அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டனை இந்திய வெளியுறவுத் துறை செயலர் சிவசங்கர் மேனன் இன்று சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பு வாஷிங்டனில் உள்ள அந்நாட்டு வெளியுறவு அமைச்சக அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த சந்திப்பின் போது, மும்பை தாக்குதல், இலங்கையில் போரினால் ஏற்பட்டுள்ள மோசமான நிலமைகள், ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலை ஆகியவை குறித்து இருவரும் விரிவாக ஆலோசித்ததாக தெரியவருகின்றது.