வெளிவிவகார கொள்கைகள் மற்றும் அமைதிக்கான நிதியம்:இலங்கை தகுதியிழப்பு

வெளிவிவகார கொள்கைகள் மற்றும் அமைதிக்கான நிதியம் மேற்கொண்ட தரப்படுத்தலில் உலகில் தகுதி இழந்த நாடுகளின் பட்டியலில் மீண்டும் இலங்கை உள்ளடக்கப்பட்டுள்ளது.
உலகில் உள்ள நாடுகளில் 60 நாடுகள் தகுதி இழந்த நாடுகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் சோமாலியா முதலாவது இடத்திலும் 20 ஆவது இடத்தில் இலங்கையும் உள்ளது

எதிர்பாராத உணவு நெருக்கடிகள், மற்றும் பேரனர்த்தம் போன்றவை ஏற்படும் போது தகுதி இழந்த நாடுகளே அதிகம் பாதிக்கப்படும். 12 காரணிகளை முன்வைத்தே இந்த தரப்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.