அமரிக்காவின் பயங்கரவாதச் செயல்களை அம்பலப்படுத்திய எட்வார்ட் சினோடென் உலகம் முழுவதும் சல்லடை போட்டுத் தேடுகிறது அமரிக்க அரசு. அவரைக் கைது செய்வதற்கு தேவையான அனைத்து சட்டவழிகளையும் நாடியுள்ளோம் என்கிறார். நேற்று ஞாயிறன்று ஹொங்கொங்கிலிருந்து ரஷ்யாவிற்கு வந்து சேர்ந்த ஸ்னோடென் இன்னும் அங்கேயே தங்கியிருப்பதாக அமரிக்க அரசு நம்புகிறது.
எக்குவடோர் நாட்டில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள ஸ்னோடென் ரஷ்யா ஊடாக கியுபாவிற்கும் அங்கிருந்து எக்குவடோருக்கும் பயணம் செய்வதாக தகவல்கள் வெளியாகின. கியூபாவிற்குச் செல்வதற்கான விமானம் பதிவு செய்யப்பட்டிருந்த போதும் அந்த விமானத்தில் ஸ்னோடென் பயணம் செய்யவில்லை என அமரிக்க அரச நிறுவனங்கள் நம்புக்கின்றன.
விமான நிலைய விடுதியிலேயே அவர் தங்கியிருந்ததாகவும் அமரிக்கத் தகவல்கள் மேலும் தெரிவித்தன.
அமரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் கெரி ஸ்னோடென் தப்பிச் செல்ல ரஷ்யாவும் சீனாவும் அனுமதித்திருப்பது உண்மையானால் தான் மிகவும் ஏமாற்றமடைவேன் என்று கூறுகிறார்.
ஸ்னோடெனின் கடவுச்சீட்டை அமரிக்க அரசு இரத்துச் செய்துள்ளது. ஹொங்கொங் அரசு ஸ்னோடெனை நாடுகடத்த அமரிக்கா தகுந்த ஆதாரங்களைச் சமர்ப்பிக்கவில்லை என்கிறது.
மக்கள் மீது அமரிக்க அரசு மேற்கொள்ளும் தாக்குதல்கள் குறித்து உலக மக்களின் முன் வெளிக்கொண்டுவந்த ஸ்னோடெனை ஏன் அமரிக்க அரசு கைது செய்யவேண்டும். கிரிமினல் குற்றச்சாட்டுக்க்ளை ஏன் முன்வைக்க வேண்டும் என்ற கேள்வி பரவலாக சாதாரண மக்கள் மத்தியில் எழுகின்றது.
மிக நீண்ட காலத்தின் பின்னர் உலகத்தின் அதிபயங்கர கிரிமினல் அரசான அமரிக்காவின் உள்புறத்திலேயே அதிர்வுகளும் வெடிப்புக்களும் ஏற்படுவதை இந்தச் சம்பவங்கள் காட்டுகின்றன.
தன்னை அழிப்பதற்கான ஆயுதங்களை அமரிக்க அரசே தயாரித்து வழ்ங்கியிருக்கிறது.
அமரிக்காவின் பிரபல ஊடகவியலாளரான கிலென் கிறீன்வோல்ட் நேர்காணல் ஒன்றின் போது தெரிவிக்கையில் ஸ்னோடெனைக் குற்றவாளியாக வகைப்படுத்த முடியாது என்றார். ஸ்னோடென் விரும்பியிருந்தால் இந்தத் தகவல்களை மில்லியன்கள் பெறுமதியான பணத்திற்கு விற்பனைசெய்திருக்கலாம். அது அவரது நோக்கமல்ல. அவர் தனது மனச்சாட்சு உறுத்தியதாலேயே தகவல்களை வெளியிட்டுள்ளார் என்றார். தவிர அமரிக்காவை உளவு பார்த்தார் என்று ஸ்னோடென் மீது குற்றம் சுமத்தியிருப்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்றார். ஸ்னோடென் எந்த அன்னிய அரசிற்கும் வேலைபார்க்கவில்லை. பணத்தை வாங்கிக்கொண்டு ஆவணங்களை விற்பனை செய்யவில்லை தனது நேர்காணலில் தெரிவித்தார்.
அவரை இடை மறித்த என்.பி.சி தொலைக்காட்சியின் அறிவிப்பாளர் ‘உங்களுக்கு எதிராக ஏன் கிரிமினல் குற்றங்களை முன்வைக்க முடியாது’ என மிரட்டும் பாணியில் கேட்டார்.
தாங்கள் உலகின் அதி உயர் ஜனநாயக நாடு என உலக மக்களுக்குப் படம் காட்டிக்கொண்டிருந்த அமரிக்க அரசின் முகத்திரை கிழிந்து தொங்குவதை அமரிக்க அதிகாரவர்கத்தால் சகித்துக்கொள்ள முடியவில்லை.
ஆகா! ஆகா! சீனாவும் இரஷ்யாவும் ஸ்நோடனுக்கு உதவி செய்வது,மாபெரும் மனித நேயந்தான்.ஹவாயிலிருந்து தென்னமெரிக்க நாடு ஒன்றிற்கு போவதற்கு ஹொங்கொங் -மாஸ்கோ எனப் பயணிப்பது,உலகைப் புதிதாகக் கண்டுபிடிக்கும் நவீன கொலம்பஸ் முயற்சிதான்.
அமெரிக்க பின்லாடன் பேரால் அழிக்கப்பட்ட தமிழீழ விடுதலை,அமெரிக்க ஸ்னொடன் பேரால் மீட்பளிக்கப்படும் போலிருக்கிறது.