அகதிகள் என்ற போர்வையில் மாநிலத்திற்குள் விரும்பத்தகாத சக்திகள் எதுவும் நுழையா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டியது காவல் துறையினரின் கடமையாகும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னையில் கலெக்டர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் 2 நாள் மாநாடு இன்று ஆரம்பமானது. மாநாட்டை ஆரம்பித்து வைத்து பேசிய முதல்வர் கருணாநிதி, இலங்கையில் பெரும் எண்ணிக்கையிலான தமிழ் மக்கள் இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுடைய குறைகளைக்களைய மத்திய அரசோடு நேரில் விவாதித்தும், மத்தியில் உள்ள தமிழக அமைச்சர்கள் மூலமாக எடுத்துச் சொல்லியும், கடிதங்களின் வாயிலாக வலியுறுத்தியும், மத்திய அரசோடு இணைந்து தமிழக அரசு அனைத்து வகையான நடவடிக்கைகளையும் செயறிபடுத்தி வருகின்றது.
வெட்கக்கேடு.. !!! இலங்கையிலிருந்து வருபவன் பாகிஸ்தான் தீவிரவாதியாகவோ அல்லது தாலிபன் தீவிரவாதியாகவோவா இருப்பான்.. ??? தமிழ்.. தமிழன்.. என்று வேஷம் போட்டுக்கொண்டு அரசியல் ஏணியில் ஏறி இன்று சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு ஏறிவந்த ஏணியை எட்டி உதைப்பதோடு அல்லாமல் இன்று தமிழர்கள் “அகதிகள் என்ற போர்வையில் மாநிலத்திற்குள் விரும்பத்தகாத சக்திகள்” ஆகிவிட்டார்கள். என்ற அறிக்கை வேறு.. தேவைதான்டா உனக்கு தமிழா இலவச டி.வி., காஸ் அடுப்பு என்று உன்னை ஏலம் விட்டுவிட்டு.. இன்று தொப்புள்கொடி தமிழனை திவிரவாதியாக பார்க்கும் அரசியல்வாதிகளை பார்க்கும்போது.. வேதனை மனதை பிசைகிறது …….
நேர்மை நிலைகுலைந்துள்ளது; உண்மை உறங்குகிறது.
ஈழத் தமிழர்களின் வாழ்வே கேள்விக்குறியாய் உள்ள நிலையில் இது போன்ற கருத்துகள் தேவையற்றவை. உதவி செய்யாவிட்டாலும் இடையூறு செய்யாமல் இருந்தால் நல்லது என்பதை இந்த ஆட்சியாளர்களுக்கு யார் உணர்த்துவது? நேர்மை நிலைகுலைந்துள்ளது; உண்மை உறங்குகிறது