விளக்கம்
புளொட் நேசன் தொடர்பாக நான் சென்ற கேள்வி பதிலில் அளித்திருந்திருந்த பதில் உண்மைக்குப் புறம்பானதாக, உண்மையை மறைப்பதாக இருப்பதாக சில நண்பர்களும், தோழர்களும் என்னிடம் தெரிவித்தார்கள். இது தொடர்பாக பின்னோட்டங்களும் வந்துள்ளன. இன்று கனடாவில் இருக்கும் நேசனை அறிந்தவர்களுக்கு என் பதில் நகைப்புக்கிடமானதாக மாறிவிட்டதாக சொன்னார்கள். என் தொடர்பான நம்பகத்தன்மையின்மையை இவ்வாறான பதில்கள் அளித்துவிடும் எனவும் சுட்டிக்காட்டினார்கள். நன்றி நண்பர்களே, தோழர்களே
இன்றைய நேசன் பற்றி நண்பர்கள் சுட்டிக்காட்டும் இலங்கை தூதரகத்துடனான தொடர்பு, இலங்கைஅரசு ஆதரவு நிலை, கனடாவில் அவரது வன்முறை இவை பற்றி நானும் அறிந்துள்ளேன். 1985 ஆண்டுக்குப் பின் நேசனுடன் எனக்கு எந்தவித தொடர்புகளும் இருந்ததில்லை. எனவே 1983 – 1985 ஆம் ஆண்டு கால நேசனைப் பற்றிய எனது மனப்பதிவுகளை கொண்டே நான் பதிலளித்தேன்.
மட்டக்களப்பில் போடியார்கள் என்பவர்கள் யார்? போடியார் மரபு அங்கு இப்போது உள்ளதா? யாழ்ப்பாணத்தை விட மட்டக்களப்பில் பெண்களுக்கு உரிமைகள் கூடுதலாக உள்ளதாக சொல்கிறார்களே. மேலும் மட்டக்களப்பில் கம்யூனிச கட்சிகள் ஏன் வளரவில்லை. தயவு செய்து இவற்றிற்கு பதில் தரவும்.
வாசன்
மட்டக்களப்பு தொடர்பான இவ்வாறான ஆய்வுநிலைக் கேள்விகளுக்கு நான் பதிலளிப்பது கொஞ்சம் சிரமமே. இக்கேள்விக்கு, இனியொருவில் மட்டக்களப்பு ஆய்வுகள் பற்றி எழுதும் விஜய் போன்றவர்கள் பதிலளிப்பது சிறப்பானதாக இருக்கும். எனினும் எனது அப்பிராயங்களைக் கூறுகிறேன்.
மட்டக்களப்பில் நிலங்களை மிகக் கூடுதலாக தன்னகத்தே கொண்ட நிலவுடைமையாளர்களே ”போடியார்கள்” என்று அழைக்கப்படுகின்றனர். மட்டக்களப்பு நிலப்பிரபுத்துவ, நிலமானிய சமூகத்தில் ஓர் கால கட்டத்தில் இவர்களே சமூகத்தின் அரசியல், பொருளாதார விதிகளை உருவாக்குகின்றவர்களாக ஆளுமை பெற்றிருந்தார்கள். ஆனால்; போத்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் வருகைக்குப் பிற்பாடு இவர்களுடைய ஆளுமை இருத்தல் குறைக்கப்பட்டு கேள்விக்குள்ளாக்கப்பட்டது. காரணம் இப்போடியார்கள் போத்துக்கேயர், ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர்கள் போன்றவர்களின் அந்நிய அதிகார ஆதிக்கத்திற்கு எதிராகப் போர்கொடி தூக்கியதன் காரணமாக இவர்களின் நிலவுடைமைகள், சொத்துக்கள் காலத்திற்கு காலம் இவ் அந்நிய ஆக்கிரமிப்பாளர்களால் பறிமுதல் செய்யப்பட்டு பல போடிமார்கள் கொல்லப்பட்டும் உள்ளனர். ஆங்கிலேயரின் வருகையின் போது இவர்கள் மிக கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
குறிப்பாக ஆங்கிலேயரோடு மட்டக்களப்புக்கு வந்த கிறிஸ்தவ மிசனெறிகளும், அவர்களுக்குத் துணையாக வந்த ஆங்கிலம் படித்த கிறிஸ்தவ சமூகத்தினரும் இந்த மட்டக்களப்பு போடியார்களின் அதிகாரத்தை குறைத்ததில் பெரும்பங்காற்றினர். போடியார்களிடம் இருந்த பெருந்தொகையான நிலங்கள் ஆங்கிலேயரால் பறிக்கப்பட்டு கிறிஸ்தவ மிசனெறிகளுக்கு வழங்கப்பட்டதோடு, மிகக்குறைந்த விலையில் இவர்களின் காணிகள் பறிக்கப்பட்டு யாழ்ப்பாண கிறிஸ்தவ ஆதிக்க சமூகத்தினருக்கு வழங்கப்பட்டது.
இதன் காரணமாக போடியார்கள் அரசியல், பொருளாதார வலுவிழந்து காலப்போக்கில் இன்று ஒரளவு மறைந்து விட்டனர் என்றே சொல்ல வேண்டும். மட்டக்களப்பில் பலர் தங்கள் பெயர்களில் போடியார் என்ற பதத்தை கொண்டிருந்தாலும், கடந்த காலங்களைப் போன்று அவர்களிடம் பாரிய நிலச்சொத்துக்கள் இல்லையென்றே நான் நினைக்கிறேன் எனினும் போடியார் மரபு ஒரளவு தொடர்கிறது. இன்றைய மட்டக்களப்பில் பெரும் நிலச்சுவாந்தர்களாக இருப்பவர்கள் கிறிஸ்தவ மிசனெறிகளும் அவர்களோடு வந்த நபர்களுமே.
பெண்கள் உரிமை பற்றியது
பெண்உரிமை என்பது அதிகப்படியான வார்த்தையென்றே நான் கருதுகிறேன். மட்டக்களப்பு சமூகம் ஏனைய சமூகங்களைப் போன்று ஆண் மையம் கொண்டதாகவே அமையப் பெற்றிருக்கிறது. எனினும் ஏனைய பிரதேங்களை விட பெண்களுக்கான சொத்துரிமைப் பாதுகாப்பு என்பது மட்டக்களப்பில் அதிகமாக காணப்படுகிறது. இதற்கு காரணம் போடியார் மரபு உருவாக்கிய மரபுவழி சமூகச்சட்டங்களே. இது ”முக்குவர் சட்டம்” என அங்கு சொல்லப்படுகிறது. இச்சட்டத்தில் தாய்வழிச்சமூக முறைமைகள் பேணப்படுகின்றன. குறிப்பாக நிலங்கள் மற்றும் ஏனைய சொத்துக்கள் பெண்களுக்கு கூடுதலாக அளிக்கப்படுகிறது. இதனால் பெண்களின் சமூகப் பொருளாதாரப் பாதுகாப்பு ஒரளவு பேணப்படுகிறது. இன்று ”முக்குவர் தேசவழமைச் சட்டம்” காலவதியாகிவிட்டது.
யாழ் தேசவழமைச் சட்டத்தை ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் சட்ட வடிவமாக்கியது போன்று மட்டக்களப்பு போடிமார்களால் அம்முக்குவர் தேசவழமைச்சட்டத்தை நிலை நிறுத்த முடியவில்லை, காரணம் ஆங்கிலேயர்ளோடு இருந்த முரண்பாடுகளும், இயல்பாகவே இவர்களுக்கு ஆங்கிலமொழி மீது இருந்த வெறுப்பும், இதனால் ஏற்பட சட்ட ஆங்கிலப்பற்றாக்குறையும் முக்குவர் தேசவழமைச்சட்டத்தை ஆங்கிலேயர்கள் காலத்தில் சட்டப்பதிவாக்க முடியாமல் செய்துவிட்டது.
கம்யுனிசக்கட்சி பற்றி
வடக்கில் இடதுசாரி இயக்கம் தோற்றம் பெற்றது போன்று மட்டக்களப்பில் உருவாகாமைக்கு மட்டக்களப்பு நிலவுடைம சமூக அமைப்பின் தன்மையே காரணமாகும். யாழ்ப்பாணத்தில் கூலி விவசாயிகளாக, தொழிலாளர்களாக பல்வேறு ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் சாதிய ரீதியாகவும், வர்க்க ரீதியாகவும் ஒடுக்கப்படும் தன்மையைக் கொண்டிருந்தார்கள். ஆனால் மட்டக்களப்பில் பெரும்பான்மைச் சமூகம் முக்குவர் சமூகமாகவே உள்ளது. இவர்களே மட்டக்களப்பின் ஆதிக்க சமூகமாகவும் இருக்கின்றார்கள், இங்கு உருவாகும் கூலி விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள் அனைவரும் பெரும்பான்மையாக இந்த முக்குவர் சமூகத்தைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள், இதனால் சாதியமுரண்பாட்டின் கூர்மை, இங்கு தொழிற்பட வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. ஆனால் வர்க்க முரண்பாடுகள் இருக்கின்றன. இந்த வர்க்க முரண்பாட்டுக்குள்ளாகின்றவர்கள் ஒரே சமூகத்தினராக இருக்கின்றமையால் வர்க்க முரண்பாட்டை பெரிதாகிக்கொள்ள கூலிவிவசாயிகளும், தொழிலாளர்களும் முயன்றாலும் கூட இவ் ஆதிக்க முக்குவர் சமூகம் அதை தந்திரோபாயமாக கையாளவும், தணிக்கவும், இல்லாமல் செய்யவும் அவர்களால் முடிகின்றது.
உண்மையில் கூலி விவசாயிகளும் தொழிலாளர்களும் யாழ்ப்பாணத்தை விட மட்டக்களப்பிலேயே அதிகமாகவுள்ளனர். ஒரு பலமான இடதுசாரி தொழிலாளர் சங்க அமைப்பொன்று அங்கு உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதன் தோற்றம் இல்லாமலேயே போய்விட்டது. 1960களில் கேரளாவிலிருந்து இடதுசாரி தொழிற்சங்கத்தை சேர்ந்த தோழர் கிருஷ்ணன் குட்டி என்பவர் மட்டக்களப்பில் தொழிற்சங்க அமைப்புக்களை உருவாக்குவதற்காக வந்ததாகவும், மட்டக்களப்பில் நீண்டகாலம் தங்கி பல முயற்சிகளை மேற்க்கொண்டும் தொழிற்சங்க அமைப்பு- இடதுசாரிகருத்துக்களை உருவாக்க முடியாமல் போய்விட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதைப்பற்றிய அரசியல் சமூக ஆய்வுகள் அவசியம் தேவை. விஜ்ய் போன்ற அரசியல், சமூக ஆய்வாளர்கள் இதனைக் கவனத்தில் கொள்வது ஆரோக்கியமானது.
முன்னிலை சோசலிச கட்சி பற்றி உங்களுடைய அபிப்பிராயம் என்ன?
பிறேம் பரீஸ்
இக்கட்சி பற்றி சிறி ரங்கன், சபா நாவலன், ஸ்பாட்டகஸ் தாசன், குருபரன், மாயவன் மயில்வாகனம், கந்தையா ரமணிதரன் போன்றவர்கள் தங்களின் எழுத்துக்கள் மூலம் கதவுகளைத் திறந்து விட்டுள்ளனர். இவர்களுக்கு எனது நன்றிகள்.
இலங்கையில் ஒடுக்கப்படுகின்ற அனைத்து தேசிய இன மக்களுக்குமான விடுதலையை, சமத்துவத்தை, சுதந்திரத்தைக் கோரும் ஓர் இடதுசாரி அமைப்பின் உருவாக்கத்தை நாம் வரவேற்றே ஆக வேண்டும். இந்த அடிப்படையில் இலங்கையில் உருவாகி இருக்கும் இலங்கை முன்னிலை சோசலிச கட்சியை நாம் பார்க்க முடியுமா என்பதுதான் இன்றைய கேள்வி.
கடந்த காலத்தில் இன ஐக்கியத்தைப் பேசி, ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து மக்களுக்குமான சமஉரிமை என்ற கோசத்தை முன்வைத்து உருவான ஜேவிபி இன் வரலாற்றையும், அது எவ்வாறு இனவாத அரசியலை தீவிரமாக கடைப்பிடித்தது என்பதையும் நாம் அறிவோம். அவ்வாறான தாய்கட்சியான ஜேவிபியிலிருந்து அதிகாரப்போட்டியின் காரணமாகப் பிரிந்து, அதே அரசியலோடு தமிழ்மக்களைக் கவரும் வண்ணம் சில “தயாரிப்பு” களுடன் உருவானவர்கள்தான் இவர்கள். இவர்களின் அடிப்படை நோக்கமே பாரளுமன்ற கதிரைகளை கைப்பற்றுவதே அன்றி வேறொன்றும் இல்லை
இவர்களின் தாய்க்கட்சியான ஜேவிபியோடு எனக்கு தனிப்பட்ட அநுபவங்கள் உண்டு.1980 களில் இடதுசாரிக் கருத்துக்களால் கவரப்பட்ட நாங்கள் ரோகண விஜவீராவும், லயனல் போபேக்கேயும் பேசிய தேசிய ”இனங்களின் சுயஉரிமை கோட்பாட்டை ஏற்றுக் கொள்கிறோம்; அதேநேரம் ஐக்கிய இலங்கைக்கு தமிழர்களின் பிரச்சனையைத் தீர்ப்போம்” என்ற கோசத்தில் கவரப்பட்டு ஜேவிபியில் குறிப்பிட்ட காலம் அரசியல் வேலைகளைச் செய்தவர்கள் நாங்கள். எனினும் அக்கட்சி இனவாத அரசியலையே அதன் அடித்தளமாக கொண்டிருப்பதைக் நாம் கண்டு அதிலிருந்து வெளியேறினோம்.
அக்காலத்தில் ஜேவிபி கொண்டிருந்த தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டைக் கூட இவர்கள் ஏற்றுக் கொள்ள தயாரில்லை. அதிகாரப்பரவலாக்கத்தையே இவர்கள் நிராகரிக்கின்றார்கள். ”இனவாதத்திற்கு எதிரான போராட்டம்” என்பது யாருடைய இனவாதத்திற்கு எதிரானது என்பதை இவர்கள் வரையறுக்க வேண்டும். ஒரு ஒடுக்கின்ற பேரினவாத இனச் சமூகத்திலிருந்து உருவாகுகின்ற இவர்கள் முதலில் செய்ய வேண்டியிருப்பது தாம் சார்ந்த இனத்தில் படிந்திருக்கும் இனவாத கருத்துக்களுக்கு எதிராகவும் தமிழ், முஸ்லீம், மலையக மக்களின் ஐக்கியத்தையும், அவர்கள் குறித்த உரிமைகள் பற்றிப் பேசுவது முக்கியமாகிறது. ஆனால் இவர்களால் தமிழ் சமூகத்தில் இனஐக்கியம், சமத்துவம் பேசுகின்றார்களே அன்றி சிங்கள மக்கள் மத்தியில், இலங்கையில் ஒடுக்கப்படுகின்ற ஏனைய தேசிய இனங்களின் உரிமை பற்றி எதுவுமே பேசுவதில்லை. இதுதான் இவர்களின் தாய்கட்சியிடம் பயின்று வந்த ”தேர்ந்த” அரசியல் தந்திரம். மார்க்சியத்திற்கு லெனின் வழங்கிய பெருங்கொடை ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் உரிமைக்கோட்பாடான தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை என்பது. ஆனால் மார்க்சியர்கள் என்று கூறிக்கொள்ளும் இவர்கள் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டைக் கொள்கை அளவில் கூட ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை.
என்னைப் பொறுத்தவரை; என்னிடம் இவர்கள் பற்றி சில சந்தேகங்கள் எழுவது தவிர்க்க முடியாதாகவுள்ளது. இவர்கள் இலங்கை, மேற்குலக நாடுகளின் “தயாரிப்பு”க்களோ என நான் சந்தேகம் கொள்கிறேன். முள்ளிவாய்காலுக்குப் பின் இலங்கையில் புதிய விடுதலைச்சிந்தனைகள் தமிழ் பிரதேசங்களிலும், தென்னிலங்கையிலும் உருவாகாமல் இருப்பதற்கு இவ்வாறான ”இடதுசாரி அமைப்பு” என்ற போர்வையோடு அமைப்பின் தோற்றம் “ஒரு சிலருக்கு” தேவைப்படுகிறது. அந்த தேவையைப் பூர்த்தி செய்யும் நடவடிக்கையோ இது எனத் தெரியவில்லை.
வடக்கில் மிகத்தீவிரமாக ”தமிழ்தேசிய இனவாதம்” பேசுகின்ற குமார் பொன்னம்பலத்தின் புத்திரரான கஜேந்திரகுமாருக்கு மறைமுகமாக மகிந்தாவின் ஆதரவு இருப்பது போல, இவர்களுக்கும் உண்டோ தெரியவில்லை. வட கிழக்கில் இவர்களின் செயற்பாடும் இவர்களிடம் இருக்கும் தாராள பொருளாதாரமும் சந்தேகத்திற்குரியவையே. ”நான் அடிப்பது போல் அடிப்பேன், நீஅழுவது போல் அழு” எனும் சொல்லாடல் தான் எனக்கு இங்கு நினைவுக்கு வருகிறது.
புளட் உட்கட்சி போராட்டத்தை தாங்கள்தான் நடாத்தியதாக ரெசோவைச் சேர்ந்த ஒரு சிலர் சொல்கிறார்கள். அதேவேளை உட்கட்சிபோராட்டத்தை சுப்பையா (கெளரிகாந்தன்) போன்றோர் நடாத்தியதாக இன்னொரு சாரார் சொல்கிறார்கள். கெளரிகாந்தன் பற்றி மிக மோசமான குற்றச்சாட்டுக்களை இன்னொரு சாரார் சொல்கிறார்கள். அசோக் அவர்களே உங்கள் கருத்தென்ன?
கணேஸ்
புளொட் அமைப்பின் உட்கட்சிப்போராட்டத்தை, தளமாநாட்டை நடத்தியத்தில் தளத்தில் இருந்த அனைத்து தரப்பினருக்கும் பங்குண்டு. உதாரணமாக புளொட் உடன் விசுவாசமாக செயற்பட்ட இராணுவ பிரிவிலிருந்து தளத்தில் இராணுவப் பொறுப்பிலிருந்த சின்ன மென்ரிசுக்கு கூட பங்குண்டு. எனவே ஒரு சிலர் தாங்கள் தான் நடத்தியதாக கூறுவது அதிபிரசங்கித்தனமே. குறிப்பிட்ட ஒருசிலர் புளொட்டின் உட்கட்சிபோராட்டத்தை தாங்கள் நடாத்தியது என்று சொல்வதற்கூடாக உட்கட்சிபோராட்டத்தின் வலுவை, அதன் கனத்தை கொச்சைப்படுத்துகின்றார்கள். இது இவர்களுக்கு புரிவதில்லை.
அதேநேரம் உட்கட்சிப் போராட்டத்தை முன்நகர்த்தியதில் தமிழ் ஈழமாணவர் அமைப்பு (ரெசோ), தொழிற்சங்க அமைப்புக்களுக்கும் பாரிய பங்குண்டு. குறிப்பாக ரெசோவைச் சேர்ந்த குருபரன், தீபநேசன், தனஞ்சயன், தமிழ், மகிழ்ச்சி, சுகந்தன், கலா போன்றவர்களையும் தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ராஜன், ஐபி என்ற மூர்த்தி போன்றவர்களும், செல்வி, நந்தா , வனிதா போன்றவர்களையும் கவனம் கொள்ளலாம். இதில் சுவாரசியமான விடயம் என்னவென்றால், உட்கட்சிப்போராட்டத்தை- தளமாநாட்டை நடாத்துவதில் தீவிரமாக பக்கபலமாக நின்ற தொழிற்சங்க அமைப்பு பற்றி; தமிழ்ஈழமாணவர் பேரவை (ரெசோ) பற்றி பேசுகின்றவர்கள், இம் அமைப்புக்களுக்கு பொறுப்பாக இருந்த என்னைப் பற்றியோ, தளமாநாட்டை நடாத்துவதற்கு உறுதுணையாக இருந்த அன்றைய தளப்பொறுப்பாளர் குமரனைப் பற்றியோ ஒரு மூச்சுக் கூட விடமாட்டார்கள்! இதுதான் இவர்களின் ”நரித்தன” அரசியல் என்பது!.
கெளரிகாந்தன் தொடர்பாக பிற்காலங்களிலும், இன்றும் பல்வேறு அபிப்பிராயங்களும், குற்றச்சாட்டுக்களும் இருக்கின்றன. கெளரிகாந்தன் தொடர்பாக முரண்படும் தோழர்கள் நண்பர்கள் இன்றும் உள்ளனர். அவர் பற்றி அவர்கள் வைக்கும் விமர்சனங்கள், குற்றச்சாட்டுக்களை நான் மறுதலிக்கவில்லை அதை ஏற்றுக் கொள்கிறேன். அவை தொடர்பாக என்னிடமும் விமர்சனங்களுண்டு.
ஆனால்; அதேநேரம், உணர்ச்சிகளோடும், தீவிரத்தோடும் இருந்த புளொட்டின் உட்கட்சி போராட்டத்தை; தத்துவார்த்த போராட்டமாக நகர்த்திச் செல்ல ஊக்கமும்- வடிவமும் கொடுத்தவர் கெளரிகாந்தன் என்பதை யாரும் மறுக்க முடியாது. இராணுவ மயக்கவர்ச்சி கொண்டு 1983ல் இருந்த புளொட் டை சித்தாந்த ரீதியாக,இடதுசாரிக் கருத்தியலில் வழிநடாத்தியதில் தோழர் தங்கராசாவுக்கும் , தோழர் கெளரிகாந்தனுக்கும் பெரும் பங்குண்டு. வட கிழக்கில் நான் தொழிற்சங்க அமைப்புக்குப் பொறுப்பாக இருந்த போதிலும், அந்த அமைப்புக்களை அரசியல் மயப்படுத்தியதில் கெளரிகாந்தனுக்குப் பெரும் பங்குண்டு. புளொட்டினுடைய தோழர்கள் கூலி விவசாயிகளிடமும், கூலித் தொழிலாளர்களிடமும் மிகப் பின் தங்கிய ஒடுக்கப்பட்ட கிராம மக்களிடமும் சென்று, வேலை செய்வதற்கான அரசியல் தத்துவார்த்த பலத்தை, அதன் செயல் ஊக்கத்தைக் கொடுத்தவர் கெளரிகாந்தன் என்றே சொல்வேன். தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்கள இடது சாரி இயக்கங்களோடும், தோழர்களோடும் நாங்கள் அரசியல் உறவுகளை ஏற்படுத்திக் கொண்ட போது அவ்வுறவுகளுக்கு பக்க பலமாகவும், இரு சாராரும் ஏற்படுத்திக் கொண்ட அமைப்பின் உறுப்பினராகவும் கெளரிகாந்தன் இருந்து முக்கிய பங்களித்தார் என்பதை நாம் மறுத்துவிடவோ மறந்து விடவோ முடியாது.
புளொட்டுக்கு பின்னாலான கெளரிகாந்தன் தொடர்பான அரசியல் விமர்சனங்கள், குற்றச்சாட்டுகளுக்கு, தவறுகளுக்கு ஒருவரின் கடந்த கால அரசியல் செயற்பாட்டை, அதன் முக்கியத்துவத்தை புறக்கணிப்பது ஆரோக்கியமானதல்ல என்றே என்று நான் கருதுகின்றேன்.
it seems that uma has been killed by RAW. Whats their purpose behind the killing?? Even though uma helped RAW to colonize Maldives he was killed be them. why? RAW managed to handle LTTE till the end for their own purpose why not PLOTE.
Thamari
உமா மகேஸ்வரனின் கொலையில் இந்திய உளவுத்துறையான ”றோ” சம்பந்தப்பட்டிருக்கும் என்று நான் நம்பவில்லை. புளொட் தொடர்பாக ஆரம்ப காலம் தொட்டே இந்தியாவுக்கு நம்பிக்கை இருக்கவில்லை என்பது வேறுவிடயம். அதற்கு பல்வேறு அரசியல் காரணங்கள் உண்டு .
உமா மகேஸ்வரன் அன்றைய பாதுகாப்பு அமைச்சராக இருந்த லலித் அத்துலத் முதலியோடும், ரஞ்சன் விஜயவர்த்தனா போன்றோர்களுடன் அவர் வைத்திருந்த இரகசிய உறவுகளும், அவர் மேற்கொண்ட மாலைதீவு “புரட்சி” யின் காரணமாக றோ கொலை செய்திருக்கலாம் என எண்ண வாய்ப்புண்டு. ஆனால் உண்மையில் உமா மகேஸ்வரன் கொலை செய்யப்பட்டதற்கு அவரின் சகாக்களே காரணம் என நான் அறிகின்றேன். இதற்கு காரணம் மாலைதீவில் பிடிபட்ட தங்களது சகாக்கள் தொடர்பாக உமா மகேஸ்வரன் எந்தவித அக்கறையும் அற்று இருந்ததும், உமா மகேஸ்வரனின் சகாக்களாக, அடியாட்களாக இருந்த பலரை காலப்போக்கில் உமா மகேஸ்வரன் புறக்கணித்ததும் ஒரு காரணமாக இருக்கும் என நான் நினைக்கிறேன். உமா மகேஸ்வரனை சுட்டவர்களை அறியும் போது அவர்களுக்குப் பின்னால் எந்தவித அரசியலும், மற்றவர்கள் பயன்படுத்தும் ”எந்த திறனும் ” அற்ற வெறும் முட்டாள்தனமான அடியாட்களாகவே அவர்கள் இருந்தார்கள்
முள்ளிவாக்கால் அழிவுக்குப் பின் இலங்கை சென்றுவந்த புளொட் நேசன், சிங்கக்கொடி பொறித்த T.சேட்டுக்களை கொண்டுவந்திருந்தாராம்.அவரது அம்மா மரணமான செய்திகேட்டு கனடாவில் அவரது வீட்டுக்கு துக்கம் விசாரிக்கச் சென்றவர்களுக்கு ஒவ்வொரு சிங்கக்கொடி பொறித்த T.சேட்டை பரிசாகக் கொடுத்தாராம். இதை எப்படி வேண்டுமானாலும் நீங்கள் எடுக்கலாம். (நேசன் இலங்கை சென்றது அவரது அம்மாவின் மரணவீட்டுகே என நினைக்கிறேன்.)
நேசன் இலங்கை கிரிக்கெற் அணியின் சட்டைகளைத்தான் தான் கொண்டு வந்ததாக இது பற்றி கேட்டபோது என்னிடம் கூறினார்.நேசன் மீது வெறுப்பை காட்ட அதை சிங்ககொடியாக திரிபுபடுத்தாதீர். அவர் பற்றிய அரசியல் விமர்சனங்களை காத்திரமாக வையுங்கள். கொசுறு வாதம் புரியாதீர்.
மகேன் மாசில் அவர்களே, நீங்கள் கூறும் நேசனின் சிங்கக்கொடி விடையம் நீங்கள் கூறுவது போல் இலங்கை சிங்கள cricket அணியின் சட்டைகளை ஏன் Nesan Canada கொண்டுவந்தார். சிங்கள cricket அணியின் சட்டை வாளுடன் கூடிய சிங்கக் கொடியே பொறிகப்பட்டிருப்பது எல்லோர்ருக்கும் தெரிந்த விடயம். இந்த விடயம் பேசும் பொருளாக வெளியில் வந்தது நேசனின் செயட்பாட்டினால் தன்னிடம் துக்கம் விசாரிக்க வந்தவர்களிடம் மகிந்தா அரசின் பெருமைகளை கூறியதுடன் நிற்காமல் அங்கு தற்பொழுது பெரும் அவிவிருத்தி நடைபெறுவதாகவும் அங்கு தற்பொழுது பிரச்னை ஒன்றும் இல்லை என்றும் புலிகள் அழிக்கப்பட்டபின்னர் மக்கள் சந்தோசமாக இருப்பதாகவும் கூறியதுடன் நிற்காமல் நான் அணிந்து இருக்கும் இந்த சிங்கக் கொடி சட்டையுடன் இலங்கை சென்றால் air port எந்த பிரச்சனையும் இல்லாமல் சென்று வரலாம் என்று கூறினார். இங்கு பிரச்னை என்ன என்றால் நேசனுக்கு சிங்கக் கொடி போட்ட T shirt போடுவதோ அல்லது புலிக்கொடி போட்ட T shirt போடுவதோ நேசனின் தனிப்பட்ட உரிமை அதில் யாரும் தலைஇட முடியாது. ஆனால் இங்கு நேசன் பொறுப்பு இல்லாமல் நடந்து கொண்டமுறைதான் மனசுக்கு கஷ்டமாக இருந்தது. இவர் கடந்த காலத்தில் PLOT அமைப்பின் யாழ் மாவட்டத்தின் அரசில் பொறுப்பளரக இருந்த பொழுது இவரால் இயக்கத்திற்கு அனுப்பட்ட எந்தனையோ தமிழ் இளையர்கள் இந்த சிங்கக் கொடி இராணுவத்தால் கொல்லப்பட்டும் காணாமல் செய்யப்பட்டும் எத்தனையோ பேரின் வாழ்க்கை சீரலிக்கப்பட்டும் இருக்கின்றது இப்படி நிலைமை இருக்க எந்த கூச்சமும் இல்லாமல் நேசனால் சொல்லி விட்டு கடந்து போக முடிகின்றது. இவரால் தொலைந்து போன உயிர்களை மகிந்தா அரசின் மூலம் பெற்றுக் கொடுக்க முடியுமா.
ஐயா மாசில் அவர்களே
ஏன்நீங்கள் இவ்வளவு அப்பாவியாக இருக்கிறீர்கள் என்று தெரியவில்லை. இந்த சிங்கக்கொடி சட்டையின் பின்னால் இருக்கும் அரசியல் தார்ப்பரியங்களை அறவே புரிந்து கொள்ளாமல் வெறுமனே நேசன் உங்களுக்கு கூறியதை வைத்து நீங்கள் முடிவுக்கு வருவதும் ஏனையோரது விமர்சனங்களை அப்படியே அரசியல் சேறுபூசல் என்று நிராகரிப்பதும் உங்களது அரசியல் முதிர்ச்சியை காட்டவில்லை. மாறாக அரசியல் முதிர்ச்சி மிக்கவர் போல பாசாங்கு செய்து நேசனுக்கு வக்காலத்து வாங்கும் செயற்பாடாகத்தான் புரிந்துகொள்ள முடிகிறது.
மனோ
மனோ அவர்களே ஐயா மாசில் அவர்களுக்கு ஸ்ரீ லங்கா சிங்கள கிரிகெட் அணியின் சட்டையை (uniform ) ஒரு நாளும் பார்த்ததில்லை. ஆகவே அவர் நேசன் சொன்ன உண்மையை தலை மாறி அவரசரத்தில் புரிந்து விட்டார் போல் உள்ளது ஆகவே அவரை மன்னித்து அருள்வீராக.
எமது கடந்த கால அரசியலை பதிவு செய்வதும், விமர்சனம் செய்வதும் அவசியமானவைதான்.நேசன் இன்று கனடாவில் உள்ள சிறீலங்காத் தூதரகத்துடன் உறவுகளைப் பேணிவருகிறார் என்பத்ற்காக அவர் கடந்த காலம் பற்றி எழுதியவை எல்லாம் தவறானவை என்ற் முடிவுக்கு நாம் வரமுடியாது.
கவலைக்குரிய விடயம் என்ன வென்றால் முள்ளிவாய்க்காலின் இரத்தக் வாடைகாற்றில் மறைய முன்னர் புலிகளை சிறீலங்கா அரசு தோற்கடித்தது என்ற ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு, முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களை மறந்து சிறீலங்காத்தூத்ரகத்தில் தீபாவளி கோண்டாடியதுமிகவும் சங்கடமாக உள்ளது. இங்கே தான் இவர்கள் எந்த மக்களுக்காகப் போராடினார்கள் என்ற கேள்வி வருகிண்றது.இவர்கள் இப்போது எழுதுவதன் னோக்கம் பற்றியும் கேள்வி வருகின்றது.
இவரைப் போலவே பல்கலைக்களகத்துக்கு முன்னால் புத்தகக் கடை வைத்திருந்த மணியமும் தேனி இணையத்த்ளத்தில் எழுதிக்கொண்டு கனடாவில் உள்ள சிறீலங்காத் தூதரகத்துக்கு போய் தீபாவளிக் கொண்டாடிவிட்டுவந்தவர் தான். இது தமது சொந்த லாபம் கருதியல்லாமல் வேறு என்ன இருக்க முடியும்? நிட்சயமாக தமிழ் மக்களுக்கான உரிமையை பெற்றுக்கொடுக்கத்தான் தூதரகத்துக்கு இவர்கள் நடையாய்நடந்து கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லமுடியாது.
ஏன் தேவையில்லாத விவாதங்கள். எங்கே இலங்கை கிரிக்கட் அணியின் உடையென்ன என்பதை பார்த்விட்டு வாசகர்கள் முடிவு செய்யட்டுமே.
அந்த சீருடையின் படம் ஒன்றை இந்த பக்கத்தில் பிரசுரித்து விடுங்களேன். நான் அதனை ஒட்ட முனைகிறேன் சரிவரவில்லை.
hவவி://றறற.பழழபடந.உய/iஅபசநள?iஅபரசடஃhவவி://உசiஉமநவஉசயணநைள.கடைநள.றழசனிசநளள.உழஅ/2012/09/ளசடையமெயதநசளல-உழில.திபரூiஅபசநகரசடஃhவவி://உசiஉமநவஉசயணநைள.றழசனிசநளள.உழஅ/2012/09/12/ளசi-டயமெய-வ20-றழசடன-உரி-2012-தநசளநல-டயரnஉhநன-பயடடநசல/ரூhஃ725ரூறஃ640ரூளணஃ225ரூவடினெைஃஐ9ழழமு2எடnNn9ணஆ:ரூவடிnhஃ91ரூவடிறெஃ80ரூpசநஎஃ/ளநயசஉhமூ3குஙமூ3னுளசமைூ2டீடயமெயமெூ2டீஉசiஉமநவமூ2டீவநயஅமூ2டீரகெைழசஅமூ26வடிஅமூ3னுளைஉhமூ26வடிழமூ3னுரரூணழழஅஃ1ரூஙஃளசi+டயமெயn+உசiஉமநவூவநயஅ+ரகெைழசஅரூரளபஃ__குசதடீமுஅ5சுளு12ஒஅசபற31ண1ஓNஐகுடி6றஃரூனழஉனைஃதசு4ருஎருறுருமுஞ_0ழுஆரூhடஃநரெூளயஃஓரூநiஃநஎருPருக7தேுழுயணலயுர்04ழஊஞனுஞரூளஙiஃ2ரூஎநனஃ0ஊநுபஞ9ஞநுறடீபரூனரசஃ4227
hவவி://றறற.பழழபடந.உய/ளநயசஉh?ஙஃளசi+டயமெயn+உசiஉமநவூவநயஅ+ரகெைழசஅரூhடஃநரெூவடிழஃனரூஙளஉசடஃ1ரூசடணஃ1வு4யுனுசுயு_நnஊயு495ஊயு496ரூளழரசஉநஃடnஅளரூவடிஅஃளைஉhரூளயஃஓரூநiஃஙஎருPருனஏ-593ஐயுநடுஅபகபர்ரூஎநனஃ0ஊயுஉஞ_யுருழயுயுரூடிறைஃ1366ரூடிihஃ566சூiஅபசஉஃலஅஏரவஐறுகுறகஓhழஆமூ3யுமூ3டீங1ஆவஅதுறமுஊ9ஐஞநுஆமூ3டீhவவிமூ253யுமூ252குமூ252குறறற.வாயவளஉசiஉமநவ.உழஅமூ252குiஅபமூ252கு2012மூ252கு09மூ252கு15-அயாநடய-தயலயறயசனநநெ-நெற-வ20தநசளநல600.திபமூ3டீhவவிமூ253யுமூ252குமூ252குறறற.வாயவளஉசiஉமநவ.உழஅமூ252குநெறளமூ252கு2012மூ252கு09மூ252கு15மூ252குளசi-டயமெய-ள-நெற-வ20-தநசளநல-னயசமநச-ளவலடளைா-064441.hவஅடமூ3டீ600மூ3டீ450
http://ewn.co.za/2012/10/01/Sri-Lanka-knock-out-defending-champions-England#
This is the picture of Srilankan cricket teams’ uniform. Lets readers decide what we talk about.
நேசன் கனடாவில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு தீவாளி கொண்டாட்டங்களுக்கு சென்று வந்து கோட்டு சூட் போட்டு படம் பிடித்துக்கொண்டதும் இலங்கை கிரிக்கட் அணியின் மீது உள்ள பாசத்தாலும் இருக்கும். ரயா குழுவில் இணைந்துகொண்டதும் அதே பாசத்தால் இருக்கும். என்ன செய்வது மகேன் மாசில் நாங்கள் 30 வருடத்தின் பிறகு சுய நிர்ணய உரிமை குறித்து விவாதிக்க வேண்டிய கேவலமான னிலைக்கு வந்துள்ளோம்.
முன்பு இனியொருவை படிக்கும்போது நேர்த்தியான பாதையும் தெளிவும் இருந்தது இப்போதெல்லாம் புகையும், சேறும்தான் தெரிகிறது
நான் பார்க்கவில்லை. பார்த்ததாகச் சொல்லவும் இல்லை.அரசியல் சாராத ஒருவர் அவர் வீட்டுக்குப் போய்வந்து கவலைப்பட்டதைத்தான் பதிவு செய்தேன்.தவறாய் இருப்பின் மன்னிக்கவும்.
There is indeed a vaccum in the North and East. That Ragavan said that in the British Broadcasting Coporation. I think that the Sri Lanka Muslim Congress can fill that.
மகேன் மாசில் அவர்களே வணக்கம்! நேசனின் சிங்கக்கொடி பற்றியும் அதை திரிவு வாதிகள் திரிவு படுத்துவதாகவும் ஆதங்கப்பட்டு பதிவை வைத்தது இருக்கிறீர்கள் நன்றி. இந்த சிங்கக் கொடி சட்டை Sri Lanka cricket team விடம் இருந்து பெற்றுக் கொண்டு அணிந்தாகவும் நேசன் கூறியதாக கூறுகிறீர்கள். sri lanka சிங்கக் கோடியில் உள்ள அரசியலை பாக்க தவறுவதில் இருந்து உங்கள் அரசியல் வறுமை புரிகின்றது.இப்படி அரசியல் பற்றக்குரைஉடன் உள்ள நீங்கள் மற்றவர் பற்றி மதிப்பீடு செயும் பொழுது கவனமாக மதிப்பிடு செய்ய தெரிய வேண்டும்.
நந்து எனது அரசியல் அறிவை மதிப்பிட்டமைக்கு நன்றி. இலங்கை கிரிக்கெற் குழுவின் சீருடையும் ,சிங்ககொடியும் (சிறிலங்காவின் தேசிய கொடி) ஒரே தராசில் வைக்கப்படகூடியதா? அதாவது இலங்கை கிரிக்கெற் அணியை ஆதரிப்பதும் இனவாத அரசை ஆதரிப்பதும் சமனாக பார்க்க படகூடியதா? மிக இலகுவான நடையில் விளக்கம் தாருங்கள்.
மாசில் அவர்களே. நீங்கள் குறிப்பிட்டு இருக்கும் இலங்கை கிரிகெட் குழு, எனபதிற்க்கும் ஸ்ரீ லங்கா கிரிகெட் குழு எனபதிற்க்கும் இரு வேறு அரசியல் அர்த்தங்கள் இருக்கின்றது. ஸ்ரீ லங்காவில் சிங்கக் கொடி ஒடுக்கப்படும் தேசிய இனங்களைப் பொறுத்தவரை ஒடுக்கும் குறியிடகத்தான் பார்க்கபடுகின்றது.இது ஒரு விழிப்புணர்வு சார்த்த பிரச்னை. நீங்கள் இலங்கையின் தேசிய இன ஒடுக்கு முறையை எப்படி பார்கிறீர்கள் என்ற புரிதலில் இருந்து வருகின்றது. புலிச் சின்னம் பொறித்த சட்டையை புலிகளை ஈற்றுக் கொல்லாத ஒருவர் அணிய முன் வர மாட்டார். இதில் நாங்கள் புலிகளின் கொடி வேறு சின்னம் வேறு என்று பார்க்க மாட்டோம் தானே. இது மாதிரிதான் இலங்கையின் சிங்கக் கொடி என்ற சின்னம் விடைய்ஹிலும். மற்றது நீங்கள் குறிப்பிட்டு இருக்கும் இலங்கை கிரிக்கெட் அணி என்ற ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அணியை ஆதரிப்பதும் இனவாத அரசை ஆதரிப்பதும் ஒன்றா என்று. எப்படி இதில் உங்களுக்கு குழப்பம் வந்தது ஸ்ரீ லங்கா கிரிகெட்குழு முழுக்க முழுக்க சிங்கள பெரும்பான்மை சமுகத்தால் கட்டப்படாது. அது அங்கு இருக்கும் தேசிய இனங்களை பிரதி பலிக்க இல்லை. நட்புடன் நந்து
மாசில் அவர்களே நீங்கள் குறிப்பிடும் விடயத்தை இன்னும் ஒரு உதாரணத்தின் முலமும் பார்க்கலாம். வெள்ளை நிறவெறி அரசு ஆட்சி புரிந்த தென் ஆப்ரிக்கா காலப் பகுதியை பார்ப்போமாஜின் அந்த காலப்பகுதியில் வெள்ளை இனவாத அரசுக்கு எதிர்ப்பை தெரிவிக்கு முகமாக common wealth நாடுகள் தென் ஆப்ரிக்கா நாட்டின் கிரிக்கெட் குழுவை தங்கள் நாட்டில் விளையாட முடியாமல் தடை செய்தன.அத்துடன் மற்ற நாடுகள் தென் ஆப்ரிக்கா சென்று விளையாடுவதையும் தடை செய்தார்கள். ஆகவே இங்கு தென் ஆப்ரிக்கா அரசின் இனவாதத்தை தனியாகவும் அவர்களின் கிரிக்கெட் குழுவை தனியாவும் பார்க்க வில்லை ஸ்ரீ லங்காவின் சிங்கக் கொடியில் இருக்கும் வாளுடன் கூடிய சின்னம் தான் ஸ்ரீ லங்காவின் கிரிக்கெட்குழுவினர் அணியும் சட்டையிலும் பொறிக்கப்பட்டு இருகின்றது. நாங்கள் எங்கள் விழிப்புணர்வின் தரத்தை உயர்த்துவதன் ஊடாக நுண் அரசியலை கண்டு கொள்ள முடியும்
நன்றி நாவலன் மன்னிக்க வேண்டும் நந்து.
பல்வேறு புனைபெயர்களில் குறிப்பாக தனி நபர்கள் மீதான விமர்சனங்களை முன்வைக்கும் நந்து என்பவரின் ஏனைய சில புனை பெயர்கள் கீழே தரப்படுகின்றது. பல சந்தர்பங்களில் பயன்படுத்தப்படும் பெயர்களே அவதூறாகிவிடுகின்றன.
Nanthu
3 approved
nanthu13@gmail.com
99.244.61.240
—————————
rajan
5 approved
rajan10@gmail.com
99.244.61.240
——————————-
kathir
9 approved
kathir12@gmail.com
99.244.61.240
————————————-
Ravi
3 approved
Ravi10@gmail.com
99.244.61.240
——————————————-
Ranji
1 approved
Ranji33@gmail.com
99.244.61.240
———————————————–
Cheliyan
1 approved
Cheliyan50@gmail.com
99.244.61.240
——————————————–
பல வருடங்களாக மனதை குடையும் கேள்வி இது.
தளமகாநாட்டை அவ்வளவு கெடுபிடியிலும் வெற்றிகரமாக முடித்த தளத்தில் இருந்தவர்களுக்கு பின் தள மகாநாட்டை ஏன் நடாத்த முடியவில்லை,தளத்தில் இருந்து வந்தவர்கள் ஆளுக்கொரு பிரிவாக ஒடியதன் காரணம் என்ன?அதன் பின்னர் உமா வைத்த மகாநாடு பற்றியும் அதற்கிடையில் நடந்த சம்பவங்கள் பற்றியும் நீங்கள் அறிந்ததென்ன?
முன்னிலை சோசலிசக் கட்சிக்குப்பின்:
“சுயநிர்ணயம் என்பது இன முரண்பாட்டை முறியடித்து வர்க்கப் போராட்டத்தை நடத்துவதற்கான கோட்பாடு தான். இதற்கு வெளியில் இதற்கு விளக்கம் கிடையாது. பாட்டாளி வர்க்கப் புரட்சிக்குப் பின்தான் கட்சியால் அதை அமுலுக்கு கொண்டு வர முடியும்” .-இரயாகரன் குழு
முன்னிலை சோசலிசக் கட்சிக்குமுன்:
7.2: சுயநிர்ணய அடிப்படையிலான ஒரு தீர்வுதான்,தமிழ் மக்களின் பிரச்சனைக்கான அரசியல் தீர்வாகும்.இதை இந்த அரசு வழங்க மறுக்கின்றது.இதுவல்லாத எதுவும்,ஆளும் வர்க்கத்தின் குறுகிய நலன்களும்,அவர்களின் தேவைக்கும் உட்பட்டவையாக இருக்கும்.(முன்னணிக்கான திட்டம்-2009 .பக்கம்:5) ” என்று இரயாகரன் குழு திட்டமுரைத்தது அன்று.
7.தமிழ் மக்களின் சுயநிர்ணயவுரிமை அங்கீகரக்கப்பட வேண்டும்.தேசிய இனங்கள் தாம் வாழும் பிரதேசங்களில் நிர்வாகங்களை கையாளும் ஆட்சி அமைப்பை உருவாக்க வேண்டும்.
8. சுயநிர்ணயம் என்பது பிரிந்துபோவதையும்,ஐக்கியப்பட்டு வாழுவதையும் அடிப்படையாகக் கொண்டதென்பதைப் பரஸ்பரம் அங்கீகரிக்க வேண்டும்.
9:சுயநிர்ணயம் என்பது தேசியப் பொருளாதாரத்தை அடிப்படையாகக்கொண்ட தேசியமாகும் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். ” என்று ,திட்டம் வரைந்த இரயாகரன் குழுவோ ஒன்றுக்கொன்று முரணாக நின்று கருத்தாடுகிறது.
தோழர் அசோக் அவர்களே! நீங்கள் முன்னிலைக் சோசலிசக் கட்சியைப் பற்றி உங்கள் பார்வையையும் சந்தேகங்களையும் முன்வைத்து இருகிறிர்கள் மிக்க மகிழ்ச்சி.ஆனால் இவர்களுடன் தளத்தில் தோழர் செந்திவேல் அவர்களுடைய கட்சி சேர்ந்து வேலை செய்வதாக அறிகிறோம்.அவர்களுக்கு இந்த விடையங்கள் சமந்தமாக புரிதல் எந்த அளவில் உள்ளது. தோழர் செந்திவேல் அவர்கள் நீண்ட கால இடது சாரி அரசியலில் இருந்து வருபவர்.ஏன் நான் இதை இங்கு குறிப்பிடுகின்றேன் என்றால் ஒரு முடிவை எடுக்கும் பொழுது தாங்கள் ஏப்படி இந்த முடிவுக்கு வந்து அடைந்தாக மக்களுக்கு தெளிவாக தெரியப்படுத்த வேண்டும். நான் இவர்களின் பதிவை எங்கும் காண இல்லை. ஆனால் அவர்களின் வாலிபர் அணித் தலைவர் மயூரன் அவர்கள் முக நூல் பதிவில் முன்னிலை சோசலிசக் கட்சியைப் பற்றி ஏன் ஆதரிக்க வேண்டும் என்ற கருத்துக்கு வலு சேர்க்கும் முகமாக சிறு பிள்ளைத் தனமான வாதத்தை. அரசில் தெளிவு அற்று முன்வைத்து இருந்தார். அதாவது முன்னிலை சோசலிசக் கட்சியிடம் 8000 உறுப்பினர்களும் 400 முழு நேர உருபினர்களும் உள்ளதாக. இது பற்றி உங்கள் கருத்தை அறிய ஆவலாக உள்ளேன்.
சாலையோரத்தில் நின்று அறியாத புரியாதவர்களுக்கு வழி காட்டும் எல்லை கல்லை புதைச்சுட்டு, எங்க போறதுன்னு தெரியாம முழிக்கறது தமிழனுக்கு கைவந்த கலை. சில நேரங்கள்ல சம்பந்தப்பட்ட எல்லை கல்லே அந்த நிலைமையை ஏற்படுத்திவிடும்.
நீரே இவ்வளவு சுத்துறீர் அது போதாதா என்ன