Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

ஹட்டனில் இடம்பெற்ற ஊற்றுக்களும் ஓட்டங்களும் நூல் விமர்சனம்:செ.கிருஸ்ணா

இனியொரு... by இனியொரு...
04/04/2013
in பிரதான பதிவுகள் | Principle posts, இலக்கியம்/சினிமா
0 0
0
Home பிரதான பதிவுகள் | Principle posts

ஹட்டனில் இடம்பெற்ற ஊற்றுக்களும் ஓட்டங்களும் நூல் விமர்சனம்:
மலையக இலக்கியத்தின் செல்நெறிகள் குறித்த கருத்தாடல்களுக்கான பகிர்வு

Ordienceலெனின் மதிவானம் எழுதிய ஊற்றுக்களும் ஓட்டங்களும் (மீனாட்சியம்மாள் முதல் மார்க்ஸிம் கார்க்கிவரை) திறனாய்வு கட்டுரைகளின் தொகுப்பு நூல் அண்மையில் ஹட்டன் நகரில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. பாக்யா பதிப்பகத்தின் வெளியீடான இந்த நூலை ஹட்டன் முச்சந்தி இலக்கிய வட்டத்தினர் ஹட்டன் நகரில் அறிமுகம் செய்து விமர்சன நிகழ்வினையும் ஏற்பாடு செய்திருந்தனர்.

சமூக செயற்பாட்டாளர் மு.இராமச்சந்திரனின் வரவேற்புரையுடன் நிகழ்வுகள் ஆரம்பமாயின. கலாநிதி ந.இரவீந்திரன் தலைமையுரையாற்றினார். மலையகத்தின் அரசியல் சமூக செயற்பாடுகளின் போக்கு பற்றியும் மலையகத்தின் இன்றைய செல்நெறி குறித்தும் தலைமையுரையில் பதிவு செய்த கலாநிதி இரவீந்திரன் அவர்கள் இன்றைய காலகட்டத்தில் மலையக இலக்கியம் குறித்த விமர்சன ரீதியான sirappu pirathi - c.sivakumarபார்வைக்கு இத்தகைய நூல்களின் வருகை அவசியம் என குறிப்பிட்டார். இந்த நூல் கோ.நடேசய்யர் மற்றும் திருமதி.மீனாட்சியம்மாள் நடேசய்யர் குறித்த மீள்பார்வையை வலியுறுத்துகின்றது. நடேசய்யர் மலையக மக்களின் விடுதலையை வேண்டி இந்தியாவில் இருந்து வந்தவரில்லை. அவர் இந்திய சுதந்திர போராட்டத்திற்கு நிதி திரட்டுவதற்காக இலங்கை வந்தவர். வந்த இடத்தில் இலங்கையில் நிலவிய சூழ்நிலை அவரை அரசியல், தொழிற்சங்க பணிகளுக்கு இட்டுச்செல்கின்றது. திரு.ஏ.ஈ.குணசிங்க போன்ற தொழிற்சங்கங்க தலைவர்களுடன் இணைந்து பணியாற்றிய அவர் பின்னர் அவர்களின் இனவாத போக்குகளை புரிந்துகொண்டு மலையக மக்களுக்கான தனியான தொழிற்சங்கத்தை தாபித்து மலையக மக்களிடையே பணியாற்றியுள்ளார். அவருக்கு துணையாக நடேசய்யரின் துனைவியார் மீனாட்சியம்மாள் இருந்துள்ளார்.

n.Raveendran thalamayuraiஇந்த தம்பதியரின் மிக முக்கிய கருத்தியலாக மலையகம் நமது மண், நாம் இலங்கைக்கு உரியவர்கள் என்றவாறு அமைந்தமை வரலாற்றில் பதிவு செய்யப்படவேண்டியது. நேருவின் இலங்கை வருகையும் இலங்கை இந்திய காங்கிரஸ் உருவாக்கமும் மலையக மக்கள் இந்த நாட்டுக்கு உரியவர்கள் அல்ல என்றும் இந்திய வம்சாவளியினர் என்கிற நிலைப்பாட்டுக்கு தள்ளப்பட்டனர். நடேசய்யர் தம்பதியினர் தொழிலாளர் வர்க்கத்தினரிடையே ஏற்படுத்திவைத்திருந்த இலங்கை நமது நாடு என்கின்ற நிலைமை சிலரது அரசியல் லாபத்துக்காக மாற்றிப்போட்ட துரதிஸ்டத்துக்கு இட்டுச்சென்றது. பின்னாளில் அது மக்கள் விடுதலை முன்னணியினர் தோட்டத் தொழிலாளர்கள் இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் எச்சங்களாக பார்க்கும் ஒரு நிலையைத் தோற்றுவித்தது. இலங்கை திராவிட முன்னேற்றக்கழக செயற்பாடுகள் மற்றும் இடது சாரி அரசியல் செயற்பாடுகள் மலையகத்தையும் அங்குவாழும் மக்களையும் இலங்கைக்கே உரியவர்களாக நிலைநிறுத்த முயற்சித்தபோதும் இந்திய ஆதிக்கத்திலான தொழிற்சங்க செயற்பாடுகளின் விளைவாக இன்றும் கூட மலையக மக்கள் தங்களை இலங்கையின் தேசிய இனமாக நிலைநிறுத்தி கொள்வதில் பல சவால்களை ஏற்படுத்தியுள்ளது.

1980 களில் தொழிற்சங்கம் அல்லாத அரசியல்மயப்படுத்தலை மலையகத்தில் ஏற்படுத்த முடிந்தது எனினம் அதனை தொடர்ந்தேர்ச்சியாக செயற்படுத்த முடியாது போனமை இடதுசாரி அரசியல் செயற்பாட்டாளர்களின் தவறாகவே கொள்ள வேண்டியுள்ளது. இந்த நிலையில் நN;டசய்யர் தம்பதிகளின் இலங்கை எமது நாடு என்கின்ற கருத்தியலை நினைவூட்டும் அதேநேரம் சி.வி முதல் சிவனு மனோகரன் முதலான இன்றைய படைப்பாளிகள் வரையான ஆக்கங்களை விமர்சன பார்வையுடன் முன்வைக்கும் இந்த நூலின் வருகை ஒரு புதிய திசையைக்காட்டி நிற்பதாக தெரிவித்தார்.

Thilagar Arimugavuraiநூலின் அறிமுத்தை அதன் வெளியீட்டாளரான பாக்யா பதிப்பகத்தின் நிறுவுனர் மல்லியப்புசந்தி திலகர் நிகழ்த்தினார். அவரது அறிமுகவுரையில் லெனின் மதிவானம் போன்ற மலையக ஆளுமைகளின் பணிகளை செயற்பாடுகளை மலையகம் அதிகம் வேண்டிநிற்பதாக தெரிவித்தார். மலையகம் என்ற சொல்லாடலையும் அதன் கருத்தியலையும் வளர்த்தெடுப்பதிலும் நிலைப்படுத்துவதிலும் மலையக இலக்கியம் முக்கிய பங்குவகிக்கின்றது. அதேநேரம் மலையக மக்கள் தங்களை ‘மலையகமக்கள்’ என பதிவு செய்துகொள்வதில் இன்னும் வெற்றியடையவில்லை. இன்றும் கூட ‘இந்திய வம்சாவளி’ என்றே பதிவ செய்ய வேண்டியுள்ளது. இது குறித்த பல கருத்தாடல்கள் அண்மைக்காலமாக தீவிரமாக கலந்துரையடப்பட்டுவருகின்றது. மலையக அரசியல் ஆளுமைகள் இதில் அதிகம் ஈடுபாடு காட்டவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

Selvaraj -aayvuraiதுரதிஸ்டவசமாக இத்தகைய விடயங்கள் குறித்து அக்கறைகொள்ளவேண்டிய அளுமைகள் திருட்டுப்போயுள்ளன அல்லது திருடப்பட்டவிடுகின்றன. மலையக ஆளுமைகளுக்கு நிகழ்ந்துகொண்டிருக்ககூடிய இந்த துரதிஸ்டநிலைமை தவிர்க்க மலையகத்தின் ஆளுமைகள் அவ்வாறே அடையாளப்படுத்தப்படவேண்டிய தேவை இருக்கினறது. இந்த நூலும் கூட அத்தகைய ஆளுமைகளை தேசிய சர்வதெசிய இலக்கிய ஆளுமைகளுடன் ஒரே தளத்தில் வைத்து நோக்கும் ஒரு பணியினை செய்துள்ளது என்றவகையில் முக்கிய இடத்தினைப்பெறுகின்றது என குறிப்பிட்டார்.

நூலின் சிறப்பு பிரதியினை மூத்த தொழிற்சங்கவாதி திரு.ஆறுமுகம் அவர்களிடம் இருந்து சூரியகாந்தி பத்திரிகையின் பொறுப்பாசிரியர் சிவலிங்கம் சிவகுமார் பெற்றுக்கொண்டார். அதனைத்தொடர்ந்து பல்வெறு அரசியல், தொழிற்சங்க செயற்பாட்டாளர்களும் கல்வியாளர்களும் சிறப்பு பிரதிகளைப்பெற்றுக்கொண்டனர்.
நூல் குறித்த விமர்சனங்களைப்பதிவு செய்த மூத்த எழுத்தாளர் மு.சிவலிங்கம் விமர்சன நூல் ஒன்றை விமர்சனத்துனத்துக்கு உட்படுத்துவது வித்தியாசமான அனுபவம் என்றார். அதேபோல மலையகத்தில் கட்டுரை இலக்கியத்தை ஒரு துறையாக தெரிவு செய்துகொண்டு லெனின் மதிவானம் முக்கிய பணியினை ஆற்றிவருகிறார். இதற்கு முன்னர் அருட்தந்தை கீத பொன்கலன் இவ்வாறான பணிகளைச் செய்துவந்துள்ளார். லெனின் மதிவானம் அவர்களின் இடைவிடாத வாசிப்பும் அவருடைய பார்வைகுறித்த பதிவும் தொடர்ச்சியாக நடைபெறுவது பாராட்டுக்குரியது. எனினும் பேராசியரியர் கைலாசபதியின் தாக்கமும் அவரது கோட்பாடுகள், எல்லைக்குள்ளேயே லெனின் மதிவானம் அவர்களின் வாசிப்பு தேடல்கள் அமைவது விமர்சனத்துக்கு உரியது. ஓர் படைப்பாளன் இப்படித்தான் எழுதவேண்டும் என யாரும் தீர்மானம் போடமுடியாது. மாறாக படைப்பாளனது எழுத்துக்களை ஊக்குவிப்பதாக விமர்சனங்கள் அமையவேண்டும்.

sedhu aayvuraiசிவனு மனோகரன் போன்ற இளம் எழுத்தாளர்களை பயமுறுத்தக்கூடாது. இது அவர்களை திட்டமிட்ட பண்ணையாளர்களை கதாபாத்தரங்களாக்கி (வில்லன்னகளாக்கி) அவர்களை நோக்கி போராடும் எம்.ஜி.ஆர் பாணி படைப்புகளுக்கு வழிகாட்டுவதாகவிடும் என்றார். லெனின் மதிவானம் இந்த நூலின் எல்லையை மீனாட்சியம்மாளை முதல் மார்க்ஸிம் கார்க்கி விபரிப்பது ஏன் என புரியவில்லை. சி.வி.முதல் கார்க்கிவரை என அமைத்திருந்தால் அதுவே பொருத்தமானது. சி.வி அளவுக்கு மீனாட்சியம்மாள் பணியாற்றியிருக்கிறாரா என்பதை என்னால் அறுதியிட்டு சொல்லமுடியாதுள்ளது. மீனாட்சியம்மாள் ஒரு மறைக்கப்பட்ட ஆளுமை என்பதில்கூட உடன்பாடு கிடையாது. அவர் அறியப்படாத ஆளுமையாக வேண்டுமானால் இருக்கலாம். மீனாட்சியம்மாளின் பணிகளை தேடியெடுத்து முன்னிலைப்படுத்துவதற்கு லெனின்மதிவானம் முயற்சிக்கிறார். ஆனால், அவை கிடைக்கக்கூடியவைதானா என்பது குறித்தும் பார்க்கவேண்டும். மலையக தொழில்முறைமையின் வழிவந்த கங்காணி கலாசாரம் இன்றும் கூட தொழிற்சங்க அரசியல் செயற்பாடுகளிலும் நிலவுவது குறித்து கவனம் செலுத்த வேண்டியுள்ளது எனவும் தெரிவித்தாhர்.

அடுத்து விமர்சனபார்வையை முன்வைத்த ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரி உப பீடாதிபதி வ.செல்வராஜா மலையகத்தின் தற்கால இலக்கிய செல்நெறியில் லெனின் மதிவானத்தின் பார்வை மிக முக்கியமான வேண்டுதல்களை கோரி நிற்கின்றது. மலையக இலக்கியத்தில் சி.வி.வேலுப்பிள்ளை அவர்களின் பங்களிப்பை யாரும் மறுதலிக்கவோ குறைத்து மதிப்பிடவோ முடியாது. அதே நேரம்; நாம் இந்த நாட்டுக்குரியவர்கள் இந்த மண் நம்மால் ஆக்கப்பட்டது எனும் கருத்துக்களை விதைத்த நடேசய்யர் தம்பதிபதிகளின் செயற்பாடுகள் பணிகள் மீளவும் நினைவுறுத்தப்படவேண்டிய காலகட்ட்தில் இன்னும் மலையகம் உள்ளது. மலையகம் நமக்கான மண் என்பதையும் நாம் மலையக தேசியத்துக்கு உரியவர்கள் என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டிய காலகட்டம் இது. இதற்கு முந்தைய தலைiமுறையினரான சி.வி., தெளிவத்தை ஜோசப், என்.எஸ்.எம்.இராமையா, மு.சிவலிங்கம் முதலானோர் மக்கள் இலக்கிய படைப்பாளிகளாகவே இருந்துள்ளனர். மலையக மக்களைவிட்டு வேறு விடயங்கள் பாடுபொருளாகக் கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் அவர்களுக்கு இயல்பாகவே அமையவில்லை. ஆனால் இன்றைய நிலை அப்படியல்ல. மலையகத்திலும் அதற்கு வெளியேயும் இடம்பெற்ற, இடம்பெற்றுவரும் அரசியல் சமூக அசைவியக்கங்கள் சமூகம் மற்றும் மக்கள் குறித்த பார்வையாக அல்லாமல் தனிமனித பதிவுகளாக இலக்கியங்கள் அமைந்துவிடும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளது என்பதையே லெனின் மதிவானம் அவர்கள் இந்த நூலில் குறிப்பிடுகின்றார். மலையக மக்களின் துன்பியல் நிறைந்த வருகையை, தோட்ட முதலாளிகளின் சுரண்டலை, தொழிலாளர் போராட்டங்களை, மக்களுக்காக உயிர்நீத்த தியாகங்களை, மலையக மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டமையை, நாடுகடத்தப்பட்டமையை பதிவுசெய்த இலக்கியங்கள் இன்று தனிப்பட்ட மனிதர்களின் தாபங்களையும். ஆசைகளையும், விருப்பு வெறுப்புகளையும் பதிவு செய்ய விளைவது ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல என்பதே இங்கு அவதானிக்கப்படவேண்டியது.

அண்மைக்காலங்களில் ‘கோடாங்கி’ சிறுகதை தொகுப்பைத்தந்த சிவனு மனோகரன், ‘அவமானப்படவனின் இரவு’ கவிதைத் தொகுப்பைத்தந்த கருணாகரனின் படைப்பாளுமை எந்தவகையிலும் குறைவானது அல்ல. இயல்பாக சொற்கள் வந்து விழும் லாவகமான நடையை அதில் தரிசிக்கலாம். ஆனால் தேயிலைத்தோட்டத்திலே, உழைக்கப்பிறந்தவர்கள், ஒரு கூடைக்கொழுந்து, மலைகளின் மக்கள், பேப்பர் பிரஜைகள் என எழுதிவந்த மலையக இலக்கிய செல்நெறி இன்று இத்தகைய இளம் ஆளுமைகளின் பார்வைகளை தனிமனித தாபங்களுக்குரிய படைப்புகளாக இட்டுச்சென்றிருக்கக்கூடிய ஒரு உலகமயமாதல் ஆக்கிரமிப்பையும் சமூகத்தில் இருந்து ஒவ்வொரு தனிமனிதனையும் தள்ளிவைக்கும் ஒரு இயங்குசக்தி தொழிற்படுவதையுமே காட்டி நிற்கின்றது. இப்படியொரு நிலைமைக்கும் காலகட்டத்திற்கும் நாம் இட்டுச்செல்லப்படுகிறோம் என நாம் நம்மை சுதாகரித்து அடையாளம் காண மறுப்பதே பின்னாளில் ஒரு வரலாற்று தவறாகிவிடும். அந்த வகையில் லெனின் மதிவானத்தின் விமர்சனபார்வை முக்கியத்தவமுடையது. எனவே மலையக இலக்கிய பண்பாட்டுக்கு உள்ள தனித்துவமான மக்கள் இலக்கியம் நோக்கி இளம் படைப்பாளிகள் கவனம் திரும்ப வேண்டும். இன்று இடம்பெறக்கூடிய தொழிலாளர் பிரச்சினைகள், மலையகதேசியம் தொடர்பான பிரச்சினைகள், மலையக மக்களின் இருப்பு தொடர்பான விடயங்கள், தோட்டங்களில் இருந்து கல்விசாலைகளுக்கு மாற்றப்பட்டிருக்கும் கங்காணி கலாசார முறைமையின் மோசமான பக்கங்களையும் இலக்கியபடைப்புகள் வெளிப்படுத்தவேண்டும் என்கின்ற எதிர்பார்ப்பினை லெனின் மதிவானம் அவர்கள் கொண்டிருப்பது இளம் படைபாளிகள் மீதான விமர்சனமாக அமையாது மாறாக அவர்களை வழிப்படுத்துவதாகவே அமையும் எனவும் குறிப்பிட்டார்.

sabaiதொடர்ந்து இளம் திறனாய்வாளர்களான ஆசிரியர் சேதுரட்ணம், மற்றும் மு.ஜெயகுமார் ஆகியோரின் கருத்துரைகளும் இடம்பெற்றன. இந்த உரைகளிலும் மலையக தேசியம் பற்றிய பார்வையை மலையகம் கூர்மைபடுத்தவேண்டிய காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம் எனும் கருத்து ஒலித்தது. இறுதியாக ஏற்புரையாற்றிய நூலாசிரியர் லெனின் மதிவானம் விரிவுரையாளர் வ.செல்வராஜா அவர்களின் கருத்துக்களோடு தான் முழுமையாக உடன்படுவதாகவும் தனது நோக்கம் மலையக இலக்கியங்கள் தனக்கேயுரிய குணாம்சங்களுடன் தொடர்ந்து பயணிக்கவேண்டும் என்பதுதான். இதில் இடம் பெறக்கூடிய சிதைவுகளை நாம் அடையாளம் கண்டு அத்தகைய தடைகளில் இருந்து வெளியே வருவதற்கான வழிமுறைகளை வலியுறுத்துவதே அன்றி காழ்ப்புணர்வுகளால் கருத்துக்கள் பதிவுசெய்யப்படுவதில்லை. அதே நேரம் மலையக சமூக இலக்கிய செயற்பாடுகள் தேசிய சர்வதேச தளத்தில் வைத்து ஒப்புநோக்கும் ஒரு பண்பையும் இந்த நூலின் ஊடாக தரிசிக்கலாம் எனவும் தெரிவித்தார்.

முச்சந்தி இலக்கிய வட்டத்தின் சார்பில் ஆசிரியர் எம்.எஸ்.இங்கர்சால் நிகழச்சிகளை தொகுத்து வழங்கினார். மலையக மக்கள் முன்னிணி செயலாளர் அ.லோரன்ஸ், தொழிலாளர் தெசிய சங்கத்தின் செயலாளர் எஸ்.பிலிப், மூத்த எழுத்தாளர் மொழிவரதன் இளம் எழுத்தாளர்களான சிவனு மனோகரன், தவச்செல்வன், சரவணகுமார். லிங்கன் பதிப்பக உரிமைளார் கிருபா லிங்கதாசன், பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் நிகழ்வில் கலந்துகொண்டமை சிறப்புக்குரியது.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
இலங்கையில் பர்மாவின் பாணியில் இன மோதலை ஏற்படுத்த முயற்சி : கொழும்பு ஊடகம்

இலங்கையில் பர்மாவின் பாணியில் இன மோதலை ஏற்படுத்த முயற்சி : கொழும்பு ஊடகம்

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...