ஸ்டாலினுக்குச் செல்லமான “குட்டிச் சிட்டுக் குருவி” ஸ்வெட்லானா மரணம்; ஸ்டாலினை வசைபாட முதலாளித்துவவாதிகளுக்குக் கிடைத்திருக்கும் மற்றொரு தருணம்
– தோழர்.த.சிவகுமார்
வரலாற்றில் மிக அதிகமாக வசைபாடப் பட்டவர்; தவறாக சித்தரிக்கப்படுபவர் ஸ்டாலின் ஒருவரே என்றால் அது மிகையல்ல. லெனின் ஸ்தாபித்துக் கொடுத்த சோவியத் நாட்டில் லெனினிசத்தை மிகச் சரியாகக் கடைபிடித்து சோசலிச சமூகத்தின் நடைமுறை வெற்றியை உலகுக்கு நிரூபித்துக் காட்டியவர் என்பதனால் ஸ்டாலின் மீது முதலாளித்துவ – ஏகாதிபத்தியவாதிகளுக்குக் கடுங்கோபம். எனவே அவர்கள் அடிப்படையற்ற அவதூறுகளால் ஸ்டாலின் மீது ஏற்படுத்தி வைத்திருக்கும் பொய்ச்சித்திரம் மங்கி மறைந்துவிடாமல் இருப்பதற்காக கிடைக்கும் தருணம் எதையும் பயன்படுத்த அவர்கள் தவறுவதேயில்லை. உலகளவில் முதலாளித்துவம் மூன்றாவது உலகப் பொருளாதார நெருக்கடியில் சிக்கி மக்களின் கவனம் சோசலிசத்தீர்வை நோக்கித் திரும்பிக்கொண்டிருக்கும் இன்றைய நிலையில் அவர்களுக்குக் கிடைத்திருப்பது, ஸ்டாலினால் “குட்டிச் சிட்டுக் குருவி”(Little Sparrow) என்று செல்லமாக அழைக்கப்பட்ட அவரது மகள் ஸ்வெட்லானாவின் மரணம்.
2011 நவம்பர் 22 அன்று இறந்த அவரது மரணச் செய்தியோடு சேர்த்து ஸ்டாலின் கொடுங்கோலன்; அவரது மகளையே பரிதவிக்க விட்டவர்; தனது மகனையே ஹிட்லருக்கு பலியாக்கிய கல்நெஞ்சக்காரர் என்பதில் தொடங்கி பழைய பாட்டுக்கள் அத்தனையையும் மீண்டும் பாடத்துவங்கியுள்ளனர்.
இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரின் நாஜிப் படையிடம் கைதியாகப் பிடிபட்ட ஸ்டாலினின் மகன் யாகோவ்-ஐ விடுவித்தால் ஜெர்மன் ராணுவத் தளபதி ஒருவனை விடுவிக்க வேண்டும் என்று ஹிட்லர் கோரினார். ஆனால் தனக்கொரு நீதி; ஊருக்கொரு நீதி என்றில்லாத வளையாத நீதிக்குச் சொந்தக்காரரான ஸ்டாலின் சாதாரண படைவீரனாகிய தனது மகனுக்கு ஒரு தளபதி இணையான மாற்று அல்ல என்று கூறி மறுத்துவிட்டார். அதனால் அவரது மகன் நாஜிக்களால் கொல்லப்பட்டார். மனித குலத்தின் எதிர்காலத்தையே நிர்ணயிப்பதாக இருந்த அந்த யுத்தம் போன்றதொரு சூழலே இல்லாத நிலையில்கூட ஊழல் மந்திரிகளின் மகன் அல்லது மகளை மீட்பதற்காக நிபந்தனையின்றி தீவிரவாதிகளை விடுவிக்கும் அரசியல்வாதிகளைப் போற்றும் முதலாளித்துவவாதிகள் அப்பழுக்கற்ற பொதுநலத்தின் உச்சகட்ட அடையாளமான ஸ்டாலினை இதற்காகத் தூற்றுவது விந்தைதான்.
இவர்கள் அவதூறு சொல்வதுபோல் உண்மையில் ஸ்டாலின் பாசம் இல்லாத கல்நெஞ்சக்காரர் அல்ல. மனிதகுலத்தையே நேசிக்க முடிந்த அவரால் தன் குடும்பத்தை நேசிக்க முடியாமலா போய்விடும்? சமூகத்தின் நலனா குடும்பத்தின் நலனா என்ற கேள்வி வரும்போது, அவர் தன் குடும்ப நலனைவிட சமூகத்தின் நலனே முக்கியம் என்று முடிவுகள் எடுத்திருக்கிறார். அவ்வளவே. அதற்காக அவர் தன் மகள்மீது பாசமே இல்லாதவரா? இக்கேள்வியை சமீபத்தில் ஸ்வெட்லானாவிடமே கேட்டார் அமெரிக்காவின் விஸ்கான்சின் ஸ்டேட் ஜர்னலின் நிருபர். அதற்கு ஸ்வெட்லானா, “ஆம். அவர்(ஸ்டாலின்) என்மீது பாசத்துடனிருப்பார். நான் அவரது அம்மாவைப் போல் இருப்பேன். அவரது அம்மாவைப் போல் எனக்கும் இந்த சிவப்புத் தலைமுடிகள்; அவரைப் போன்ற தோலின் நிறம் இருக்கும்” என்று கூறினார்.
ஸ்டாலின் 1953ல் இறக்கும் கடைசித் தருணத்தில் அவருடன்
இருந்தவர்களில் ஸ்வெட்லானாவும் ஒருவர். ஸ்டாலினுக்குப் பிறகு அதிகாரத்திற்கு வந்த திருத்தல்வாதி குருசேவ், ஸ்டாலினுக்கு எதிரான அவதூறு பிரச்சாரத்தில் இறங்கிய காலகட்டத்தில் 1967ல் அதாவது 14 ஆண்டுகளுக்குப் பிறகுதான் அவர் சோவியத் யூனியனில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் தஞ்சம் அடைகிறார்.
அப்போதய பனிப்போர் காலத்தில் குருசேவின் சோவியத் யூனியனுக்கு எதிரான கருத்து யுத்தத்தில் அமெரிக்காவின் கைக்கருவியாக ஸ்வெட்லானா பயன்பட்டார். குருசேவ் ஸ்வெட்லானாவை துரோகி என்றார். அதேசமயம் ஸ்டாலினை அவதூறு செய்வதற்கு ஸ்வெட்லானாவையும் பயன்படுத்திக் கொண்டார்.
ஒரு மகள் என்ற முறையில் ஸ்வெட்லானாவிற்கு ஸ்டாலின் மீதிருந்த கோபம் எல்லா வீடுகளிலும் சாதாரணமாகக் காணப்படுவதுதான். “நான் விரும்பிய இலக்கியம் படிக்க முடியாமல் அப்பாவின் வற்புறுத்தலுக்காக வரலாறு படித்தேன்; அவரது விருப்பத்திற்காக நான் ஆங்கில ஆசிரியராக வேலை பார்த்தேன்; நான் தேர்ந்தெடுத்த கணவரை என் அப்பாவிற்குப் பிடிக்கவில்லை” என்று ஸ்வெட்லானா கூறுவதெல்லாம் வீடுதோறும் அன்றாடம் நாம் காணும் மனக்குறைகள்தான். தன் வீடு, தன் மனைவி-மக்கள் என்று அல்லும் பகலும் பாடுபட்டு தன் பிள்ளைகளுக்கு எத்தனை சொத்துச் சேர்த்து வைத்தாலும் “என்ன பெருசா எங்களுக்குச் சேர்த்து வச்சிட்ட” என்று அப்பாக்களை எப்போதும் திட்டிக் கொண்டிருக்கும் பிள்ளைகளை நாம் எங்கும் பார்க்கலாம். தன் குடும்பத்திற்காகவே பாடுபடும் அப்பாக்களுக்கே இதுதான் நிலமை என்றால், ஒட்டுமொத்த சமூகத்திற்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்துவிட்ட ஒருவரின் பிள்ளைக்கு தன் சுய விருப்பம்-ஆசைகள் நிராசைகளாகிப்போன தருணங்கள் நிறையவே இருக்கும். அந்தத் தந்தை ஸ்டாலினாக இருப்பதனாலேயே மகளின் அற்ப ஆசைகளை பூதாகரமாக்கி அதை நிராசையாக்கிய தந்தையை கொடுமைக்காரனாக்கிச் சித்தரிப்பது முதலாளித்துவ – ஏகாதிபத்திய ஊடகங்களின் தந்திரமே.
ஆனால் அமெரிக்காவில் தஞ்சமடைந்த முதல் நாளில் பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது குருசேவின் சோவியத் யூனியனை ஸ்வெட்லானா விமர்சித்தாலும் தன் தந்தை மீது மேலே கூறிய மனக்குமுறல்களைச் சொன்னாலும் ஸ்டாலினுக்கு எதிரான குருசேவின் திருத்தல்வாதக் கும்பலின் அவதூறைப் பற்றிச் சொல்லும்போது “என் தந்தையை நேசிக்கிறேன்; அவர் மீது மதிப்பு வைத்திருக்கிறேன். இன்று ஸ்டாலின் மீது மட்டுமே குற்றம் சுமத்தப்படும் அந்தப் பயங்கரமான சம்பவங்களுக்கு எங்கள் அரசியல் தலைமைக் குழுவில் இருந்த மற்றவர்களே பொறுப்பானவர்கள்” என்றே சொன்னார்.
பின்னர் தனது புகலிட வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் ஸ்வெட்லானா தன் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட ஏமாற்றங்களுக்கு ஸ்டாலினைப் பொறுப்பாக்கி என்ன எழுதியிருந்த போதும் பின்னாட்களில் அவர் ஸ்டாலினுக்கு ஆதரவாக வெளிப்படையாகப் பேசவும் ஆரம்பித்துவிட்டார். 1982ல் லண்டன் டைம்ஸ் பத்திரிக்கையின் நிருபரிடம் ஸ்வெட்லானா தான் அவருக்கு (ஸ்டாலினுக்கு) துரோகம் இழைத்து விட்டதாகவும், “நான் செய்த காரியங்களுக்கு என் தந்தை என்னைக் கொன்றே போட்டிருப்பார்” என்றும் கூறுகிறார். அவரது இந்த மனமாற்றத்தின் பாதிப்பில் எழுதியதால்தான் அவரது கடைசி சுயசரிதை நூலை வெளியிட எந்த பதிப்பகத்தாரும் முன்வரவில்லை போலும்.
ஸ்டாலினது இறப்பைப் பற்றி நினைவுகூரும்போதுகூட ஸ்வெட்லானா “அவர் இறந்தபோது நான் என் நம்பிக்கை அனைத்தையும் இழந்து விட்டேன். என்றுதான் கூறுகிறார்.
இருந்தாலும் ஸ்டாலின் எனும் அந்த மாபெரும் வரலாற்று மனிதரோடு வாழ்க்கையில் உடன்பயணிக்க வேண்டுமானால், அவரது தோழர்களுக்கு மட்டுமல்ல, மனைவி-மகன்-மகளுக்கும்கூட ஒரு குறைந்தபட்ச தியாக-அர்ப்பணிப்பு உணர்வு தேவைப்படுகிறது. அந்த அர்ப்பணிப்பை அவரது மகன் யாகோவ் கடும் சோதனைக் காலத்தில் தந்தையுடனிருந்து தன் உயிரையும் தியாகம் செய்து நிரூபித்து விட்டார். ஆனால், பாவம் மகள் ஸ்வெட்லானாவால் அந்த உயரத்தை கடைசிவரை எட்டமுடியாமலேயே போய்விட்டது.
ஸ்டாலினுக்குத் தெரியாது; தன் உடன் இருந்தவர்களே தான் கட்டியெழுப்பிய இந்த பூலோக சொர்க்கத்தை நிர்மூலமாக்கப் போகிறார்கள் என்று. ஸ்டாலினுக்குத் தெரியாது; தன் அன்பு மகளே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைக்கருவியாகப் பயன்படப் போகிறாள் என்று. ஆனாலும் அந்த மாமனிதன் இறக்கும் அந்தக் கடைசித் தருணம் வரை அவரது அன்பு மகள் ஸ்வெட்லானா அவருக்குச் செல்லமான “குட்டிச் சிட்டுக் குருவி”தான்.
தொடர்பிற்கு :
thasivakumar@gmail.com
9443080634








“ஸ்டாலினுக்குத் தெரியாது; தன் உடன் இருந்தவர்களே தான் கட்டியெழுப்பிய இந்த பூலோக சொர்க்கத்தை நிர்மூலமாக்கப் போகிறார்கள் என்று.”
பின்னொரு நாளில் பிரபாகரன் பற்றியும் இப்படியேதான் எழுதுவார்கள்.
பிரபாகரன் ஏற்ப்படுத்திய “பூலோகசொர்க்கம்” எங்கே…. ? யாருக்கு ?என்ற கேள்வி எழும் !!!
அவர் கடைசியாக எழுதிய சுயசரிதையை யாரும் வெளியிட முன் வரவில்லை ,வெளியிடும் “உத்தமர்கள்” பற்றி உலகே அறியும்.வலிந்து வலிந்து ஸ்டாலின் பற்றி கேட்ட போது “நான் எனது தந்தையை இப்போதும் நேசிக்கிறேன்” என்று தான் கூறினார்.
இன்று வன்னியில் சிறிலங்கா அரசபயங்கர வாதத்திடம் வதைபடும் மக்களிடம் போய் கேட்டுப்பாருங்கள். புலிகளின் காலம் தங்களுக்கு எப்படியிருந்ததென. சிறிலங்கா அரச கைக்கூலி இமெல்டாவே யாழில் பெண்கள் வதைப்படும் போது தடுக்க வக்கற்று. புலிகளின் காலத்தில் எவ்வளவு கெளரவமாக பாதுகாப்புணர்வோடு பெண்கள் இருந்தார்கள் என அப்பப்ப வாக்குமூலம் கொடுக்கிறார்கள். புலிக்காச்சல் பிடித்தவர்களிற்கும் உண்மைக்கும் தொடர்பில்லை.
கெளரவமாக பாதுகாப்புணர்வோடு பெண்கள் இருந்தார்கள் என்றால் செல்வியை ஏன் கொன்றீர்கள், அவர் கவிதை தானே எழிதினார்,
நாசிகளிடமும், கிடலரிடமும் இருந்த ந்ல்லவற்றை(?) நக்கிஎடுத்தவர்கள் நாம். அதனாலேயே சிறார்களை பீரங்கி தீவனமாகவும்,மக்களை மண்மூடைகளாக பாவித்து பேரழிவுக்கு காரணமான பின்னும், மக்கள் பணத்தை சுருட்டி கொழுத்தபடியே மக்கள் நலனில் அக்கறை உள்ளதாக உதார் விடமுடிகின்றது.
சரியான நேரத்தில் சரியான கருத்து தோழா
தப்போடி வெளிநாடுகளில் ஒளித்த கயவர்களுக்கும் மக்களின் காசை சுருட்டிய கே .பி ,மற்றும் மாபியாகளுக்கும் தான் “சொர்க்கம.”
வதைபடும் மக்களிடம் போய் கேட்டுப்பாருங்கள்..தங்கள் பிள்ளைகளை யார் பலி கொடுத்தார்கள் என்று.???
ஹிட்லர் காலத்திலும் “ஒழுக்கமும் ,தூய்மையும் ” கடைப்பிட்ட்கப்பட்டதாம் அந்த ஒழுக்கத்தாலும் ,தூய்மையாலும் ஜெர்மானியர்கள் இன்று வரை உலக அரங்கில் கொடுக்கும் விலை அதிகம்.
திருச்சி வேல்சாமி மாவீரர் செய்தியில் இத்தாலிக்கொரு மொசொலினி , ஜெர்மனிக்கு ஒரு ஹிட்லர் ,ஈழத்திற்கு ஒரு பிரபாகரன் என “சரியாக ” வரிசைப்படுத்தியிருக்கிறார். பெருமையுடன் மீனகம் வெப் சைட் அதை வெளியிட்டுள்ளது.உண்மையை மூடி மறைக்க முடியாது.
அருமையான பதில்நண்பரே, பாரட்டுக்கள்
தமிழன் என்றோர் இனமுண்டு.
அதில் களையாக விளைந்தோரின் கதையுண்டு.
நக்கலுக்கும் நாய்க்கும் தொடர்புண்டு, அதில்
களையாக விளைந்தோர்க்கும் பங்குண்டு.
எங்கு கல் பட்டாலும் நாய் கால்தூக்கும்.
எங்கு தலைவன் பெயர் கண்டாலும், களை
எதிராகவே கோல்தூக்கும்.
தமிழன் என்றோர் இனமுண்டு. அவன் சாவிலும் -பிணத்திலும் உண்டியல் தூக்கும் குணமுண்டு.
புலி இயக்க தலைவர் இறந்து இரண்டு வருடங்கள் முடிந்து விட்டது.அவரை நிம்மதியாக உறங்க விடுங்கள்.
எழுதப்பட்ட கட்டுரையின் ஆத்மார்த்தத்தை விளங்கிய பின்னே,அது தொடர்பான சமாந்திரப் பார்வை,அதனால் எழுந்த எண்ணமே என் முதற் குறிப்பு.
ஆனால் ஸ்வெட்லானாவின் முதற் குரலை,மீண்டும் உச்சரிப்பவர்கள்,
தாம் யாருக்கோ “கைக்கருவியாகப் பயன்படப் போகிறதை” உணர்ந்தால்,
நாம் அனைவரும் “விட்டு விடுதலையாகி நிற்போம் சிட்டுக்குருவியைப் போலே.”
Please don’t compare an internationalist with a narrow national chauvinist. Prabhakaran till his death trusted that the NATO and it’s founding member Norway will save his life. Stalin too gave importance to his mother tongue , he’s a Gorgian and refused to accept Russian language to be imposed on him. BUT very careful in delimiting the love for mother tongue and language chauvinism.
பிரபாகரனையும் உலகத்தலைவர்களையும் ஒப்பிடுவதா? பிரபாகரனுக்கு தலைமை மட்டும்தான் குறி. அதற்காக வன்னி வரை பல படுகொலைகள். குட்டி மணி தங்கதுரையைக் காட்டிக் கொடுத்ததே பிரபாகரன் தானே?
அதுமட்டுமல்ல ஈழத்தமிழனித்தை காட்டிக் கொடுத்தது பிரபாகரனும் புலம்பெயர் தமிழர்களின் சூனியமான சுயநல அறிவும் தான்.
அவர்கள் மட்டுமல்ல ஐயா! புலிகள் சிங்கள மக்களை படுகொலை செய்த ஆரம்பகாலங்களில் அதை சர்வதேச புரட்சியின் ஒரு அங்கம் என்று பீலா விட்ட இடது சறுகல் வாதிகளும் இருநதார்கள். பின் கீலி, சுலோற்றர் என்ற இருவரிலும் பழியை போட்டுவிட்டு புனிதமடைந்தார்கள். மகிந்த மக்கள்மீது குண்டுமழை பொழிந்தபோது மகிந்தவின் வேட்டிமடிப்புக்கள் ஜ்னநாயகத்தை தேடினார்கள்.. இந்த இருபகுதியினரும் நாண்யத்தின் இரு பக்கங்களை போன்ற்வர்கள் அல்லவா? ஐயா!
அதே நேரத்தில் நீங்கள் எந்தப் பக்கத்தில் இருந்து தரகு வேலை பார்த்துக் கொண்டிருந்தீர்கள் கோவில்காரரே! இப்பொழுது என்னதான் செய்யலாம் என உத்தேசித்திருக்கிறீர்கள்?
புலிகளை சர்வதேசகட்சிகளுடன் ஒப்பிடும் உமது மனப்பாங்கு சுவடுயில்லாமல் மறைந்து அழிந்து போன புலிகளை திருப்பியழைக்கும் நோக்கம் கொண்டதா?
தெளிவுபடுத்தினால் உதவியாக இருக்கும் இல்லையென்றால் சர்வதேசகட்சி-கள் எதற்கும் லாயக்கற்றது
என்கிற எண்ணத்தை கொண்டிருக்கிறீர்களா கோவில்காரரே!?
ஆக அந்தக்காலத்து தமாஷை ஒத்துக்கொள்வது மட்டுமில்லை. அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்னும் மனப்பாங்குதான் வியப்புக்குரியது. இந்த லட்சணத்தில் மற்றவருக்கு அறிவுரை வேறு. சர்வதேசிய கட்சியொன்றை விதைந்துரைப்பதனால் மட்டும் நீவிரோ, அன்றில் அந்தக்கட்சியோ சமூகமாற்றத்திற்கான சரியான உந்துசக்திகள் என கொள்ளமுடியாது. உங்கள் கட்சியினர் பலரும் பல நாட்டு உளவுநிறுவனங்களுடன் தொடர்பானவர்கள் எனும் குற்றச்சாட்டு உண்டு.. சும்மா சர்வ்தேச .பு என்று திரும்ப,திரும்ப கூறிக்கொண்டே பேரினவாதிகளுக்கு சாமரம் வீசுவது, இன்னோரு கீலி, சுலோற்றர் வகையறாக்களுக்கு காத்திருப்பதை பட்டியங்கூறி நிற்கின்றது.
த.சிவகுமாரிடம் ஒரு கேள்வி: ஸ்டாலினின் குழந்தை ஸ்வெட்லானா சிட்டுக்குருவி யென்றால் சோவித்யூனியனில் தொழிலாளர் விவசாயிகளுக்கு பிறந்த குழந்தைகளுக்கு காடை கெளதாரி என்று பெயரிடலாமா?
சோவியத்யூனியன் வரலாற்றை இல்லை அக்டோபர் புரட்சியால் ஜார் அரசுக்கு முடிவுகட்ட புறப்பட்டார்கள் எப்படி? வெற்றியடைந்தார்கள் என்பதை கண்டு கொள்ள வேண்டுமானால் இருபதாம் நுற்றாண்டை தாண்டி அதையும் முந்திச் செல்லவேண்டிய தேவையிருக்கிறது.
போல்சேவிக்கின் புரட்சியை யதார்த்த படுத்திய அறிவு மாக்ஸிய தத்துவத்தில் தான் புதையுண்டு இருக்கிறது. போல்சேவிக்குள் யாரும் மாக்ஸியத்தை கல்லாதவன் புரியாதவன் யாருமே இருக்க முடியாது.ஸ்டாலின் உட்பட.
நடந்து முடிந்து போனது வரலாறு சந்தர்பவாதிகளின் கையில் அதிகாரம் குவியக் காரணமாக இருந்தது. இது ஒரு சில சில்லறகளுக்கு கசப்பாக இருந்தாலும் இதுவே உண்மை.
சர்வதேசவாதிகளுக்குகோ மாக்சிஸ்வாதிகளுக்கோ “தனியொருநாட்டில் சோசலிசம்” என்கிற பதம் ஏற்புடையதும் இல்லாதும் மட்டுமல்ல தவறானதும் முதாலித்துவயமைப்பு முறைக்கே திரும்பி செல்வதாகும். லெனின் இறந்தவுடன் ஸ்டாலின் பொறுப்பேற்ற வோவியத்திலும் இதுதான் நடந்து முடிந்தது. இதுவே போல்ஷிவிக்கின் தோல்வி கம்யூனீஸத்தின் தோல்வியாக உலகம்முழுக்க விளம்பரப் படுத்தக் கூடியதாக இருக்கிறது. .. !! !
இந்த படிப்பனைகளை கற்றறிந்து வெளிவருவது வர்கயுணர்வுள்ள ஒவ்வொரு உழைப்பாளியின் கடமையாகும்.அந்த உணர்வு த.சிவகுமாருக்கும் இருந்தால் அவரும் இதில் உள்ளடங்குவார்.
கோவில்காரரே! நீங்கள் அந்தநேரத்தில் எந்தப்பக்கத்தில் நின்றீர்கள் என்று கேட்டேன்? அதை மறந்து-மறைத்து கெளண்டமணியின் தரத்திற்கு இறங்கி அரசியலை பகிடியாக்கிவிட்டு என்னை தமாஸ்காரனாக்க முற்படுகிறீர்!
சரி: எல்லாவற்றிக்கும் நானே விடை சொல்லுகிறேன். அதற்கு முதல் கோவில்காரன் என்றால் என்ன அர்த்தம் என்றாவது சொல்லமுடியுமா? கோவில்சொந்தக்காரரா? பணியாளரா? தொண்டுசெய்வவரா? நாட்டாமைக்காரரா? இதை கொஞ்சம் புரியவைத்தால் உதவியாக இருக்கும்.
வன்னிமக்களுக்கு செல்லடிக்க பிரபாகரனுக்கோ அல்லது மகிந்தாவுக்கோ கீலியும் சுலோட்டர்ரும் பீரங்கியும் வாங்கி கொடுக்கவில்லை.பணஉதவியும் செய்யவில்லை. எல்லாம் புலத்தில்யிருந்த லும்பன்கூட்டமும் ஒருபகுதிக்கும் மகிந்தா பகுதிக்கு இந்திய-சீனமுதாலித்துவவமும் தான். சத்தியமாய் சொல்லுகிறேன் இதை நம்புங்கள் கோவில்காரரே.
நான்காம் அகிலத்தின் வரலாறு 1938-ம் ஆண்டுடன் தொடங்க வில்லை. தொழிலாளவர்க்கத்தின் வரலாறு அனைத்துலதொழிலாளர்கழகம்1864-ல் தொடங்கிய உடனையே தொடங்கிவிட்டது. அதன் நீட்சியே! நான்காம் அகிலம். இது தலைவர் ரொக்ஸ்சிக்கு சொந்தமானதல்ல. சர்வதேசதொழிலாளவர்க்கத்திற்கு சொந்தமானது. அதில் வருகிற வெற்றியும்-தோல்வியும் கூடா.
கீலி சுலோட்டர்களின் சந்தர்ப்பவாத போக்குகளை விமர்சனத்திற்கு உள்ளாக்கிய படியால்தான் ஒரு அகிலத்திற்கு தலைமைதாங்குவதற்கு அனைத்துலகக்குழுவை உருவாக்க முடிந்தது. இது தான் நடந்த வரலாறு. இன்றும் நடந்துகொண்டிருக்கிற உண்மையும் அல்லாது பல மொழிகளில் பலநாடுகளில் கிளைகளை பரப்பி சர்வதேசதொழிலாளவர்க்கத்திற்கு நம்பிக்கை ஊட்டும் விருட்சமாக வளர்ந்திருக்கிறது.
அது உளவாளிகளை கொண்டிருக்குமென்றால் முதாலித்துவதிற்கல்லவா? சேவை செய்ய முடியும். நம்பிக்கை இல்லாத வாக்குறுதிகளை அல்லவா சர்வதேச தொழிலாளவர்கத்திற்கு வழங்கமுடியும்?
நான் நினைக்கிறேன் தாங்கள் பதினைந்துவருடங்களுக்கு முன்பு தமிழீழக்கனவோடு இரண்டோட மூன்றுமுறையோ அகிலத்தின் கூட்டத்திற்கோ அல்லது பிரசுங்களை படித்தோ வந்திருக்கிறீர்கள் என நினைக்கிறேன். இனி அந்த கனவுகளை
கலைத்துவிட்டு இலங்கை தொழிலாளவர்க்கம் என்று சிந்தித்து பாருங்கள் நம்பிக்கையான ஒளி அனைத்துலக குழுவால் தலைமை தாங்கப்படும் நான்காம் அகிலத்திலிருந்து கிடைக்கும்.
“காவற் கோபுர”க்காரர் சொன்ன மாதிரியே,அதே நம்பிக்கை ஒளி.
´இப்படியும் சொல்லலாம் நெருஞ்சி. நக்கிற…….க்கு செக்கு என்ன? சிவலிங்கம் என்ன??.
அருமையான வாசகம்;எழுதியவர்,தன்னை விளங்கிக் கொண்டால்.
Suits the man who wrote it very well !
I thought they chased you away from Inioru for good ? You have no shame to come back ?
this is about the history of a noble comrade Starlin so do not mix it others. why u try to compare him with Prebaharan. he is leader for the top class people, later he was only for him at last he killed all the other soliders. there is no any one who was in final sarunder time so most of the truths fired by thr SL army. here this is a good play of USA and globalization. you see here these have changed the daughter of the USSR president the nobel man comrade Starlin. we must be carefull with these TV, WEB, INTERNET, SETTLELITE, MOBILE, FACEBOOK< TWEITER, etc etc.
“சோசலிச சமூகத்தின் நடைமுறை வெற்றியை உலகுக்கு நிரூபித்துக் காட்டியவர்”…..
Do we have any evidence for this please?