த்திய அமெரிக்க நாடாப ஹோண்டுராசில் ராணுவப் புரட்சியால் பதவியிலிருந்து இறக்கப்பட்டு, நாடு கடத்தப்பட்ட அதிபர் மனுவேல் ஸிலேயாவை மீண்டும் நாடு திரும்ப அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி, அந்த நாட்டின் மருத்துவப் பணியாளர்களும் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் குதித்துள்ளனர். இதனால், ராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.மருத்துவப் பணியாளர்களின் போராட்டம் காரணமாக, அரசு மருத்துவமனைகள் அனைத்தையும் ராணுவ வீரர்கள் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.சுமார் 75 லட்சம் மக்கள் வசிக்கும் சின்னஞ்சிறிய நாடான ஹோண்டுராஸில் ராணுவப் புரட்சி ஏற்பட்டு ஒரு மாதமாகியும் அரசியல் நிச்சயமற்ற நிலை நீடிக்கிறது. இந்த நெருக்கடிக்குத் தீர்வு காண, ராணுவத்தின் இடைக்கால ஆட்சித் தலைவர்களுடன் பிற நாடுகளின் ராஜீயத் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பதவியிலிருந்து இறக்கப்பட்ட அதிபர் மனுவேலுவுக்கு ஆதரவாக மாணவர்களும் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். ராணுவத்தினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும், தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் அவர்களைக் கலைத்தனர். ராணுவ ஆட்சிக்கு எதிராக 50,000 ஆசிரியர்களும் ஏற்கெனவே வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், அரசு மருத்துவமனைகள், சுகாதார மையங்களில் பணியாற்றும் 8,000 ஊழியர்களும் தற்போது காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் குதித்துள்ளனர்.
ம