04.11.2008.
வேதனை தரும் நடவ டிக்கையை அமெரிக்கா சந்திக்கும் என சிரியா அயல் துறை அமைச்சர் வாலித் -அல்-மோலம் எச்சரித்தார். கடந்த அக்டோபர் மாதம் 26-ம்தேதி அமெரிக்கா எல்லை தாண்டி சிரியாவில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து சிரியா அந்நாட்டுக்கு எச்ச ரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவின் அத்து மீறலால் எரிச்சல் அடைந்த சிரியா, தலைநகர் டமாஸ் கஸில் உள்ள அமெரிக்க பள்ளி ஒன்றையும் கலாச் சார மையத்தையும் மூடி யது.
அமெரிக்கா மீதான சிரியாவின் நடவடிக்கை குறித்து, அந்நாட்டு அயல் துறை அமைச்சர் வாவித் -அல்- மோலம் லெப னானில் ஏஎன்பி செயற் கைக்கோள் நிலையத்தில் டி.வி.க்கு பேட்டியளித்தார். அந்த பேட்டியில் அமெ ரிக்கா மீது சிரியாவின் தற் போதைய நடவடிக்கை துவக்க நிலை ஆகும். எதிர் காலத்தில் தமது நடவடிக் கைகள் மேலும் அதிகரிக் கும் என எச்சரித்தார். என்ன நடவடிக்கைகள் எடுக்கப் படும் என்பதை அவர் விரி வாகக் கூறவில்லை.
அமெரிக்கா எல்லை தாண்டி நடத்திய தாக்குத லால் 8 பேர் கொல்லப் பட்டனர்.
இந்த தாக்குதல் குறித்து அமெரிக்கா கூறுகையில், இராக்கில் தேடப்படும் முக்கிய அல்கொய்தா தீவிர வாதிகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடந்ததாக தெரிவித்தது.
இந்த நிலையில் லெப னான் எல்லைப்பகுதி அருகே சிரியா துருப்புகள் குவிக்கப்பட்டுள்ளன.