைக்கும்வரை அவை அவதூறுகளாகத்தானே இருக்கும்? ஆதாரங்களை முன் வைப்பீர்களா? ஆதாரத்தை முன்வைக்க முடியாவிட்டால் இராயகரனிடம் பொது மன்னிப்பு கேட்பீர்களா? 2. அரவிந்த அப்பாத்துரை மீது நீங்கள் உட்பட நாம் 40 பேர்கள் இணைந்து கண்டன அறிக்கை வெளியிட்ட சம்பவம் நடந்து ஏறத்தாள 10 ஆண்டுகிளாகின்றன. ஆனால் அறிக்கை வெளயிட்ட சில நாட்களிலேயே அது எனது ‘சதி’ எனத் தெரிய வந்ததாகச் சொல்லியுள்ளீர்கள். அவ்வாறானால் என்னைத் தவிர்த்த மிகுதி 39 பேர்களும் ஏன் மறுப்பு அறிக்கையை அப்போது வெளியிடவில்லை. குறைந்த பட்சம் நீங்களாவது மறுப்பறிக்கை வெளியிட்டிருக்கலாமே ஆகக் குறைந்தபட்சம் கண்டன அறிக்கையிலிருந்து உங்களது பெயரை நீக்கச்செல்லிக் கேட்டிருக்கலாமா? ஏன் செய்யவில்லை? அதையெல்லாம் செய்யாமல் பத்து வருடப் பழசை நீங்கள் தூசி தட்டி எடுத்து வருவது அவதூறுகளால் என்னை எதிர்கொள்ளும் எத்தனமில்லாமல் வேறென்ன? 3.நீங்கள் குறிப்பிட்ட ‘பெண்’ விவகாரத்தில் எத்தனை பேர்கள் எதைப் பேசினாலும் எனது தரப்பு உண்மையிலிருந்து நான் வழுவப் போவதில்லை. நான் சொன்னது அவதூறு எனில் (வெறும் இணையத்தில் மட்டுமல்லாமல் இலட்சக்கணக்கான பேர்கள் படிக்கும் குமுதத்திலும் சொல்லியிருந்தேன்) என்மீது ஏன் சட்ட நடவடிக்கை எடுக்கக் கூடாது? நான் சொல்லியது அவதூறு எனில் பிரஞ்சுச் சட்டப்படி எனக்கு ஓராண்டு சிறைத்தண்டனை உறுதி. இப்போதும் காலம் கடக்கவில்லை. நீங்களே முன்னின்று என்மீதான அவதூறு வழக்கை ஏன் தொடுக்கக் கூடாது? ஓர் பாதிக்கப்படட் பெண்ணுக்கு நியாயம் பெற்றுத் தருவதையும் ஓர் பொய்யனுக்கு தண்டனை பெற்றுத் தருவதையும் விட உங்களுக்கு வேறென்ன முக்கியமான வேலை இருக்கிறது? 4. எனக்கு புரவலர்கள் இருப்பதாகச் சொல்லியிருக்கிறீர்கள். அப்படியிருந்தால் நல்லதுதான்…ஆனால் சமூக நலத் துறையையும் எனது குடும்ப உறுப்பினர்களையும் தவிர எனக்கு வேறெந்தப் புரவலர்களும் கிடையாது. அவர்களைத் தவிர எனக்கு வேறு புரவலர்கள் இருப்பதாகக் கருதினால் அந்த விபரங்களை ஆதாரத்துடன் வெளியிடுவீர்களா? அதை நீங்கள் செய்யாத பட்சததில் நீங்கள் வெறும் வதந்தியாளர் என ஆகிவிடாதா? பதிலை எதிர்பார்த்து காத்திருப்பேன். கணனியின் முன்னே பழியாய்க் கிடப்பேன்.
//ஒரு வாசகன் கேட்கும் கேள்விகளாகக் கருதி பதிலளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்: //
ஷோபா சக்தியே !! என் கேள்விக்கு பதில் தந்தால் தான் உம் கேள்விக்கு பதில் தருவேனென்று அசோக் தெளிவாக கூறியுள்ளாரே. இது வாசகர்களிடம் அசோக்கின் கேள்விகள் என்பதை மறக்க வேண்டாம்.
அசோக்கின் குறிப்பு : ஷோபா சக்தி
-சில எதிர்க் குறிப்புகள்!
இந்தத் தருணம் வரை,பெரும்பாலும் ஒரு விஷச் சூழலுக்குள் நாம் மூழ்கிச் செல்கிறோம்.புலிகள்தமது இயக்க-வர்க்க நலனுக்கொப்பத் “தமிழீழ”ப்போராட்டஞ் செய்தபோது அஃது,மக்கள் விரோதமாகவே நகர்ந்தது.
அதைத் தட்டிக்கேட்ட நம்மையெல்லாம் எட்டப்பர்கள் என்றார்கள்.எச்சரித்தார்கள்-நேரடியாக ஜேர்மனியப் பொலிசுக்கு முன்பாகவே கைத் தகராறுக்கும் வந்தார்கள்.எமது படத்தோடு அவதூறு விதைத்தார்கள்.இதுவே,இரயாகரன் மீதான எமது விமர்சனம்(புலிப்பினாமி-அந்நிய ஏஜென்டு)-கற்றன் நசனல் வங்கிப்பணம் குறித்த குற்றச்சாட்டு,மற்றும், அவர்களது முன்னணிக்கான அறிக்கையில் குறித்த சுய நிர்ணயஞ்சார் சரியான கருத்தையொட்டித் (” 7.2: சுயநிர்ணய அடிப்படையிலான ஒரு தீர்வுதான்,தமிழ் மக்களின் பிரச்சனைக்கான அரசியல் தீர்வாகும்.இதை இந்த அரசு வழங்க மறுக்கின்றது.இதுவல்லாத எதுவும்,ஆளும் வர்க்கத்தின் குறுகிய நலன்களும்,அவர்களின் தேவைக்கும் உட்பட்டவையாக இருக்கும்.(முன்னணிக்கான திட்டம்-2009 .பக்கம்:5) ” ) தற்போதைய திரிப்பையும் இனங்காட்டி விவாதத்தை-பழியை நாம் கட்டுரைகளாக எழுதியதற்கு அவர்கள் தந்த எதிர்க்கருத்தாடல் “சரவணை ரங்கனின் கொலைக் குடந்தையான கதை” எனும் அவதூறு.பின்பு, அதை அவர்களது இணையத்திலிருந்து(இனியொரு டம்மி) கழற்றி எனக்கு ஆலோசனை இப்போது!.இவர்களது முதல் அவதூறைக் ஸ்க்கிறீன் சொட்டிலும்,அச்சிலிலும் சட்ட நடவடிக்கைக்காக ஏலவே எடுத்துவிட்டேன்.
இனி, இந்த நிகழ்வூக்கத்துள் இனியொரு இணையத்துள் தோழர் அசோக்கிடம் வருகிறேன்.
சோபாசக்தி குறித்து, 2007 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நிதர்சனம்.கொம் அவதூறு பரப்பியது. சோபா சக்தியை வரதராஜப் பெருமாளோடிணைத்து அவதூறுதெழுதித்(சோபா சக்தி இந்தியா சென்று, வரதராஜப் பெருமாளைச் சந்தித்தது.என்பதானதன் அர்த்தம்: வரதராஜப் பெருமாள் இந்திய அரசியல்-பொருளியல் நலனை இலங்கையில் நிலைப்படுத்தும் ஒரு அரசியல் செயற்பாட்டாளரென்பதும்,அவரது தலைமையில் தமிழ்பேசும் மக்களது நலனைக் காயடித்து இந்தியா தனக்கான பொம்மை அரசை நிறுவியதும் வரலாறு.இதன் தொடர்ச்சியாகச் சோபாசக்தியும்,ஈ.பீ.ஆர்.எல்.எப். இயக்கத்தலைவர் வரதாரஜப் பெருமாளும் மீள,இந்திய நலனது அரசியலை இலங்கையிற் தகவமைப்பாதான குற்றச்சாட்டை நிதர்சனம் வைத்தபோது) துரோகியென்றபோதும் நாம் அதை எதிர்த்து அகதிப் பதிவில் மறுத்து (அவதூறை) எழுதிக்கொண்டோம்(18.02.2007).இன்றும்,எமது பதிவு[ http://srisagajan.blogspot.de/2007/02/blog-post_18.html ] இருக்கிறது.பாசிசப் புலிகளது மனித விரோத ஊடகமான நிதர்சனத்தை வரலாற்றிலிருந்து அவர்கள் அழித்துவிட்டனர்.இதை, பாசசிஸ்டுக்களது நடைமுறையென்று வரலாற்றில் நாம் கிட்லர்,முசோலினி வழியில் மட்டுமல்ல புலிகள்வழியாகவும் புரிய வேண்டும்!
அரசியல்ரீதியான செயற்பாட்டை,அதுசார்ந்த கருத்துக்களை முகங்கொடுக்க முடியாத புலிகளும்,இயக்கவாத மாயையும் இத்தகைய”அவதூறு அரசியலுக்கு” விதையிட்டது. இதன் முன்னோடிகளாக நாம் எஸ்.பொன்னுதுரையின் “நற்போக்கு இலக்கிய” முகாமுக்குள் இணைப்பையிட முடியும் கருத்தியற்றளத்தில்!
தமிழ்ச் சமுதாயத்துக்கே இருக்கக்கூடிய பிரத்தியேகமான குணாம்சங்கள்சில இத்தகைய வகையாறாவுக்குள் நமது “ஆச்சிகள்” வகை அரசியலாகத் தனிப்பட்ட உறவுகள் வட்டத்துள் பல் நூறு ஆண்டுகளுக்கு முன்பே உருப்பெற்றுக் கொண்டதைச் சமூகவுளவியலாளர்கள் இலகுவாக இனங்காணமுடியும்.இஃது,ஆண்டான் அடிமை-நிலப்பிரபுத்துவ எச்ச சொச்சங்கள் என்பதை நாம் புரிந்தாகவும் வேண்டும்.
இதன் வளர்ந்த கிளைபரப்பிய விருட்ஷத்தின் நிழலோ சுயமுரண்பாட்டை விலக்கிய அந்நிய முதலாளிய இறக்குமதிக்குட்பட்ட இலங்கைச் சமூக அசைவியக்கத்துள் நமது எதிர்கால அரசியலது வெளியையே மூடி இருட்டாக்கிவிடுமோவென அச்சப்படவேண்டியிருக்கிறது.
இந்தச் சமுதாயத்துள் இலட்சக்கணக்கான உயிர்களை இந்தப்போக்கால் நாமெல்லோரும் கொலைசெய்தோம்.
“துரோகி – எட்டப்பவன்” என்பதையுந்தாண்டிச் சமூகவிரோதி என்று கோழி,வாழைக்குலை,மண்வெட்டி,கடகம்,கோடாலி,விறகு,தேங்காய் திருடியவர்களையெல்லாம் லைட்போஸ்ட்டில் கட்டிவைத்து நெற்றியில் பொட்டுவைத்தோம்.
நாலுபேரைக் காதலித்து ஏமாற்றிய மனி பஸ் கொண்டக்டரைக் கம்பத்தில் கட்டிப் பொட்டிட முனைந்த நாம் சார்ந்தவொரு இயக்கத்தின் நட்பு இயக்கத்தோழர்களுக்கு அது குறித்து வகுப்பெடுத்த எமது அரசியல்(1983 ஆம்வருட இறுதி) கண்முன் வருகிறது.அதை,இப்போது சிந்திக்கிறோம். நாம்,ஆரம்பத்து அவசரத்தைவிட இப்போது மிக மோசமான கட்டத்துள் இருக்கிறோம். அதைவிடப் பல் பத்து வீதம் நாம் பின் தள்ளப்பட்டுவிட்டோம். இஃது,விவேகமான அரசியல் இல்லை!
எதன் பெயராலும் இதை நியாயப்படுத்த முடியாது!
இரயாகரன் பாணியே புலம்பெயர்வுச் சூழலில் மிக மோசமான நடாத்தையாக இதைச் சாதித்துக்கொண்டது.கலைச் செல்வனது மரணத்தின் பின்புகூட அந்தத் தோழன்மீது விதைத்த அவதூறைக் குறித்து நாம் வருந்தியுள்ளோம்.இது குறித்து இராயவோடு பேசியிருக்கிறோம்.எமது குரலொலிப் பதிவுகள் அவரிடம் இன்னும் இருக்கிறது.
இப்படியாக, நாமது கால அரசியற் சாக்கடையுள் நாம் புழுவானோம்.இது,இயக்கவாத மாயையின்பொருட்டு எல்லோருக்கும் தலைசீவியபோது நாம் “பொடியள் ஏதோ செய்கிறாங்கள்” என்று தட்டிக் கொடுத்தோம்.பின்,இதன் நீட்சியுள் உயிர் நீத்தவர்கள் இலட்சக்கணக்கானபோது நமது உரிமைகளையே நாம் இழந்தோம்.இந்த அரசியலானது ஒரு பெரும் அமைப்புக்குள்ளேயேகூட அதற்கெதிரான எதிரிகளை உருவாக்கி வைத்து, இலங்கை அரச இராணுவவாதத்துக்கு வெற்றியளித்தது.இவர்கள்தாம் இன்று, இந்த அரசியலுக்கான நன்றிக்குட்பட்ட இலங்கைக்குள் இலங்கை இராணுவவாதத்தின் பிதா மக்களால் கவனிக்கப்பட்டு,வீடு,வளவு வழங்கப்பட்டுப்”புலிகளுக்கு மறுவாழ்வு”அளிக்கின்றோமென உலகுக்குப் பறைசாற்றப்படுகிறது.இந்த அரசியலது தெரிவு மேற் சொன்ன உளவியலது எதிர் திசையூக்க நகர்வென்பதை எவரும் மறுத்தொதுக்க முடியுமா?
இந்த அரசியலது தெரிவின் மீளுருவாக்கத்தை நாம் தொடருவோமா அசோக்?
இது,இப்படியே தொடருவதற்கான புள்ளிகளே தனிநபர்கள்மீதான தீராத பகையாகவல்லவா தொடர்கிறது?
இதன் புள்ளியை அழித்துவிட்டு, மக்களது நலத்தின்மீதான கரிசனையான அரசியலுள் மக்களுக்கெதிரான சக்திகள்மீது கவனத்தை திருப்பி விவேகமான அரசியலைப் புரியுஞ் சந்தர்ப்பத்தை இல்லாதாக்கலாமா?அந்நிய நலன்களுக்காக அவர்களிடம் பணம் வேண்டிவிட்டுப் அவர்களது முகவர்களாக-பிழைப்பவர்களாக நாம் இருந்தால் அதைச் சுட்டிக்காட்டி விவாதிப்பது வேறு.இந்தப்பாணியில்(பாலியல்நடாத்தை) தனிநபர் சார்ந்த “தூயவாத”அரசியல் வேறானது!சோபாசக்தியோ,இல்லைச் ஸ்ரீரங்கனோ,அசோக்கோ என்.ஜீ.ஓ. க்களிடம் காசுவேண்டிக்கொண்டு அவர்களது லொபிகளாக இயங்கினால் அதை மக்களது நல்வாழ்வு சார்ந்தும்,அவர்களது விடுதலைசார்ந்தும் அம்பலப்படுத்துவது அவசியமானது.இந்த ஆபத்தைக் குறித்து அசோக் பேசும்போது அதுள் முரண்பட எமக்கெதுவுமில்லை!.
சோபாசக்தி மீதான இந்த விமாசனம் நியாயமான அரசியலாக எமக்குப்படவில்லை!
நாம் அனைவருமே இந்தச் சமூகச் சாக்கடையிற்றாம் பிறந்தோம்.நாம் எவருமே “தூயவர்கள்”இல்லை.அத்தகயை தூய்மைவாதமானது மக்களது சமூக விடுதலைக்கெதிரான சீரழிவு அரசியலின் இருப்பை மீளக் கட்டியம் கூறவதென்றே நாமுரைப்போம்.இது, குறித்து மேலும் விபரிக்க வேண்டியதில்லை!
எனவே,சோபாசக்தி குறித்து எழுதப்பட்ட இந்த குறிப்பின் உச்சமான வெளிப்பாடானதன் அரசியலை நாம் மறுக்கிறோம்.நாம் தோழமைசார்ந்து இயங்கும் புள்ளியையை மெல்ல அழித்துவிட்டு தனித்தவில் அடிக்க முனையும் சூழல்தாம் எதிரிவர்க்கத்துக்கு அவசியமானது.அதைத் திட்டமிட்டு நகர்த்திய இயக்கவாதமானது இறுதில் நமது விலங்கை எவரெவரோ செய்து நமக்குப் பூட்டிவிடும் அரசியலைத் தந்துவிட்டுத் தொடரும் இத்தகைய”அவதூறு அரசியல்” இலக்கில் இன்னுமெத்தனை தலைகளையுருட்டும்?தலித்துவ முன்னணி,எதிரிகளோடு தமது நலத்தை இணைத்திருப்பவர்கள்,தனிநபர்கள் பலர் இலங்கைப் பாசிசப் போக்கைத் தாம் கொண்ட”கொம்யூனிச”ப் பார்வையின்வழி மெல்ல ஆதரிப்பவர்கள்,இத்தகையவர்களோடு என்றும் தோழமைகொள்ள முடியாது.ஆனால்,சோபாசக்திக்கு இது பொருந்துமா?அவர்,எந்த எதிரி வர்க்கத்தோடு கூட்டுச் சேர்ந்துள்ளார்?வர்க்கச் சமுதாயத்துள் வர்க்க அரசியலே அடிப்படை.எனவே,எதிரி வர்க்கத்தோடிணையும் அரசியலானது பரந்துபட்ட மக்களுக்கு எதிரானது.எனவேதாம், டக்ளஸ் கூறும் “விடுதலை-சமத்துவம்” குறித்துக் காறியுமிழ்ந்து அவரது வர்க்க நலனையும் அவரே ஆளும் வர்க்கமாக மாறிப் பல்லாயிரம் கோடி மக்கள் சொத்தைப் பதுக்கிய புதிய ஆளும் வர்கத்தோடிணைந்தைதக்குறித்துப் பேசுகிறோம்.இவரோடிணையும் சுகனைக்கூட இதன் பொருட்டே அம்பலப்படுத்துகிறோம்.ஆனால்,சோபா சக்தியை இத்தகைய போக்குக்குள் இனங்காண முடியுமா?
அரவிந்தன்,அப்பாத்துரையோ,சோபசக்தியோ அல்ல ஸ்ரீரங்கனோ பாலியல் ரீதியான நடாத்தையில் தூய்மை வாதப் பொதுப்புத்திக்கு எதிரான திசையிற்றாம் பிராயாணிக்க முடியும்.அது,எமக்கு மட்டுமனாதல்ல இப்புவிப்பரப்பிலுள்ள அனைத்து மகான்களுக்குமே பொருந்தும்.இதன்வழியாக “அரசியல்”புரிவதைவிட சமகால அணிச்சேர்க்கை-கட்சி கட்டும் அரசியலெனத் தொடரப்படும் மக்கள் விரோத அரசியற் புள்ளிகளை இலக்கு வைத்து அரசியல் புரிவது அவசியம்.இது,தோழர் அசோக்குக் நன்றாகவே புரியும்.அவர்,மிகப் பெரும் அமைப்பின் மத்திய குழுவுறுப்பினராகவிருந்தவர்.அவருக்கு நாம் வகுப்பெடுப்பது எமது நோக்கமல்ல!மாறாக, இந்த வகைக் குறிப்பை மறுப்பதே எமது இலக்கு!
சோபாசக்தி மீதான பிரத்தியேகமான இந்தக் குறிப்பை நாம் நிராகரிக்கிறோம்.
இஃது,மக்கள் நல அரசியலறதுக்கு அப்பாற்பட்ட”தூய்மைவாதப் பொதுப் புத்தியின்” தெரிவு. இதை,அமைப்பாண்மையை எதிர்பார்த்தியங்கும் எவரும் ஏற்க முடியாது.
அசோக் இக் குறிப்பை “மனசாட்சியின்படி” நீக்காதுபோயினும்,நமது தார்மீக அரசியல் இலக்கின் அடிப்படையில் நீக்கியாகவேண்டும். இதுவே, தனிநபர் உரிமையின் மிகவுயர்ந்த அறமும் கூட.
ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
03.03.2013
நிதர்சனம் டொட் கொம்மில் வந்த சோபா வரதர் சந்திப்பை சோபா மறுக்கவில்லை என்று நினைக்கிறேன்;செய்தி வந்த நேரத்தில் சோபா மறுத்திருக்க வாய்ப்பிருக்கு,இன்று நிலமை அப்படியில்லை அதனால் சோபா இதற்கு பதிலளிக்க வேண்டும்?
சோபாசக்தி உங்களின் கருத்தை கவனத்தில் கொள்கின்றேன். நிச்சயம் பதில்அளிப்பேன். பின்னூட்டத்திற்கு ஊடாக அளிப்பதைவிட கேள்வி பதிலில் இதனை அளிப்பது நல்லதென்று நினைக்கிறேன். தயவு செய்து பொறுத்திருக்கவும். அத்தோடு உங்களிடமிருந்து ஒரு தெளிவை வேண்டி நிற்கின்றேன். இதனை நீங்கள் தெளிவுபடுத்துவதற்கூடாக உங்களுக்கு நான் பதிலளிப்பது சுலபமாக அமைய முடியுமென நினைக்கிறேன. சிரமத்தைப் பாராது தயவு செய்து பதில தரவும்.
அரவிந் அப்பாத்துரை உங்கள் சகோதரியின் சிநேகிதியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் உண்மையென்று இப்போதும் நீங்கள் உறுதிபட சொல்கின்றீர்களா? அறியத்தரவும்.
அவசியமான விடயங்கள் குறித்து எழுதிய அசோக்> இடையில் சோபாசக்தியை இழுத்து வேறு ‘திசைவழியில்” பயணிக்கப் பார்க்கிறீர்கள். எனவே முக்கியமான விடயங்கள் குறித்து உங்கள் கருத்தக்களை பதியவிடுங்கள்.
விஜய்
எனது பின்னூட்டம் தொடர்பாக அசோக் அவர்கள் மிகவும் மனவருத்தத்துடனும் காட்டத்துடனும் தனது எதிர்வினையை என்னிடம் தெரிவித்திருந்தார். குறிப்பாக ‘சோபாசக்தியை இழுத்து” எனும் சொல்லின் அர்த்தம் அசோக்கை காயப்படுத்தியிருக்கும். அதற்கு மனம் வருந்துகிறேன். விஜய்
நாம் அனைவருமே இந்தச் சமூகச் சாக்கடையிற்றாம் பிறந்தோம்.நாம் எவருமே “தூயவர்கள்”இல்லை.( சாக்கடையில் உழலும் சமுகம் அதனை தூய்மை ஆக்குவதில் தான் அதன் வெற்றி தங்கியுள்ளது) அத்தகயை தூய்மைவாதமானது மக்களது “சமூக விடுதலைக்கெதிரான சீரழிவு அரசியலின் இருப்பை மீளக் கட்டியம்” கூறவதென்றே நாமுரைப்போம்.இது, குறித்து மேலும் விபரிக்க வேண்டியதில்லை!., ஆம் விடுதலைப் புலிகள் கூட தம்மை மிகத் தூய்மை வாதிகளாக காட்டும் எத்தனத்தில் தான் அவர்கள் பாசிச நெறிமுறையையும் கூடவே கைகொண்டிருக்க வேண்டும்.
அசோக் ஈழத்து மக்களின் வாழ்வியலையும் அதன் இயங்கு திசையையும், கடந்தகால படிப்பினைகள் நிகழ்கால , எதிர்கால சமுகத்திற்கு அதன் விடிவுக்கு எவ்வாறு உதவக் கூடியதாக மாற்ற முடியும் என்பதில் நாம் அக்கறைப் படமுடியும். இதுவே இன்றைய எமது தேவை.
பிறப்பும் இறப்பும் மனித வாழ்வியலின் மறுக்க முடியாத பக்கங்கள் அசோக் உங்களை முதுமை எட்டுவதால் சற்று பதற்றமாவதுபோல் உணர்கிறீர்களா. இருக்கவே கூடாது. ஒரு சமுகத்தை தனது விடுதலை குறித்து கூட்டுச் சிந்தனைக்குள் ஒன்றிணைத்துச் செல்லவேண்டும் அதனை தூண்ட வேண்டும் இதற்கு வயது ஒரு காரணியல்ல.
பிளாட் அமைப்பிடம் இருந்த அமைப்பியல் கட்டுருவாக்கம் ஏனைய அமைப்புகளிடம் இருந்ததில்லை அதனை புலிகளே தமது கட்டுரைகளில் விதந்து கூறியிருக்கிறார்கள். ஆனால் பின்னாளில் அவர்களது (PLOT) அமைப்பியல் கட்டுருவாக்கம் ஒரு சமையல் செய்யும் கூட்டு முயற்சிக்கு கூட ஒத்து வராத சீர் குலைவு அமைப்பியல் ஆக மாறி விட்டது. இன்றும் கூட சகல தமிழ் அமைப்புகளிடமும்? இதுவே குடிகொண்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு???? உட்பட இதுவே இன்றைய நிலை.
புலிகள்??? கட்டுப் பாடும் ஒழுக்கமும் கொண்டவர்கள் எனக் கூறிக் கொண்டவர்கள் (ஓரளவு உண்மையும் கூட) …………….. இன்று ?……………
எமது விவாதங்கள் விமர்சனக்கள் விடயங்கள் சமகால ஈழத்து மக்களின் வாழ்வியல் துயரங்களுக்கு வழி தேடுவதாக அமைய வேண்டுகிறேன்.
உண்மையில் சோபாசக்தி ‘கேள்வி பதில் ‘ தொடர் குறித்து எழுதியவை குறித்து நான் எதனையும் அறிந்திருக்கவில்லை. எனவே வேறொரு “வெளியில்” பேசப்பட்ட விடயங்கள் – பேச வேண்டிய விடயங்களை இத்தொடரில் எழுதியமையே என்னைக் கவலைக்கு உள்ளாக்கியது. உண்மையில் தனிப்பட்ட அவது}றுகளை நான் அதிகம் பார்ப்பதில்லை. அலுப்பூட்டும் கருத்தும்-கருத்து வக்கிரமும்-சொல் வக்கிரமும் பீதியையே ஏற்படுத்துகிறது. ஒரு ஏ.கெ.47 விட அதகிமான வன்மம் கொண்டவை அவை.
மிகச் சரி
மீண்டும் மீண்டும் அசோக்கிடம் வலியுறுத்துவதும் எதிர்ப்பார்ப்பதுவும் ‘கேள்வி பதில் ‘தொடர் ஆரம்பித்த நோக்கத்திற்கும் அது இறுதியில் விளைவிக்க வேண்டிய தாக்கத்திற்கும் அமைவாக-இசைவாக தொடர்ந்தும் எழுதிச் செல்லுங்கள் என்பதே.
பல தனிப்பட்ட நபர்களை நாம் சந்தித்திருக்கிறோம். கடந்து சென்றிருக்கிறோம். “நாக்கொண்டு மானிடம் பாடா” உறுதி போல நாமும் நாக்கொண்டு மானிடம் பாடும் உறுதி கொள்ள வேண்டும்.
தோழர் அசோக் சோபாசக்தி கிளப்பும் அவதூறுகளுக்கெல்லாம் நீங்கள் பதிலளிக்க தொடங்கினால் காத்திரமான கேள்வி பதில் வேறுபக்கம் போய்விடும். சிலரின் திட்டமிட்ட பிண்னூட்ங்கள் முந்திய பகுதிகளில் இதை நிரூபித்திருக்கிறது. நீங்கள் இதனுள் அகப்பட்டீர்களானால் கேள்வி பதில் அவர்கள் விரும்பியவாறு வேறுபக்கம் போய்விடும். சோபாசக்தி புகலிடத்தில் சின்ன ராஐhகரன். அவரோடு மோதினால் எந்தவழியிலும் கேவலப்படுத்த தயங்காத ஒரு ஐன்மம். எனவே சோபசக்தியின் ஆத்திரமூட்டல்களை வக்கிரங்களை புறக்கணியுங்கள். உங்கள் கேள்வி பதில் காத்திரமாக தொடரட்டும்.
விஜி-பரிமளா-அசுரா ஆகிய மூவரும் இதிலுள்ள அரவிந்த் அப்பாத்துரை தொடர்பான விடயத்தின் உண்மை அறிய எமது வீட்டுக்கு வந்து அக்குறிப்பிட்ட பெண்ணை நேரிலே அழைத்து (அவரும் பாண்டிச்சேரிக்காரர்)இதைப் பற்றி நேரடியாகவே விசாரித்தனர்.அம்மூவரும் எமது கண்டனத்தை ஏற்கமறுத்தே நேரடி விசாரிப்புக்காக வந்திருந்தனர்.ஆகவே அந்தப் பெண் என்ற சோடிப்பு இல்லை.அச்சந்தர்ப்பத்தில் அதைக்கண்டித்தோம்.அதுவும் நண்பர்கள் மட்டத்தில் தான் செய்யப்பட்டது.முரண்படுவதும் கண்டிப்பதும் ஒன்றிணைவதும் நமக்குப் புதிதல்ல.இப்போது அசோக் ஆகிய நீங்கள் பல வருடங்களின் பின் அரவிந்அப்பாத்துரைக்கும் ஷோபாசக்திக்குமான பிரச்சனையைக் கிளறிவிடக் காரணம் வாசிப்பு மனநிலை விவாதம் 5 கூட்டங்கள் தொடர்ச்சியாக அரவிந்தஅப்பாத்துரையின் நிலக்கீழ் அறையில் நடப்பதும் அதிலே நாம் பகைமறப்புச் செய்து பழகுவதும் தானே.-
அசோக்! அரவிந் மீதான குற்றச்சாட்டு உண்மையே என இப்போதும் நான் சொல்கிறேன். அதை உங்களுக்கு நிரூபிக்க வேண்டுமென்றால் பாதிக்கப்பட்ட பெண்ணோடு ஓர் சந்திப்பையும் ஏற்பாடு செய்து தருவேன் என உறுதி அளிக்கிறேன்.
அரவிந்த் மீதான குற்றச்சாட்டை இதுவரையும் அரவிந்த் மறுக்கவில்லை என்பதையும் அதை அசோக்தான் மறுக்கிறார் என்பதையும் விழியுள்வர் பார்க்கக் கடவர், செவியுள்ளவர் கேட்கக் கடவர்.
////விஜி-பரிமளா-அசுரா ஆகிய மூவரும் இதிலுள்ள அரவிந்த் அப்பாத்துரை தொடர்பான விடயத்தின் உண்மை அறிய எமது வீட்டுக்கு வந்து அக்குறிப்பிட்ட பெண்ணை நேரிலே அழைத்து (அவரும் பாண்டிச்சேரிக்காரர்)இதைப் பற்றி நேரடியாகவே விசாரித்தனர்//
தர்மினி அசோக்கர் சந்தேகப்படுவது இருக்கட்டும் பரிசில் இருக்கும் எங்களுக்கும் சந்தேகமாகத்தானே இருக்கு.பாதிக்கப்பட்ட பெண்னை பார்த்த மேற்கண்ட மூவரும் ஏன் உங்கள் கண்டன அறிக்கையில் கையொப்பம் இடவில்லை. அத்தோடு சோபாசக்தியின் மிக நெருங்கிய நண்பர்கள் தேவதாசு தங்கம் ஞானம் விஜி அசுரா யோகரட்தினம் போன்றவர்கள் ஏன் கையொப்பம் இடவில்லை.இவர்கள் இந்த சம்பவத்தை நம்பவில்லை. கையொப்பம் இட்டவர்கள் உண்மை தெரிந்து கவலை கொள்வீhகள் என்று சொன்னார்களே இதன் பொருள் என்ன?
முப்பது வருசங்களுக்கு முன் எல்.ரி.ரி.ஈ செய்ததைப்பற்றி கேள்வி கேட்கும்போது விமர்சனம் செய்யும்போது ஏழு வருடங்களுக்கு முன் நடந்த இந்த சம்பவத்தின் உண்மையை அறிய கேள்வி கேட்பதில் விமர்சிப்பதில் என்ன தவறு?
பாரீஸ் குடிமகன்,இது தனிப்பட்டவர்களது நடாத்தை சம்பந்தப்பட்டது.அதற்குள் தலை புதைக்க எவருக்கும் விருப்பமுண்டானால் அவர் முதலில் தன்னை அடையாளங்காட்டிக்கொண்டு கேள்விகளையோ-நியாயங்களையோ கேட்டுத் தொலையுங்கள்.இறுகத் தலையை மூடி மொட்டாக்குப் போட்டுவிட்டு மற்றவர்களது பேர்சனல் விஷயத்துக்குள் நுழைவது கொஞ்சமும் தார்மீகமற்றது.
புலிகளது 30 வருடப் போராட்டமானது, பரந்துபட்ட மக்களது பிரச்சனையோடு சம்பந்தப்பட்ட அரசியல்.அதுகுறித்துக் கேள்வி கேட்பதும்,தனிநபர்களது உரிமைக்குள் நுழைந்து கேள்வி கேட்பதற்கும் வித்தியாசமுண்டு.எதிர்ப்பால் வினையுள் பலாத்தகாரமாகச் செயற்படுவது சம்பந்தப்பட்ட இருவரது பிரச்சனை.அதைச் சம்பந்தப்பட்டவர்கள் பார்த்துக்கொள்ளட்டும்.
மாறாக,அதை அரசியலாக்குவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்-அவ்வளவுதாம்!
பரிஸ் குடிமகனாரே! அந்த அறிக்கையில் விஜியும் அசுராவும் கையெழுத்திட்டது ஞாபகத்திலள்ளது. பரிமளா குறித்து ஞாபகமில்லை. எனவே உங்களது கூற்றைத் திருத்திக் கொள்ளவும். கண்டன அறிக்கை ஷோபாசக்தியின் நண்பர்களால் வெளியிடப்படவில்லை. அது ஒரு கூட்டம் நடத்தப்பட்டு (தேவதாஸ் தங்கம் ஞானம் ஆகியோர் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை யோகரட்ணம் அப்போது சீனிலேயே இல்லை) மிகப் பெரிய விவாதங்களுக்குப் பிறகு பெரும்பான்மையின் முடிவின்படி அவ் அறிக்கை வெளியிடப்பட்டது. அறிக்கையை வெளியிட வேண்டும் என்ற தரப்பை முன்னெடுத்துக் கடுமையாக விவாதித்த அசோக், லஷ்மி, பிரியா போன்றவர்கள் அந்தக் காலப்பகுதியில் எனக்கு நெருக்கமான நண்பர்களுமில்லை. பின்குறிப்பு: கருத்துகளைச் சொல்லும்போது சொந்தப் பெயரில் வந்து பின்னூட்டமிடுவது நல்ல பழக்கம். அது உங்களது நேர்மையை உறுதி செய்யும்.
கேளுங்கள் தரப்படும், அமுத ஞானசுரபி போல அள்ள அள்ள குறையாத கருத்துக்கள் கைவசம் காத்திருக்கின்றது எனும் பாணியில் எழுதப்படுகின்ற இத்தொடரின் மெய்யறிவின் வறுமை எனக்கு அதிர்ச்சியளிக்காதபோதும், அதன் பெறுமதியின்மை காரண்மாய் பேசாமடந்தையாயினேன்.
ஆனால் போகின்றபோக்கில் புளட்டிற்குள் நாம் அனைவரும் ” சாதியதற்கொலைசெய்தோம், பிரதேசவாத தற்கொலையும்,கொலையும்” மேற்கொண்டோம், என்ற ஓஷோ சாமியார் பாணியில் அறிக்கையிடுதலும், புளட்டினுடைய கொள்கை உலகிலுள்ள புரட்சிகர இயக்கங்கள் அனைத்தினது கொள்கைகளையெல்லாம் தூக்கிசாப்பிடக்கூடியள்வுக்கு முப்போக்கானது என்று சாதிப்பதும், அபத்தத்தின் உச்சக்கட்டம்.
நான் அறிந்தவரையில் தளத்தில் நடந்த உள் கட்சி போராட்டத்தை தத்துவார்த்தரீதியாக முன்னெடுத்த தோழர். கெள்ரி காந்தனால் நெறிப்படுத்தப்பட்ட குழுவினர் புளட்டினுடைய அனத்துக்கோளாறுகளுக்கும் அடிப்படையான காரண்மே புளட்டினுடைய கொளகைகள் என கூறப்பட்டுவந்தவைதான் என சரியாக இனங்கண்டார்கள். அதன் அடிப்படையில் முதல் நடவடிக்கையாக புளட்டினுடைய அரசியல், இராணுவ மூலோபாயம் தொடர்பான விவாத கருத்துபாசறை ஒன்று கிளிநொச்சி அம்பலப்பெருமாள் என்ற் இடத்தில் தள அளவில் பெரிதாக நடத்தப்பட்டதாக அறிகின்றேன். அது உட் கட்சிப்போராட்டத்தின் மைல்கல் என்றும் கூறுகின்றார்கள்.
//புளட்டினுடைய அரசியல், இராணுவ மூலோபாயம் தொடர்பான விவாத கருத்துபாசறை ஒன்று கிளிநொச்சி அம்பலப்பெருமாள் என்ற் இடத்தில் தள அளவில் பெரிதாக நடத்தப்பட்டதாக அறிகின்றேன். அது உட் கட்சிப்போராட்டத்தின் மைல்கல் என்றும் கூறுகின்றார்கள். //
இப்படியான எங்கள் கௌரிகாந்தன் ஜயா கடைசியில் புலிகள் தான சரியானவர்கள் என்ற முடிவுக்கு வந்து அவர்களுடன் இணைந்து கொண்டார். தந்தன தந்தன என்று சொல்லி வில்லிசை பாடி ….
இன்று இந்தியாவிலிருந்து கொண்டு “கைமண்” என்ற பெயருக்கு பின்னால் ஒழித்து நின்று கொண்டு மார்க்சியம் என்று எதையோ உளறிய படி இந்தியாவை மீறி எதுவும் செய்ய முடியாதென கூறுகின்றார்.
தந்தன தந்தன என்று சொல்லி வில்லிசை பாடி ….
இந்தப் பெண்மணியுடைய பிரச்சனைக்கு பரிசில் மிக இயல்பான சட்ட நடவடிக்கைகளுக்கு ( பொலிஸில் ஒரு முறைப்பாட்டை கொடுத்தல்) வாய்ப்பிருக்க அதை செய்யாமல் ஏன் இப்படி அறிக்கை ,கண்டனம் என நடவடிக்கை எடுக்க வேண்டும்?
//சட்ட நடவடிக்கைகளுக்கு வாய்ப்பிருக்க// இதுவும் அறிக்கை வெளியிட முன்பு விவாதிக்கப்பட்டது. சட்ட நடவடிக்கை எடுக்க பாதிக்கப்பட்ட பெண்மணி தயக்கம் தெரிவித்தார். அந்தப் பெண் ‘சராசரி’ தமிழ்ப் பெண்களுடைய மனநிலை உடையவர். கோடு கச்சேரி என்றெல்லாம் போக அவர் தயாரில்லை. அறிக்கையில் கூட அவர் குறித்த விபரங்களை வெளியிட அவர் ஒப்புதல் வழங்கவில்லை. அந்த அறிக்கை ஓர் கூட்டு முடிவு என்பதை மனதிருத்துங்கள்.
சோபா அசோக சக்கரவர்த்தியாருக்கு உள்ள துணிச்சல் எனக்கில்லை அப்பு. சொந்தப்பெயரில் வர நினைத்தாலே மனம் திக்கு திக்கென்று அடிக்கிறது. மார்க்கடைபோசனியர் வதனிமகால் கடைக்கண்ணாடி உடைப்பு கண்முன் வந்து பீதியூட்டுகிறது.
ஆக மொத்தத்தில் பாதிக்கப்பட்ட பெண் சட்ட நடவடிக்கைக்கு வர மாட்டார். உங்களாலும் அவரை வெளிப்படுத்த முடியாது. நாங்கள் தான் இருட்டு அறைக்குள் கறுப்பு பூனையை தேட வேண்டும். நல்லாயிருக்கு. இப்படி போராட துணிவில்லாதவர்கள் ஒன்று குற்றவாளிகளை தப்ப விடுகிறார்கள். இரண்டு உங்களைப் போன்றவர்கள் கூட்டாக மேற் கொள்ளும் மோசடிகளுக்கு துணை போகிறார்கள்.
மனிதன்,
மிக எளிமையாகவும்,விளக்கமாகவும்சொல்லியுள்ளீர்கள்.இதற்கு மேலும் இதைப்பற்றி விவாதிப்பது தேவையில்லாதது எனநினைக்கிறேன்.
தர்மினி பாலியல் வன்புணர்ச்சி செய்யமுயன்ற அர்விந் என்பவருடன் நிங்கள் பகைமறுப்பு செய்து பழகுவதாக எழுதியது எனக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்தது. பாலியல் வன்புணாச்சி கொடிய மிருகத்தனமான ஆணாதிக்க செயல் என்று நான் உங்களுக்கு புரியவைக்கவேண்டிய அவசியமில்லை.சட்டப்படி கூட இது ஒரு கிரிமினல் குற்றம். இப்படியிருக்க இதை மறந்து எப்படி பழக முடிகிறது உங்களால். நானும் ஒரு பெண் என்பதால் இதனை சகிக்க முடியவில்லை. அதிர்ச்சியாக உள்ளது. ரமணி
அவிக அரசியல்ல இதெல்லாம் ரொம்ப சகஜியம்மா