வெள்ள பாதிப்பு சீர மைப்பு பணிக்கு 1100 கோடி டாலர் கடன் உதவியை வழங்குமாறு சர்வதேச நிதி யத்திடம் (ஐஎம்எப்) பாகிஸ் தான் கேட்டது.வடமேற்கு பாகிஸ்தா னில் கடந்த ஜூலை மாதம் 22ம்தேதி பெய்ய துவங்கிய கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்தது. இந்த வெள்ளத்தில் 1700 பேர் உயிரிழந்தனர். பொருளா தார வளர்ச்சி சரிந்தது. வேளாண் துறை கடுமை யாக பாதிக்கப்பட்டது. வெள்ளம் காரணமாக 17 லட்சம் ஹெக்டேர் (42 லட்சம் ஏக்கர்) நிலத்தில் பயி ரிடப்பட்டிருந்த பயிர்கள் நாசமடைந்தன. கடந்த 80 ஆண்டுகளில் காணாத இந்த மிகப் பெரும் இயற்கை பேரிடர் காரணமாக பாகிஸ்தான் பொருளாதா ரம் சீர்குலைத்துள்ளது.இந்த நிலையில் வெள்ள பாதிப்பு சீரமைப்பு பணிக ளுக்கு 1100 கோடி டாலர் கடன் உதவி அளிக்க வேண் டும் என சர்வதேச நிதியத்தி டம் பாகிஸ்தான் கேட்டது. இதனை ஐஎம்எப் பிராந்திய இயக்குநர் மசூத் அகமது பி.பி.சி.யிடம் தெரிவித்தார்.
பாகிஸ்தான் மழை வெள்ளத்திற்கு மனிதாபி மான உதவிகள் மிக முக்கி யமானது என ஐ.நா. அதி காரிகள் தெரிவித்தனர். பாகிஸ்தானில் தொடர்ந்து மழை கொட்டுவதால் மீண் டும் வெள்ள அபாயம் நிலவு கிறது. பாகிஸ்தான், ஐதரா பாத்திற்கு வெளியே உள்ள இந்துஸ்நதியில் 50 ஆண்டு களில் இல்லாத அளவு மழை வெள்ளம் பெருக் கெடுத்து ஓடுகிறது.மழை வெள்ள பாதிப் பில் இருந்து மீள, பாகிஸ் தானுக்கு 3 ஆண்டுகள் ஆகும் என ஜனாதிபதி ஆசிப் அலி ஜர்தாரி கூறியிருந்தார். இயற்கை பேரிடர் பாதிப் பில் இருந்து மீள 1500 கோடி டாலர் உதவி தேவை என்றும் அவர் குறிப்பிட்டி ருந்தார்.