பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க பணி நீக்கம் செய்யப்பட்டால் அந்தத் தீர்ப்பை, உச்ச நீதிமன்ற நீதவான்கள் ஏற்றுக்கொள்ளக் கூடாது என சிரேஸ்ட சட்டத்தரணிகள் கோரியுள்ளனர்.
தற்போதைய பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க பணி நீக்கம் செய்யப்பட்டு புதிதாக வேறும் ஓர் நீதியரசர் நியமிக்கப்பட்டால் அந்த நியமனத்தை நீதவான்கள் ஏற்றுக்கொள்ளக் கூடாது என சுட்டிக்காட்டியுள்ளனர்.
பிரதம நீதியரசருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து விசாரணை நடாத்திய பாராளுமன்றத் தெரிவுக்குழவிற்கு அதிகாரங்கள் கிடையாது எனவும், பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கையை ரத்து செய்யுமாறும் மேன்முறையீட்டு
நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இவ்வாறான ஓர் பின்னணியில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் பிரதம நீதியரசர் பணி நீக்கம் செய்யப்பட்டு புதிய பிரதம நீதியரசர்
நியமிக்கப்பட்டால் அது நீதிமன்றத்தை இழிவுபடுத்தும் வகையில் அமையும் என சட்டத்தரணிகள் சுட்டிக்காட்யுள்ளனர்.
உச்ச நீதிமன்றமும் மேன்முறையீட்டு நீதிமன்றமும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு பிரதம நீதியரசருக்கு உத்தரவுகளை பிறப்பிக்கும் அதிகாரம் கிடையாது என திட்டவட்டமாக அறிவித்திருந்தன.
எனவே நீதிமன்றங்களையும், நீதிமன்ற பொறிமுறைமையையும் பலவீனப்படுத்தும் வகையில் புதிய பிரதம நீதியரசர் நியமிக்கப்பட்டால் அதனை நாட்டின் உச்ச நீதிமன்ற நீதவான்கள் ஏற்றுக்கொள்ளக் கூடாது என சட்டத்தரணிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இதேவேளை, பிதமத நீதியரசருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கை தொடர்பான விவாதமும் வாக்கெடுப்பும் இன்று நடைபெறவுள்ளது.
விவாதம் தொடர்பான வாக்கெடுப்பு இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பெரும்பாலும் பிரதம நீதியரசருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூடு;டமைப்பின் பெரும்பான்மை உறுப்பினர்களும், சில எதிர்க்கட்சி உறுப்பினாகள் ஆதரவாக வாக்களித்து மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன எதிராக வாக்களிக்கத் தீர்மானித்துள்ளன.