ஸ்பெயினில் லட்சக்கணக்கான மக்கள் இன்றும் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஐரோப்பிய அமரிக்கப் பொருளாதார நெருக்கடியின் விளைவாக அந்த நாடுகள் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கின்றன. இரண்டு வாரங்களின் முன்னர் “உண்மையான ஜனநாயகம் வேண்டும்” என்ற கோரிக்கையின் என்ற முழக்கத்தின் கீழ் இளைஞர் போராட்டங்கள் உருவாகின. அப்போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இவ்வகையான போராட்டங்களையும் மக்கள் எழுச்சிகளையும் ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் எதிர்பார்க்கலாம என பிரஞ்சு ஆய்வாளர் ஜெராட் டொமினில் கூறுகிறார்.
பொருளாதார நெருக்கடிக்கு மாற்றுத் தீர்வற்ற நிலையில் காணப்படும் ஐரோப்பிய நாடுகள் மத்திய கிழக்கில் பொருளாதாரத்தைத் தேடி நிலைகொண்டுள்ளன.