06.08.2008.
புகழ்பெற்ற ஆங்கில நாடகாசிரியர் வில்லியம் ஷேக்ஸ்பியர் நடித்த மற்றும் அவரது ஆரம்ப கால நாடகங்கள் அரங்கேறிய முதல் நாடக அரங்கின் எச்ச சொச்சங்களை தாங்கள் கண்டுபிடித்துள்ளதாக லண்டனில் உள்ள தொல்லியலாளர்கள் கூறுகிறார்கள்.
தெ தியேட்டர் என்று மட்டும் அறியப்பட்ட இந்த திறந்த வெளி நாடக அரங்கு, 1576ல் முதன் முதலாக திறக்கப்பட்டு, 23 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரிக்கப்பட்டு, பின்னர் ஒரு குத்தகை சர்ச்சைக்கு பின்னர் தேம்ஸ் நதிக்கு தெற்காக மீண்டும் கட்டப்பட்டது.
நாடக அரங்கின் செங்கல் அஸ்திவாரங்கள் என்று தாங்கள் கருதும் இவைகளை கண்டறிந்த தொல்லியலாளர்கள் குழு, இது சமீப ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டவைகளில் மிகவும் ஆச்சரியத்தை தந்த ஒன்று என்று கூறுகிறார்கள்
BBC