வீட்டு பாடத்தை செய்யாததற்கான தண்டனையாக கடும் வெயிலில் நிற்க வைக்கப்பட்ட 11 வயது மாணவி மரணமான சம்பவம் தொடர்பாக இந்தியாவில் பள்ளிக்கூட தலைமை ஆசிரியரும், மற்றுமொரு துணை ஆசிரியரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பல மணி நேரம் வெயிலில் நிற்கவைக்கப்பட்டதை அடுத்து மயங்கிவிழுந்த அந்த சிறுமி, டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மரணமானார்.
இந்த மரணம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இது ஒரு பெருந்துயரமான சம்பவம் என்று இந்தியாவின் பெண்கள் மற்றும் சிறார்களின் மேம்பாட்டுக்கான அமைச்சர் விபரித்துள்ளார்.
BBC