பிரித்தானியாவிலிருந்து தமிழ் அகதிகள் இன்று கடத்தப்படுகின்றனர். மகிந்த ராஜப்ச்க பாசிச அரசு இலங்கையில் இனச் சுத்திகரிப்பு நிகழ்த்திவரும் நிலையில் கடத்தப்படும் அகதிகள் சித்திரவதைக்கும், துன்புறுத்தல்களுக்கும் உள்ளாகக் கூடிய நிலை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. லண்டனில் இருந்து 50க்கும் மேற்பட்ட தமிழர்களை தனி விமானத்தில் ஏற்றி இலங்கைக்கு நாடு கடத்த பிரித்தானியா முயல்கிறது. இதனை தடுக்க வேற்றின மக்களுடன் சில தமிழர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். தடுப்பு முகாமில் இருந்து திருப்பி அனுப்ப என ஒரு தொகுதி தமிழர்களை ஏற்றியவாறு வெளியே வந்த பேரூந்து ஒன்றை ஆர்ப்பாட்டக்காரர்கள் வழிமறித்து அதனைச் சூழ்ந்துகொண்டனர். இதனால் அதன் சாரதி எதனையும் செய்யமுடியாது பேரூந்தை திரும்பவும் தடுப்பு முகாமுக்குள் கொண்டு சென்றுள்ளார். இருப்பினும் வேறு வழியாக இவர்களை பிறிதொரு பேரூந்தில் ஏற்றி விமானநிலையம் கொண்டு செல்ல பிரித்தானிய குடிவரவு அதிகாரிகள் முனைவதாக போராட்டத்தை நடத்தும் சில தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளும் சிறு தொகையானோர் அகதிகளை விமானம் நோக்கி ஏற்றிச் செல்லும் பேரூர்ந்தை தடுத்து வைத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏனையோர் ஹீத்ரோ விமான நிலயம் சென்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு ஆர்பாட்ட ஏற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்தார்.
மேலதிக விபரங்களுக்கு 07534863945 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளுமாறு கேட்கப்படுகின்றனர்.