பிரித்தானிய அரசாங்கம் குடிவரவுச் சட்டமூலம் ஒன்றை கடந்த வியாளனன்று சமர்ப்பித்துள்ளது. இதன் அடிப்படையில் பிரித்தானியாவிற்கு புதிதாகக் குடிவருபவர்களுக்கும் சட்டங்களுக்கு உட்படாது தங்கியிருப்பவர்களுக்கும் எதிரான புதிய விதிகள் நடைமுறைக்கு வரவுவுள்ளது. இச் சட்டங்கள் மனித உரிமைக்கும் மனிதாபிமானத்திற்கும் எதிரான கடுமையான சட்டங்கள் என மனித உரிமை அமைப்புக்கள் சில் கூறியுள்ளன. பிரித்தானியாவிற்குள் தங்கியிருக்க அனுமதிப் பத்திரம் இல்லாத ஒருவருக்கு வீட்டை வாடகைக்கு வழங்குவது சட்டப்படி குற்றமாக்கப்பட்டுள்ளது. மனிதாபிமான அடிப்படையில் அரசியல் தஞ்சக் கோரிக்கை நிலுவையிலுள்ள அகதிகளைக் கூட தெருவில் நிறுத்தக் கோரும் இந்தச் சட்டம் அவர்களின் மருத்துவ வசதிகளின் மீதும் குறிவைக்கிறது.
வதிவிட அனுமதிப்பத்திரம் இல்லாதவர்களுக்கு மருத்துவ சேவை முற்றாக மறுக்கப்படும் அதே வேளை, தற்காலிகமகக் குடியேறும் மாணவர்கள், குறுகிய கால வேலை செய்பவர்கள் போன்றவர்களுக்கு இலவச மருத்துவ சேவையை முற்றாக மறுக்கிறது. மருத்துவச் செலவிற்கு பெருந்தொகையான பணத்தை இவர்கள் செலுத்தவேண்டிய நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
தற்காலிகக் குடிவரவாளர்களை மருதுவச் செலவுகளைக் காப்புறுதி செய்வதற்கென பல பல் தேசிய வியாபார நிறுவனங்கள் முளைவிட்டு பிரித்தானியாவை நோக்கி வரும் மாணவர்களையும் வேலையாட்களையும் சுரண்டிக் கொழுக்கும் என்பதில் ஐயமில்லை.
வீடு ஒன்றை வாடகைக்கு கொடுப்பதற்கு உரிமையாளர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளால் உரிமையாளர்கள் பிரித்தானிய பிரசா உரிமை பெற்றுக்கொண்டவர்களுக்கு மட்டுமே வாடகைக்குக் கொடுக்கும் நிலை தோன்றும் என சில அமைப்புக்கள் எச்சரித்துள்ளன .
புலம் பெயர் மக்களுக்காகக் குரல்கொடுப்பதாகக் கூறிக்கொள்ளும் அமைப்புக்கள் எதுவும் இது குறித்து மூச்சுக்கூட விடாத நிலையில் ஏனைய பல அமைப்புக்கள் பிரித்தானிய அரசின் மனித் உரிமை மீறல்களைக் கண்டித்துள்ளன.
I welcome the new immigration law.
Britain has become a haven for economic immigrants.
People who really face persecutions in their country have been always welcome by Britain.
That is the reason more than 200,000 Eelam Tamils are living in UK and enjoying a wealthy life they would not have dreamed of.
There are more than a million illegal immigrants living in Britain,taking advantage of the lenient policies of successive governments. British laws have been abused by unscrupulous elements.
Most of the people seeking asylum,after entering another country wants to come to UK because of the benefits given to the immigrants,which they they will not receive in the countries they have sought aslum first.
The British laws are being brought to be in line with other countries.