வை.கோ வின் கட்சியான மறுமலர்ச்சி தி.மு.க வை தேர்தல் கூட்டணியிலிருந்து அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா விலக்கியுள்ளார். சுப்பிரமணிய சுவாமி போன்ற சாதிவெறியர்களின் ஆதிக்கத்திலுள்ள கட்சியான அ.தி,மு,க தனது வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. தனது கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க., இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பற்றி முடிவு காணாமலேயே, தனது கட்சி போட்டியிடும் தொகுதிகளையும், வேட்பாளர்களையும் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
160 தொகுதிகளுக்கான அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளதன் மூலம் மறுமலர்ச்சி தி.மு.க.விற்கு கூட்டணியில் இடமில்லை என்பதையும் நேரடியாக ஜெயலலிதா வெளிப்படுத்தியுள்ளார்.
யாருக்கு வாக்களிப்பது என்று தெரியாத நிலையில் மக்கள் ஏமாற்றத்துடனேயே நல்ல தலைவர்களுக்காகக் காத்திருக்கின்றனர்.
தமிழ் நாட்டு தலயெழுத்த யாராலும் மாத்தா முடியாது………….