சினிமா நடிகரும் கவிஞருமான வ.ஐ.ச.ஜெயபாலன் 2013 ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில் இலங்கை சென்றிருந்த போது விசா விதிகளை மீறியதாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டதைக் காரணமாக முன்வைத்தே அவர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். அதேவேளை சுவிஸ் நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் திலக் என்பவர் ஈ.பி.டி.பி என்ற அரசியல் கட்சியின் கூட்டத்தில் ஈ.பி.டி.பி பிரதிநிதி என்ற அடிப்படையில் கலந்துகொண்டதாக அக்கட்சியின் உத்தியோக பூர்வ இணையத் தளத்தில் செய்தி வெளியாகியுள்ளது. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊர்காவற்துறை அலுவலகத்தில் மேற்படி சந்திப்பு இடம்பெற்றது. கூட்டம் நடைபெற்றதற்கான படங்கள் போன்ற ஆதாரங்களுடன் 04.02.2013 திகதியிடப்பட்டு இச் செய்தி வெளியாகியுள்ளது. இந்த நிலையில் சட்டப் பிரச்சனை குறித்து அதிகமாக அலட்டிக்கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வழக்கறிஞர்கள் கூட்டம் விசா விதிகளை மாற்றியமைக்க வேண்டும் அல்லது திலக்கை வெளியேற்ற வேண்டும் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும் என இனியொரு சார்பில் பகிரங்க வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.
கூட்டமைப்பினரின்… deal or no deal… survival அரசியல் தெரிந்த விடயம்…
அதே நேரம் சுற்றுலா விசாவில் சென்ற கவிஜரும்… நடிகரும்… ஆய்வாளருமான ஜெயபாலன் வேறு விடயங்களில் ஈடுபட்டதாக நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்…
பாரம்பரிய அமைச்சரின் சர்வதேச அங்கத்தவர்கள் இலங்கை சென்று அரசியலில் ஈடுபடுவது இன்று நேற்றல்ல… அவர்களது உத்தியோகபூர்வ இணையதளத்திலேயே படங்களுடன் பிரசுரித்து உள்ளார்கள்…
‘மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி; மாவட்டத்தில் கமலின் ஆட்சி’ பாரம்பரிய அமைச்சர் இதற்கு கூறுவார்… “இவர்கள் இரட்டை பிராவுரிமை பெற்றவர்கள்” என்று… (எப்படி இவர்கள் இரட்டை பிரஜாவுரிமை பெற்றார்கள் என்று என்னைக் கேட்காதீர்கள்)
மேலும்… கடந்த தேர்தல்களில் வேற்றுக் கட்சியினரும் புலம் பெயர் நாடுகளில் இருந்து தேர்தல் காலங்களில் சென்று தம் கட்சிகளுக்கு வேலை செய்துள்ளார்கள் (என்ன இவன் ஈ.பீ. டீ.பீ யையும் கிளறி மற்றவர்களையும் கிளறுகிறான் என்று யோசிக்கிறீர்களா…? ஏற்கனவே எல்லோரும் same side goal அடிப்பவன் என்றுதானே கூறுகிறார்கள்… ஹ்ம்ம்…) யார் என்ன சொல்லி… நிஜங்களை வெளிக் கொண்டுவரும்… விமர்சனங்கள்… சுய விமர்சனங்கள்… இருக்க வேண்டும்… இதில் நான் நடு நிலைமை…